Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:37

யாத்திரை எதற்கு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.


#*#*#*#*#

 

37.யாத்திரை எதற்கு!

 

தீர்த்த யாத்திரை நம் கலாசாரத்தின் அரிய உயரிய பண்பாகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள புனிதமான தீர்த்தங்களில் நீராடி இறைவனைத் தரிசிக்கவேண்டும். தீர்த்த யாத்திரைகளின்போது இயன்ற அளவு தானம் செய்ய வேண்டும்.

புஷ்யம், அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு-புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், ரேவதி, ஆகிய நட்சத்திரங்கள் எல்லா வகையிலும் பிரயாணத்திற்கு உகந்தது. இந்த நட்சத்திரங்களில் ஆரம்பித்த யாத்திரை க்ஷேம லாபங்களுடன் இனிது முடியும்

பொதுவாக சுக்லபக்ஷ காலம் யாத்திரைக்கு விசேடமானது

சஷ்டி, அஷ்டமி, துவாதசி இவையல்லாத திதிகளில் பிரயாணம் சுபம்.

தனுஸ், விருஷபம், கடகம், சிம்மம், துலாம் ஆகிய லக்ண காலங்கள் சுபமானது.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, பூராடம், ஆருத்ரா-உத்திரட்டாதி, பூரட்டாதி, ஜன்மத்ரேயம், சித்திரை ஆகிய நட்சத்திர காலங்களை தவிர்த்தல் நலம்.

சுபமான அனுகூலமான லக்கினத்தில் புறப்பட்டு பந்துக்கள் வீட்டிலோ, சிநேகிதர்கள் வீட்டிலோ தங்கி பிறகு பிரயாணம் மேற்கொள்ளலாம். இது முடியாவிட்டால் எடுத்துச் செல்லும் பொருள்களை சுப வேளையில் அனுப்பிவிட்டு பின்னர் புறப்படலாம்.

சகுனமாக கன்னிகை, பசு, பூர்ண கும்பம், பாற்குடம், தயிர், பழம், புஷ்பம், சங்கநாதம், மங்கள வாத்தியம், பல்லக்கு, இரட்டைப் பிராமணர்கள், குதிரை, விருஷபம், சவம் எதிர்பட்டால் சுபசகுனம்.

மோர், எண்ணெய் தலையன், வஸ்திரமில்லாதவன், விதவை, விறகுசுமை, பன்றி, சன்னியாசி எதிர்பட்டால் அபசகுனம்.

திங்களும் சனியும் கிழக்கில், வியாழன் தெற்கில், ஞாயிறு, வெள்ளி மேற்கில், செவ்வாய், புதன் வடக்கில் வாரசூலை.

 

#*#*#*#*#

Read 341 times
Login to post comments