gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Written by

40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தர் க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.

வழக்கம்போல் அன்றும் நீராட சிவபாத இருதயர் கிழம்ப குழந்தை தானும் வருவேன் என அடம்பிடித்தது. மகனை உடன் அழைத்துச் சென்றார். மைந்தனைக் குளக்கரையில் இருக்கச்செய்து குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி குளிக்க ஆரம்பித்தார். தந்தையைக் காணவில்லை என குழந்தை குரல் கொடுக்க, அழுதகுரல் கேட்டு திருத்தோணிபுரத்துறையும் பெருமான் விண்ணிருந்து மண்ணிற்கு வந்த குழந்தைக்கு உண்ண அமுதுடன் சிவஞானம் கொடுக்கச் சொன்னார். பிராட்டியும் பொற் கிண்ணத்தில் இன்னமுதப்பால் பெய்து சிவஞானம் குழைத்து எடுத்து ஊட்டினார். குழந்தையின் அழுகை நின்றது.

குளித்து முடித்த தந்தை குளக்கரையில் தம் புதல்வன் எச்சில்பால் உண்டவாயும் கையிற் பொற்கிண்ணமுமாக இருப்பது கண்டு சினந்தார். அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்தது என அடிக்க கை ஓங்கினார். குழந்தை தலைக்குமேல் விரல் ஒன்றினால் பரம்பொருளைச் சுட்டிகாட்டி ‘சிறப்பதோடுடைய செவியன்’ எனத்தொடங்கி பதிகம் பாடினார்.

நான் கூறப்போகின்ற நெறி இருக்கின்றதே அது சிவனடியே சிந்திக்கும் ஒரு நெறி. அது திருநெறி. அதுவும் தமிழ்நெறி. தமிழர்தம் வாழ்வியல் நெறி. இந்த திருநெறிய தமிழ் வல்லர் தொல்வினைதீரும். என்றார். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றார். நம் தமிழ் சமுதாயத்திற்கு சிவனடி பரவும் ஒருநெறியே என் திருநெறி என்றார்.

சிவதலங்களில் வழிபாடு நடத்த விரும்பினார். 3 வயது குழந்தையை தன் தோளில் தூக்கிக்கொண்டு திருகோலக்க என்ற தலத்திற்கு சென்றார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தன் இறைவனை ‘மடையில் வாளை பாய’ என்ற பாடலை பாட கைத்தாளமிட்டதால் கைசிவக்க இறைவன் பொற்றாளம் கொடுக்க அன்னை ஓசை கொடுத்த நாயகியாக உலகெலாம் வியக்க தாளம் பெற்று பாடல் பாடினார். அப்படியே நனிபள்ளி சென்று வழிபட்டு சீர்காழி வந்தார்

ஞானசம்பந்தன் புகழ்கேட்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் தன் துணைவி மதங்க சூளாமணியுடன் வர அவர்களை வரவேற்று இறைமுன் பதிகம் பாட பாணர் யாழ் இசைத்தார், தீண்டத்தக்காதவராய் இருந்த பாணரை ஞானசம்பந்தன் தம்முடன் யாழ் இசைக்க வைத்துக் கொண்டார். அவரை அழைத்துக்கொண்டு தில்லை சென்றார். வழியில் பாணர் ஊராகிய எருக்கத்தம்புலியூர் சென்றார், கொளுத்தும் வெய்யிலைப் பாரது மாறன்படி என்ற ஊரை அடைந்தார். பெருமான் அந்த ஊர் அடியார் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் என்பால் அனைகின்றான், அவனுக்கு முத்துச்சிவிகை மணிக்குடை சின்னம் அளியுங்கள் என்றார்.

பலதலங்களில் பதிகம் பாடி வழிபட்டு மீண்டும் சீர்காழி வந்தார். எழாம் ஆண்டில் ஞானசம்பந்தனுக்கு பூணூல் அணிவிக்க அந்தனர்கள் மந்திரம் சொல்ல ஞானசம்பந்தர் சொல்லவேண்டிய மந்திரம் ஐந்தெழுத்து என்றார். அப்பரடிகள் தன்னைக் காணவருகின்றார் என்பதை அறிந்த ஞானசம்பந்தர் எதிர்கொண்டழைத்தார். சிலகாலம் அங்கிருந்து அப்பரடிகள் சோழ நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

ஞானசம்பந்தர் திருத்தலப்பயணமாக திருப்பாச்சிலாசிரமம்- திருவாசி சென்றார். கோவிலில் மங்கை பருவம் எய்திய பெண் ஒருத்தி உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் கொல்லிமழவன் என்ற குறுநில மன்னனின் மகள். அவள் பிணியை இறைவன் தீர்க்க கோவிலில் வைத்திருந்தார். ஞானசம்பந்தர் பதிகம் பாடி நோய் தீர்க்க வழவனும் அவளும் அடிவணங்கினர். திருக்கொடிமாடசெங்குன்றூர்- திருச்செங்கோடு சென்றார். அப்போது பனிக்காலமாகையால் அடியவர்கள் சிலர் அவதிபட்டனர். அங்குள்ள மடம் ஒன்றில் தங்கி அர்த்தநாரீஸ்வரர் மீது ‘வெந்த வெண்ணீறணிந்து’ என்ற பதிகம் பாடினார்.

பலதலங்களை வழியில் வழிபட்டு திருப்பட்டீச்சுரம் அடைந்தார். அங்கு பூதகணங்கள் ஞானசம்பந்தர் தலைமீது முத்து பந்தலை பிடித்தனர், பின்னர் அடியவர்களிடம் கொடுத்து மறைந்தனர். பட்டீசுவரை வணங்கி திருவாவடுதுறையை அடைந்து தங்கினார். அப்போது அங்குவந்த சிவபாத இருதயர் வேள்வி செய்ய பொருள் வேண்டும் என ஞானசம்பந்தரிடம் கேட்டார். திருவாவடுதுறையானைப் பதிகம் பாடி 1000 பொற்காசுகள் பெற்று தந்தையாரிடம் கொடுத்தார். தலங்களை வழிபட்டு தருமபுரம் வந்தார். அங்கு ஞானசம்பந்தர் பாணர் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்கருவியில் அடங்காத பாசுரம் பாடினார்.

சாத்த மங்கை என்னும் தலத்திற்கு சென்றார். அந்த ஊரின் நீலநக்கர் ஞானசம்பந்தரை தன் குருவாக நினைத்திருந்தார். இவர் வருகிறார் என்ற செய்தி அவருக்கு பரவசமூட்டியது. ஞானசம்பந்தர் கோரிக்கையை ஏற்று பாணரை தம்முடைய வீட்டிலேயே தங்கவைத்தார். அங்கு சிலநாள் தங்கி திருநாகைக் காரோணமுடையாரை வணங்கி திருச்செங்காட்டாங்குடி நோக்கித் தன் பயணம் தொடர்ந்தார். பரஞ்சோதியார் என்ற சிறுதொண்டர் ஞானசம்பந்தர் வருகையை எதிர்பார்த்து வணங்கி வழிபாடு செய்தார். சிறுத் தொண்டரிடம் விடைபெற்று திருமருகல் ஆலயம் சென்றார்,

அது நள்ளிரவு நேரம். ஓர் அணங்கையின் அழுகுரல் கேட்டது. அதிகாலை எழந்து நீராடி அழுகுரல் வந்த திசையில் சென்றார். அங்கு ஒருவன் இறந்திருந்தான். அருகே ஒர் பெண் அழுது கொண்டிருந்தார். அவள் வைப்பூரிலுள்ள தாமன் செட்டியாரின் மகள். அவருக்கு மொத்தம் ஏழு பெண்கள். இறந்தவன் தாய் மாமன். மாமனிடம் பெரும் பொருள் பெற்று மூத்தவளை மணம் முடித்து தருகின்றேன் எனக்கூறி வேறு ஒருவருக்கு மணம் முடித்தார். இப்படியே அறுவருக்கு மணம் முடிந்து எனக்கும் அதேபோல் தந்தை செய்ய முடிவு செய்தது தவறு என்பதால் நான் மாமனுடன் வந்தேன். இரவில் நாகம் தீண்ட மாண்டான். இது என்ன நியாயம் என்று புலம்பினாள்.

இறந்தவரை உயிர்ப்பிப்பது என் வேலையல்ல. இருந்தாலும் இப்பெண்ணிற்காக நீதி கேட்டார் இறைவனிடம். பதிகம் பாடினார். இறந்தவன் உயிர்பெற்றான். அங்கு சில காலம் தங்கியிருந்து வழிபாடு செய்தார். திருப்புகழூர், வர்த்தமானிச்சுரம் சென்றார். வர்த்தமானச்சுரத்து பெருமானை வணங்கி முருகரையும் சேர்த்து பதிகம் பாடி அவருடைய மடத்தில் தங்கினார். ஞானசம்பந்தர் திருப்புகலூரில் இருக்கிறார் என அறிந்து அப்பரடிகள் வந்தார். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினர். அம்பர்மாகாளம் வணங்கி திருக்கடவூர் செல்ல குங்குலிய கலயர் வரவேற்று வழிபாடு செய்தார். பின் திருவீழிமிழலை சென்றனர்.

அங்கு சீர்காழியிலிருந்து வந்த அடியார்கள் ஞானசம்பந்தரை சீர்காழிக்கு அழைக்க அவர் அங்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினார். ஆனால் அன்று இரவு கனவில் பெருமான் நாளை காலை திருத்தோணிபுரத்து பெருமாட்டியோடு காட்சியை விண்விழி விமானத்தே காண்பாய் என அருளினார், அதிகாலை நீராடி அக்காட்சியை கண்டு ஆனந்தம் அடைந்தர். அந்த ஊரில் அப்போது பஞ்சம் ஏற்பட்டது.

பெருமான் இருவர் கனவில் தோன்றி. நாட்டில் நடக்கும் உலகியல் நிகழ்ச்சியால் அடைந்த தீய பசி உம்மையடையாதெனினும் உம்பால் நிலவும் அடியோர் வாட்டம் அடையாவண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மேற்குமாக பலிபீடத்தில் தருவோம் என்றார், இருவரும் தம் கனவை பரிமாறி பொற்காசு பெற்று இருமடங்கள் அமைத்து அடியார்களுக்கு உணவு அளித்தனர். நாவுக்கரசர் மடத்தில் உணவு முடியும்போதுதான் சமபந்தர் மடத்தில் ஆரம்பிக்கும். ஏன் இந்த காலதாமதம் என்றார் ஞானசம்பந்தர்,

அது நல்ல காசு தாங்கள் கொடுக்கும் காசு மாற்று குறைந்தது. அதனால் பொருள் வாங்க சிறிது காலதாமதம் ஆகிறது என்றனர். ஞானசம்பந்தர் வீழிநாதன்முன் சென்று தமக்கும் மாசில்லா காசு கேட்டார். ஆரூரர் திருவீழிமிழலை வந்து அப்பருக்கும் ஞானசம்பந்தருக்கும் பொன் கொடுத்து என்னை ஏமாற்றமுடியாது. நீர் ஏன் பொன் கொடுத்தீர் என்று எனக்குத்தெரியும் என பாடினார்.

இருவரும் திருமறைக்காடு சென்றனர். வேதம் மறைக்காடாரை வணங்கி கதவை மூடியதால் அடியவர்கள் மாற்று வழியில் உள்ளெ சென்று வழிபாடு செய்வதைப் பார்த்த ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் மறைக்கதவு திறக்க பாடச்சொல்ல அவரும் பத்து பாடல்கள் பாட கதவு தாள் திறந்தது. வழிபாடு முடிந்ததும் அப்பரடிகள் ஞானசம்பந்தரிடம் கதவை மூடவும் பின் திறக்கவும் பதிகம் பாடச்சொல்ல அவர் ஒருபாடல் பாடியவுடன் கதவு மூடியது. தான் பாடிய 10வது பாடலுக்கு திறந்த கதவு ஞானசம்பந்தர் பாடிய முதல் பாட்டிற்கே மூடியது மனதில் நினைத்து இறவன் திருக்குறிப்பை அறியாமல் தவறு செய்தோமோ என வருந்தினார். பெருமான் அடியார்வேடத்தில் தோன்றி நாம் வாய்மூரில் இருப்போம் நம்மைப்பின் தொடர்ந்து வாரும் என்றார். அப்பரடிகள் பின் தொடர அண்மையில் இருப்பது போல தோன்றி மறைந்தார்.

ஞானசம்பந்தர் எழுந்து அப்பரடிகள் வாய்மூர் சென்றிருப்பதை அறிந்து தாமும் சென்றார். அவரக் கண்டவுடம் அப்பரடிகள் மகிழ்ந்து, வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டம் என்னிடம் செல்லும், மறைக்கதவம் திறக்கப்பாடிய என்னைவிட உறுதி பொருள் பாடி அடைப்பித்த ஞானசம்பந்தர் உம் எதிர் நிற்கிறார் உம்மை மறக்கும் வல்லமை உமக்கு உண்டா உன் அருட் காட்சியைக் காட்டு எனப் பாடினார். வாய்மூரில் சில நாள் தங்கி திருமறைக்காடு சென்றனர்.

பாண்டிய நாடு சமண நெறியில் சிறந்திருந்தது. மன்னன் கூன் பாண்டியன் சமணத்தைச் சார்ந்தான். அவரின் மனைவி மங்கையர்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவம் காத்தனர். அவனது துணைவியார் அமைச்சரின் உதவியுடன் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருப்பதை அறிந்து அவர் தங்கள் நாடு வரக் கேட்டனர். அப்பரை சோழநாட்டு திருத்தலங்கள் செல்லக்கூறி தாம் பண்டிநாடு என்றார்.

வழியில் அகத்தியான் பள்ளி, கோடிக்குழல் ஆகிய தலங்களை வணங்கிச் சென்றார். திருக்கொடுங்குன்றத்து இறைவனை வாணங்கி மூதூர் வந்தார். குலச்சிறையார் எதிர்கொண்டழைத்தார். ஆலவாய் கோபுரம் கண்ட ஞானசம்பந்தர் மங்கையர்கரசியாரையும், ஆலவாய் ஈசனையும் குலச்சிறையரையும் இனைத்து பதிகம் பாடினார். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.

ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய்சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குண்மடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அவர்களின் மந்திரநீர் சுட்டது.

வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மைசமயம் என்றனர்.

மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்றபாட்டினை தீயில்பொட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.

ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான். குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இனைந்து திருத்தொண்டுகள் பல செய்தான்.

திருநீலகண்ட யாழ்பாணர் ஆலயத்தினுள் செல்லமுடியாமையால் கோவில் வாயிலில் பாடியவரை அடியவர்கள் மூலமாக தன் முன்னிருத்தி பொற்பலகையிட்டுப் பாடசெய்ததை ஞானசம்பந்தர் தம் ஆலவாய் பதிகத்தில் வியந்துள்ளார், சிலநாட்களித்து மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி தலங்களில் வழிபட்டு திருஇராமேசுவரம் வந்தார்.

திருஇராமேசுவரத்திலிருந்து தம் ஞானக்காட்சியால் திருக்கோணமலை, திருக்கேதீசுரம் ஆகிய இரு தலங்களையும் பதிகங்கள் பாடினார். குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடி தங்கியிருந்தார். அங்கிருந்து திருக்களர், திருப்பாதாளீச்சுரம் தலங்களை வழிபட்டு முள்ளியாற்றின் கரைவந்தடைந்தார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓடக்காரர்கள் ஓடத்தை கரையில் கட்டி சென்று விட்டனர். மறுகரையிலிருக்கும் கொள்ளம்புதூருக்குச் செல்ல ஓடத்தில் அடியவர்களுடன் ஏறி தன் நாவன்மையால் ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடலில் ஓடம் கொள்ளம்புதூரை அடைய அங்கு வழிபட்டு திருக்கடவூர் பெருமானை வழிபட்டு திருப்பூந்துருத்தி நோக்கிச் சென்றார்.

ஞானசம்பந்தர் வருகிறார் என்றதும் அப்பரடிகள் அடியார்களுடன் சென்று அவரின் பல்லக்கை தூக்கி வந்தார். ஞானசம்பந்தர் அப்பரடிகள் எங்கு இருக்கின்றார் என்றபோது ‘உம்மடிகள் இப்போது தாங்கி வரும் பேறுபெற்றேன்’ என்றதைகேட்ட சம்பந்தர் கீழே குதித்தார். இருவரும் வணங்கினர். அப்பரடிகள் அமைத்த மடத்திலேயே தங்கி இருவரும் அருகிலுள்ள தலங்களைத் தரிசித்தனர். அப்பரடிகள் பாண்டியநாடு பயணம் மேற்கொள்ள ஞான சம்பந்தர் தொண்டைநாடு சென்றார். திருத்தில்லை, திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திரு இரும்பை மாகாளம் முதலிய தலங்கள் சென்று வழிபட்டார். அதிகை வீரட்டானம் அப்பரடிகளுக்கு சூலைநோய் தந்து அதனை நீக்கியதலம். அங்கு வந்து வழிபட்டு திருவாமாத்தூர், திருவறையணிநல்லூர், திருக்கோவிலூர் வழியாக தலங்களை தரிசித்து அண்ணாமலை வந்தார்.

திருஅண்ணாமலையில் பதிகம் பாடி சிலநாட்கள் இருந்து பின் திருவோத்தூர் சென்றார். அங்கிருந்த சிவண்டியார் பனை மரம் வளர்த்து வேனிற்காலத்தில் அடியவர்களுக்கு பயன்படும் என நினைத்தார், ஆனால் அவைகள் எல்லாம் ஆண்பனையாக இருந்தது. சமணர்கள் அவ்வடியாரிடம் உன் சிவன் ஏன் ஆண்பனையை பெண்பனையாக மாற்றக்கூடாது எனக் கேலிசெய்ததை வருத்தத்துடன் அங்கு வந்த சம்பந்தரிடம் கூறினார். ‘பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’ என்ற பதிகம் பாடி பனைகளை பெண்பனையாக மாற்றினார்.

ஞான சம்பந்தர் காஞ்சிமாநகர் வந்தார், கச்சி நெறிக்கரைக்காடு, கச்சிமேற்றளி, திருமாற்பேறு, திருவல்லம், திருவாய்க்கோலம் முதலி பலதலங்களை வழிபட்டு திருவாலங்காடு சென்றார். புனித புனிதவதியார்’ காரைக்கால் அம்மையார்’ தலையினாலே நடந்த திருத்தலத்தை தாம் காலில் மிதிப்பது தவறு என்று ஊர் வெளியில் உள்ள மடத்தில் தங்கினார். கனவில் திருவாலங்காட்டு அப்பன் என்னை பாடமறந்தனையோ என்றார், நள்ளிரவில் பதிகம் பாடினார்.

அங்கிருந்து கண்ணப்பர் வழிபட்ட காளத்திநாதனை வழிபட்டார். அங்கிருந்து திருக்கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருபதம் ஆகிய தலங்களை நினைத்து பதிகங்கள் பாடினார். பின்னர் திருவேற்காடு வணங்கி திருவொற்றியூரில் தங்கினார். மயிலாப்பூர் சிவநேசர் சிவனடி மறவா சீலர். திருஞானசம்பந்தர்மேல் எல்லையில்லா அன்புகொண்டவர். அவரின் மகள் பூம்பாவை மங்கைபருவம் அடைந்தாள், சிவநேசர் நான் பெற்றெடுத்த பூம்பாவையும் நானும் நான் சேர்த்த பெரு நிதியும் ஞானசம்பந்தர்கே உடமை என உறுதியுடன் இருந்தார்.

ஒருநாள் பூகொய்யச் சென்ற பூம்பாவையை நாகம் தீண்ட இறந்தாள். சிவநேசர் வருத்தமுறாமல் இவள் அவரின் சொத்து. எனவே அவளை தகனம் செய்து எலும்பையும் சாம்பலையும் ஓர் குடத்திலிட்டு ஞானசம்பந்தரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அக்கலயத்திற்கு தினமும் பூசை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் எனத்தெரிந்து அவரை எதிர் கொண்டழைத்தார் சிவநேசர். முத்துசிவிகைமுன் வணங்கும் அவரைப்பற்றி முன்பே அடியவர்கள் மூலம் தெரிந்த சம்பந்தர் சிவிகையிலிருந்தி கிழேஇறங்கி அவருடன் மயிலை வந்தார்,

மயிலை கபாலீஸ்வரரை வணங்கி சிவநேசரிடம், உம்மாற் பெறப்பட்ட உம்மகளது என்புள்ள குடத்தை உலகவர் அறிய கோவிலின் புறவாயிலில் கொணர்வீர் என்றார். சிவநேசரும் அவ்வாறேசெய்தார். ‘அடியார்களுக்கு அமுதுபடைத்தலும், அவர்தம் விழாக்களைக் காண்பதும், சத்தியமானால் பூம்பாவையே நீ உலகோர் வியக்க உயிர் பெற்று வருக’ என பூம்பாவையை நோக்கி அழைக்கும் வகையில் பதிகம் பாடினார்.

பத்தாவது பாடலில் பூம்பாவை குடத்தினின்று எழுந்தாள் ஞானசம்பந்தரை சிவநேசரும் பூம்பாவையும் வணங்கினர். நீர் பெற்ற மகளை நான் உயிர்பித்ததால் அவள் எனக்கும் மகளாவாள் என சம்பந்தர்கூற சிவநேசர் தன் மகளை வேறு ஒருவருக்கு மணமுடிக்க விருப்பமின்றி கன்னிமடத்தே இருக்கச்செய்தார்.

ஞான சம்பந்தருக்கு 16 வயது ஆனது. சிவபாத விருதையரும் சுற்றத்தாரும் கூடி சம்பந்தரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். நல்லூரில் வாழ்ந்த நம்மாண்டார் என்பவரது மகளை மணம்பேசி நாள் குறித்தனர். சம்பந்தர் தோணிப்புர நாதனை வணங்கி திருமண நல்லூர் சென்றார்.

மணமேடையில் அமர்ந்தார், திருநீலநக்கர் திருமணம் நடத்திவைத்தார். முருகர், நீல்கண்டயாழ்பாணர் மற்றும் அடியார்கள் சுற்றத்தார் அனைவரும் மகிழ்ந்தனர்.

இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை என்னைச் சூழ்ந்ததே, இனி இவளுடன் சிவனடி சேர்வேன் என்று திரு நல்லூர்பெருமணம் சென்றார். அங்கு பதிகம் பாட “ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் நினது திருமணம் காணவந்தோர் யாவரும் ஈனமாம் பிறவிதீர யாவரும் இச்சோதியுனுள் வந்து சேர்மின்“ என திருவாய் மலர்ந்தருளி கருவறையில் ஓர் சோதி தோன்றியது. அனைவரும் தம் மனைவியருடன் சோதியில் கலந்தபின் சம்பந்தர்

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய மே.”

என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தைப்பாடி தன் மனைவியுடன் சோதியில் கலந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929340
All
26929340
Your IP: 18.209.209.28
2024-03-28 18:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg