Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:09

பிராயச்சித்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

 

#*#*#*#*#

 

48.பிராயச்சித்தம்!



ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயசித்தம் எனப்படும். செய்த பாவங்களை உணர்ந்தால் அவற்றிற்கு என்ன பரிகாரங்கள் எனத் தெரிந்து செய்யவேண்டும். என்ன பாவங்கள் என்ன பரிகாரம் எனத் தெரியாவிட்டாலும் தானம் தர்மம் பூஜைகளைச் செய்து வருவது புண்ணிய பலன்கள் பயக்கும்.

பன்னிரண்டு வயதுவரை குழைந்தைகள் செய்யும் பாவங்கள் பெற்றோரையே சேரும். பெற்றோர் இல்லை என்றால் அக்குழந்தைகளை வளர்க்கின்றவர்களை சேரும். இதற்குப் பிரயசித்தம் செய்து கொள்ளலாம். வளர்க்கின்றவர்கள் செய்யும் பாவங்கள் குழந்தைகளைச் சேராது.

ஜீவஹிம்சை-பிரயச்சித்தம்

ஜீவஹிம்சைக்கு பிரயச்சித்தாமாக மகாயக்ஞங்கள் செய்யவும்.
1. பிரம்ம யக்ஞம்- வேதம் ஓதுதல்
2. பித்ரு யக்ஞம்- பித்துருக்களை திருப்தி செய்தல்
3. தேவ யக்ஞம்- ஹோமம் செய்தல்
4. பூத யக்ஞம்- உதவிநாடி வருவோரை உபசரித்தல்

 

#*#*#*#*#

Read 340 times
Login to post comments