Print this page
திங்கட்கிழமை, 07 January 2019 19:04

சக்திபீடம்-12-ஐ/ஐம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-12-ஐ/ஐம்

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

#*#*#*#*#

எண் சக்திபீடம்-12

அட்சரம் ஐ/ஐம்(பன்னிரண்டாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் காஞ்சிமாநகரம்.கம்பாநதிக்கரை;.
அட்சரதேவிகள் ஜஷ்வர்யாத்மிகாதேவி/ஷுஷ்கரேவதிதேவி
அங்கம் இடுப்புஎழும்பு
பைரவர்/இறைவன் கங்காளர்/குரு
அங்கதேவி/இறைவி தேவகர்ப்பா/ காளிகாம்பாள்
பீடங்கள் காமகோட்யை நம
51-ல் நம் உடலில் கீழ் உதடு
ஊர் காஞ்சி
அருகில் அரக்கோணம் அருகில்
மாகாணம்/நாடு தமிழ்நாடு

இது காமகோடி எனும் மகாசக்தி பீடம். காஞ்சி- மகளிர் இடுப்பில் அணியும் ஒட்டியாணாம் எனப் பொருள். உடலின் மத்ய பாகம் இடுப்பு நிலமங்கையின் ஒட்டியாணம் போல் தென்படுவதால் இந்த புனித இடம் காஞ்சி எனப்பட்டது. காஞ்சிபுரத்தின் காளி கோவில் எனப் பிரசித்தி பெற்ற கோவில். ஆதி காமாக்ஷி / ஸ்ரீஆதிபீட பரமேஸ்வரி / ஸ்ரீ காளிகாம்பாள் எனப் போற்றுவர். இங்கு ஓர் அபூர்வ லிங்கம்-திருமேனியில் டமரு, கட்கம், கபாலம், சூலம் ஏந்திய சக்தியம்மன் வீராசனத்தில். இது சக்தி லிங்கம் எனப்படும். அன்னபூரணி, கமடேஸ்வரர், சாஸ்தா, நாகர்களை தரிசிக்கலாம். கர்பகிரகத்தில் காளிக்கு சதுர் புஜங்கள்-வலது கரங்களில் அங்குசமும், ஆபய முத்திரையும், இட்து கரங்களில் பாசம், அட்சய பாத்திரத்துடன் காட்சி

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
மூன்று முகங்கள்- ஆறு கரங்கள்- வலப்புற கரங்களில் சக்ரம், திரிசூலம், வரமுத்திரை, இடது கரத்தில்- சங்கு, கதை, அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ஐகா ரக்யா சுஷ்க பூர்வா ரேவதீ த்ரி சிரா ஹிதா
மயூ ரகா ஷட் புஜேயம் ரக்த கேஷைச்ச ஸம்வ ருதா
அர் தைர் தத்தே கரைஷ் சக்ரம் திரிசூலம் ச வரம் ததா
வாமை ஷங்கம் கதாம் குர்வீம் கரைர் தத்தே பயம் ததா:

#####

Read 10514 times
Login to post comments