Print this page
புதன்கிழமை, 11 December 2019 08:02

கள்ளுண்ணாமை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#####

கள்ளுண்ணாமை!

224. கழுநீர் பெற்று அருந்திய பின் பசுக்கள் மற்ற குளங்கள் தேடி நீர் குடிக்கப் போகா. கழுநீரை விரும்பி அதற்காக தாகத்தால் களைத்து உடலை வருந்தி நிற்கும். வாழ்விற்கு வளமையை அளிக்கும் நீர் என்பது சிவானந்தமானது. இதனை அருந்தாமல் முழுநீர் மாயமான மதுவை உண்பவர் நல்ல ஒழுக்கத்தினின்று விலகியவர் ஆவார்,

326. உள்ளத்தைச் சிவனிடம் செலுத்தி உருகச் செய்து சிவ சமாதியில் பொருந்திச் சிவானந்தம் நீங்காது அனுபவிக்காமல் அதை விட்டுச் சிவபெருமானின் நினைவு இல்லாது நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் கீழானதாகும்.

327 தேவி வழிபாடு செய்வோர் அம்மனுக்கு பிடிக்கும் எனக்கூறி மதுவை உண்டு அழிவர். காமத்தில் ஈடுபாடு கொண்டோர் அதன் போதையிலே கலக்கமடைந்து நிற்பர். இறைவன் பேரைச் சொல்லி ஒளியுடன் விளங்குபவர் அதன் உள்ளே உணர்வை நிறுத்தி மகிழ்வர். சிவ நாம மகிமையை உணர்ந்து அனுபவிப்பர் அன்றே சிவனை அணுகும் இன்பம் எய்துவர்.

328. மறை உணர்த்தும் உண்மையை புரியாதவர் பசு, பதி, பாசம் ஆகியவற்றை அறியார். அவர் விரும்பியதை அளிக்கும் பெருமானின் அருளை துணைக் கொண்டு வாழ மாட்டார். உண்மையான சிவயோகத்தில் நிலைபெறமாட்டார். உலகில் உள்ள நீர் கள்ளை எடுத்து அருந்தி உண்மையை உணராமல் இருப்பர்.

329. மயக்கம் தரும் சமய குற்றங்களைக் கொண்ட மூடர்கள் சமயத்தின் பேரைச் சொல்லி மயக்கம் தரும் மதுவை குடிப்பர். அவர்கள் நல்ல வழியை ஆராய்ந்து அறிய மாட்டார்கள். மயக்கம் தரும் மகாமாயையின் இருப்பிடம் மாயை ஆகும். மயக்கத்தின்று தெளிந்த பின் செய்யும் வழிபாடும் நயக்கத்தையே தரும். அது சிவானந்தத்தை தராது.

330. உண்டவரை மயங்கச் செய்வதும் இறந்தவரை எண்ணிக் கவலை அடையச் செய்வதும் கள்ளின் தன்மை. இயங்கிக் கொண்டிருக்கும் பெண் இன்பத்தை நாடும்படியும் தூண்டும். அவர்கள் நல்ல ஞானத்தில் ஈடுபடார். அவருக்கு என்றும் திகழும் இடையறா சிவானந்த ஆனந்தம் கிட்டாது.

331. இரவு பகல் என்ற நிலை அற்று தன்னை மறந்த நிலையில் இருந்து பிற எண்ணங்களை அகற்றி சிவானந்த தேனை உலக உயிர்கள் விரும்ப மாட்டார். இரவும் பகலும் இல்லாத் திருவடி இன்பத்தில் மூழ்கி இரண்டும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை என்ற இரண்டையும் நீங்கி நின்றேன்.

332. சக்தியை வழிபடுவோர் சக்தியின் அருளை வேண்டி கள்ளை உண்பர். மதுவுண்டு மறந்திருத்தலால் அறிவின் சக்தி கெட்டுவிடும். சக்தி என்பது சிவஞானத்தில் மூழ்கி நிலைபெற்று ஞானத்தை அடைவதாகும்.

333. சக்தியை உடைய இறைவன் அருள் செய்தால் அச்சக்தியின் அருள் கிட்டும். சக்தி அருள் செய்யின் சிவன் அருள் கிட்டும். சக்தி சிவன் இரண்டும் பொருந்தியுள்ள விந்து நாதங்களை உணர்ந்து இருப்பவர்களுக்கு சக்தி வடிவம் தோன்றி எட்டு பெருஞ் சித்திகளும் கிட்டும்.

334. சிவானந்ததேன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து தத்துவங்களால் மயங்கிய அறிவை நீக்கி சிவத்தை உபாயத்தினால் அடையலாம் என்று செய்யப்படும் பொய்யான தவங்களை நீங்கி உண்மையான சிவபோகத்துள் செலுத்தி மேலன சிவானந்தம் கிட்டச் செய்யும்.

335. யோகிகள் சந்திர மண்டத்தில் பிராணனை வசப்படுத்தி சிவனந்தம் அளிக்கக்கூடிய அமிர்தத்தை அருந்துபவர். எட்டு சித்திகளைப் பெற விரும்புவோர் கள்ளைக் குடித்து மூடராய் மோகங்கொண்டு ஏற்படும் பற்றால் இருக்கும் அறிவையும் இழந்து விடுவர்.

336. இறப்பு என்பதை மாற்றக்கூடிய ஒளியினை அறிய மாட்டீர்கள். சிவபெருமானின் திருவடிகளை பற்றியிருக்க மாட்டீர்கள். தியானத்தில் சிவ பேரொளியை விரும்பி பொருந்தமாட்டீர். அருள் என்ற நீர் பெருக்கால் நன்மை அளிக்கும் தூய ஒளியைப் பற்றி சென்று பிராணன் போகும் வழியை காணுங்கள்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1564 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 12:06
Login to post comments