Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:47

திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக அருந்தவ வடிவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!
முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி!
ஐந்துகையுடைய ஐய போற்றி!
ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி!
அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி!
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக அருந்தவ வடிவம்!

காஞ்சிமாநகரில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொண்டர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர். உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல் அழுக்காண ஆடையணிந்து சிவன் திருக்குறிப்புத்தொண்டர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தார். தாங்கள் இளைத்திருக்கின்றீர்கள். உடம்பை உருக்கி உள்ளொளி பெற்றுள்ளீர். தங்கள் முகம் வாடியுள்ளதே எனக்கூறி தங்கள் ஆடை அழுக்காக உள்ளது அதை கொடுங்கள் தூய்மைசெய்து தருகிறேன் என்றார். அன்பரே இவ்வாடை மிகவும் அழுக்கடைந்து விட்டது. குளிரின் கொடுமையால் இதை விட முடிய வில்லை. சூரியன் மறையும் முன்பு தருவதானல் நான் தருகின்றேன் என்றார், அதற்கு சம்மதம் தந்து ஆடையைப் பெற்று குளத்து நீரில் தோய்த்து சுத்தப்படுத்த முயன்றார். அன்று சோதனையாக மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து பெது கொண்டிருந்தது. திருக்குறிப்புத்தொண்டரால் ஆடையை சுத்தம் செய்து தர முடியவில்லை. மழை நின்றபாடில்லை. ஆடை கொடுத்தவர் உடம்பு குளிரால் நடுங்குமே. நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று தொல்லையல்லவா கொடுத்துவிட்டேன் என்று மீளாத்துயரம் கொண்டு என் தொண்டு இன்றுடன் முடிவுறும்போல் இருக்கின்றது. இனிநான் வாழ்ந்து என்ன பயன், துணி துவைக்கும் எனக்கு என் தொண்டுக்குத் துணை நின்ற கல்லிலே என் தலை மோதி இறப்பேன் எனக் கூறி வேகமாக அக்கல்லிலே மோதினார். அங்கிருந்து எம்பெருமான் கரம் தடுத்து விடைமீது தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரே ‘நும் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம் நீர் சிவலோகம் வந்து இன்புறுவாய்’ என் அருள் புரிந்தார்.

#####

Read 21004 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:40
Login to post comments