Print this page
வெள்ளிக்கிழமை, 08 September 2017 18:26

வடுக மூர்த்தி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

சிந்தித்தவர்கருள் கணபதி ஜயஜய
சீரிய ஆனைக்கன்றே ஜயஜய
அன்புடை அமரர்கள் காப்பாய் ஜயஜய
ஆவித் துணையே கணபதி ஜயஜய
இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய


வடுக மூர்த்தி!

 

துந்துபிவின் மகன் முண்டாசுரன் தன் இளமைப் பருவத்தில் மழை, பனி, நீரிலும், கோடையில் பஞ்சாக்கினி மத்தியிலும் நின்று ஐம்புலன்களை அடக்கி பசி, தாகம் தூக்கம் ஒழித்து பல காலம் தவம் செய்து சிவனின் காட்சி கண்டு எளியோனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி காட்சி தந்த பெருமானே! தேவ அசுரர்களால் வெல்ல முடியாத வலிமையும் தங்களைத்தவிர வேறு எவராலும் என்னைக் கொல்லமுடியாத வரம் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றான்.
அசுரர்களை எல்லாம் வென்றவன் தேவர்களையும் வென்று அவர்களுடைய உடைமைகளை தனதாக்கிக் கொண்டான். .இந்திரனை வென்று ஐராவதம், அரம்பையர், சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பகத்தரு ஆகிய வளங்களைக் கைப்பற்ற இந்திரன் நான்முகனிடம் அடைக்கலம் புகுந்தான். என்னைவிட நான்முகன் வலியவனா என அங்கும் சென்று நான்முகனுடன் போர் தொடுத்தான். நீண்டநாள் ஆகியும் முண்டாசுரனை நான்முகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனம் வருந்திய நான்முகன் சிவனிடம் முறையிட்டான்.
சிவபெருமான் தன்னிடமிருந்து வடுக மூர்த்தியை தோற்றுவித்து முண்டாசூரனை ஒழித்து திசைமுகன் துயர் துடைத்து வா என்றனுப்பினார். வடுக மூர்த்தி முண்டாசூரனை கொன்றார். இந்திரனை பதவியில் அமர்த்தி திருக்கயிலை சென்று சிவபிரானிடம் நடந்தவற்றைக் கூறினார்.
ஆசையை வென்று வாழ அருள். முண்டாசுரனை அழித்து மலரோன்- நான்முகன் துயர் தீர்த்த வடிவம் வடுக மூர்த்தி.

#####

Read 4576 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:24
Login to post comments