
ஊர்:சுசீந்திரம்#+அ-25, சீவீந்திரம், சிவந்திரம், பிரம்மதேயம், ஞானபூமி, பிரக்ஞா தீர்த்த பூமி.
மூலவர்:,
இறைவன்: ஸ்ரீதானுமாலயசுவாமி ,
இறைவி: ஸ்ரீசந்தனமாரி, ஸ்ரீபார்வதிதெவி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீநீலகண்டவிநாயகர்-6’ உயரம், ஸ்ரீஆஞ்சநேயர்-22' ,ஸ்ரீசிதம்பரேஸ்வரர், ஸ்ரீவெங்கடேவிண்ணப்பெருமாள், ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள், ,ஸ்ரீ முருகன், ஸ்ரீசங்கரநாராயணன், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசுப்ரமணி, ஸ்ரீமகாதேவர், ஸ்ரீஇராமேஸ்வரத்து மகாதேவர், துவாரகைஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசக்கரம், ஸ்ரீதுர்க்கை. ஸ்ரீகொன்றையடிநாதர். ஸ்ரீ கைலாசநாதர்(குடவரைக் கோவில்), ஸ்ரீ கருடன்(ஒரே கல்லில்) ,ஸ்ரீ முன்னுதித்தநங்கை.-முன்னூற்ருநங்கை.(கடுசர்க்கை மருந்தில்)
7நி.135' உ.ராஜகோபுரம்.
தீர்-திருக்குளம். தெப்பத்திருவிழா- சித்திரை பௌர்ணமி அன்று
மரம்-சரக்கொன்றை. 2000 ஆண்டுகள் பழமை.
தேர்த்திருவிழா தி.நே-0500-1200,1600-2000
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04652-241270
சீவந்திரம்- தீ போன்ற செந்நிற மேனியையுடைய சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் ஜீவனாக இருப்பவர். ஜீவன் நிலைகொண்ட இடம் சீவிந்திரம்.- சிவீந்திரம். சுசீ-புனிதம். உடல் முழுவதும் புண்ணான இந்திரம் வழிபட்டு சுத்திபெற்ற தலம்.- சுசி+இந்திர+அம்- சுசீந்திரம். தினமும் இந்திரன் அர்த்தசாம பூஜை செய்வதாக ஐதீகம். ஞானவனம். இந்திரன் அர்த்தசாம வழிபாடு. செய்வதால் பூஜை அறையில் வைத்த பொருட்கள் இடம் மாறி இருக்குமாதலால் ஒரு நாள் இரவு பூஜை செய்தவர் மருநாள் கழித்து அடுத்த நாள்தான் பூஜை செய்ய வேண்டும். அகம் கண்டதை புறம் சொல்லலாகாது என்பதற்கிணங்க.
அகலிகைமேல் மையல்கொண்டு இந்திரன் கௌதம முனிபோல் உருகொண்டு இன்புற்று இருந்ததை அறிந்த கௌதமர் உடல் முழுவதும் கண்களாக இட்ட சாபம் நீங்க இந்திரன் மருத்துவாழ் மலையில் தவமிருந்து தானுமால்யசுவாமியை வணங்கி மனத்தூய்மை பெற்று சாபம் நீங்க அருள். சுசீ-தூய்மை.
அத்ரிமகரிஷி மனைவி அணுசூயாதேவி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி கற்பின் பெருமையை உலகிற்கு எடுதுக்காட்டிய தலம். கொன்றை மரத்தடியில் தானு, மால், அயன் மூவரும் லிங்க வடிவில் மும்மூர்த்தி தலம். மும்மூர்த்திகளும் கொன்றையடி மற்றும் கருவரையில் என இரண்டு சன்னதிகள்.
வேற்று மதப் படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்ட அனுமன், பக்தர்கள் அந்த இடத்தில் சிலிர்ப்பு அடைவதைக்கண்டு தேவப்பிரசனம் பார்த்து தோண்டி எடுக்கப்பட்ட 22'உயர ஆஞ்சநேயர். அஷ்டபந்தனம் செய்யாததல் யார்வேண்டுமானாலும் அனுமனுக்கு பூஜை செய்யலாம். 12' உயர நந்தி.
வசந்த மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளும் நவகிரகங்களும் சிற்ப வடிவில். சப்தஸ்வரத்தூண்கள் சிறப்பு.
இங்கு வழிபட்டால் இந்திரிய குணங்கள் அவிந்து ஞானத்தில் ஞான ஒளியைப் பெறலாம். அதைக் குறிக்கவே நடராஜர் விரிசடை இல்லாமல் மகுடாகம மூர்த்தியாக உள்ளார்.
கடல்தாண்டிச் செல்லும் அனுமனை சுரசை அரக்கி விழுங்க அவள் காதுவழி வெளிவரும் அனுமன், திருமலைநாயக்கரின் உருவச்சிலையில் ஒரு காதுவழி மறு காதிற்குள் குச்சி செல்லும் அமைப்பு, ஏமாற்ற நினைத்த சிற்பிக்கு யானைக்காலால் இடறச் செய்யும் சிறபம், கள்ளக் கணக்கு எழுதிய தவறு கையை தொடையுடன் வைத்து ஆணி அடித்த சிற்பம் .
ஸ்ரீ முன்னுதித்தநங்கை.-முன்னூற்ருநங்கை.(கடுசர்க்கை மருந்தில்)-ஆடிச் செவ்வய், ஆடிப் பூரம் மற்ரும் பௌர்ணமி நாட்களில் பூஜை.
பிரதோஷ வழிபாடு நடைபெறும் 0430-0630 வரை தாணுமாலயப் பெருமான் சன்னதி மூலவருக்கு வழிபாடு நடக்கும் அதே வேளையில் மகாவிஷ்ணுவிற்கும் அபிஷேக ஆராதனை. தொடர்ந்து காளைவாகனத்தில் பெருமானும், கருட வாகனத்தில் பெருமாளும் உள்பிரகாரத்தில் 3 சுற்று வலம்-சிறப்பு.
பத்துநாள் மார்கழித் திருவிழா. கோட்டாறிலிருந்து-பிள்ளையார்,குமார கோவிலிலிருந்து முருகன், மருங்கூரிலிருந்து சுப்பிரமண்ய சுவாமி ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அழைத்து வருவர். தந்தையும் மக்களும் சந்திக்கும் நிகழ்ச்சி மக்கள் மார் சந்திப்பு சிறப்பு. பத்தாவது நாள் ஆருத்ரா தரிசனம்.
வீரபாண்டியன், முதலாம் இராசராசன், சடாவர்ம சுந்தரச் சோழபாண்டியன், வீரபாண்டியன்11, ஆகியோர் ஆலப்பணி.
சித்திரை, மார்கழி மாதங்களில் பத்துநாள் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
