
ஊர்:குற்றாலம்#தி.த-257+மு+அ-14.திரிகூடமலை.திரிகூடாசலம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகுற்றாலநாதர்,ஸ்ரீகுறும்பலாஈசர்,ஸ்ரீதிரிகூடாசலபதி,ஸ்ரீதிரிகூடாசலேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகுழல்வாய்மொழியம்மை-தனிசன்னதி, ஸ்ரீவேணுவாக்குவாஹினி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீமகாலிங்கம்,ஸ்ரீ பாபவிநாசர்-ஸ்ரீஉலகம்மை, ஸ்ரீநெல்லையப்பர்-ஸ்ரீகாந்திமதி, ஸ்ரீநாறும்பூநாதர்-கோமதி, ஸ்ரீபால்வண்ணைநாதர்-ஸ்ரீஒப்பனையம்மன், ஸ்ரீமதுநாதேஸ்வரர்-ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி ஸ்ரீமுருகன்ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
3நிலைராஜகோபுரம்.
தீர்-வடவருவி,சித்ராநதி,தேனருவி.
மரம்-குறும்பால.
தி.நே-06-12,1630-2000
#01082006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-04633-210138
பொதிகை மலை மூன்று சிகரங்களுடன் இருப்பதால் திரிகூட மலை. சங்கு வடிவில்கட்டப்பட்டது குற்றாலநாதர் ஆலயம். அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்ததில் வாசுகியின் சேவையை மெச்சிய சிவன் குற்றாலத்தில் தவமிருக்கச் சொல்ல வாசுகியின் தவத்தால் பரவிய வெப்பம் கண்டு தேவர்கள் ஈசனிடம் செல்ல அனைவரையும் குற்றாலம் வரச்சொல்லி ஈசன் திரிபுரத் தாண்டவத்தை வாசுகிக்காக ஆட அதை பிரம்மன் சித்திரமாக வரைய அந்த இடமே பஞ்ச சபைகளில் சித்திர சபை-1/5-தனிகோயில். தாண்டவத்தால் வெப்பம் குறைந்து அனைவரும் ஆனந்தமடைந்தனர். சிவபக்தனான வாசுகி பொதுநலன் காரணமாக தன் உடல் உபாபதைகளைத் தாங்கி அமிர்தம் கடைய உதவி செய்ததால் சிவன் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக திகழும் பேறு பெற்றது. மார்கழியில் பஞ்சமூர்த்திகளுடன் 10நாள் ஆருத்ரா தரிசன விழா. வைணவ ஆலயத்தில் உள்ளே சிவ அடியாரான அகத்தியரை அனுமதிக்காததால் அருகில் உள்ள இலஞ்சிக்குமரன் ஆலோசனைப்படி வைணவ அடியாராக உள்ளே வந்து திருமால் வடிவில் இருந்தமூர்த்தியை தலையில் கைவைத்து 'குறு குறு குற்றாலநாதா என்று சொல்லி அகத்தியர் லிங்கமாக மாற்றிய தலம். (ஸ்ரீதேவி- குழல்வாய் மொழியம்மையாகவும், பூதேவி-பராசக்தி யாகவும்). திருமேனியின்மீது அகத்தியரின் 5விரல் பதிப்புகள். 5அருவி, சண்பகருவி, தேனருவி, புலியருவி உடல் சுகம்தரும் அருவிகள். 4 மறைகளும் தவம் செய்து பலா ஆனது-யாரும் உண்பதில்லை. அகத்தியர் தலையில் கைவைத்து அழுத்தியதால குற்றாலநாதருக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைப் போக்க தினமும் காலசந்தி அபிஷேகத்தின்போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம்- அபிஷேகத்திற்கு. அர்த்த சாமத்தில் மூலிகைகளால் ஆன கஷாயம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மகாமேரு-பராசக்திபீடம். தை,மார்கழி,சித்திரை திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(181)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
