Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:45

சிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏந்தொழிற் கொம்பா போற்றி ஏக்கங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஏதங்கள் கடிவாய் போற்றி ஏர்முனைத் தேவே போற்றி
ஏகம்பர் மகனே போற்றி ஏதிலார் துணையே போற்றி
ஏரானை முகத்தாய் போற்றி ஏந்தலே போற்றி போற்றி

சிவ 64 திரு வடிவங்களைத்தவிர புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ வடிவங்கள் (10)
1.கஜாரி-ஆணை உரி போர்த்த அண்ணல்
2.கஜமுக அனுக்கிரக மூர்த்தி-விநாயகருக்கு அருளியது
3.இராவணனுக்கு அருளிய வடிவம்- இராவண அனுக்கிரக மூர்த்தி
4.ஹரிவிரிஞ்சதாரணர்
5.ஏகாதச ருத்திரர்
6.முயலகவத மூர்த்தி
7.சர்வ சம்ஹாரர்
8.யக்ஞேசுவரர்
9.உக்கிரர்
10.அந்தகாசூரனை அழித்த அம்மான்

சிவஅடியவர்களுக்கு உதவ சிவபெருமன் கொண்ட மானிட வடிவங்கள் (45).
1. தாயாய் எழுந்தருளிய தயாபரன்!
2. அதிதியாக!

புலவர் வடிவம்-நான்கு!
3. இசை வாதி வெற்றி புலவர்.
4. சங்கப் பலகை கொடுத்த புலவர்.
5. தருமிக்கு பாடல் அருளும் புலவர்
6. உருத்திரசருமன் பிறப்பு பற்றிக் கூறும் புலவர்.

வேடுவ வேடம் மூன்று!
7. யானையைச் சாய்த்த வேடுவன்.
8. வேடுவன், வேட்டுவச்சியாகத் தோன்றி மாபாதகம் தீர்த்தமை
9. வேடனாக சுந்தரப் பேரம்பு எய்தமை

சித்தர் வேடம் மூன்று!
10. எல்லாம் வல்ல சித்தர்
11. வைகையை வற்றச் செய்த சித்தர்.
12. பொன்னையாள் இல்லத்தில் இரசவாத செய்த சித்தர்.

குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!
13. 16வயது அந்தனர் வேடமேற்று வேதத்தின் பொருள் அருளியமை
14. கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி உபதேசித்தல்
15. வாதாவூராருக்கு உபதேசித்தமை.

வணிக வேடம் மூன்று!
16. வைசியர் வேடங்கொண்டு மாணிக்கம் விற்றமை:
17. வளையல் விற்கும் வணிகர்:
18. தனபதி செட்டியாராக மாமனாகி வழக்குரைத்தமை:

குதிரைச் சேவக வடிவம் இரண்டு!
19.சுந்தரசாமந்தனுக்கு அருளல்:
20. மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கி குதிரைச் சேவகனாக அருளல்:

மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!
21. வாள் ஆசிரியனாக:
22. தவசியாக தண்ணீர் பந்தல் வைத்தமை:
23. விறகு வெட்டியாக விறகு விற்றமை:
24. வலைஞராகி கடலில் மீன்வலையை வீசியமை:
25. கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்தமை:
26. மடுவில் சோழனை வீழ்த்திய வேல்வீரன்:
27. சைவமுதியவர் வடிவம் தாங்கி வந்து இளைஞானக உருமாறால்:

சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்- ஆறு!
28. தடுத்தாட்கொள்ளவந்த முதிய அந்தணர் வடிவம்:
29. திருவதிகையில் திருவடிசூட அந்தணர் வேடம்:
30. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர்:
31. திருக்குருகாவூரில் பொதிச் சோறு அளித்த மறைவேதியர்:
32. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர்:
33. பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவர்:

திருநாவுக்கரசருக்கு அருளிய வடிவங்கள்- இரண்டு!
34. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளித்த அந்தணர்:
35. பனிபடர்ந்த மலையில் அப்பருக்கு அருளிய முனிவர்:

நாயன்மார்களுக்கு அருளியது-எட்டு!
36. திரு நீலகண்ட நாயனார்க்கு அருளிய சிவயோகியர்:
37. இயற்பகை நாயனாரை சோதித்த தூர்த்தர்:
38. இளையான்குடி மாற நாயனாரை உய்வித்த அடியார்:
39. அமர்நீது நாயனாரை ஆட்கொண்ட பிரமச்சாரி:
40. மானக்கஞ்சாற நாயனாருக்காக மாவிரதியர் வடிவம்:
41. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக அருந்தவ வடிவம்:
42. சிறுத்தொண்ட நாயனாருக்காக பைரவர் வடிவம்:
43. விறன்மிண்டருக்கு அருளிய அடியார்:

காட்சி அருள்!-இரண்டு!
44. முன்பே ஒரு மார்க்கண்டேயன்! சுவேதன்!
45. அடியாருக்கு அபசாரம்

#####

Read 8921 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:07
Login to post comments