Print this page
வெள்ளிக்கிழமை, 15 May 2020 16:50

ஞாதுரு ஞானஞேயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

ஞாதுரு ஞானஞேயம்!

1605.. என்றும் நீங்காத சிவானந்தம் ஆன சிவத்திடம் பொருந்தியிருங்கள். ஆணவ் மலம் அறிவை மறைக்காது. மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி சிவானந்த நிலையில் நிற்க எப்போதும் தன்னைவிட்டு நீங்காத பேரின்பமான அமுதத்தில் நிலை பெறலாம்.

1606. அறியப்படும் பொருள் சிவம் என்று துணீந்து அந்த நெறியில் நிற்ப்பவர்க்கு ஞானத்திற்குரிய எல்லாம் பொருந்தி இருக்கும். அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடு ஆகும். நேயப் பொருளான சிவத்தைப் பிரியாத சத்தியை உண்ர்ந்தவர் இதனால் ஏற்பட்ட மெய்ஞான அறிவை அறிந்தவர் ஆவார்,

1607. உண்மைப் பொருள் தான் என ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆகியவை இரண்டு உளது.. தன்னையும் அவனையும் தன் ஒளியில் கண்டு தானாக இருக்கும் சகசிரதள உண்ர்வை அவன் இருக்கும் நிமிர்ந்த சகசிர தளத்திற்கு மாற்ரினால் நான் எனவும் அவன் எனவும் வேறுபடுத்திக் கானும் உணர்வு மாறி நானே அவன் எனச் சொல்வது நல்லது.

1608. குருநாதன் தனக்கு உபகாரமாக வைத்த முப்பதாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறுமாறு செய்து உலகத்தார் பாராட்டும் வண்ணம் சிவனின் பரப்புள் இருத்தினான். அந்த அனுபவத்தில் நிலை நிறுத்தி சிவமாக்கி ஆட்கொண்டான்.

1609. நந்தி குருநாதன் சிவ தீட்சைக்கு முன் அகண்டத்தை அறியாத அம்மூடரைப் போல் சிவதீட்சைக்குப்பின் சுட்டியறியும் அறியாமையை மாற்றினான். தான் என்/ற ஆன்மாவைப் பரம் என்று ஆக்கித் தத் என்ற பொருளான இயல்பை எனக்கு அறிவித்தான்.

1610. கண் என்ற பொறியால் கானாத காட்சியுடன் செவியாகிய பொறியால் கேளாத கேள்வியும் மறுபடாத சிவானந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணம் இல்லாத பற்றும் நாதாந்தத்தின் இருக்கும் அறிவும் என்பனவற்றைச் சிவபெருமான் காண்பாயாக் எனக் காட்டியருளினான்.

1611. பிரண்வ யோகத்தை பழகி வந்தவர்க்கு முத்தி கிட்டும். அவர்க்குப் பெருஞ் சித்திகளும் அவர் முன்னின்று தொழில் செய்யும் அன்னார்க்குப் பேசா அனுபூதி பிறந்து சிவபாவனையில் பொருந்தியிருக்கக் கூடும். இந்நிலை பெற்றவர் படைப்பு முதலிய் ஐந்தொழில்களையும் செய்வர்.

1612. சாம்பவி, கேசரி, பைரவி ஆகிய முத்திரையின் காரியம் காண்பவன் காட்சி காட்சிப்பொருள் என்ற மூன்றின் வேறுபாடு அற்றபோது முடிந்தது. அமைந்த இடைகலை பிங்கலை வழியாய்ச் செல்லும் காற்றை உள்நாக்கின் வழி நான்கு விரற்கடை பகுதில் உலவும்படி மாற்றி ஒளிமயமான குருவின் திருவடியில் பொருந்தித் தளைகளை விட்டவர் மீண்டும் பிறந்து இறக்கமாட்டார்.

1613. தவத்திரு பேதங்களில் மேலான விந்து நாதம் சதாக்கியம் ஆகிய மூன்றும் மிக்க சத்தி இருக்கும் அடையாளம் அதுவே முதல் நிலையாகும். இதைப் பற்றியுள்ள பரம ஞானி ஒலிக்கின்ற நடனமே சிவத்துடன் கலந்து தன் நிலைகெட்ட மூலமான பரன் எனக் கூறப்பட்ட காண்பவன் ஆவான்.

#####

Read 1640 times Last modified on திங்கட்கிழமை, 18 May 2020 09:45
Login to post comments