
ஊர்:வைத்தீஸ்வரன்கோயில்#தி.த-70+நவ3/9+மு, புள்ளிருக்குவேளூர். வேதபுரி, சடாயுபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரகபுரி, அம்பிகாபுரம், வினைதீர்த்தான்கோயில், வேலூர், கந்தனூர், கிருதாயுகம்-கதம்பவனம், திரேதாயுகம்-வில்வவனம், துவாபாரயுகம்-மகிழம்வனம், கலியுகம்-நிகும்பவனம்(வேம்பு)
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவைத்தியநாதர்
இறைவி:ஸ்ரீதையல்நாயகி.
தாயார்
உற்சவர்: ஸ்ரீசெல்வமுத்துக்குமாரசுவமி,
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன்.மயில்மீது, ஸ்ரீஅங்காரகன், ஸ்ரீதைலாம்பாள். வேம்படியில்-ஸ்ரீஆதிவைத்யநாதர், ஸ்ரீராமர், ஸ்ரீஜுரஹரேஸ்வரர், ஸ்ரீசடாயு. ஸ்ரீசூரியன், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீஅங்காரகன் லிங்கங்கள்
7நி.கி,மே.ராஜகோபுரம்-5பிரகாரங்கள்.
தீர்-சித்தாமிர்தகுளம்,கோதண்ட,கௌதம,வில்வ,முனி,அங்கசந்தான.
மரம்-வேம்பு.
6காலவழிபாடு.
தி.நே-06-13,16-21
#15052008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(6)
சிவன் உமையைப் பிரிந்து கல்லால மரத்தின்கீழ் யோகத்தில் இருந்தபோது அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து நீர்த்துளி விழ அதிலிருந்து அங்காரகர் தோன்றினார். பூமாதேவியின் புத்திரர். அங்காரகன் முருகனின் சகோதரர். அவருக்கு குஜன், மங்கலன் என்ற பெயர்களுண்டு. பெருந்தன்மை, வைராக்கியம், நேர்மை, துணிவு ஆகிய குணங்களுக்கு உரியவர்.
புள்-சடாயு-சடாயுபுரி, இருக்கு-வேதம்-வேதபுரி, வேள்-முருகன்-கந்தபுரி, ஊர்-சூரியன்-பரிதிபுரி என் நால்வர் வழி பட்டமையால்-புள்ளிருக்குவேளூர். அங்காரகன் பூஜித்ததால்- அங்காரகபுரம், அம்பிகை வழிபாடு- அம்பிகைபுரம். சூரபத்மனை கொல்ல முருகன் வேல் பெற்ற தலம். சரும நோய் பிடித்த செவ்வாய் சித்தாமிர்த குளத்தில் நீராடி ஒருமண்டலம் வைத்தியநாத சுவாமியை வழிபட நோய் நீங்கி சுயரூபம்- அங்காரக ஷேத்திரம் -உடல் நலம், ரத்த சம்பந்தபினி நீங்க அருள்.
செவ்வாய் நவக்கிரகத் தலம்-3/9- செவ்வாய்கிழமை-தோஷ நிவர்த்தி-பகைவர்களை ஜெயித்தல். உயிர்களின் நோய் நீக்க தைலப் பாத்திரமும், சஞ்சீவியும், வில்வ மரத்தடி மண்னும் கொண்டு இறைவனும் உமாதேவியும் மருத்துவராக அருள் செய்த தலம். அறுசுவை உணவை அடியார்க்கு அளித்து மாகேசுவரபூஜை செய்யும் தலம்.
குளத்தில் தவளையில்லை. இங்கு தரும் சந்தனக் குழம்பு உருண்டையை சித்தாமிர்த குளத்து நீருடன் பருகினால் வியாதி நீங்கும். திருச்சாத்துருண்டை, நேத்ரபிடிசந்தனம், அர்த்தசாம திருநீரும் சிறப்பு.
கிருத்திகை தோறும் செல்வமுத்துக்குமாரசாமி- அபிஷேகம் மிகச் சிறப்பு.
நவக்கிரகங்கள் ஒரே வரிசை. இராமர், சடாயு, சுப்பிரமணியர், சூரியன், வழிபட்டது. கோயில் விளக்கு மிகவும் அழகு.
செவ்வாய்- அர்த்தஜாமம், புழுகாப்பு தரிசனம் மிகமிகச் சிறப்பு.
ஜடாயு குண்டம்-சிறப்பு. வைத்தியநாதர் +முத்துக் குமாரசாமி சர்வகிரக தோஷம் நீங்கும்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(178)- பெற்ற தலம். செவ்வாய்க்கிழமை-செண்பகம் மலர் வழிபடல் சிறப்பு- செவ்வாய்க்கு முருகனே அதி தெய்வம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
