Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:06

சக்திபீடம்-22-ச1/சம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-22-ச1/சம்

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-22
அட்சரம் ச1/சம்(ஆறாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் மேற்குவங்கம்-கேது கிராமம்
அட்சரதேவிகள் சாமுண்டாதேவி/ சூஷ்மா
அங்கம் இடதுஅக்குள்
பைரவர்/இறைவன் பூருகா
அங்கதேவி/இறைவி பஹிளா
பீடங்கள் தேவிகோடாயை நம
51-ல் நம் உடலில் இடது தோள்
ஊர் கேதுகிராமம்
அருகில் ஹௌராவிலிருந்து144 கி.மீ. கட்டோவா ர.நி. அருகில்
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது தேவகோட்ட பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவகோட்டம் எனப் பெயர் பெற்ற இந்த பீட சக்தி பஹிளா / சண்டா / சண்டிகா என அழைக்கப்படுகின்றாள். பிண்டி எனப்படும் உருண்டை கருங்கல்லே தேவி ரூபமாய் சண்டிகா தேவியாய் வழிபடப் படுகின்றது.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ஒருமுகம்- நான்கு கரங்கள்- வலது கரங்களில் கட்கம், அபயமுத்திரை, இடது கரங்களில்- கேடயம், வர முத்திரையுடன் குதிரை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஸூஷூமா சைக வக் த்ரைஷா ஹயா ரூடா சதுர் புஜா
கட்க கேட தரா சாக்யா வரா பயகரா சுபா:

#####

Read 10403 times
Login to post comments