Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:35

சக்திபீடம்-49-ஹ/ஹம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-49-ஹ/ஹம்

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-49 

அட்சரம் ஹ/ஹம்(முப்பத்திமூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் த்ரிஸ்தானம்
அட்சரதேவிகள் ஹம்ஸவதிதேவி/ ஆத்யாயனீ
அங்கம் ரத்தநாளங்கள்
பைரவர்/இறைவன் யோகீசர்
அங்கதேவி/ இறைவி காளிகா
பீடங்கள் மகாலக்ஷ்மிபுராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை
ஊர் நலஹாடி
அருகில் கொல்கத்த-228 கி.மீ. போல்பூர் வழி செல்லலாம்.
மாகாணம்/நாடு மே.வங்காளம்

இது த்ரிஸ்தானம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு திருக்கோசரம் ஸித்திக்கும். தேவியின் நாளங்களைக் காட்டும் சின்னமஸ்தா உருவம். இங்கு காளி பிண்டி என்ற உருண்டை வடிவில் காட்சி. திரிஸ்தானம் நல்ஹாடி என மாறியது. நல்ஹாடி ர.நி.-1 கி,மீ தூரத்தில் நல்ஹடேஸ்வரி ஆலயம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவந்த நிறமேனி- சிவப்பு வண்ண ஆடை- சதுர் புஜங்கள்- வலது கரங்களில் சின்முத்திரை, அபய முத்திரை, இடது கரங்களில்- தாமரை மலர், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஆத்யாயிநீ ஹகா ராக்யா மத்த மாதங்க வஹாநா
பாட லாபா கரைர் தத்தே சிதம் புஜ வராபயாந்:

#####

Read 14846 times
Login to post comments