Print this page
புதன்கிழமை, 06 June 2018 12:12

த்ரிதியை / திருதியை திதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


&&&&&

 

த்ரிதியை / திருதியை திதி!

திதிக்குரிய விநாயகர்- பக்தி கணபதி. எள்ளு சாதம் சாப்பிடவும்.- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக விரத பூஜை. வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம். சித்திரை வளார்பிறை மூன்றாம் நாள் அட்சய திருதியை. உதயகாலத்தில் திதி இருந்தால் சிறப்பு. சந்திரனும் சூரியனும் உச்சம் பெற்று காணப்படுவர். அட்சயம் என்றால் குறைவு இல்லாமல் தொடர்ந்து வளர்வது என்றும் எடுக்க எடுக்க குறையாதது எனவும் பொருள். 3-ம் பிறை சந்திர தரிசனம் சிறப்பு. திரௌபதி அபயம் கிருஷ்ணா என்றபோது அவள் மானம் காக்க கிருஷ்ணர் அட்சய வஸ்திரம் அளித்தார். எனவே இந்த நாள் பெண் மானம் காத்த நாள் எனப்படும். இன்று பெண்கள் பாஞ்சாலி அபய மந்திரம் சொல்லி சுமங்கலி பூஜை செய்து இயன்ற தானம் அளித்தல் சிறப்பு. குசேலன் தன் நணபர் கிருஷ்ணனைப் பார்த்து செல்வம் பெற்ற நாள். மாதவி மகள் மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்த நாள். உணவு பஞ்சம் ஏற்பட்டபோது காசியில் அன்னை அன்னபூரணி அட்சய பாத்திரத்தின் மூலம் உணவு வழங்கினாள். பரமசிவன் அன்னையிடம் உணவு பெற்றார். சிவனுக்குகந்த நாள். அட்சய திருதியை நாளில் தான் பிரம்மன் பூமியில் உயிர்களை படைத்தான். வேதவியாசர் விநாயகர் துணையுடன் மகாபாரதம் எழுத தொடங்கிய நாள். குபேரன் அட்சய திருதியன்றுதான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான். கங்கை பூவுலகை தொட்ட நாள். கங்கோத்ரியில் உள்ள கோவில் அட்சய திருதியன்றுதான் திறக்கப்படுகின்றது.

பாற்கடலில் தோன்றிய திரு, மால் எனும் மகாவிஷ்ணுவை சேர்ந்ததால் திருமால் ஆன நாள். மாலவன் மார்பில் மகாலட்சுமி இடம் பிடித்தநாளும் இதுவே. அன்று லட்சுமி பூஜை செய்வது நலம் பயக்கும். அட்சய திருதியை அன்று முன்னோர்களை நினைத்து பூஜைகள் செய்து வழிபடலாம். அட்சய திருதியை நாளில் சிவபார்வதி, மகாவிஷ்ணு-மகாலட்சுமி, தன்வந்திரி, ஹயக்கிரீவர், குபேரன் ஆகியோரை வழிபட்டால் நன்மை பயக்கும் என்கிறது புராணங்கள்.

திருதியை விரத பலன்- கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை கடை பிடித்தால் நல்ல கணவனை பெருவார்கள். தங்கத்தில் கௌரி விக்ரகம் செய்து ஒரு மனதுடன் கௌரி பூஜை செய்து இரவு உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். இந்திராணி பிள்ளை வரம் வேண்டி இந்த பூஜை செய்து ஜெயந்தனைப் பெற்றாள். இந்த விரதம் இருந்தே அருந்ததி சப்தரிஷி மண்டலத்தில் எல்லோரும் வணங்கும் நிலையடைந்தாள். (திருமணத்தில் அருந்ததி பார்த்தல்). ரோகிணி இந்த பூஜை செய்ததால் தன்னுடைய சகோதரிகள் 26 பேரும் திகைக்கும்படியாக கணவன் சந்திரனின் காதல் மனைவியாக இருந்தாள். தருமர் அட்சய திருதியை விரதம் இருந்து போரில் வெற்றி பெற்றதுடன் இழந்த நாட்டையும் பெற்றார். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி அவதரித்ததால் பொன்னும் பொருளும், ஆடை அணிகலன்கள் எல்லாம் வாங்கலாம். அன்றைய தினம் உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சம் கொண்டுவரும்.

$$$$$

Read 16849 times Last modified on புதன்கிழமை, 06 June 2018 15:32
Login to post comments