Print this page
வெள்ளிக்கிழமை, 13 July 2018 20:45

திரிபுரபைரவி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

திரிபுரபைரவி!

ருத்திரனின் வடிவாக முக்கண்ணுடன் காட்சி தருபவள். ஞானக்கண்ணைத் திறந்து அகத்தின் இருளைப் போக்குபவள். ஜபமாலை ஞானமுத்திரை கொண்டவள். பிறை நிலவு தரித்ததால் அமுதமாக அருள் பொழிபவள், தவசக்தி மிக்கவள், ருத்ராட்ச மாலை, ஓலைச்சுவடி, அபய வரத முத்திரைகளை தன் நான்கு புஜங்களில் கொண்டவள். செந்தாமரைமேல் பத்மாஸனத்தில் அமர்ந்தவள். நிமிர்ந்த மார்புகள் மேல் ரத்தம் சொட்டும் தலைகள் மாலையாக அலங்கரிக்கின்றது.

விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் திரிபுரபைரவி. இவள் நிலம் திசையில் தோன்றியவள்.

குண்டலினி இயங்க நாடிசுத்தி, மற்றும் புலனடக்கம் தேவை. மூலாதாரத்தை ஸ்தானமாக கொண்டிருக்கும் திரிபுர பைரவி குண்டலினி சக்தி இயங்க மாசுகளை அகற்றுபவள். குண்டலினி யோகம் பயின்றாள் தேவி மட்டுமே தெரிவாள்.

தபஸ் என்பது ஒரு கிரியை. அதற்குரிய சக்தி கிரியா சக்தி. இந்த கிரியா சக்திக்கு அதிபதி திரிபுர பைரவி. தபஸ் செய்யும்போது திரிபுர பைரவியின் சக்தி உடலில் பரவி உடல் தகித்து செந்நிறமடையும். எனவே திரிபுர பைரவியே துர்க்கை எனவும் அழைக்கப் படுகின்றாள்.

எண் மூன்றை திரி என்றும் திரியம் என்றும் சொல்லலாம். திரிபுர என்றால் நம் ஸ்தூல, சூக்ம, காரண தேகங்களில் இடைவிடாது ஆத்மாவாக பிரகாசிப்பதால் திரிபுர எனலாம். மேலும் ரூபம், யந்திரம், மந்திரம் இவை மூன்றும் தேவியின் வழிபாட்டில் முக்கியம் என்பதாலும் திரிபுர எனலாம். பைரவி என்றால் அச்சத்தை ஏற்படுத்தும் உக்ரமான தேவதை. ஆனால் தவம் செய்பவளாதால் தகிப்பு தன்மை எனலாம்.

நினைவு முனைப்பு அடையும்போது எதில் நினைவு முனைகிறதோ அதைத்தவிர மற்றவை புலன்களுக்கு எட்டாது. இதுவே பிரம்ம சக்தியின் சேமிப்பு. தன் ஆற்றலில் ஒரு சிறிதளவு செலவிட்டு செயல் புரிவதால் மீதியுள்ள பெரும்பகுதி சேமிப்பில் இருக்கும். இந்த சக்தியின் சேமிப்பு உருவமே திரிபுர பைரவி.

முதுகு தண்டின் அடியில் மூலதார சக்ரத்தில் உறக்கத்தில் இருக்கும் குண்டலி சக்தியே திரிபுர பைரவி ஆகும். குண்டலியான பைரவி பிரணாயாமம் மூலம் தலை உச்சியிலுள்ள தாமரையை அடைந்து அமுதம் பொழியச் செய்து பின் தன்னுடைய ஸ்தானமான மூலாதாரத்திற்குத் திரும்புகிறாள். காலம் தவறாமல் திரிபுர பைரவியை உபாசிப்பவர்கள் உலகினர் போற்றிடும் கீர்த்தியும் புகழும் பெறுவார்.

திரிபுர பைரவியின் மூலமந்திரத்தை ஜபித்து வேள்வி நடத்தினால் லௌகீக சாஸ்திர நிவர்த்தி, சகல சம்பத்து, தனலாபம் அடைவர்.

#####

Read 16254 times Last modified on சனிக்கிழமை, 14 July 2018 16:05
Login to post comments