Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:43

அசற்குரு நெறி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

அசற்குரு நெறி!

2044. சிவசிந்தனை இல்லாத மூடனும் உண்மைப் பொருளை ஆராயதவனும் சிக்கல் இல்லாமல் வேத நெறியைக் காணாதவனும் அடக்கம் இல்லாதவனும் மற்றவரைப் பழிப்பவனும் ஆன்ம பேதம் உடையவனும் சன்மார்க்கத்தை உபதேசிக்கும் நெறியற்றவர் ஆவர்.

2045. மந்திரம் தந்திரம் யோகம் ஞானமுடன் பாசம் முத்தி என்பவனவற்றைக் கண்டு உணர்ந்திருப்பவரை உள்ளத்தால் நினைத்தும் உண்மை ஞானம் பெற வேண்டுவன செய்யாமல் வயிற்றுப் பாட்டுக்காக் குருடராய் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன் அறிவற்ற செயலைக் செய்பவன் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகன் பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவன் ஆகிய இத்தன்மையை உடையவன் சிறந்த குரு ஆகமாட்ட்டார். அவன் அசற்குரு ஆவான்.

2047. உலகத்து வாழ்வைப் பற்றிய எண்னங்களை நீக்காமல் மந்திரத்தை உபதேசம் செய்தால் சிவசிந்தனை சிறந்து வெளிப்படாது சுருங்கி விடும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரணானதால் தீமை விளையும். இத்தகைய குருமார்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் மன்னனுக்கும் தீமை யுண்டாகும் என்று முன்பே சிவபெருமான் மொழிந்துள்ளார்’

2048. கண்பார்வை அற்றவர்க்கு கோலைத் தந்து வழி காட்டிச் செல்லும் கண்பார்வை அற்றவர் வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் விழுவர். அதன்பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவர். அதைப்போல் ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவுடன்கூடி முன்பின் இல்லாமல் ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவர்.

#####

Read 1600 times
Login to post comments