Print this page
புதன்கிழமை, 11 December 2019 07:46

அன்பு செய்வாரை அறிவன் சிவன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

அன்பு செய்வாரை அறிவன் சிவன்!

280. உயிர்கள் தன்னிடத்தே அன்பு செய்தலை இகழ்தலை மெய்அன்பு கொண்டிருத்தலை சிவன் அறிவான். மேலான தன்மைக்கேறற அருள் செய்யும் உத்தமன் அவன். தன்னிடம் தளிர்த்து வரும் அன்பு செய்ய வல்லார்க்கு மகிழ்ந்து அன்பு செய்யும் அளவிற்கு அருள்பவன்.

281. உயிர்கள் பேரின்பம் அடைவதற்கு வேண்டியதை வகுத்து அருளியவன் இறைவன். பிறவியில் வரும் துன்பங்கள் பல அவற்றைப் போக்குதற்குச் செய்யும் தொழிலும் பலவாகும். சிவபெருமான் திருவடியில் அன்பு செலுத்தினால் அவரின் திருவருள் வலிமையால் இப்பிறவி இன்பமாய் அமையும்.

282. அன்பு மனத்தின்மீது விளங்கும் சிவமான ஒளி இன்பம் வழங்கும் கண்ணையுடைய சக்தியுடன் அருள் புரிய திருவுளம் கொண்டதால் வலை போன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அகலும். அப்போது நன்மையுடைய சிந்தையுடன் சிவனை தொடர்பு கொண்டு துன்பப்படும் கண்ணியை அகற்றி விடலாம்.

283. புணர்சியால் சிற்றின்பம் கொள்ள மங்கையர் மீது வைக்கும் அன்பைப்போல் சிரசில் பொருந்தியிருக்கும் சிவத்தோடு ஒடுங்க வல்லவர்க்கு உணர்ச்சிகள் இல்லாது நாதத்துடன் பொருந்தி வெளிசென்று குலாவி உலாவுவதால் பெரும் பேரின்பம் இங்கு பெற்ற சிற்றின்பம் போல் அது இதுவாக இருக்கும்.

284. பேரின்பத்தில் திளைத்தவரோடு விளங்கும் சோதியானச் சிவனை சித்தர்கள் தம் ஆராய்ச்சியினால் அறிந்து கொள்ளமுடியாது. ஆனால் அடியார் பத்தியினால் வணங்க அவர்கட்கு வீடுபேற்றை அளிக்க அவர்முன் தோன்றுவான்.

285. நறுமணம் தரும் கொன்றை மலர் போன்ற மஞ்சள் நிற ஒளியையுடைய சிவனைப் பார்த்தேன்.கரிய நிறம் கொண்ட யானையையின் தோலைக் கிழித்தவன் திருவடியைக் கண்டேன். மூலாதாரத்தில் விளங்குபவனைக் கண்டேன். என் அன்பினால் அவனது காலில் இருக்கும் கழல் அணியைக் கண்டேன்.

286. நம்புதலுக்கு உகந்தவன். எல்லாப் பொருளாகவும் இருப்பவன் என்று தேவர்கள் போற்றும் தலைவன். இன்ப உருக்கொண்டவன், உயிர்களின் இன்பத்தில் பொருந்தி மகிழும் அன்பு வடிவானவன். அவனை யாரும் அறிய வில்லையே!

287. முன்பு அவனை வணங்கி பிறப்பு இறப்பு அறியாத ஞானியர் அன்பால் வழிபட்டு இறைவனை அறிந்துள்ளோம் என்பர். இன்பத்தால் வந்த பிறப்பும் இறப்பும் இல்லாதவர் நந்தியெம்பெருமான். இப்படி இருந்தும் மற்றவர் இறைவனை உணர்ந்து பிறப்பும் இறப்பும் போக்கிக்கொள்ள அறிந்து கொள்ளவில்லையே!

288. இரவும் பகலும் தன்னை பாசத்துள் வைத்து போற்றும் உயிர்களை இறைவன் அறிவான். உயிர்கள் ஒளிபெற்று அவ்வெளியிலே நின்று தனக்கு என ஒரு செயல் செய்யாமல் நின்றால் இறைவன் எழுந்தருளி பிரியாமல் உடன் தங்குவான்.

289. மென்மை மிகுந்த சோதியை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் ஏன்! உறுதியக்ப் பிடித்துக் கொண்டால் அவன் வழியே போகலாம். அதனால் எல்லையில்லாப் பெருமைதனைப் பெறுவேன். என் உயிரில் கலந்து நின்?ற ஈசனை இனிதாய் கலப்பதே மஞ்சள் நீராட்டு ஆகும்.

#####

Read 1734 times Last modified on புதன்கிழமை, 11 December 2019 08:19
Login to post comments