ஊர்:திருமுல்லைவாயில்(வட)#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமண்ணாதீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீவேங்கையம்மன்,ஸ்ரீபச்சைமாதேவி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமன்மதன் -ரதி, முடியால் அழகி ஸ்ரீபூங்குறத்தி,ஸ்ரீ பைரவர், ஸ்ரீசுகரிஷி, ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீவாழ்முனி(பெருமாள்)
மரம்:
தீர்: சிவகங்கை சூரிய புஷ்கரணி சக்தி தீர்த்தம்
தி.நே-0700-1200,1630-2030
#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பிருங்குமுனி வண்டுருவில் சிவனை சுற்ற கோபம் கொண்ட சக்தி ஈசனின் பாதியாக மாற உரிமைகேட்க சிவன் மறுக்க தவமிருந்து உரிமைபெற புறப்பட வழியில் சூரகோமன் என்ற அக்னிவீரன் வழிமறிக்க பார்வதி சகோதரன் திருமாலை வேண்ட வானளவு உயர்ந்து நின்று அரக்கனை தன் காலில் பூமியில் அழுத்தினார்- வாழ்முனி. அவருடன் வந்த ரிஷிகள் கரு முனி, செம்முனி, வேதமுனி, முத்துமணி, லாடமுனி, ஜடாமுனி அறுவரும் ஆகாசவீரன், ஜலவீரன், சண்ட வீரன், ரண வீரன், கோட்டை வீரன், அந்தரவீரன் ஆகிய சகோதர அரக்கர்களை அவர்களின் தலை மட்டும் தெரியும் வண்ணம் பூமிக்குள் அழுத்தி அவர்களை செயல்படாமல் செய்தனர். அக்னி வீரனின் மகன் வீரமுத்து போரிட வந்தான். அவனது படைகளை திருமால் அழித்து அவனை வதம் செய்யும்போது அவன் மனைவி வீராட்சி மடிப்பிட்சை கேட்க வாழ்முனி அவரை விடுவித்தார். பார்வதி தவம் செய்ய அவருக்குத் துணையாக வேங்கடமலை நாச்சியார்-மகாலட்சுமி, பூங்குறத்தி நாச்சியார்-சரஸ்வதி, ஆனைக்குறத்தி நாச்சியார்-இந்திராணி ஆகியவர் உடன் இருந்தனர். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
