gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:54

பாசுபத மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

எண் முகமாம் இனிதருள் போற்றி!
இருத்தி முத்தி இனிதருள் போற்றி!
என்னை அறிவித்து எனக்கருள் போற்றி!
முன்னை வினையின் முதல்களைப் போற்றி!
அருள்தரும் ஆனந்தத்துள் அழுத்துக போற்றி!
அல்லல் களையும் அரசே போற்றி!

பாசுபத மூர்த்தி!

பாண்டு புத்திரர்களான பஞ்ச பாண்டவர் தரப்பிற்கும் திருதராட்டிரர் மக்கள் தரப்பிற்கும் நடந்த பாரதப் போரின் 13ம் நாள் போர்க்களத்தில் சக்ரவியுகம் என்ற ஒருவித படைவகுப்பு முறையை துரோணாச்சாரியார் தலைமையில் வகுக்கப்பட்டது. அதை உடைத்து உள்ளே போகவும் திரும்பி வரவதற்கான வழிமுறைகளையும் கற்றவன் அர்ச்சுனன். வஞ்சகமாக அர்ச்சுனனை திசை திருப்பியிருந்தான் துரியோதனன். பாண்டவர்களால் அந்த படை வியூகத்தை உடைக்க முடியவில்லை. தருமன் அர்ச்சுனன் மகன் அபிமன்யுவை அழைத்து அதை உடைக்க ஆலோசிக்க அவன் என்னால் அந்த வியூகத்தை உடைக்க முடியும் ஆனால் அதிலிருந்து மீண்டு வர இயலாது என உரைத்தான். தருமன் நீ உடைத்த வழி செல்கையில் நாங்களும் உன்னுடன் வந்து விடுவோம் என்றார்.
அபிமன்யு அந்த வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும் துரியோதனன் திட்டப்படி திருதராட்டிரரின் மருமகன் ஜயத்ரதன் அந்த பாதையை மிக விரைவாக பாண்டவர்கள் உள்ளே புக முடியாமல் அடைத்து விட்டான். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாண்டவர்கள் அபிமன்யு மட்டும் எதிர்களிடம் மாட்டிக் கொண்டதைக் கண்டு செய்வது அறியாமல் தவித்தனர். கர்ணன், துரோணர், அசுவத்தாமன் அனைவரும் ஒன்று சேர்ந்து அபிமன்யுவை கொன்றனர். அபிமன்யு கொல்லப்பட்டதற்கு மூல காரணம் ஜெயத்ரதன் என்பதை உணர்ந்த அர்ச்சுனன் தன் மகன் இறப்பிற்கு காரணமாயிருந்த ஜெயத்ரதனை நாளை சூரிய அத்துமனத்திற்குள் கொல்வேன் எனச் சபதமிட்டான்.
ஜயத்ரதனை அழிக்க பாசுபத அத்திரம் பெற வேண்டும் என அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கயிலை அடைந்தார் கண்ணபிரான். இதை அறிந்த ஜயத்ரதன் போரிலிருந்து விலகி தன் நாட்டிற்குப் போவதாக தெரிவிக்க துரியோதனன் எவரும் அணுக முடியாத இடத்தில் உன்னை பாதுகாப்பேன் என்றும் உன்னைச் சுற்றி துரோணர், கர்ணன், அசுவத்தாமன், நான் எல்லோரும் இருப்போம். உன்னை கொல்ல முடியாமல் அர்ச்சுனன் தீயில் விழுவான். பாண்டவர்கள் நாளையே தோற்று விடுவர். நீ இருந்து இதைக்காண வேண்டும் என்றான். எனினும் பயத்துடன் துரோணரிடம் சென்றவன் என்னை கொல்லும் ஆற்றல் அர்ச்சுனனுக்கு இருக்கின்றதா எனக் கேட்டான். உன்னை விடச் சிறந்த வில்லாளன் அர்ச்சுனன். இருப்பினும் உன் பாது காப்பிற்கு நாங்கள் அனைவரும் இருக்கின்றோம் கவலைப்படாதே என்றார்.
நந்தி தேவரின் அனுமதியுடன் சிவனைச் இரவில் சந்தித்த கண்ணனும் அர்ச்சுனனும், அபிமன்யு கொல்லப்பட்ட விதம் சொல்லி ஜயத்ரதனை அழிக்க பாசுபதம் தந்தருள வேண்டி நிற்க திருஉள்ளம் கொண்ட சிவன் பாசுபதத்தினை வரவழைத்து அர்ச்சுனனிடம் கொடுத்து அதை உபயோகிக்கும் மந்திரமுறை பற்றியும் அர்ச்சுனனுக்கு உபதேசித்தார்.
மறுநாள் போரில் ஜயத்ரதனை அடைய கடுமையாக போர் புரிந்த அர்ச்சுனன் மாலை நெருங்கியும் ஜயத்ரதனை காணமுடியவில்லை. துரியோதனால் ஒளித்து வைக்கப்பட்ட ஜயத்ரதனை வெளிக்கொணர கண்ணன் தன் சக்ராயுதத்தால் ஆதவனை மறைக்க சூரியன் மறைந்து விட்டது எனக்கருதி ஜயத்ரதன் வெளிவர சிவனின் பாசுபதக் கணையால் ஜயத்ரதனைக் கொன்று தன் சபதத்தை அர்ச்சுனன் நிறைவேற்றினான். அவசரத் தேவைக்காக அர்ச்சுனன் கண்ணபிரானுடன் கயிலை சென்று பெற்ற பாசுபதம் இது. அர்சுனன் காட்டிலே தவமிருந்து வேடுவன் உருவில் வந்த சிவனுடன் மோதி பெற்ற பாசுபதம் வேறு.
கண்ணபிரானும் அர்சுனனும் வணங்கி நிற்க சிவபெருமான் அர்ச்சுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம். பாசுபத மூர்த்தி. காட்சி: கொள்ளம்புதூர் (குடவாசல் அருகில்).

#####

Read 5586 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:11
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27108349
All
27108349
Your IP: 3.21.231.245
2024-04-28 22:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg