Print this page
வெள்ளிக்கிழமை, 15 May 2020 11:11

சிவகுரு தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

ஆறாம் தந்திரம்!

சிவகுரு தரிசனம்!

1573. பத்தியை ஏற்படுத்தி இறைவனடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்கள் நீங்கும்படி செய்து சித்து அசித்து சதசத்துமான பொருள்களின் உண்மையான இயல்புகளை உள்ளே நின்று உணர்த்தியதால் உள்ளத்தில் உள்ள இறைவனே குருவாவான்.

1574. ஆண்வத்தால் மறைந்து நின்ற் சீவனை மாயாமலத்தைக் கூட்டி ஆணவத்தை நீக்கி உடம்பே நான் என இருந்த ஆசையைப் போக்கி நெருக்கு நேர் நிலை குலையாத முத்தியின் கூட்டுவதற்கு உபகாரப்படுவது உபகாரனின் ஒளிமண்டலத்தில் உருவம் கொண்டிருக்கும் குருவாகும்.

1575. அணிமா மகிமா முதலிய சித்திகள் எட்டுடன் பயிற்சியாளரை சிவம் ஆக்கிய பக்குவ நிலையும் வாமை முதலிய எண்சக்திகளால் கட்டுப்படுத்தாத தூய்மையும் யோகத்தால் ஏற்படும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானம் செய்வதால் உண்டாகும் ஞானமும் இறைவனிடம் உ/ண்டாகும் அன்பும் ஆகிய அனைத்தும் சிவகுருவின் அருளால் நிகழும்.

1576. எல்லா உலகங்களுக்கும் அப்பால் இருப்பவன் இவ்வுலகத்திலும் இருப்பவனாய் நல்லார் உள்ளத்தில் இருந்து அருளுவதாலும் யாவரும் உய்யுமாறு அருளுவதாலும் அனைவரும் உய்யும்படி இவ்வுலகிலேயே அருள்வதாலும் பிரணவ வடிவாய் உள்ள நல்ல குரு சிவமே ஆகும்.

1577. தேவனும் துய குருவாகவும் இருக்கும் சிவன் நூலகளில் பதி பசு பாசம் என மூன்றாக இருப்பதும் அறிந்து உபதேசத்தால் அழிவில்லாத சிவனின் பாசத்தை நீக்கி குருபரன் அன்பு கொண்டு முத்தியில் யாவையும் அருளவான்.

1578. சிவனே சீவர்களிடம் அருள் கொண்டு குருவாக இருந்து மலக் குற்றத்தை போக்கி அருள்வதை அறியாத அறிவிலிகள் பொய் மிக்க உலக் இன்பங்களிடையே பொருளாய் கண்டறியும் பாசம் பற்றியவர் குருவை நம்மவர் என்று தம்முடன் நிகராக வைத்து எண்ணுவர். ஞானியர் இவன் சிவனே என வணங்குவர்.

1579. ஞானத்தால் பொய்மை நீங்குவதும் பிருதுவி தத்துவத்தின் வன்மையும் சிவமான அப்பொருளின் உதவியும் அறுபத்தி நான்கு கலைகளால் உண்டாகும் மய்க்க அறிவும் அண்ணலின் சக்தியன்றி யார் அறிவார்.

1580. சிவமே சிவஞானியாய் உள்ளான். ஆதலால் தன்க்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவன் என நினைத்து திருவடியை அடைபவர்க்கு சிவத்தினது நட்பும் நல்ல முத்தியும் அமையும். பிறப்பில்லாமல் மேலான சிவ உலகை அடைவர்.

1581. என் குருமண்டலத்தில் இருக்கும் நந்தி குருவே சிவம் என்றான். குருமண்டலமே சிவனாய் உயிர்க்குத் தலைவனாய் இருக்கின்றது. குரு மண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கும் மன்னன். பெருமை கொண்ட குருமண்டலத்தில் சிவம் உள்ளே இருப்பதை எளியவர் அறியாதவராய் இருக்கின்றனர்.

1582. அன்பர்களிடம் உள்ள சித்த மண்டலம் தன் அறிவிற்கேற்ப எல்லாவற்றையும் நினைக்கும். அருள் சத்தி பதிவு உடையவர்க்கு செம்பொருளே உண்ர்த்துவதாகும். அந்நெறியே சித்தம் முழுமையும் வேறு பொருளுக்கு இடம் இல்லாது சிவத்துக்கு மட்டு இடம் தந்தால் சிவன் அங்கிருப்பான்.

1583. சிவமான தானே இருக்கும் குருமண்டலத்தில் பொருந்துவதால் உண்டாகும் பெருமையை வைத்த நந்தியெம்பெருமானின் குறிப்பை உணர்பவர் இல்லை.. குருமண்டலத்தில் திகழ்பவன் என்று மகிழ்ந்திருப்பவர்க்கு அக்கினி மண்டலத்தில் தான் இருக்கும் மன்னனே ஒப்புயர்வற்ற சிவசூரியன் ஆவான்.

1584. ஞானம் என்ற பேறும் அதன் விளைவான முத்தியும் அதில் மயங்காத அருளும் அஞ்ஞானம் நீங்கும் உண்மைப் பொருளான வேதாந்த ஞானமும் இறைவனின் வடிவாய் அருளாவிட்டால் குருநாதன் மனித உடல் தாங்கி வராவிட்டால் அறிய இயலாதாய் இருக்கும்.

1585. சிவனிடத்து பத்தியும் அதனால் ஞானம் பெறவேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறு அடையச் சாதனங்கள் ஆகும். அவற்றால் சிவமே தான் என்ற எண்ணம் முதிர்ந்து வீடுபேற்றுக்கு காரணமான ஞானம் உண்டாகி அந்த பயிர் சத்தியின் அருளால் எளிதாய் வளர்ந்து முத்தி உண்டாகும்.

1586. உலகத்தில் வீடுபேற்றை அடைவதற்காக உண்டாக்கப்பட்ட இன்பப் பிறவியை முன்பு உதவிய முதல்வனான இறைவனை ஞானத்தால் அடையும் போது அப்பெருமான் என்னிடம் வெளிப்படுவான். என் தலைவனை அடைய துணையானது என் உள்ளமே.

1587. அகண்ட சிவஞானம் தெளியவே நல்ல சித்திகள் உண்டாகும். சிவஞானத்தில் சிறந்து மேலும் தெளிய நல்ல முத்தி கிட்டும். சிவமான ஞானத்தால் சிவம் ஆன்மாவில் நிலைபெறச் சிவமான ஞானத்தால் சிவானந்தம் உண்டாகும்.

1588. நூல்கள் அறிவாலும் அனுபவத்தாலும் இந்த பரந்த உலகங்களை எல்லாம் கண்டேன். சிவத்துடன் பொருந்தி தியானம் செய்து சிவத்தினது அருளைப் பெற்றேன். அறிவற்றவர் கூட்டத்தை விட்டு விலகினேன். அதன் காரணமாய் இப்பிறவியை நீங்கினேன்.

1589. வினை காரணமாகப் பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற உயிர்களுக்கெல்லாம் தலைவானாவன் இறைவன், எப்படிச் சீவனிடம் பொருந்தியிருக்கின்றான் என்பதை பலர் அறியார். உயிர்கள் அறியாவகையில் தடைகளை விலக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட அச்சிவனை நான் அறிவேன்.

#####

Read 1685 times Last modified on திங்கட்கிழமை, 18 May 2020 09:44
Login to post comments