Print this page
செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:02

திருமூலர் வரலாறு.!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

திருமூலர் வரலாறு.!

73. பக்திநெறி ஞான நெறி ஆகிய இரண்டின் மூலம் என் குருவான நந்தியின் திருவடிகளை தலைமேல் கொண்டு அறிவின் வழி சென்று வழிபட்டு புருவ மத்திக்குமேல் உள்ள அந்தியில் நாள்தோறும் நினைவு கொண்டு தியானித்து திருமந்திரம் எனும் இந்நூலை செய்யத் தொடங்குகின்றேன்.

74. சிவாகமம் சொல்ல வல்லவன் என்னும் தகுதியைப் பெற்றும் அத்தகுதியை எனக்கு அளித்த குருவின் திருவடியைப் பெற்று தலைமேல் பெருவெளியில் ஒப்பில்லா ஒளியை தரிசித்த பின் ஒப்பில்லா ஏழு ஆதாரங்களையும் ஒளியால் பற்றி உள்ளும் புறமுமாய் ஒளிமயமாய் நெடுங்காலம் இருந்தேன்.

75. சித்தாந்தத்தின் முதன்மை மாணாக்கணான இந்திரனே இப்படி ஏழு ஆதாரங்களிலும் ஒளி பொருந்தி இருப்பதற்கு காரணம் என்னவென்றால் அங்கு பொருந்தியுள்ள புவனங்களின் தலைவியை அப்பெருவெளியில் தரிசித்து பின் அத்தரிசனத்தின் அருளுடன் திரும்பினேன்.

76. சதாசிவத் தத்துவத்தையும் முத்தமிழ் வேதத்தையும் பெரிதும் அனுபவித்த காலத்தில் உடலுக்கு நன்மை தரும் உணவையும் உண்ணாமல் அளவாக இருந்ததால் மனம் தெளிந்து இதமான உணவு இல்லாமையால் விருப்பு வெறுப்பின்றி சதாசிவம், தத்துவம், முத்தமிழ் வேதம் மூன்றையும் ஆரய்ந்து இருந்து உண்மைப் பொருளைக் கண்டேன்.

77. மாலாங்கு என்ற மாணவரே! தென் திசைக்கு நான் வந்த காரணம் உலகப் படைப்பிற்குத் தேவையான நீலநிறமான ஒளியில் உள்ள ஆற்றலோடு ஒளிரும் அம்மையுடன் மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சிவம் நடிக்கும் திருக்கூத்தின் இயல்பை உயிர்களுக்கு சொல்லவே வந்தேன் நான்.

78. சிவானந்தவல்லி என்றப் பெயருடன் உள்ள சக்தி என் பிறப்பை நீக்கி ஆட்கொண்டாள். சிவன் ஜீவர்களை பக்குவம் செய்வதற்காக எழுந்தருளியுள்ள வீணாத்தண்டில் பொருந்தியுள்ள அவள் எல்லையற்ற சிறப்புடன் இருக்கும் அவளின் திருவடியைச் சேர்ந்திருந்தேன்.

79. உமையொரு பாகராய் இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டேன். ஜீவர்களை பக்குவம் செய்யும் வீணாத்தண்டின் முடிவில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்ந்து சிவம் என்ற அறிவின் நிழலில் அமர்ந்து சிவனின் திருப்பெயர்களை நினைந்திருதேன்.

80. இந்த உடலில் எண்ணில்லாத காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற பிரகாச வெளியில் இருந்தேன். தேவர்கள் துதிக்கும் இடத்தில் இருந்தேன். அப்போதெல்லாம் என்குரு நந்தியின் திருவடியில் என்னைப் பொருத்தியிருந்தேன்.

81. பின்னால் தயங்கி தயங்கி நின்று ஏன் பிறவியைப் பெறவேண்டும். முற்பிறவிகளில் முயன்று நல் தவத்தை செய்யாதவர்களே அவர்கள். நான் நல்ல தவம் செய்திருந்தமையால் என்னைப் பற்றித் தமிழில் நல்ல நூல் ஆகமம் செய்யும் பொருட்டு ஞானத்தை அளித்து பிறவி தந்துள்ளான். இறைவன்.

82. ஞானத் தலைவியுடன் உள்ள நந்தியின் நகரில் ஊனம் இல்லா ஒன்பது முடிவுகொண்ட சந்திப்பில் ஞானப் பாலாட்டி பெருமானை அர்ச்சனை செய்து நான் நல்ல அறிவுமயமாய் இருக்கும் திருவடியின் கீழே இருந்தேன்!

83. திருக்கயிலையிலிருந்து வரும் வழியில் சிவனை நினைத்து காமனை வெல்லும் ஞானம் மிக்க முனிவர் பல்கி நின்ற தேவர்கள், அசுரர்கள், மானிடர் ஆகியவர்களைக் கடந்து சூட்சுமமாய் வான் வழியில் வந்தேன்.

84. சிந்தையில் சிறந்து விளங்கும் நூல்களில் உத்தமமாகக் கருதப்படும் வேதத்தின் உடலான சொற்களையும் அதனுள் உரைந்திருக்கும் பொருளையும் இறைவன் தன் கருணையால் எனக்கு உணர்த்தியருளினான்.

85. சிவபெருமானாகிய இறைவனை நினைத்து நான் பெற்ற இன்பத்தை இந்த உலக உயிர்கள் அடையட்டும். வான் வரை நிலைத்து நிற்கும் சிவ அறிவைப் பற்றிச் சொல்லப்போனால் அது உடலைப் பற்றிய உணர்வாய் இருக்கும் மந்திரமாகும். உயிர்களே நீங்கள் அத்தகைய உணர்வை அடிக்கடி பற்றிக் கொண்டால் சிவம் உங்களிடமே பொருந்திவிடும்.

86. பிறத்தலும் இறத்தலும் இல்லா நந்தி என்ற சிவபெருமானை சிறப்பாக ஆகாய வாசிகள் கைக்கூப்பி தொழுது உள்ளத்துல் மறவாமல் மந்திரமாலையால் உள்ளத் தூய்மையான பக்தியுடன் பொருந்தி ஓதுவர்.

87. உடலை அளித்து அவ்வுடலில் அக்னி மிகாமல் வைத்த எம்பெருமான் பூவுலகம் முழுவதும் அழியாமல் தீயை வைத்தான். குழப்பம் ஏற்படாமலிருக்க தமிழ் மறையாக திருமந்திரத்தைச் செய்து அதில் அனைத்துப் பொருட்களும் அதனுள் அடங்குமாறு வைத்தனன்.

88. பெருமானின் அடியையும் முடியையும் காண விழைந்த திருமாலும் பிரம்மனும் இறைவனின் அடிமுடி காணாது பூமியில் சந்தித்தனர். நான் அடி கண்டிலேன் என்று திருமால் உண்மை சொல்ல நான் முடிகண்டேன் என்று பிரம்மன் பொய் உரைத்தான்.

89. காளை, மான், மழு ஆகியவற்றை அணிந்திருக்கும் பிரிவு அற்ற பரம் பொருளான சிவபெருமான் கட்டளையில் அமைந்தது இந்த உலகம்.. இதில் என் குருநாதன் நந்தி நற்பதமாகியா பெருமானின் திருவடியை அடியேன் தலைமீது பொருத்தினான்.

90. அறியப்படும் பொருள், அறிவு, அறியும் அறிவையும் அறிபவனையும மாயையின் செய்திகளையும், சுத்த மாயையில் வரும் பரை, ஆதி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்ற சக்தியின் கூட்டத்தையும் அச்சக்திகளில் இருக்கும் சிவத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் விதை போன்ற பொருள் அனைத்தையும் திருமந்திரமாகிய இதில் விளக்கியுள்ளேன்.

91. பரமென்ற அறிவு மயமான ஜோதியே மேலே கூறப்பட்டதை விளக்கியது. அது இறைவனாகும். அளவில்லா பெருமை உடையவன் ஆனந்த நந்தியாகும். அசைவில்லாமல் இருக்கும் ஆனந்தக்கூத்தன் நடராசனின் சொற்படி வளமான கயிலை மலையிலிருந்து இங்கு வந்தேன்.

92. சிவகுரு நந்தி அருளாலே மூலாதரத்தில் உள்ள ருத்திரனை நாடி பின் குருவின் திருஅருளால் சதாசிவ மூர்த்தி ஆனேன். சிவகுருநாதன் அருளாலே உண்மையான ஞான அறிவைப் பெற்றேன். அந்த சிவகுரு நந்தியின் அருளாலே நான் நிலைபெற்று இருந்தேன்.

93. இருக்கு வடிவான வேதத்தில் உள்ள அளவற்ற மந்திரங்கள் நுண்மையான பிரணவத்தில் முடிவான உச்சியில் சூரியனும் சந்திரனும் தங்கள் ஒளிக்கதிர்களை ஆன்ம பேரொளியில் வெளிப்படுத்துவதே பொன்னொளி போன்ற கிரணங்கள் அங்கு ஒளிவீசக் காரணம்.

94. நந்தி என்ற இறைவனின் பெயர் புகழை எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கின்றேன். இரவு பகல் எனப் பாராமல் அப்பெருமானை என் உள்ளத்தில் வைத்து தியானித்து சுய ஒளிஉடையவனும் அடியேனின் தலைவனும் இயல்பாகவே ஒளிவடிவினாய் இருக்கின்ற இறைவனை அடைய முய்ற்சிப்பேன்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1823 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 06:06
Login to post comments