Print this page
புதன்கிழமை, 15 March 2023 08:43

உயிரினங்கள்மீது!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!


#*#*#*#*#

 

13.உயிரினங்கள்மீது!

 

இயற்கையின் பிறப்பில் உயிருள்ள புல் பூண்டுகளைத் தேவையின்றி வெட்டித் தள்ளுதல், பிடுங்குதல் ஆகியன உயிர்க் கொலைக்குச் சமம்.

பறவைகள், விலங்குகள், மீன், பாம்பு ஆகியவற்றைப் பிடித்து அடைத்து வைத்திருப்பது, எளியவர்களின் செல்வத்தைக் கவர்ந்து தன் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது, தெய்வ காரியத்திற்காக வைத்திருந்த பொருட்களை கவர்வது, பொய் பேசுவது, சிறு ஜந்துகள். பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைக் கொல்வது ஆகிய செயல்கள் ஒருவனைத் தன்னைத்தானே அசுத்தப்படுத்தி அவனின் புண்ணியத்தைக் கெடுக்கும் செயல்கள்.

மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்தால் அந்த உயிருக்கு அளவற்ற சுகங்களை இப்பூவுலகிலும் தேவர்கள் உலகிலும் அனுபவிப்பான். மாறாக துன்பம் விளைவிப்பவன் பலபிறவிகளில் கொடிய நோய்களினாலும், வறுமையினாலும், உற்றார், உறவினர்களால் இகழப்பட்டும் பலவித துன்பங்களை அனுபவிப்பான்.

பிறருக்கு தீங்கு விளைவிக்காத பசு, காளை, மான், யாணை, பறவை போன்றவைகளை வதை செய்பவன் அடுத்த பிறவியில் பார்வையற்ற குருடர்களாகவும் பிறர்காண விரும்பாத குஷ்டநோயினால் பீடிக்கப்பட்டும், அற்ப ஆயுளில் மரணமெய்தும் குழைந்தைகளைப் பெற்றும், காம வெறியினால் பிற ஆடவர்களிடம் செல்லும் பெண்களை மனைவியாகவும் அடையும் பாவிகளாக பிறவி எடுத்து துன்புறுவர். வேம்பு, வில்வம், அரசு, ஆலம், நாகலிங்கம், துளசி மற்றும் செழித்து வளர்ந்த மரங்கள் ஆகியவற்றை வெட்டுபவர்கள் உடல் குறைபாடுகளுடன் சரீரத்தில் துர்நாற்றத்துடன் பிறவி எடுத்து துன்புற்றும், இளம் வயதில் விபத்தில் சிக்கி அவயவயங்களை இழந்தும், துன்புறுவர்-கருட புராணம்.

#*#*#*#*#

Read 326 times
Login to post comments