gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

ஐந்தாம் தந்திரம் (15)

வியாழக்கிழமை, 14 May 2020 16:31

உட்சமயம்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

உட்சமயம்!

1557. வானவரையும் சீவர்களாகிய எம்மையும் பழமையான தனு காரணங்களை அளித்து உலகத்தில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன் மிகப் பழமையானவன். அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியை நாட அவற்றில் கலந்து நின்று இருப்பான். அவனே முதல்வன்.

1558. ஒரு ஊருக்குச் சொல்ல ஆறு வழிகள் இருகின்றன. அதுபோல் ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய உள்ளன. இது ந்ன்று இது தீது என உரைப்பவர்கள் மலையைப் பார்த்து குரைக்கும் நாயினைப் போன்றவர்கள்.

1559. பெருமையுடைய சைவ சமய்த்தில் ஒப்பில்லாத தலைவனை உயிர்களின் உயிர் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராகிய இறைவனை உண்மை உணர்வு பெற்ற்வர்க்கு அன்பானவனை இன்பம் தரும் உலகத்து முதல்வனை வ்ந்து கூடி உய்வை அடையுங்கள்.

1560. சிவபெருமான் உயிர்கள் உய்தி பெரும் பொருட்டு அமைக்கப்பட்ட நெறியில் கடவுளாகிய அவன் உண்டாக்கிய வழியில் சென்று சீவனே சிவன் என்று உணர வல்லார்க்கு அந்தந்த சமயத்திலும் உள்ள அப்பொருமான் அங்கு தோன்றுவது அதன் கடமையாகும்..

1561. சீவர்கள் உய்தி அடையும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆறு சமய உச்சிக்கு சீவர்கள் தாமாகச் செல்லும், வழிதான் இல்லை. அவர் செய்த புண்ணியமே அவ்வழியை அங்கு அமைப்பதாகும். சீவர்கள் மேல் ஏறிப் போகத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.

1562. சிவத்தை அடைவதற்கு வழியாவதை அறிந்தவனான நானும் வேறு சில நெறிகளைத் தேடி திரிந்த அக்காலத்திலும் உண்மை மிக்கநெறியில் எண்ணம் என்ற கடலை நீந்தி ஏறுவதற்கு மேனமையான் நெறியாய் நின்றது நிகரற்ற சுடரே ஆகும்.

1563. ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளியப்பட்ட சிவநெறி அயல் சமயத்தாரார் ஆராய்ந்து மீண்டும் வந்து சேர்ந்த பெரு நெறியாகும். அகச்சமய்த்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அனுபவம் பெற அந்த அந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளிலே நின்று மீண்டும் வந்துபொருந்தி உய்வு பெருகின்ற நெறியாகும்.

1564. புறப்பொருளில் சென்ற மனத்தை அகப்பொருளான சிவத்தில் பொருந்துமாறு செய்யுங்கள். அதற்காக மூலாதாரத்திலிருந்து மேல் நொக்கிப் படரும் சி காரத்தால் உணர்தப்படும் திருவைந்தெழுத்தை சொல்லுங்கள். சிவநெறியைப் பொருந்தி இந்தச் சாதனையை செய்து வாருங்கள். நெற்றிக்கு முன்னே சிவந்த நிறம் பொருந்திய ஒலி தோன்றும்.

1565. யோகப் பயிற்சியாளருக்கு மின்னல் போன்ற ஒளியில் வெளிப்படுபவனும் அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயிலே வெளிப்படுபவனும் எந்த உருவில் நினைத்தாலும் அந்த உருவில் வெளிப்படுபவனும் ஆன்\வனைப் பரஞானத்தால் ஒளிமயமாகக் காணின் அதுவே அரநெறி சைவநெறியாம்.

1566. ஆரய்ந்து ஒளி நெறியே சிறந்தது என்று தெளிவு கொள்ளாத உயிரின் ஆற்றல் பலவாகும். அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன் நெறி புகுந்து அறிபவர் சிவனது திருவடியை பற்றி நின்று பொருந்தி உணர்வது ஒப்பில்லாத இன்பம் ஆகும்.

1567. சைவ சமய்த்தின் ஒப்பற்ற தலைவன் சிவபெருமான் அவன் உயிர்களுக்கு வகுத்துத்தந்த ஒளி நெறி ஒன்று உண்டு இது தெய்வத்தன்மை பொருந்திய சிவநெறியான சன்மார்க்கம் அதைச் சேர்ந்து உய்வு பெறுவதன் பொருட்டாக உலக மக்களுக்கு சிவன் அளித்தது.

1568. இந்த தவம் நல்லது. அந்த தவம் நல்லது என எண்ணும் பேதஞானம் படைத்த அறிவற்றவரைக் கண்டால் நகைக்கத் தோன்றுகிறது. எந்த த்வமாக இருந்தால் என்ன வேறுபாடு அற்று நின்று உண்ர்வார் முத்தியான ஊரை அடையக்கூடும்.

1569. சதாசிவம் ஐந்து முகங்களுடன் பொருந்தி எல்லோரிடமும் இருப்பான். அப்பெருமானுக்கு தத்புருடம், அகோரம், சத்தியோதம், வாமதேவம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்ற ஆறாவது முகமும் உண்டு. சிவத்தை அறிந்து வழிபடுபவர்களுகு சதாசிவத்தை போல் ஆறு முகங்களும் ஒன்றாய் இருக்கும். சிவத்தை அறிந்து வழிபடாதபோது அதோமுகம் கீழ் நோக்கி இருக்கும்.

1570. முதல்வனான சிவன் உலகு முழுவதும் கலந்து விளங்குவான். அலை கடல் சூழ் உலகு உயிர்களுமாய் நிற்கும் சிவத்துடன் பிரிப்பில்லாது நிற்கும் பராசத்தி ஆதியில் உலக் உற்பத்திக்கு உபகாரியாகவும் இறுதியில் ஒடுக்கிக் கொள்பவளாகவும் இருக்கின்றாள்.

1571. தன்னறிவினால் முனைந்து ஆராயந்து அறிபவர்கள் தேவர்கள், கந்தருவர் முதலானோர். ஆராய்ச்சியில் அறிய இயலாத இருக்கும் சைவத்தை திருவடியை வழிபடும் பேறு பெற்றாதால் நான் ஆராய்ந்து அறிந்தேன், அதனால் இப்பிறவியிலே மறுமை இன்பத்தை அடைந்தேன்.

1572. உடலைப் பெற்றதன் பய்ன் இறைவனை அறிந்து வழிபடுவதே என்பதை மக்கள் அறியவில்லை. அறிய இயலாமல் ஒன்றாக இருக்கும் வானத்தை ஆறு ஆதாரங்களில் இயங்கும்படி வைத்து அறிய இய்லாத வகையாய் ஆறு கோசங்களில் அனுபவம் அடைய்ச் செய்து வான் மயமான சிவம் அறியமுடியாத அண்டமாய் இருக்கின்?றது.

#####

வியாழக்கிழமை, 14 May 2020 16:29

நிராகாரம்!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#####

நிராகாரம்!

1550. இமயமலை போல் பாராட்டப்படத் தக்க தெய்வத் தன்மை பொருந்தியவர் இயல்பிற்கு ஏற்ப ஆறு சமயங்களைச் செய்தனர். அக்காலத்து சாத்திரங்களை ஓதிப் பொருந்த அறிந்தோம் என்பர். ஆதியான சிவன் பொறுமையுடன் அறிந்து அடங்கிய ஞானியரது உள்ளத்தில் கலந்து நின்றான்.

1551. அன்பர்களின் பொன்னொளி மண்டலம் என்ற அறிவு மண்டலத்தில் திகழும் சிவபெருமானை எண்ணித் தம்மிடம் வேறுபாடின்றி இருப்பர் இவ்வுலகத்தில் சிவபெருமானைப் போன்றவர் ஆவர். அவனை வேறு என்று எண்ணி நினையாமல் இருப்பவர் துன்பத்துள் மூழ்கி உய்ய நெறி அறியாது வருந்துவர்.

1552. உலகத்தில் வருந்தி அழுபவரும் நல்ல இயலபை இழந்து வருந்துவோரும் பெருமையுடைய சிவத்தை நினைத்து அருந்தவத்தை மேற்கொண்டால் அவரவர்குரிய துன்பங்களைப் போக்கி வருந்தாமல் செய்து தேவரின் தலைவனும் பிறப்பிலாதவனுமான சிவன் நல்ல தகுதியை அளிப்பான்,

1553. தொலைவில் இருக்கின்றான் இறைவன் என்று வணங்கும் பக்தர் அவன் துணையாய் இருந்து வேண்டியவற்றை அளீப்பதை அறியாதவர் ஆவர். புவியிலிருக்கும் இன்பப் பொருளை விரும்பியவர் அதனால் வரும் துன்பப் பயனை அடைந்து வருந்துவர். அறியாமை உடைய இந்த இருவரும் உலகப் பொருளுடன் பொருந்தி பிறவியில் விழுபவர்கள். சிவன் தம்மை விட்டு அகலாதவன் என்பதை அறிந்தவர் உலகத்துக்கு கைமாறு கருதாது மேகம்போல் பயன் அளிப்பர்.

1554. அறிவுடன் கூடி அறிந்து அனுபவிக்கும் தோணியான சிவம் வினைகளுக்குச் சேமிப்பு இடமான காரண உடம்பை அழிக்கும் தூணான பேரொளியின் இயல்பை அறிந்திருந்தும் கொடிய வினைக் கூட்டத்தை உடையவர் சிவத்தின் திருவடியை பொருந்த நினைக்க வில்லை.

1555. நிலை பேறுடைய சிவ பரம் பொருள் மனத்தில் பொருந்தியவன் என்றாலும் மக்கள் அறியாமல் இகழ்வார்கள். அவர்கள் உண்மையான் செல்வத்தை உணராதவர்கள். அவ்வாறு இகழாமல் உள்ளம் பொருந்தி வணங்கினால் உவமை இல்லா சிவத்தை அறிந்து சிவப்பேற்றை அடையலாம்.

1556. அன்பர்கள் பிரணவத்தில் சிவத்தைக் கண்டு தன் தணித்தன்மையை நீக்கி ஒன்றான தனமை போல் விளங்குகின்ற அனுபவம் கைவரப் பெறமாட்டார். உடல் அழியும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. பிறவாமையைப் பொருந்தார். மயக்கம் அளிக்கும் சமயத்தினின்று நீங்காதவர்களாய் அழிந்து போவர்.

#####

புதன்கிழமை, 13 May 2020 17:07

புறச்சமய தூஷணம்!

Written by

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#####

புறச்சமய தூஷணம்!

1530. கூட்டமான ஆறு சமயங்களும் உடலுள் இருக்கும் இறைவனைக் காண உதவி செய்யாது. அத்தகைய சமயங்களை மேற்கொள்பவர் மயக்கத்தை தரும் குழியிலே விழுவர். மனைவி மக்களை தளையில் கட்டுண்டு திகைப்பர்.

1531. எங்கும் நிறைந்துள்ள இறைவன் ஒவ்வொரு உயிரிடமும் அவரவர் உள்ளத்தில் தன்னைக் காட்டாமல் மறைவாய் உள்ளான். கொடைத்தன்மையில் வள்ளல். சிரசில் இருக்கும் சகசிரதளத்தில் சத்தியுடன் பொருந்தி நிற்பான். ஒன்பது வாயில் உடலினு/ல் புகுந்து மேல் நோக்கிப் போகும் கள்வன் அவன் செயல்படும் வகையை உலகத்தார் அறியார்.

1532. உயிரில் இருந்து அறிவு செம்மை பெற்ற ஞானியர்க்கு உயிரினது இடமாகி அருள் செய்வான். உயிர்களுக்கு அன்னியனாக இருந்து உயிர்களை நடத்துபவன் என்று பேத ஞானமுடைய அடியானுக்கு வேறாக வெளியில் நின்றபடி அருள்வான். உள்ளும் வெளியும் இல்லை என்ற நாத்திகர்க்கு இரண்டிடத்தும் இல்லாதவ்வன்.

1533. ஆறு சமயங்களையும் உணர்ந்தவர் இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் இல்லை. ஆறு சமயங்களால் முடிவாகக் கூறப்பட்ட பொருளுமவன் அல்லன் என்பது உண்மை. இறைவனைப் பற்றிய அறிவை ஆராய்ந்து தெளிவு கொள்ளுங்கள் அதன்பின் முத்தி இன்பத்தை அடையலாம்.

1534. சிவனைக் காட்டிலும் எங்கும் நிறைந்த பொருள் இல்லை. ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே த்வமே தவிர மற்றது இல்லை. உண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறப்புப் பெற விரும்புவர்க்கு ஆறு சமயங்களும் வீண் ஆனவை. தவத்தின் பயனை அளிக்கவல்ல குருமண்டலத்தில் இருக்கும் சிவத்தை அடைந்து மேன்மை அடையுங்கள்.

1535. ஈசனைத் தேடி ஆறு சமயங்களில் நிற்பவர் விண்ணவர் ஆவதற்கு விரும்பி மயக்கம் கொண்டு அழிவர். தேவனான இறைவனை அடைய முயலாதவர். பிறவி நீங்கும் உபாயத்தை அறியாதவர் ஆவார்.

1536. சிறப்பான நெறி சிவநெறி. மற்றாவை பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சேர்ந்தால் மலத்தினால் உண்டாகும் பிறவி உண்டு. உள்ளத்தில் சிவ நெறி தோன்றினால் தவ நெறியாகும். நான்முகன் திருமால் உருத்திரர் ஆகிய மூவரும் பிறவியை அளிக்கின்ற நெறியினர் ஆவர்.

1537. நூற்றுக் கணகான உலக சமயங்களில் ஆறு சமயங்களும் அடங்கும். பல சமயங்களும் மேற்கொண்ட நெறிகளைக் கடந்தது சிவநெறிஇதுவே முத்தியை அளிக்கும் நெறியாகும்.

1538. மூடர்கள் பொருள அறியாமல் கத்தும் கழுதையைப் போன்றவர்கள். சிவன் எங்கும் நீக்கம் அற நிற்கின்றான் என்றாலும் தம்மிடம் குற்றம் நீங்காதவர் சிவனிட,ம் உள்ள குணங்களைப் பாராட்ட மாடார். உண்மையை இன்னது என்று கொள்ளாமல் மயக்கம் கொண்டு பிறந்து இறந்து வருந்துவர்.

1539. ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்தவரும் ஓதாமல் பத்தி நெறியில் நின்றவரும் இருவினை அனுபவித்து சுழுமுனை நாடியின் வழியில் சென்று முடிந்த பிரமரந்திரத்தில் கூடி அருளைப் பெற்று அச்சம் நீங்கி நிற்பவர்க்கு மேலான் நெறியாகும்.

1540. பல தலங்களுக்குப் பயணம் செய்யும் அடியார் விரும்பிய இடங்களில் நின்று அருள்வான். இயற்கையாகவே பாசங்களினின்று நீங்கியவன். அவனை நந்தி எனப் புகல்வர். மன ஒருமைப் பாட்டுடன் துதிக்க வல்லார்க்கு தூய பேரொளி வடிவில் வெளிப்படுவான். மாயையின் கவர்ச்சி நீங்காதவர்க்கு புலப்படாதவன். மாயையின் பிடியிலிருந்து மயக்கத்தை விடாதவர் எடுத்த உடம்பின் பயனை அறியாதவர்.

1541. நல்ல நெறியை அறிந்து வாழ்பவர்க்கும் அறியாது வாழ்பவர்க்கும் வினைக்குட்பட்ட உடம்பு வித்தாகும். புவியில் வாழ்ந்து மீண்டும் பிறவியையும் இறப்பையும் அடைதல் பழியாகும். பிராண்னைப் பிரமபுழைக்கு போக்கும் வழியை கற்பிக்கும் குருவின் வழி நின்று பரந்தவெளியில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் நெறியை விருப்ப வில்லையே மக்கள்!

1542. பெருந்தவத்தை உடையவர் எல்லாரும் மகாதேவனான சிவனைத் தம்மை செலுத்துபவன் என வழிபடுவர். குரு மண்டலத்தில் நாத வடிவாய் வெளிப்படுவதால் அறியப்படத் தக்கவன். நாத உணர்வே அவன் என்று வீணாத்தண்டின் வழி வணங்கினால் அவனும் அந்நெறியில் வெளிப்பட்டு அருள்வான்.

1543. அனைத்து சமயங்களும் தலைவனை எல்லாவற்றிற்கும் முதலானவனை பக்தியால் விரும்புபவர்களின் உள்ளத் தாமரையில் விளங்குபவனை நாடிய பக்தர்களின் சித்தம் விரும்பித் தேடியபோது அவன் அறிந்து வெளிப்படாது போனால் உண்மையை அறிய இயலாமல் பொய்விடும்.

1544. உயிர்களுக்கு அளிக்க வேண்டியவற்றின் நன்மைகளை அறிந்தவன் விரும்பியவரை ஆதரிக்கும் இயல்பை உடையவன். ஒளிவடிவானவன், வானவர் பெற்றிருக்கும் பேறுகளுக்கெல்லாம் அவனே பெருந்தலைமையாய் இருப்பவன் என்பதை உன் ஐய அறிவை அகற்றி நினைப்பாயாக. தூய ஒளிக்கல்லைப் போன்றபேரொளி உடையவன்.அவன் வைத்த அறநெறி அரிதாகும்.

1545. சமயங்களுள் அது சிறந்தது. இது சிறந்தது எனக் கூறும் மயக்கத்தை உடைய மக்களின் மய்க்கச் சூழலை விட்டு நீங்கு. நாதந்தத்தில் இருக்கும் சிவபெருமானை நாடு. பல மாயச் செயல்களுடன் கலந்திருக்கும் ஊன் உடலைக் கடந்திருக்கும் பிரண உடலை பெறுக.

1546. நாத மார்க்கத்தை அறிந்து அடைந்த தேவர்களும் முனிவர்களும் நல்ல நெறி இது எனக்கண்டு சிவமாம் பேற்றை அடைந்தனர். அப்படியிருக்க மக்கள் வகுத்த வேறு நெறிகளை நாடி இறைவனான முதல்வனின் கருணையைப் பெறாதவர் செல்ல வேண்டிய நெறியில் செல்லாது திகைப்பது ஏன்.

1547. நாம் அடையத்தக்க நெறியாய் அறியத் தக்கதும் உயிருக்கு உயிராய் நின்று சோதியை பெறுவதற்குரிய நெறியில் நின்று அறிந்தால் யாதொரு மாறுபாடும் ஏற்படாது. கன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாய் இருக்கும் சிவந்த தீயுள் சுயபேதம் கழிவதை மக்கள் அறிவதில்லை. அறிவற்றவர்கள் அவர்கள்.

1548. இறைவனை அடைய வகுக்கப்பட்ட நெறி முன் சொன்னதாகும். உலக இன்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டு நடப்பவர் மற்றவர் கூறும் கற்பனையைக் கேட்பர். பிறப்பு என்ற சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தைப் போக்கி உலகத்து இன்பத்தைப் பழித்து நடப்பவர் மற்றவரால் புகழ்ப்படுவர்.

1549. சிவநெறியைப் பற்றி தவம் நிலை பெற்றபோது பழி பாவங்களில் புகுத்தும் வன்மையால் வினைக் கட்டுகளை அழித்து அந்த வினை வழியே போகும் திவினையாளரை புறக்கணித்து பிரமரந்திரத்தொலை வழி சென்றால் தேவ தேவனான சிவம் வெளிப்படுவான்.

#####

புதன்கிழமை, 13 May 2020 10:57

சத்தி நிபாதம்!

Written by

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#####


சத்தி நிபாதம்!

1514. சுவாதிட்டானத்திற்கு தொடர்புடைய மூலாதாரத்தில் இருந்த குண்டலினி சத்தி அஞ்ஞானத்தில் உள்ள ஆன்மாவுக்கு ஞானம் ஏற்பட அஞ்ஞானத்தை அகற்றிப் பசுவின் இயல்பையும் அறியும்படி செய்து ஆசை உண்டாக்கி உடன் இருந்தாள்.

1515. இனிமையை அளிக்கும் நிலையை நினைத்தால் சிவத்தை அறியும் இடமாய் அறிபவர்க்கு இன்பம் தருவதாய் அமையும். தேனைப்போன்ற பொருளான தெளிவை அனுபவிக்கின்றவர்க்குப் பசுக்கள் விரும்பிய புன்செய் நிலமாக மூலாதாரம் இருக்கும்.

1516. ஆணவமான இருளில் எடுத்த கணக்கிலடங்காத பிறவிகளை கடக்கும்படி செய்யும் திருவருள் எப்போதும் நீங்காதபடி திருஅருளம்மை அருள்வாள். மயக்கம் நீங்கப் பெறாத தேவர்கட்கு தலைவனான சிவத்துடன் பொருந்தி விந்து கெடாத இன்பத்தை அனுபவிக்கும் இடம் மூலாதாரம்.

1517. குண்டலினி இத்தகைய இருட்டறையில் இருந்த காரணத்தை ஆராய்ந்தால் இருளில் பொருளால் சூழப்பட்ட அறையில் விளக்கு புகுந்து எரிவது போன்ற ஆணவம் என்ற இருளில் குருமண்டலம் அருளால் சூழப்பெற்ற சிவசத்தி ஆவதற்கேயாகும்.

1518. குண்டலினி சத்தி மேலே போய் ஆன்மாவில் பரப்பி தன்னுள் அடக்கி ஆணவத்துடன் கூடிய மலத்தோடு மயங்கியிருந்த நிலையைப் போக்கிக் கன்மங்கள் யாவற்றையும் விலக்கி அறியாமையை அகற்றிச் சிவம் இருக்ககூடிய அருட்குணங்களைப் பதிந்து அருள் மயமான ஞான் சத்தி விளங்கும்படி செய்தாள்.

1519. பொண்ணுடன் பொருந்தி குண்டலியின் ஆற்றலில் இருந்த ஆடவர் அதை மாற்றி அமைக்கும் உபாயத்தை உணரவில்லை. அவ்வாறு மாற்றி அமைக்கின்ற வழியை அறிந்தால் அறிந்தவர் தொடர்ந்து உண்டாகும் பிறவித் துன்பம் இனி ஏற்படாது.

1520. மூலாதாரம் என்ற நிலமான சுவதிட்டானத்தில் இருக்கும் நான்முகனும் அதன் தொடர்பான மணிபூரகத்தில் இருக்கும் திருமாலும் உருத்திரரும், தொண்டையில் இருந்து மறைப்பைச் செய்யும் மகேசுவரனும் தக்கவாறு அறிந்தவர் இறைவனை அடைவர். இறைவன் ஆனவன் மையையும் தோற்கச் செய்யும் கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட அக்கினி கலையில் இருப்பவன் என அறிந்து உறுதியாக காதல் செய்வீர்.

1521. இவ்வுலக் உயிர்கள் எத்தனை முறை அழிந்து தோன்றினாலும் சத்தியும் சிவமும் அழியாப் பெருமை கொண்டவர்கள். நாள்தோறும் விடியற்காலையில் சிவச்த்தியை வழிபடுவர்க்கு அவரது சுழுமுனையில் பொருந்தி உணர்த்துவாள்.

1522. உடலில் பொருந்தியுள்ள சூரியன், சந்திரனைத் தொடர்ந்துபோய் ஒளியைக் கண்டு கொண்டோம். பழமையாய் தொடர்ந்து வரும் பரசிவமாகிய பேரொளிப் பிழம்பிடம் போய் முடியும். வண்டுகள் ஒலிக்கும் இயல்புடைய சகசிரதளத்தில் ஒளியுடன் ஒளிரும் அண்ணலை நிலைபெறக் கண்டவர்க்கு அவர் உள்ளத்தில் இருளை மாற்றியருள்வான்.

1523. எல்லா உயிர்க்கும் தந்தை சிவன். அவன் வாழும் தோட்டமான சகசிரதளத்தில் உலகியல் பெண்பிள்ளை சாதனமாக இன்பம் அளிக்கும். பயிற்சியாளருக்கு ஏழுவகைத் தோற்றத்தில் எழுந்த பிறப்புகளையும் அவற்றில் செய்த நல்வினை தீவினைகளையும் அறிந்து கொள்ளும் நல்ல பார்வை உண்டாகும். உள்ளத்தில் சிவம் ஒளிராது போன இடையூறு அனைத்தும் நீக்கி தலைவனைக் கண்டு பொரூந்தி சிவக்கனியின் சுவையாக மாறுங்கள்.

1524. அறியாமையான காட்டில் வழும் குவிந்த கொங்கையை உடைய குண்டலினியம்மை சிறப்பாக தம்மிடம் விளக்கம் அடையுமாறு பூசை செய்து காண்பவர்க்கு பிறப்பை நீக்கிய பயன் தருவாள். அறியாமை காரணமாய் உள்ள மறதியை போக்கித் தன்னை எப்போதும் வணங்கும்படி செய்வாள்.

1525. எட்டுத் திசைக்கும் தலைவன் சிவத்தை ஆதாரத் தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினி சத்தியுடன் பொருந்தித் துதியுங்கள். தியானம் செய்பவர்க்கு மயக்கம் தரும் நீல ஒளியைத் தொடர்ந்து அருள்பெற முடியும்.

1526. சத்தியின் அருள் பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் ஏற்படும். அவனை வணங்கினால் அவனும் மலர்தூவி வழிபடுவான். மேலான தன்னை வணங்குபவனைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்துவ நிலையில் நிற்பாள். உலகம் எங்கும் சென்று வரும் ஆற்றலை அவன் பெறுவான்.

1527. நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருக்கும் காலத்தில் இனிய அருட்சத்தி குருமண்டலத்தில் இருப்பாள். உயிர் ஒளி பெறுவதற்கு இடையூறாக இருக்கும் குணங்களைப் போக்கி அருள்வாள் என்ற அறிவால் தன் முனைப்பில் செயல் அற்று இருப்பின் மூன்று மலங்களும் கெட்டுச் சிவமாய் திகழ்வான்.

1528. விந்து நாதம் என்பன இல்லாத இடம் நாதாந்தத்தில் ஒலியை உண்டாக்கும் சத்தியை வணங்கிச் தியானித்து மந்திரம் அற்ற நாதாந்தத்தில் அவளுடன் ஒன்றினால் பராபரையான அவளும் அன்போடு பொருந்துவாள்.

1529. மாலைக் காலத்தில் இருக்கும் தீபமான சந்திரனும் சூரியனுமாகிய் ஒளிப் பொருளுக்கு மிகவும் ஒளியை அளிக்கும் ஒப்பிலாத பரஞ்சுடரான அண்ணலும் உண்மை ஞானத்தை விளக்கிய தலைவனும் ஆன சிவன் என் மனதுள் புகுந்து ஊன் உடம்மை ஒளிரச் செய்து உயிருடன் பொருந்தினான்.

#####

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி

#####

சாலோகம்!

1507. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை நெறிகளும் அமையும். சரியை நெறி பற்றி நிற்பர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனது அண்மையில் விளங்குவர். அத்தகைய உலகில் இறைவனின் அண்மையை அடைந்தவர் அவனது வடிவத்தை அடைவர். இறைவனைப் போன்ற ஒளிவடிவைப் பெற்று பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெற்று இருக்கும் இறைவன் உருவாகும்.

1508. சமய்த்தைப் பற்றி நிற்பவர் செய்யக்கூடிய முதல் செயல் தன் ஊள்ளத்தில் வழிப்டும் கடவுளை வைத்தல். சமயத்தில் விசேடம் என்பது அந்த வழிபட்டில் கடவுளுக்குரிய மந்திரத்தை நினைத்தல். சமய்த்தில் உள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதான நிர்வாண தீட்சை ஆகும். சமயத்திற்குரிய அபிடேகம் என்பது வணங்கும் கடவுளை எண்னியபடி சமாதி ஆவது.

#####

சாமீபம்!

1509. சாலோக முத்தியில் பாசத்தனமை கெடாமல் நின்று பிறவியைத் தரும் சாமீபத்தில் பாசம் கட்டுப்படுத்தாது அருளாக இருக்கும். சாரூபத்தில் பாசமானது வேலும் மேன்மையைத் தரும். சாயுச்சியத்தில் பாசமானது முழுவதும் குன்றிப் பதியை அடையச் செய்யும்.

#####

சாரூபம்!

1510. சாரூபம் என்பது யோகத்தில் எட்டாம் உறுப்பான சமாதியால் அடைவது. தங்கிய ஞான நெறி பற்றி நிற்பவர்க்கு கைகூடும். இந்த நெறி உறுப்புடன் கூடிய உடல் சித்தி கைகூடப் பெறுவர். உடம்பு குற்றம் இல்லாத யோகத்தால் திருத்தி அமைக்கப்படும்.

1511. மேருமலையைச் சார்ந்த போது உலகில் இயங்கும் பொருள் இயங்காத பொருள் அனைத்தும் மேருமலைப் போல் பொன் நிறம் அடையும். நாத தத்துவத்தில் இருக்கும் குரு மண்டலத்தை அடைந்தபோதே கயிலையின் தலைவன் இறைவனின் வடிவத்தைப் பெறுவர்.

#####

சாயுச்சியம்!

1512. முதல் நிலை சைவம் என்பது சிவனுடன் பொருந்தி நிற்றல். இரண்டாம் நிலை சிவ தத்துவத்தை உணர்ந்து அதில் இருக்கும் சிவபெருமானுடன் சேர்தல். மூன்றாம் நிலை சமாதியில் பொருந்தாமல் சிவம் தம்மிடம் ஒளிர்வதை உணர்ந்து கொள்ளுதல். இந்நிலையில் சிவத்துடன் பொருந்தி உலகை விட்டு சமாதியில் நிலைபெற்று சிவானந்த பேறு அடைதல். இதுவே சாயுச்சியம் பெற்றவர் நிலை.

1513. விழிப்புடன் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல் ஆகும். விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் அடைந்தவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையில்லாத ஆனந்தத்தில் நிலைத்திருப்பது சாயுச்சியம் ஆகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 12 May 2020 17:05

தாசமார்க்கம்!

Written by

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

தாசமார்க்கம்!

1502. செய்தற்கு எளியனவான கோவில் விளக்கு ஏற்றுதல், மலர் பறித்தல், அன்புடன் மொழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்தல், பூசைக் காலங்க்ளில் மணியடித்தல் திருமஞ்சன் நீர் சேர்த்தல் முதலிய திருக்கோவில் பணிகளைச் செய்வது தொண்டு நெறியாகும்.

1503. ஆதி பரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயம் கொண்டு துணிவு இல்லாது நீங்குவர் சிலர். இது பரம் பொருள். இதை வழிபடுதலே முறை என வண்ங்கியவர் எவ்விடத்தும் இல்லை. உமக்கு அமைந்துள்ள தர்ம நியதிப்படி பற்று இருக்கின்றாதோ அங்குப் போய் இறைவனை விரும்பி வழிபடுக. அதுவே இது என்ற் ஐயத்தை போக்கும் வழி.

1504. சந்திரனால் உண்டாகும் கீழான உணர்ச்சிகளை அடக்கி அறிவால் நிகழும் ஆராய்ச்சிக்குப்பின் திட ஞானம் அடைந்து எங்கும் நிறைந்த திருவடியை எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பேன். தேவ தேவனான சிவபெருமானை நாள்தோறும் வணங்குவேன். இப்படி வழிபடுவதில் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவைப் பெற்றது.

1505. தேவர்கள் ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சித்து துதிப்பர். அவர்களை விடுத்து மனம் மகிழ்ந்து திருவடியை உள்ளத்தில் கொண்டு தொழுது கண் போன்றவன் என இறைவனை எண்ணி நிற்கும் அடியார்க்கு நாத வடிவினனான இறைவன் அவர்தம் பேரன்பிற்கு ஆட்பட்டு வெளிப்பட்டு அருள்வான்.

1506. இறைவன் புகழைப் படித்தாலும் பூசை செய்தாலும் மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் கல் வீழ்ந்த பாசிக்குளம்போன்று தெளியாதது மனம். ஆகவே குற்றம் இல்லாத பேரொளியான நீலகண்டப் பெருமானை அன்பால் இடைவிடாது உள்ளத்தில் இருத்த நினைவு இல்லாதவர் ஆவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 12 May 2020 16:43

சற்புத்திர மார்க்கம்!

Written by

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!

#####

சற்புத்திர மார்க்கம்!

1495. சற்புத்திர மர்க்கம் கிரியை வழி நின்று யோகத்தை அளிப்பது. சொன்ன இரு மார்க்கங்களூம் கடந்து யோக சக்தியுடன் பொருந்தியிருத்தல் சன்மார்க்கத்தால் பெறும் ஞான்ம் ஆகுன்.

1496. பூசை செய்தல், பாராயணம் செய்தல் இறைவன் புகழைக் கூறி வணங்குதல், குறிபிட்ட சில மந்திரங்களைச் சொல்லி சிந்தித்தல், குற்றம் இல்லாத தவ முழக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமக் குரோதம் கோபம், மோகம் மதம் மாற்சரியம் என்ற பகைகளை நீக்குதல், அன்புடன் ஹம்ச பாவனை செய்தல் என்ற எட்டும் குற்றம் இல்லாத சற்புத்திர மார்க்கத்தின் உறுப்புகள்.

1497. வண்டானது தேனைச் சேர்க்கப் பல மலர்களை நாடி அலையும்.. வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீல மலரை அடையாது. கிரியையாளர் மணம் மிக்க மலர்களைப் பறித்து சிவபெருமானை வழிபடுவதைப் பார்த்தும் மற்றையோர் சிறு பொழுது சிவனை வழிபடாது பிறவழிச் சென்று கெடுகின்றனரே.

1498. இறைவன் திருவடி நிழலே பிறவிப் பெருங்கடலுக்கு அரிய கரை. பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைவதே. திருவடியான கரைக்குப் போகின்ற நிலையான உயிர்களுக்கு ஒரே அரசாய் ஏழ் உலகிலும் இருப்பவன் இறைவன் ஆவான்.

1499. உள்ளப் போக்கில் உய்ர்ந்தும் திருவடியை வழிபட்டும் இன்பத்தை அனுபவித்தும் தழுவி மகிழ்ச்சியைப் பெற்று சிவபெருமானின் திருவடிக்கே விண்ணப்பம் செய்தால் வர இருக்கும் பிறவிக்கு அஞ்சி எடுத்த பிறவியை பயனுடையதாக்கும். இழிந்த நிலைக்கு அஞ்சி அவனைத் தாங்குபவனாக நினைப்பவர்க்கு அவன் தாங்குபவானக அமைவான்.

1500. சிவனை நான நின்று தொழுவேன். அப்பெருமானை என்றும் கிடந்து தொழுவேன். நீங்களும் அழகிய பரஞ்சோதியான இறைவனைப் பொருந்திய மலர் கொண்டு தொழுது வழிபடுங்கள். தொழும்போது சிவபெருமான் தொழுபவரின் சிந்தனையில் வெளிப்பட்டு அருள்வான்.

1501. வீடுபேற்றை அளிக்கவல்ல சற்புத்திர மார்க்கத்திற்கு வாயிலான தொண்டு நெறி பற்றி வினையின் வழியே வடிவம் பெற்று வாழும் உலக உயிர்களே கேட்பீர். கருவில் செலுத்தும் வினைக் கூட்டங்கள் நீங்க இறைவனை வணங்கி நாள்தோறும் இன்பமாக நிலைபெற்று இருப்பீர்.

#####

செவ்வாய்க்கிழமை, 12 May 2020 11:40

சக மார்க்கம்!

Written by

ஓம்நமசிவய!

திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!

#####

சக மார்க்கம்!

1488. ஞான நெறி என்பது தோழமை நெறியால் அடையலாம். அரச மார்க்கமான் இது வீடு பேற்றையும் சித்தியையும் அளிக்கும். மற்ற பிற்பட்ட நெறிகள் நீங்காத பிறப்பையும் இ/றப்பையும் அளித்து ஞானத்தை எண்ணி எண்ணி உறுதி அடைய வழியாகும்.

1489. சிரசில் பன்னிரண்டு அங்குலத்தில் பெருந்தும் மார்க்கத்தை அறியாதவர் துவாத சாந்தத்தில் இருக்கும் குருமண்டலமான ஒளி மண்டலத்தையும் அங்கே இருக்கும் சிவத்தையும் அறியாதவர். அவரின் வீட்டில் திருமகள் தங்காமல் போவாள். தன் உருவத்தையும் உறவினரையும் விட்டு இறந்து போவர்.

1490. துவாத சாந்தத்தில் பொருந்தியவர் யோக சமாதியை அடைவர். இந்த நிலையில் உல்கம் எல்லாம் நுட்பமாய் அங்குள்ளது. அவ்வொளியில் சிவமும் சத்தியும் உள்ளனர். இதைவிரும்பி மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.

1491. யோகம் போகம் என்ற இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும். யோகத்தால் சிவசாரூபம் அடைவர். அதனால் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் அடைந்தவர் ஆவர். அழியாத யோகியர்க்கு யோகம் போகம் பொருந்தும்.

1492. ஆதார சோதனையால் நாடி தூய்மை அடைந்து மேதை முதலான பதினாறு கலைகளில் இருக்கும். வானமும் ஒளியும் புலப்படும். அறிவினது ஆலயம் என்ற ஆன்மாவின் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் புத்தியும் தம் இயல்பான கீழ் இழுக்கும் இயல்பை விட்டு நிற்பதே சக மார்க்கம்.

1493. உயிரை கீழ் நோக்கி இழுக்கும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பின்பு மனம் எனும் கூர்மையான வாளால் வருத்தி துன்புறுத்தும். அப்போது பதினெட்டுக் கணங்களும் கருதும் ஒருவனும் வணங்க தக்கவனும் ஆன சிவன் சிந்தையில் வந்து பொருந்துவான்.

1494. வளமான பழத்தை போன்ற கனிவை உடைய செம்மை உடையவர்க்கும் ந்ல்ல கனியைப் போன்று இன்பம் தரும் உண்மைப் பொருள் இறைவன் ஆகும். உள்ளம் நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து இருப்பவர்க்கு கனியினின்று சாற்றை நீக்கி எடுப்பது போல் இவரை தத்துவங்களினின்று நீக்கி இறைவன் தானும் உடன் இருப்பவன் ஆவான்.

#####

திங்கட்கிழமை, 11 May 2020 16:59

சன்மார்க்கம்!

Written by

ஓம்நமசிவய!

திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

#####

சன்மார்க்கம்!

1477. புகழ்ந்து சொல்லப்படும் சன்மார்க்கம் சிவத்தின் உண்மை வடிவங்களான நாத விந்துக்க்ளாக இருக்கின்றது.. சுடரைக் கண்டு சிவத்தை விட்டு சிவயோகத்தில் நிலையான சித்தம் உடையராய் காலனை வென்ற சிவனின் உள்ளக்குறிப்பை உணந்தவர் பற்றுகின்ற நெறி. சன்மார்க்கம்.

1478. சைவ சமய்த்திற்கு பெருமைதரும் நிகர் இல்லா தலைவன் சிவன். ஆன்மாக்கள் உய்வு பெறும் வண்ணம் அமைத்த ஓளி நெறியானது என்னவென்றால் தெய்வீகச் சிவநெறி சன்மார்க்கம். அதைச் சேர்ந்து உய்வு பெறுமாறு இந்த உலகில் உள்ளவர்க்கு அமைத்தான் சிவன்.

1479. சன்மார்க்கம் தரிசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடி நிலையை சிரசின்மீது சூடவுமான குருபத்தி செய்யும். மெய்யன்பர்க்கு முத்தியை அடையத் துணையாகும்.

1480. சிவன் அகண்ட பரந்த பொருள். இதை அறியாதவர் தெளிவு இல்லாதவர். தெளிவு இல்லாதவராதலால் சீவனின் பரவிய ஆற்றலை அடைய மாட்டார். சீவன் பரவியுள்ளமை ஆகாதபோது சிவம் ஆகமாட்டார். அதலால் தெளிவு இல்லாதார் பிறவி முடிவு பெற மாட்டாது பெருகி நிற்கும்.

1481. ஆன்மாவான தான் சிவமேயாகித் தன்னிடம் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்களை அகற்றி மெளனம் என்ற பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும் கு/ற்றம் இல்லாது ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும் தான் சிவமாய்த் தன்னிலை கெடல் சன்மார்க்கத்தால் ஆகும்.

1482. சன்மார்க்க நெறியினர் முகமே சிவம் உறையும் இருப்பிடம். சன்மார்க்கத்தாரின் இடமே கோவில். சன்மார்க்கத்தாரின் கூட்டத்தைக் காண்பது சிவ தரிசனம்.இதை எம் மார்க்கத்தில் உள்ளவரிடம் கூறுவேன்.

1483. சன்மார்க்க சாதனம் என்பது சிவத்தை அறியும் ஞானம், இம்மார்க்கம் தவிர மற்றச் சாதனம் அறிவில்லாதவர்க்குரியது. தீமை அளிக்கும் மார்க்கத்தைவிட துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவரின் சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறி.

1484. சன்மார்க்கத்தை அடைய வரும் பயிற்சியாளர் ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாகும். சிவத்துடன் பொருந்தும் நல்ல மார்க்கமே அவர்க்கு வேண்டுவதாகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் சொல்கின்றது.

1485. தனக்கு மாறான பாசத்தையும் பாசத்தால் கருமத்தையும் கன்மம் காரணமாக வரும் பிறப்பு இறப்புகளாகிய அவத்தைக்ளையும் அவத்தைகளுக்கு காரணமான பிரகிருதியையும் இவற்றோடு பொருந்தி இதை அறியும் ஞானத்தையும் இவற்றின் வேறுபாடுகளையும் ஆன்மாவான தன்னையும் கண்டவர் சன்மார்க்கத்தார் ஆவார்.

1486. ஆன்மாவைப் பாசத்தினின்று பிரித்தும் பதியுடன் கூட்டிக் கனியாத மனத்தை நன்றாக கனிய வைத்து கெடாத மெய்ப் பொருள் தோற்றத்துக்குள் சேர்ந்து அசையாத வண்ணம் சமாதியில் கூடியிருத்தலே சன்மார்க்கம்.

1487. சன்மார்க்கத்தில் உள்ளவ்ர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமான மார்க்கமே அல்லது வேறு ஒன்றும் இல்லை. சன்மார்க்கத்தைப் பொருந்தாதவர் மார்க்கம் யோக சித்திகளைத் தரும் நெறியாகும்.

#####

திங்கட்கிழமை, 11 May 2020 11:49

ஞானம்!

Written by

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

ஞானம்!

1467. ஞானத்தைவிடச் சிறந்த அறநெறி இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமய நெறியும் நல்லது ஆகாது. ஞானத்திற்குப் புறம்பானவை வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் மிக்கு விளங்குபவரே மக்களீல் மேலானவர்.

1468. நாதமும் நாதத்தின் வடிவான மனமும் மனம் தரும் புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் இம்மூன்றும் சிந்திக்கின்ற செயலும் அதனால் உண்டாகும் நாதமும் நாதம் கடந்த ஞானியர் அடைந்த நெறியே ஞானம்.

1469. சிவன் சித்தத்தில் அமைந்துள்ள சங்கற்ப உலகமும் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானியர். இத்தகைய ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும் சிவத்தை அறிய உதவும்.

1470. முரணபாடு இல்லாத ஜானத்தை தெளிந்து உணர்ந்தார்க்குச் சார்ந்திருக்கும் காவலான இடம் அழியாத பிரம்ம பொருள் ஆகும். அசைவன அசையாதன என இறைவனாய்க் காணப்படும் உலகம் மேலான ஞானம் இருக்கும் ஒழுக்கம் ஆகியன தரும்.

1471. அறிவு அடக்கம் அன்பு என்ற மூன்றும் என்றும் நீங்கா நகரில் கோவில் கொள்ளும் பெருமான் தான் உருக்கொண்ட நிலையையும் நல்ல குணங்களையும் எண்ணித் திருவடியை நீங்காத நெறியை உடைய ஞானியர்க்கு சிந்தனையில் நீர் அருவியினது சலசலப்பைப் போல் சிரசில் அமையும்.

1472. ஞானம் முதிர்ந்து எழுகின்ற நிலையில் சிந்தனையில் அருவியாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எவ்விடத்தும் இளம்பிறை ஒளியைத் தரிசித்து உடலின் இழிதன்மையை உணர்வர் உடலைக் கடந்து ஒளிமிக்க சோதி இருக்கும்.

1473. ஞானியர்க்கு இயல்பில் பொருந்தியவை ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை ஞானத்தில் சரியை என்ற நான்கும். அனுபவத்தில் முதிர்ந்து பிரணவ சித்தியான மௌன ஞானிக்கு இவை ஏதும் தேவையிலை. மகிழ்வை அடைந்து சந்திரமண்டலம் ஒளியில் இருக்கும் சத்தி ஞானத்தை தந்துவிடும். அவர்களைப் போலால்லாது ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்பவருக்கு சரியையும் கிரியையும் உரியனவாகும்.

1474. ஞானிக்கு ஞானம் முதலிய நான்கு நிலைகள். ஞானத்தில் ஜானம் என்பது நான் என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் இல்லாமையாகும். ஞானத்தில் யோகமாவது நாதாந்த்தில் பேரொளியைக் காண்பதாகும். ஞானத்தில் கிரியை என்பது நல்ல வீடு பேற்றை விரும்புதலாகும்.

1475. ஞானத்தில் ஞானம் முதலிய நான்கையும் பெற்றவன் நல்வினையினால் அடையும் நற்பயனையும் பாவத்தால் வரும் தீய பயனையும் கடந்து நிற்பான். பெருமையுடைய நேயத்தின் ஞான் வரம்பைக் கடந்தவன் மலக்குற்றங்கள் அற்றவனும் சிவமுத்தனும் சித்தனும் ஆவான்.

1476. ஞானத்தில் சமய தீட்சை என்பது மெய்ப் பொருளை விரும்பும் ஞானி மெய்ப் பொருளைப் போல் தானும் ஒளி உருவினன் என உணர்த்துவதாகும்.

#####

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27437809
All
27437809
Your IP: 3.236.83.14
2024-06-24 22:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg