
ஊர்:திருவேதிகுடி.தி.த-131+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீவாழைமடுநாதர், ஸ்ரீசெல்வபிரான், ஸ்ரீவேதிகுடி மகாதேவர்.
இறைவி: ஸ்ரீமங்கையர்க்கரசி , ஸ்ரீமங்களநாயகி
தாயார்
உற்சவர்:: பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. 30சிவலிங்கங்கள்.
த.வி-ஸ்ரீவேதவிநாயகர் /செவிசாய்த்த விநாயகர். 108 லிங்கங்கள்.
3நிலைராஜகோபுரம்.
தீர்-வேத.
மரம்-வில்வம்.
தி.நே-0900-1230,1600-2000
1100 ஆண்டுகள் பழமை. ஆதித்த சோழன் கட்டிய கோவில். பிரம்மன் பூசித்த தலம். திரு-அழகிய, வேதி-பிரம்மன். குடி-குடிபுகுந்த ஊர் -திருவேதிகுடி.
இறைவன் 4முகங்களாலும் அருளிச்செய்யும் 4வேதங்களையும் செவிசாய்த்து கேட்கும் நிலையில்- வேதவிநாயகர். வாழை மடுவில் தோன்றியதால் வாழைமடு நாதர்.
பங்குனி 13,14,15 சூரிய கதிர்கள் லிங்கம் மேல்.
சைதன்ய முனிவர், வசிஷ்டர், அருந்ததி, சூரியன், பிரமன், குபேரன், சைதன்ய மகரிஷி வழிபட்டது.
துர்வாசமுனிவரின் மாணவர் வசிஷ்டரின் தங்கையை மணந்தவர் அந்தணக்குறிச்சி சிலாது முனிவர்- கல்லை அறைத்துக் குடித்ததால் சிலாது முனிவர் நிலம் உழுதபோது பெட்டகத்தில் ஓர் குழந்தை கிடைக்க கையில் மானும் மலுவும் இருந்தது. பெட்டிக் குழந்தை செப்பேசர். ஏழு ஊர்களிலும் ஓர் முனிவரின் ஆசிரமம் இருந்துள்ளது. திருப்பழனத்திலிருந்து பழங்கள் திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவமுது, திருவேதிகுடியிலிருந்து வேதியர்கள், திருக்கண்டியூரிலிருந்து மகரகண்டிகை, திருப்பூந்துருத்தியிலிருந்து மலர்கள், திருநெய்த்தானத்திலிருந்து நெய் என்று ஏழு ஊரிலிருந்தும் திருமணத்திற்கு வேண்டிய பொருட்கள் வந்து சேரும். சப்தஸ்தானவிழா. திருமணத்தடை நீங்கும் தலம்.
திருவையாற்று சப்த ஸ்தானத்தலம்-1/7 (திருவையாறு, திருப்பழனம், திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருநெய்தானம், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை.) அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
