Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆப்தன்!

Written by
Rate this item
(0 votes)

 

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்
தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

ஆப்தன்!-ஆப்தர்!-பிரமாணம்!

யோகிகள் நேரில் கண்டு சொன்ன உண்மைகளை ஆப்த வாக்யம் என்கிறோம். நாம் அறிவைப் பெறுவதற்காக தீவிரமாக முயற்சிக்கின்றோம். நீண்ட காலம் காரணம் தேடி கண்டுபிடித்து வாதம் செய்து அதிக சிரமங்களுக்குப்பிறகு உண்மைகளைக் கண்டு அறிவைப் பெறுக்குகின்றோம். பரிசுத்த ஆன்மாவான யோகிகள் இந்த முறைகளைக் கடந்து கடந்தவைகளையும், நிகழ்வதையும், வரும் எதிர்காலத்தையும் பற்றிய அறிவுகள் அவர் மனதில் உள்ளத்தில் தோன்றி ஒளிரும். அவர் அதை தன் உரையில் வெளியிடுகிறார். ஆன்மீக சாஸ்திரங்களை இப்படி ஞானிகள் தோற்றுவித்துள்ளனர்.
அவர்களின் சொற்கள் நமக்குப் பிரமாணம். நம்முடைய அனுபவம் கடந்த கால அறிவுடன் ஒத்து இருக்குமாயின் அந்த அனுபவத்தை பிரமாணம் எனலாம். விவேக புத்திக்கும் அனுபவத்திற்கும் முரண்பாடில்லாமல் இருந்தால் அந்த அறிவை ஏற்கலாம். ஓர் உண்மையை வெளியிடுவதற்கு ஒரு மனிதனின் குணம் முக்கியமில்லை. தீய ஒழுக்கமுடையவன் வான சாஸ்திரத்தில் ஓர் உண்மையைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் ஆன்மீகத்துறையில் தூய மனமற்ற ஒருவன் எப்போதும் ஆன்மீக உண்மைகளை காண வல்லமை பெறமாட்டான். ஆப்தன் என்று சொல்வதற்கு முன்னால் அவன் தன்னலமற்றவனாகவும் தூயவனாகவும் இருக்கின்றான என்பதை அறியவேண்டும். மேலும் அவன் புலன்களை வென்று அவற்றைக் கடந்தவனாக இருத்தல்வேண்டும். புதிய கண்டுபிடிப்பு உண்மை பழைய உண்மைக்கு மாறுபடாததாகவும் அதை ஒட்டியதாகவும் இருக்க வேண்டும். அந்த உண்மை எல்லோர் அனுபவத்திற்கும் வரும் வாய்ப்பாக இருக்கவேண்டும். ஒருவனுக்கும் வந்த ஞானக்காட்சி மற்றவர்களுக்கும் வரக்கூடியதே. தான் பெற்ற ஞானத்தை விலைக்கு விற்பவன் ஆப்தன் அல்லது ஞானி ஆகமாட்டான். ஞானம் வழங்குபவன் தூய்மையுடனும், தன்னலமற்றும், செல்வத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படதாவனாக இருக்க வேண்டும். உலகுக்கு பயன்படக்கூடியதாகவும் புலன்களுக்கு எட்ட முடியாததாயும் உள்ள ஞானத்தை எல்லோருக்கும் வழங்குபவனாக இருத்தல் வேண்டும். அவனின் கொள்கை எல்லோராலும் பின்பற்றக்கூடியதாக இருக்கவேண்டும். மற்ற உண்மைகளுக்கு முரண்படாதவையாக இருக்க வேண்டும். ஆப்தர்- என்றால் அடைந்தவர் என பொருள். ஆப்த வாக்கியம் அகத்திலிருந்து வருவது. ஆவேசம் கொண்டவன் ஆப்தனாக மாட்டான். ஆவேசம் புறத்தேயிருந்து அகத்தே வருவதாகும். ஆப்தனுக்கு தன்னடக்கம் வேண்டும்.குருஸ்ரீ

Login to post comments