
ஊர்:திருக்கண்டியூர்.# தி.தே-7,திருமூர்த்தி சேத்திரம்,கமாலாரண்யம்
மூலவர்:ஸ்ரீஅரசாபவிமோசனப்பெருமாள்-நின்றகோலம்-ஸ்ரீதேவி,பூதேவி, பலிநாதன், ப்ருகுநாதன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லிநாச்சியார்
உற்சவர்: ஸ்ரீகமலநாதன்
பிறசன்னதிகள்: ஸ்ரீசப்தஸ்தான, பஞ்சபூதலிங்கங்கள். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீபிரம்மா-ஸ்ரீசரஸ்வதி. ஸ்ரீகல்பசூரியன். ரிஷபத்தில்-ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை.
தீர்-பத்ம(பலி)-கமல,கபாலபுஷ்கரணி(கதா).
வி-கமலாக்ருதி.
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்: 4காலபூஜை(காலை,உச்சி,சாயரட்சை,அர்த்தசாமம்.) தி.நே-0700-1200,1700-2030
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்த சிவனின் கையிலே அந்த பிரம்ம கபாலம் ஒட்டிக்கொள்ள பூமியில் இங்கு கதாதீர்த்தத்தில் நீராட பிரமனின் கபாலம் நிறைந்து அரன் கையைவிட்டு நீங்கிய தலம்- அரசாபவிமோசனப்பெருமாள். காசியில் 1லிங்கம் காணாதது கண்ட வசிஷ்ட்டர் சூரியனையும், சனியையும் சபிக்க இங்கு வழிபட்டு அரை சாபம் தீர்ந்த தலம். பஞ்ச கமல ஷேத்திரம்- கமலநாதன், கமலவல்லி, கமலதீர்த்தம், கமலாக்கிருதி, கமலாரண்யம். சரஸ்வதி நதிக்கரையில் யாகம் செய்த முனிவர்கள் யாகத்தின் பலனை யாருக்கு கொடுப்பது என்ற நிலையில் ப்ருகு பிரம்மாவைக் காணச் செல்ல அவர் ப்ருகுவை கண்டு கொள்ளவில்லையாதலால் பிரம்மாவிற்கு தமோ குணம் என்று சிவனைப் பார்க்கச் செல்ல சிவன் ராஜோ குணம் உள்ளவர் என்று எண்ணி வைகுண்டத்தில் பெருமாளை பார்க்க அவரும் கண்டுகொள்ளாமல் இருக்க அவர் மார்பில் எட்டி உதைக்க பெருமாள் அவர் கால் வலிக்கும் என அவர் காலில் இருந்த கண்ணை அமுக்க தன் நிலையடைந்த ப்ருகி தான் செய்த தவறுக்கு வருந்த அவருக்கு ஆறுதல்-ப்ருகுநாதன்.மகாபலி தன் பாவங்கள் போக குளத்தில் நீராடி வழிபட்டு அருள்-பலிநாதன். சந்திரன் வழிபட்டு தன் ரோகம் தீர்ந்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: