Print this page
செவ்வாய்க்கிழமை, 12 May 2020 17:05

தாசமார்க்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!

#####

தாசமார்க்கம்!

1502. செய்தற்கு எளியனவான கோவில் விளக்கு ஏற்றுதல், மலர் பறித்தல், அன்புடன் மொழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்தல், பூசைக் காலங்க்ளில் மணியடித்தல் திருமஞ்சன் நீர் சேர்த்தல் முதலிய திருக்கோவில் பணிகளைச் செய்வது தொண்டு நெறியாகும்.

1503. ஆதி பரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயம் கொண்டு துணிவு இல்லாது நீங்குவர் சிலர். இது பரம் பொருள். இதை வழிபடுதலே முறை என வண்ங்கியவர் எவ்விடத்தும் இல்லை. உமக்கு அமைந்துள்ள தர்ம நியதிப்படி பற்று இருக்கின்றாதோ அங்குப் போய் இறைவனை விரும்பி வழிபடுக. அதுவே இது என்ற் ஐயத்தை போக்கும் வழி.

1504. சந்திரனால் உண்டாகும் கீழான உணர்ச்சிகளை அடக்கி அறிவால் நிகழும் ஆராய்ச்சிக்குப்பின் திட ஞானம் அடைந்து எங்கும் நிறைந்த திருவடியை எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பேன். தேவ தேவனான சிவபெருமானை நாள்தோறும் வணங்குவேன். இப்படி வழிபடுவதில் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவைப் பெற்றது.

1505. தேவர்கள் ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சித்து துதிப்பர். அவர்களை விடுத்து மனம் மகிழ்ந்து திருவடியை உள்ளத்தில் கொண்டு தொழுது கண் போன்றவன் என இறைவனை எண்ணி நிற்கும் அடியார்க்கு நாத வடிவினனான இறைவன் அவர்தம் பேரன்பிற்கு ஆட்பட்டு வெளிப்பட்டு அருள்வான்.

1506. இறைவன் புகழைப் படித்தாலும் பூசை செய்தாலும் மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் கல் வீழ்ந்த பாசிக்குளம்போன்று தெளியாதது மனம். ஆகவே குற்றம் இல்லாத பேரொளியான நீலகண்டப் பெருமானை அன்பால் இடைவிடாது உள்ளத்தில் இருத்த நினைவு இல்லாதவர் ஆவர்.

#####

Read 1656 times Last modified on வியாழக்கிழமை, 14 May 2020 16:43
Login to post comments