Print this page
வெள்ளிக்கிழமை, 15 May 2020 11:13

திருவடிப்பேறு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

திருவடிப்பேறு!

1590. மனத்தில் பொருந்தி எழும் அன்பின் வழியே அந்த அனபை ஆதாரமாகக் கொண்டு வெளிப்படும் இறைவன் இறவாத அன்பில் பற்ற சிவந்த ஒளியானது மேல் நோக்கி எழுந்து சிரசில்பட விரும்பிய திருவடி என் உள்ளத்தில் இன்பமாக இருந்தது.

1591. சிவன் திருவருளை அளித்தபோதே பொறி புலன்களுக்கு அடிமையாய் இருந்த எனக்கு ஞானத்தை தந்தான் அவன். ஞானவாளினை எனக்குத்தந்து வீட்டுலகத்தை அளவற்ற காலம் ஆள்வயாக என அருளினான். சுவாதிட்டானத்தில் வந்து அருட்சத்தியை இன்பமாய் என் சிரசில் பொருத்தினான்.

1592. சிவம் வந்து ஆட்கொண்டடு அவனாகச் செய்தபோது நான் சிவ வடிவாய் ஆனேன்.. முன்பு சிவமாய் இருந்த நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நான்கு வடிவங்களும் என்னை விட்டு நீங்கின. மற்ற அடையாளங்களான சதாசிவர் விந்து நாதம் சத்தி என்பன என்னிடம் நன்கு இருக்குமாறு செய்து தன் திருவருளை நான் முன்பே அடைந்தவன் என்பதை நிரூபித்தான்.

1593. இன்பத்தை அனுபவிக்கும்போது பேச்சின்றி உணர்வு அழிந்து நான் என்ற் நிலை அறியாமல் தெளிந்த நீரைப் போல் அசைவு இல்லாமல் இருக்கும் சிவமான தன்மையும் கெட்டு நுண்மை முதலிய நான்கு வக்கினால் தோன்றும் நாதத்தை கடந்து எல்லையற்ற தன் வடிவுடன் ஒன்று சேர்த்தான். பிறப்பு இறப்பிற்கு எல்லையான பிரணவத்தை கடந்து விட்டேன்.

1594. தீட்சை அளிக்க வந்த குரு மாணவனின் பரு நுண் காரண உடல்களில் உள்ள தடைகளை நீக்கி உயிரைக் குருவிடம் பொருந்த்ச் செய்து எல்லோருக்கும் தலைவனான சிவத்துடன் மௌனயோகத்தில் பொருந்தச் செய்து ஆட்கொண்டான்.

1595. முன் நிலையில் பொருந்திய குரு மௌனமான பேரானந்தத்தில் என் பசு கரணங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறிந்து கொள்ளாமல் செய்து வெப்பம் இல்லாத சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் உண்டான பெருமைகளை அழித்து திருவடிகளைச் சூட்டி என்னுள்ளே நிலை பெற்றான்.

1596. என் ஆன்மாவிலும் பார்வையிலும் என் சிரசிலும் திருவருளைப் பதிப்பித்த குரு கீழ்முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை மேல் நோக்கி இருப்பதாய் அமைத்தருளினான். விந்து நாதங்களை உணர்த்தி அவை எம்முறையில் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தியருளினார். இடஹி எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல முடியாது.

1597. என் தலைமீது திருவடியைச் சூட்டி அருளுடன் பார்த்து எங்கும் இருக்கும் பெருவுருவத்தை தந்த சிவன் குருவடிவில் வந்த தலைவன் என் மன்னனை பிறவியானது உண்டகும் வழி உலர்ந்து போக அறிந்து கொண்டேன்.

1598. திருவடி ஞானம் என்பது சிவமயமாகும். திருவடி ஞானம் சிவ உலகத்தில் சேர்க்கும். திருவடி ஞானம் உயிரைச் சிறைப்படுத்தியிருந்த மலத்தினின்று விலக்கும். திருவடி ஞானம் அணிமா இலகிமா முதலிய சித்திகளையும் முத்தி பேற்றையும் தரும்.

1599. அமர்ந்த குருநாதன் கீழ்நோக்கும் தன்மையுடைய குண்டலினி சத்தியை மேல் நோக்கும்படி செய்யுமாறு உபாயம் அமைக்காவிடில் பழைய வினைகள் அறியாமையால் மயங்கிய உள்ளத்தை மாயையின் வழிச் செலுத்திவிடும். பால் போன்ற் வெண்மையான ஒளியாய் இருக்கும் மதிமண்டல்த்தில் இருக்கும் சதாசிவம் தன் திருவடியை பதிப்பித்து தன்னைவிட்டு அகலாது நிலைபெற்று இருந்தான்.

1600. கழலை அணிந்த தாமரையில் இருக்கும் திருவடி நிழலை அடைந்தேன். திருமாலும் அறியமாட்டா வெப்பமுடைய அக்கினி மண்டலத்தில் உள்ள உருத்திரனும் உடல் பற்றை அழித்து சுழுமுனை உச்சியில் ஒளியுடைய் சிவமாய் இருந்தது.

1601. முடிமன்னர் என்றால் மூவுலகையும் ஆள்பவர். சிவனடியாரான மன்னர் பெறும் இன்பத்திற்கு அளவே இல்லை. முடிமன்னரான தேவர்களும் இறைவனுக்கு வழிவழி செய்கின்ற குடிமன்னர் ஆயின் குற்றம் நீங்கி நின்றவர் ஆவார்.

1602. நான் என் மன் மண்டலத்தில் இறைவன் திருவடிகளான விந்து நாதங்களை பதிய வைத்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய் போல் காட்டி அக்கினியைத் தூண்டி செலுத்தும் புலன்வழி செல்லாமல் உள்ளத்தை மீட்டு நான் படும் இருவினைத் துனப்த்தை மாற்றி மறையின் முடிவான் ஞானானந்தத்தை அடைந்தேன்.

1603. இறைவன் திருவருளைப் பெறலாம். சிவகுருவின் இரண்டு திருவடிகளையும் முனிவர் முடிவில் அறிந்து கொண்டனர். படி முறையிலே அடைந்த பேரின்ப வெள்ளத்தில் குடியாகக் கொண்ட வழியில்கூடி நிற்பவரின் கொள்கை இது.

1604. நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும் பிறவி நோய்க்கு மருந்தாவதும் திருவருளைப் பெறக்கூடிய செயலாவதும் அடைந்தவர் பெறும் புண்ணியத் தலங்களால் ஆவனவும் அழகாவதும் வீடுபேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் சிவபெருமானின் இரு திருவடடிகளே.

#####

 

Read 1688 times
Login to post comments