ஊர்:மாங்காடு#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவெள்ளீஸ்வரர்,ஸ்ரீபார்க்கவேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகாமாட்சிபாதம்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிவசாயவிநாயகர்,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி.ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி- ஸ்ரீபாலாம்பிகை
மரம்: தீர்-சுக்ர
3காலபூஜை
தி.நே-0600-1300,1630-2100
#30092009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
பார்கவமுனி எனும் சுக்ராசாரியார் வழிபட்டு இழந்த கண்ணை பெற்ற தலம்-ஸ்ரீவெள்ளீசுவரர்.
சிவனின் கண்ணை விலையாட்டாக பார்வதி மூடியதால் உலகம் இருள்சூழ சினமுற்ற சிவன் பார்வதியை பூலோகத்தில் பிறக்க சாபம். மாங்காட்டில் பலகாலம் காமாட்சியாய் தவம் செய்தும் ஈசன் அருள் கிட்டவில்லை. ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில் தவசு- தவக்காமாட்சி. சிவன் காமாட்சியைக் காணவரும்போது சுக்ராச்சாரியார் தவம் செய்து கொண்டிருக்க அவருக்கு காட்சி-கண்வழங்குகிறார்- ஸ்ரீ வெள்ளீசுவரர். சுக்ராச்சாரியார் சிவ பூஜையில் கலந்து கொண்டதால் தான் வர நேரமாகும் என்பதால் காமாட்சியை காஞ்சி செல்லுமாறு தான் அங்கு சந்திப்பதாகவும் அசரீரி. அதனால் காமாட்சி இங்கிருந்து காஞ்சி சென்று மணல் லிங்கம் செய்து மாமரத்தடியில் வழிபாடு. ஒரேகல்லில் முருகன் வள்ளி தெய்வானையுடன், சுக்ரபகவான் வணங்கியதால் சுக்ரவழிபாடு சிறப்பு. காமாட்சிபாதம் நந்தியின் முன்.
புதன் பரிகாரதலம்.
சென்னை-நவகிரகத்தலங்கள்-6/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
