Print this page
திங்கட்கிழமை, 07 January 2019 19:20

சக்திபீடம்-14-ஒள/ஒளம

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-14-ஒள/ஒளம

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-14 

அட்சரம் ஒள/ஒளம(பதினான்காவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் கன்யாகுமரி மாவட்டம்-சுசீந்திரம்/சிவீந்திரம்/சீவந்திரம்
அட்சரதேவிகள் ஒளஷதாதேவி/ ஒளஷதா
அங்கம் பற்கள்
பைரவர்/இறைவன் ஸம்ஹாரர்
அங்கதேவி/இறைவி நாராயணி/ முன் உதித்த நங்கை
பீடங்கள் ப்ருகுநகராயை நம
51-ல் நம் உடலில் கீழ் பற்கள்
ஊர் சுசீந்திரம்
அருகில் நாகர்கோவில் அருகில்
மாகாணம்/நாடு தமிழ்நாடு

இது ப்ருகு பீடம் எனும் மகாசக்தி பீடம். ப்ருகு பீடம் எனும் இதை சுசீ பீடம் என்றும் சொல்வர். தாணுமாலயன் ஆலயத் தெப்பக் குளதின் அருகில் உள்ளது. பிரக்ஞா தீர்த்த பூமி என கந்த புராணம் கூறுகின்றது. சாஸ்திர விதிப்படி செய்யும் வைதீக மந்திரங்கள், ஆராதனைகள் ஸித்தி அளிக்கும். மாமுனிவர்கள் ஆசிரமம் அமைத்து தியானம், யாகம், தவம் என ஆன்மீகப் பணியில் ஈடுபட்டதால் ஞானாராண்யம் எனப் பெயர். சுற்றுப் பிரகாரத்தில் சாஸ்தா, பஞ்ச கன்னியர், சிவன், பராசக்தி, பூதநாதர், நாகராஜர், காலபைரவர் திரு உருவங்கள் உள்ளன. அம்பாள் அஷ்ட புஜங்களுடன் சூலத்தை ஏந்தி காலசூலியாக காட்சி. சுடுசர்க்கரை எனும் மருந்தால் செய்யப்பட்ட சிலை (காவிமண், குந்தரிக்கம், குலுகுலு சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசுநெய், எள் எண்ணெய், மூலிகைச் சாறு ஆகிய எட்டுப் பொருட்களால் செய்தது) ஆடிப்பூரம்- அன்னை அவதரித்த நாள், பௌர்ணமி மற்றும் நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பு.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

நீலமேக நிறமேனி- பிளந்த வாய், நீண்டு தொங்கும் தடித்த நாக்கு, கடுமையான பார்வை, நெரித்த புருவங்கள், கடுங்கோபத்துடன் பயங்கரத் தோற்றத்துடன் ஆறு கரங்களை உடையவள். வலது கரங்களில் சூலம், கட்கம், வரமுத்திரை, இடது கரங்களில்- கதை, கேடயம், அபயமுத்திரையுடன் காட்சி. பெருத்த வயிறுடன் பேரண்ட வாகனத்தில் இருப்பவள்.
தியானஸ்லோகம்:
ஒள காராக்யா ஹ்யகோ ரேயம் கராலீ தீர்க ஜிஹ்விகா
ஏக வக்த்ரா வக்ர நேத்ரா ப்ரு குடீ குடி லேக்ஷணா
நீலமேக நிபா ரௌத்ரீ பேரண்ட் வர வாஹனா
ஷட் புஜார்த கரை தத்தே சூலம் கட்கம் வரம் ததா
கதாம் கேடா பயாத் வாமே ததா நா ச மஹோதரீ:

#####

Read 9402 times
Login to post comments