Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:05

"வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்”!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#*#*#*#*#

8. "வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்! 

22 ஆதரவுப்பொருட்கள்/பாண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

வேள்வி நடத்தத்தேவையான உபகரணங்கள் வேண்டப்படுகின்றன இவ்வகையான பாண்டங்களின் துணையின்றி நாம் வேள்வியை செவ்வனே செய்ய முடியாததுமட்டுமின்றி, அவற்றின் முழுப்பயனையும் பெறமுடியாது. சித்திரம் எழுத தேவையான நிறச்சாந்து சரிசமமாக இருப்பின் ஓவியம் எழுதுவது எளிது.அதேபோல், நேர்த்தியான பாண்டங்களின் துணைகொண்டு செய்யப்படும் வேள்வியால் "ஸோமச்சாறு" கிடைக்குமென்ற நோக்கில் இப்பகுதியில் வேண்டப்பட்டுள்ளது.
"ஸோமச்சாறு" கிடைக்கச் செய்யப்படும் வேள்வி அவ்வளவு எளிதானதல்ல; பலவித பண்டங்களின்/ பாண்டங்களின் துணைகொண்டே அதைப் பெற முடியுமமென்பது தின்னமாகிறது இங்கு. அதேநேரத்தில், ஒழுக்கத்துடன் கையாளப்படவேண்டிய ஒன்று இவ்வகை முறை என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

சமஸ்கிருதம்::
இத்மச்ச மே பர்ஹிச்ச மே வேதிச்ச மே திஷ்ணியாச்ச மே ஸ்ருசச்ச மே சமஸாச்ச மே க்ராவாணச்ச மே ஸ்வரவச்ச ம உபரவாச்சமேsதிஷவணே ச மே த்ரோணகலசச்ச மே வாயவ்யானி ச மே பூதப்ருச்ச ம ஆதவனீயச்ச ம ஆக்னீத்ரஞ்ச மே ஹவித்தானஞ்ச மே க்ருஹாச்ச மே ஸதச்ச மே புராடாசாச்ச மே மே பசதாச்ச மேவப்ருதச்ச மே ஸ்வகாகாரச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

காய்ந்த சருகும் (ஸமித்தும்), காய்ந்த புல்லும் (தர்ப்பையும்), வேள்வி செய்யும் மேடையும், இரண்டு வேள்வித் தீக்குண்டங்களுக்கு நடுவே ஏற்படுத்தப்படும் குறுகிய பாதையும், ஹோதா முதலானவர்களின் எழுந்தருளப்பெறும் திண்ணைகளும், 'புரஸ' மரத்தினால் செய்யப்பட்டு 'இஷ்டி' வேள்விக்கு பயன்பெறும் நீண்டகரண்டிகளும், 'சமஸா' என்றழைக்கப்படும் மரத்தினால் செய்யப்பட்டு "ஸோமச்சாறை" விட்டுக் குடிப்பதற்கான தட்டும், ஸோமக் கொடியை இடிக்கும் கற்களும், 'யுபா' வேள்விக் கொடியில் (அர்ப்பணிக்கும் பொருட்டு) கட்டப்படும் "ஸ்வரவஸ்" எனப்படும் மரக்கத்திகளும், நிலத்தில் "ஹவிர்தானா" எனப்படும் நான்கு முழக்கணக்கில் தோண்டப்படும் நான்கு குழிகளும், அரசமரத்தைச் செதுக்குவதால் விழும் சிராய்த்துண்டுகளும், மாம்பழ வடிவில் செதுக்கப்பெற்ற ஆலமரத்தினால் ஆண பாண்டமும் (துரோண கலசமும்) மற்றும் அதில் வைக்கப்பெற்ற பிழிந்தெடுத்த ஸோமச்சாறும், மரத்தினாலான பாண்டங்களும், மண்ணால் செய்யப்பெற்ற பாண்டங்களும், 'சாமசாஸ்" என்ற வகை மண்ணினால் செய்யப்பெற்ற 'ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆதவனீயம்" என்ற இன்னொருவகை மண்ணினால் செய்யப்பெற்ற 'சுத்தகரிக்கப்பட்ட ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆக்ணீத்ரம்" என்ற வேள்வி எறியூட்டப்படும் புனிதமான இடமும், "ஹவிச்ஸ் ஸுக்களை" வைக்கும் மண்டபமும்,"க்ருஹாஸ்"எனப்படும் வேள்வி நடத்தும் முதலாளிகளின் மனைவிகள் எழுந்தருளும் இடமும், "உதகதா" போன்ற ஆன்றோர் வேள்வி நடத்தும் பொருட்டு இறைப்பாட்டில் பயன்படுத்திய "மஹாவேதி" எனப்படும் மிக உயர்ந்த மேடையும், அரிசி நொய்யாலான பண்டங்களும், ஹவிஸ் தயாரிக்கப்படும் இடமும், பலிபீடங்களும், வேள்வியின் முடிவில் செய்யும் குளியலும், காய்ந்த சருகுகளின் (ஸமித்துக்களின்) தகனமும் ஆகிய உயர்ந்த பொருட்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குக் கிடைக்கட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3549 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:23
Login to post comments