ஊர்:குச்சனூர்#
மூலவர்:ஸ்ரீசனீஸ்வரர்-சுயம்புகல்தூண்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:யானைமீது-குருராஜதோரனை
மரம்:
தீர்: சுருளி,சுரபி தி.நே-0600-2000
தொலைபேசி-04554-247285
குலிங்க நாட்டின் தலைநகரம் மணிநகரம். மன்னன் தினகரன். அரசி- விந்துரு. அவர்களுக்கு வாரிசு இல்லாததால் சிறுவனைத் தத்து எடுத்து வளர்த்தார்கள். அப்போது அரசி கருவுற்று ஆண் மகவு பெற்றாள். சந்திரவதனன், சாதகன் என இருவரையும் வளர்த்தனர். தனக்கு ஏழரை ஆண்டுகள் சனி பீடிக்கப் போவதை அறிந்து அது நாட்டிற்கு நல்லதல்ல என்பதால் தன் மகன் சந்திரவதனனுக்கு முடி சூட்டினான். சனியால் தன் தந்தைக்கு பாதிப்பு வரக்கூடாது என்று சனியை வழிபட பக்தியை மெச்சி ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை மாதம் பிடிக்கிறேன் எனக்கூற சந்திரவதனன் அப்படியென்றால் என் தந்தையை விட்டு விடுங்கள். என்னை பீடீயுங்கள் என்றான். சனி ஒப்புக் கொள்ள சனியின் இரும்பிலான விக்ரகத்தை வைத்து சந்திரவதனன் பூஜை செய்து கொண்டிருக்கும்போது வந்த சனி தன்மேல் கொண்ட பக்தியினால் ஏழரை மாதத்திற்குப் பதிலாக ஏழரை நாழிகை மட்டும் பிடிக்கின்றேன் என்றார். இந்நிலையில் அரண்மனையில் சாதகன் காணாமல் போய் விட்டன் என்றும் அவனை சந்திரவதனன் தான் கொன்று விட்டான் என்றும் தவறாக நினைத்த மன்னன் சந்திரவதனனை நன்றாகத் திட்டி அவனைச் சிர சேதம் செய்ய உத்திரவிட்டான். அப்போது சனி தோன்றி உண்மையை விளக்கி சந்திரவதனனைக் காப்பாற்றி பட்டம் சூட்டினான். அதற்கு நன்றியாக சந்திரவதனன் பூஜை செய்த வனத்தில் மரத்தினடியில் வித்தியாசமாய் தோற்றமளித்த சனிஸ்வரனுக்கு குச்சம் என்ற புல்லால் பந்தலிட்டு பூஜை. குச்சுபுல்லினால் அமைந்த கருவரை. சுயம்புசனி-உச்சிக்கால வழிபாடு சிறப்பு. தமிழ்நாட்டின் ஒரே சுயம்பு சனிபரிகாரத் தலம். ராஜயோக தட்சிணாமூர்த்தி- குருபரிகாரத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
