Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:19

புலவர் வடிவம்-நான்கு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே போற்றி!
சிறந்தொளிரும் மங்கள சொரூபனே போற்றி!
ஓவறு சித்திகளனைத்தும் உதவுவோய் போற்றி!
ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்

புலவர் வடிவம்-நான்கு!

1.இசை வாதி வெற்றி: பாண்டிய நாட்டை இராசராச பாண்டியன் ஆண்ட காலதில் ஈழத்து பாடினிக்கும் பாணபத்திரரின் இல்லாளுக்கும் அரசவையில் நடந்த இசைப் போட்டியில் ஒரு தலைப் பட்சமாக ஈழத்து பாடினியை மன்னன் புகழ்ந்தான். அடுத்த நாள் சொக்கப் பெருமான் சன்னதியில் நடந்த போட்டியில் சோமசுந்தரப் பெருமான் பெரும் புலவராக வேடமேற்று மன்னனின் உளக் கொடுமைதனை நீக்க, தெளிவு பெற்ற மன்னன் பிறகு நடந்த இசைப் போட்டியில் சீர்தூக்கி ஆராய்ந்து நடுநிலையான தீர்ப்பை வழங்கி பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தான்.

2.சங்கப் பலகை கொடுத்தது: மதுரையில் நீதி வழுவாது ஆட்சி புரிந்த வங்கியசேகர பாண்டியன் ஆட்சியில் சிவனார் புலவர் வேடமேற்று பிற புலவர்களின் திறமையை அளக்கும் கருவியாக சங்கப் பலகையை வழங்கி, மதுரைச் தமிழ் சங்கத்திற்குத் தலைமை ஏற்றிருந்தார்.

3.புலவர் தருமிக்கு பாடல் அருளுதல்: செண்பகப் பாண்டியனின் ஐயப்பாடான, ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா!” என்பதைத் தீர்க்கும் விதமாக பாட்டெழுதி தருமி என்ற ஏழை புலவரிடம் கொடுத்து அரசவைக்கு அனுப்ப, மன்னன் சந்தேகம் தீர்ந்த போதும் நக்கீரர் குறுக்கிட்டு பாட்டில் குற்றம் உள்ளது எனக்கூறியதால், பொற்கிழியை பெறாமல் திரும்பிய தருமியைக்கண்ட சோமசுந்தரர் தானே புலவராக தருமியுடன் அரசவைக்கு வந்து நக்கீரனுடன் வாதிட ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் கிடையாது என்று உறுதியாக வாதிட்ட நக்கீரரை, தன் நெற்றிக் கண்ணால் சுட நக்கீரர் அருகிலிருந்த பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார். அனைவரும் வணங்க காட்சி கொடுத்து நக்கீரரை பொற்றாமரைக் குளத்திலிருந்து கரையேற்றி சங்கப்புலவர் கூட்டத்தில் இடம்பெறச் செய்து தருமிக்கு பொற்கிழியைப் பெற்றுத் தந்தார்.

4.உருத்திரசருமன் பிறப்பு பற்றிக் கூறல்: மதுரை தமிழ் சங்கத்தில் உள்ள நாற்பத்தெட்டு பேரின் உருத்திரசருமன் பற்றிய மனவேறுபாட்டை நீக்க ஒரு புலவராகத் தோன்றி, தனபதியின் குமாரன் உருத்திரசருமன், முருகனின் திரு அவதாரம், உங்களின் செய்யுட்களின் சொல்லழகு, பொருளாழம், ஆகியவற்றை தன்னுடைய நுண்ணறிவால் சிறந்ததை தேர்வு செய்வான். உங்களுக்குள் கலகம் மறைந்து நட்பு மலரும் என திருவாய் மலர்ந்தருளினார்.

#####

Read 16569 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:22
Login to post comments