
ஊர்:திருவள்ளூர்#தி.தே-59.திருஎவ்வுள்.
இறைவன்:எவ்வுள்கிடந்தான், வைத்யவீரராகவசுவாமி, புஜங்கசயணம்-கிழக்கு
இறைவி:கனகவல்லி, வஸுமதிதேவி, தனிக்கோவில்நாச்சியார்
உ: வீரராகவப்பெருமாள்
பிறசன்னதிகள்: கோதண்டராமர், வேணுகோபாலன், வேதாந்த தேசிகர், நம்மாழ்வார், ஆண்டாள், லட்சுமிநரசிம்மர், உடையவர், சுதர்சனர், ஆனந்த ஆழ்வார்.
5நிலைராஜகோபுரம்
2பிரஹாரங்கள்
தீர்-ஹ்ருத்தபாபநாசினி.
வி-விஜயகோடி.
க்ஷேத்திரம்: புண்யாவர்த்த, வீக்ஷாரண்ய
பாஞ்சராத்ரம ஆகமம்
தி.நே.0630-12,16-20
# 23062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி: 044 27660378
கிரோதயுகம்- பத்ரிநாத்தில் புருபுண்னியர் பத்ரி ஆசிரமத்தில் தன்மனைவியுடன் சாலி யாகம். சாலி-ஓர் அளவு. ஒருநாளில் 28000சாலி நெல் அளந்து தொடர்ந்து ஒருவருடம் யாகம் செய்து சாலிஹோத்ரன் என்ற பிள்ளையை பெற்றார்கள். வளர்ந்த பின் சேத்திர தரிசனம் செய்த படியே அடர்ந்த காடாக இருந்த திருவள்ளூர் பகுதிக்கு வந்தவர் இங்கேயே தங்கி தவம் செய்யலானார். அன்னம் தண்ணிரின்றி ஒருவருடம் தவம் செய்தார். காட்டில் அலைந்து திரிந்து நெல் சேகரித்து ஆயுதமின்றி அதைக் கைகளால் உரித்து சமைத்து விருந்தினரைக் கவுரவித்து பின் தான் உணவு உண்டு விரதத்தை முடிக்க எண்ணினார். சமைத்து முடிந்ததும் கானகத்தில் வந்த பெரியவருக்கு பரிமாற அவர் பசி அதிகம் எனக்கூறி எல்லா உணவையும் உண்டபின், களைப்பாக இருக்கிறது "எந்த உள்ளில்" (எந்த இடத்தில்) ஓய்வெடுக்க எனக்கேட்டு கிழக்கே தலைவைத்துப் படுத்தார். தன் வலது கரத்தை சாலிஹோத்திரரின் தலையில் வைத்து ஆசி வழங்கினார். அப்போது சயனைத்த கோலத்தில் சிலையாக மறினார். வேணுகோபாலன். சாலி ஹோத்ரர் பக்தியில் உணவுண்டு, களைப்பால் "படுக்க எவ்வுள்" எனக்கேட்டு தெற்கே திருமுகம் சயன காட்சி. ஒய்வெடுக்க கேட்டதால்-திருஎவ்வுள் மருவி திருவள்ளூர் ஆனது. திருஎவ்வுள்-திருவள்ளூர்-தர்மசேனபுரம் மன்னன் தர்மசேனன். மகாராணி கௌதமி. ஸ்ரீவ லட்சணங்களுடன் தங்க நிறத்தில் பிறந்த குழந்தையை தங்க நிலா போன்று இருந்ததால் வசுமதி எனப் பெயரிட்டு வளர்த்தனர். வசு-தங்கம், மதி-நிலா. ஹ்ருதாபநாசினி என்ற குளக்கரையில் பூப்பரிக்கும்போது வடமாநிலத்து அரசகுமரன் ஒருவனைப் பார்த்து மையல் கொண்டாள். அவன் நினைவாகவே இருக்க அறிந்த மன்னன் அந்த ராஜகுமரனைத்தேடி கண்டுபிடித்து தன் மகளை மணக்க சம்மதமும் இங்கேயே இருந்து வாழ்க்கை நடத்தவும் ஒப்புதல் வாங்கினான். பின் தன் குலதெய்வமாகிய திருஎவ்வுள் வீரராகவப் பெருமானிடம் என் மாப்பிள்ளையைக் காண்பிக்கவேண்டும் எனக்கூறி தலத்திற்கு கூட்டி வந்தான். திருக்குளத்தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்ட மாப்பிள்ளை எப்படி கோவிலில் வழிபாடு நடத்தவேண்டும் என்பதை முன்பே அறிந்தவர்போல் செயல்பட ஆச்சரியம் கொண்டனர் அரசனும் அரசியும். கருவறை முன்பு மாப்பிள்ளை வசுமதியின் கையைப் பிடித்ததும் தான் யார், தன்னைக் கைப்பிடித்தது யார் என்பது வசுமதிக்கு புரிந்தது. அப்படியே வசுமதியை அழைத்துக் கொண்டு கருவறையுனுள் சென்று மறைநதார் பெருமான். நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மாப்பிள்ளையாக வந்தது வீரராகவப் பெருமாளே என்பது அறிந்து நீர்மல்க ஆனந்தம் அடைந்தனர். தர்மசேனருக்கும் அவர் மனைவிக்கும் தனியே காட்சி அருள். ஸ்ரீதேவியை இத்தனைநாள் சீரோடு வளர்த்தமைக்காக உங்கள் ஜன்ம நட்சத்திரமான தை பூரட்டாதிக்கு 10 நாள் முன் தொடங்கி திருக்கல்யாண உற்சவம் அருள் செய்தார். தர்மசேனர் ஆட்சி செய்த மகிஷாவனம்- ஈக்காட்டிற்கு வீரராகவப் பெருமாள் எழுந்தருளுகிறார். அஸ்வமேதயாகம் செய்தால் தன் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பதால் யாகம் செய்ய முற்பட்டபோது சீதையில்லாக் குறையைப் போக்க சீதையிப் போன்று ஒரு தங்க விக்ரகம் செய்து வைத்து யாகம் நடத்தினர். அந்த தங்க விக்ரகம் தான் இங்கு வசுமதியாக பிறக்க அவரை மணம் செய்கின்றார் பெருமான். இங்கு செய்யும் புண்ணியங்கள் 1000 மடங்கு பலன்- புண்ணியவார்த்த சேத்திரம். பாபநாசினி, நோய்தீர்க்கும் விஷார்ண்ய சேத்திரம், ஸ்ப்தராம சேத்திரம்-7/7, கௌசிகன் செய்யாத தவறுகளே கிடையாது. எல்லாவற்றையும் செய்துவிட்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வந்தான். இங்கு வந்து தனக்கு அடைக்கலம் கொடுத்தவரின் மகளை அடைந்தான். இறுதிநாள் வந்தபோது எதிர்பாராவண்ணம் ஹ்ருத்தாபநாசினி குளத்தில் விழுந்து இறந்ததால் அவனது பாவங்கள் நீங்கி சொர்க்கம் சென்றான்.
மங்களாசாசனம்- சீதா பிராட்டியின்மேல் கொண்ட விருப்பத்தினால் காவி உடையால் உடம்பை மறைத்துக் கொண்டு கபட சன்னியாசியாய் வந்த ராவணனுடைய ஊராகிய இலங்கையானது நாசமாகும்படி செய்த பரிபூர்ண சக்தியுடையவனும் நமக்கு ஸ்வாமியும் மூங்கிலுக்கு ஒப்பான தோள்களையுடைய இடையர்குலப் பெண்கள் ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ எனச் சொல்லி கேலி செய்யும் படியாக நின்றவனுமான எம்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறான்.
சீதா பிராட்டிமேல் விருப்பம் கொண்டவனும் வாளாயுதத்தை உடையவனுமான அரக்கன் ராவணனுடைய பத்துத் தலைகளையும் ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே அறுத்தெரிந்த எம்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கின்றான்.
ரமாவதாரத்தின்போது அனுமனின் மூலமாக சீதா பிராட்டிக்குத் தூது சொல்லியனுப்பி பிறகு ராவணனுடைய லங்காபுரியை அழித்து, ராவணனை ஓர் அம்பினாலே மாண்டு போகும்படி செய்தவன், பின் கிருஷ்ணாவதாரத்தில் ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்காக தானே தூதுவனாய்ச் சென்று இப்பூமியுள்ளோர் எல்லோரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கின்றான்.
பந்து பொருந்திய மெல்லிய விரல்களை உடையவளான நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக பயங்கரமானவையும் கம்பீரமானவையுமான ஏழு காளைகளை வென்ற அரசனும், உலகமெங்கும் பரந்த புகழுடையவனான நந்தகோபனுக்கு திருமகனாக அவதரித்த பரிபூரணனும் நமக்கு சுவாமியும் நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் திருவெவ்வுளூரில் பள்ளி கொண்ட பெருமாளாய் காட்சியளிக்கின்றான்.
சிறு குழந்தையாய் உலகங்களையெல்லாம் திரு வயிற்றிலே இருத்திக்கொண்டு ஆலிலையின் மேல் வெகுகாலம் பள்ளி கொண்டிருந்த தாமரைக் கண்ணன், கணக்கற்ற நெய்தற் பூக்களிலே அமர்ந்து. அப்பூக்களில் உள்ள தேனை அருந்தி வாழும் வண்டுகள் நிறைந்த குளுமையான நெய்தல் நிலங்களையும் மணம் வீசும் மலர்கள் நிறைந்த சோலைகளையும் உடைய திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் கட்சியளிக்கின்றான்.
அடியவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு சுவாமி உமக்கு நமஸ்காரம் என்று சொன்னபடியே பின் தொடர்ந்து செல்லும்படியான ப்ரியத்துக்கு உரிய ஸ்வாமியாய்த் திகழும் செந்தாமரைக் கண்ணனான பகவான், சனகர் முதலிய ரிஷிகளும் தேவர்களும் ‘பிரமனே, சிவனே’ என்று சொல்லி வணங்கும்படியான பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் கட்சியளிக்கின்றான்.
சந்திரனின் பிரகாசமாகவும், பஞ்சபூதங்களாகவும், பிரமனுக்குத் தந்தையாயும், சாமவேதத்தால் போற்றப்படுகின்றவனாகவும், வண்டுகள் தேனருந்த கூடிய புதிய பூக்களாலான கொன்றை மாலையை அணிந்து திருச்சடையில் கங்கையைத் தாங்கிய சிவபெருமானால் வணங்கப்படும் திருவடிகளை உடையவனுமான எம்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் கட்சியளிக்கின்றான்.
உலகங்களைப் படைக்க ஸ்ங்கல்பம் செய்தவனும் பிரமன், விஷ்ணு சிவன் என மூன்று மூர்த்தியாக நிற்பவனும் வேதப் பொருள்களை வெளியிட்ட பவித்திரனும் காயாம்பூப்போன்ற நிறம் கொண்டவனும் எல்லோராலும் வணங்கப்படுபவனும் புண்ணியனும் நித்யசூரிகளுக்கு தலைவனும், தன்னிகரில்லாது தனித்து நிற்பவனும், எட்டாப் பரம்பொருளாய் இருந்தாலும் தன் அடியார்க்கு எளிதாக வசப்படுபவனும், இனியனும், தந்தைக்குச் சம்மாக அருள் செய்பவனும் ஆகிய எம்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் கட்சியளிக்கின்றான்.
பந்து தங்கிய மெல்லிய விரல்களை உடையவளும் குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாகக் கொண்டவளுமான எம்பிராட்டி என்றும் தங்கியிருக்கக் கூடிய திருமார்புடையவனாகவும், நீலமணி நிறத்தினனாகவும் தேவர்கோனான இந்திரனாலும் வணங்கப் படக்கூடிய தலைவனுமாகிய எம்பெருமான் திருவெவ்வுளூரில் பள்ளிகொண்ட கோலத்தில் கட்சியளிக்கின்றான்.
ஏராளமான மலர் மாலைகளை எடுத்து வந்து சூட்டி பக்தர்கள் வணங்கும்படியாக திருவள்ளூரில் சயனித்தருள்பவனான எம்பெருமான் போற்றும் விதமாக, தேன் உண்ட மகிழ்ச்சியினால் வண்டுகள் ரீங்காரமிடாது மெய்மறந்து இருக்கக் கூடிய பரந்த சோலைகளையுடைய திருமங்கை தேசத்தில் உள்ளோர்க்குத் தலைவனாகிய திருமங்கை ஆழ்வார்மனதில் எம்பெருமான் மீது கொண்டுள்ள பக்தியினால் இனிய தமிழில் பாடிய இத்துதியினைச் சொல்பவர்கள், இவ்வுலகை ஆளும் அரசர்களாகத் திகழ்வார்கள். அவர்களுக்கு அதில் ஆசையில்லாவிடில் பரமபதத்தினை ஆளும் வாய்ப்பு கிடைக்கும்.. திருமங்கை ஆழ்வார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
