Print this page
திங்கட்கிழமை, 11 May 2020 16:59

சன்மார்க்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

சன்மார்க்கம்!

1477. புகழ்ந்து சொல்லப்படும் சன்மார்க்கம் சிவத்தின் உண்மை வடிவங்களான நாத விந்துக்க்ளாக இருக்கின்றது.. சுடரைக் கண்டு சிவத்தை விட்டு சிவயோகத்தில் நிலையான சித்தம் உடையராய் காலனை வென்ற சிவனின் உள்ளக்குறிப்பை உணந்தவர் பற்றுகின்ற நெறி. சன்மார்க்கம்.

1478. சைவ சமய்த்திற்கு பெருமைதரும் நிகர் இல்லா தலைவன் சிவன். ஆன்மாக்கள் உய்வு பெறும் வண்ணம் அமைத்த ஓளி நெறியானது என்னவென்றால் தெய்வீகச் சிவநெறி சன்மார்க்கம். அதைச் சேர்ந்து உய்வு பெறுமாறு இந்த உலகில் உள்ளவர்க்கு அமைத்தான் சிவன்.

1479. சன்மார்க்கம் தரிசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடி நிலையை சிரசின்மீது சூடவுமான குருபத்தி செய்யும். மெய்யன்பர்க்கு முத்தியை அடையத் துணையாகும்.

1480. சிவன் அகண்ட பரந்த பொருள். இதை அறியாதவர் தெளிவு இல்லாதவர். தெளிவு இல்லாதவராதலால் சீவனின் பரவிய ஆற்றலை அடைய மாட்டார். சீவன் பரவியுள்ளமை ஆகாதபோது சிவம் ஆகமாட்டார். அதலால் தெளிவு இல்லாதார் பிறவி முடிவு பெற மாட்டாது பெருகி நிற்கும்.

1481. ஆன்மாவான தான் சிவமேயாகித் தன்னிடம் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்களை அகற்றி மெளனம் என்ற பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும் கு/ற்றம் இல்லாது ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும் தான் சிவமாய்த் தன்னிலை கெடல் சன்மார்க்கத்தால் ஆகும்.

1482. சன்மார்க்க நெறியினர் முகமே சிவம் உறையும் இருப்பிடம். சன்மார்க்கத்தாரின் இடமே கோவில். சன்மார்க்கத்தாரின் கூட்டத்தைக் காண்பது சிவ தரிசனம்.இதை எம் மார்க்கத்தில் உள்ளவரிடம் கூறுவேன்.

1483. சன்மார்க்க சாதனம் என்பது சிவத்தை அறியும் ஞானம், இம்மார்க்கம் தவிர மற்றச் சாதனம் அறிவில்லாதவர்க்குரியது. தீமை அளிக்கும் மார்க்கத்தைவிட துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவரின் சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறி.

1484. சன்மார்க்கத்தை அடைய வரும் பயிற்சியாளர் ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாகும். சிவத்துடன் பொருந்தும் நல்ல மார்க்கமே அவர்க்கு வேண்டுவதாகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் சொல்கின்றது.

1485. தனக்கு மாறான பாசத்தையும் பாசத்தால் கருமத்தையும் கன்மம் காரணமாக வரும் பிறப்பு இறப்புகளாகிய அவத்தைக்ளையும் அவத்தைகளுக்கு காரணமான பிரகிருதியையும் இவற்றோடு பொருந்தி இதை அறியும் ஞானத்தையும் இவற்றின் வேறுபாடுகளையும் ஆன்மாவான தன்னையும் கண்டவர் சன்மார்க்கத்தார் ஆவார்.

1486. ஆன்மாவைப் பாசத்தினின்று பிரித்தும் பதியுடன் கூட்டிக் கனியாத மனத்தை நன்றாக கனிய வைத்து கெடாத மெய்ப் பொருள் தோற்றத்துக்குள் சேர்ந்து அசையாத வண்ணம் சமாதியில் கூடியிருத்தலே சன்மார்க்கம்.

1487. சன்மார்க்கத்தில் உள்ளவ்ர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமான மார்க்கமே அல்லது வேறு ஒன்றும் இல்லை. சன்மார்க்கத்தைப் பொருந்தாதவர் மார்க்கம் யோக சித்திகளைத் தரும் நெறியாகும்.

#####

Read 1620 times
Login to post comments