Print this page
வியாழக்கிழமை, 14 May 2020 16:31

உட்சமயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

#####

உட்சமயம்!

1557. வானவரையும் சீவர்களாகிய எம்மையும் பழமையான தனு காரணங்களை அளித்து உலகத்தில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன் மிகப் பழமையானவன். அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியை நாட அவற்றில் கலந்து நின்று இருப்பான். அவனே முதல்வன்.

1558. ஒரு ஊருக்குச் சொல்ல ஆறு வழிகள் இருகின்றன. அதுபோல் ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய உள்ளன. இது ந்ன்று இது தீது என உரைப்பவர்கள் மலையைப் பார்த்து குரைக்கும் நாயினைப் போன்றவர்கள்.

1559. பெருமையுடைய சைவ சமய்த்தில் ஒப்பில்லாத தலைவனை உயிர்களின் உயிர் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராகிய இறைவனை உண்மை உணர்வு பெற்ற்வர்க்கு அன்பானவனை இன்பம் தரும் உலகத்து முதல்வனை வ்ந்து கூடி உய்வை அடையுங்கள்.

1560. சிவபெருமான் உயிர்கள் உய்தி பெரும் பொருட்டு அமைக்கப்பட்ட நெறியில் கடவுளாகிய அவன் உண்டாக்கிய வழியில் சென்று சீவனே சிவன் என்று உணர வல்லார்க்கு அந்தந்த சமயத்திலும் உள்ள அப்பொருமான் அங்கு தோன்றுவது அதன் கடமையாகும்..

1561. சீவர்கள் உய்தி அடையும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆறு சமய உச்சிக்கு சீவர்கள் தாமாகச் செல்லும், வழிதான் இல்லை. அவர் செய்த புண்ணியமே அவ்வழியை அங்கு அமைப்பதாகும். சீவர்கள் மேல் ஏறிப் போகத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.

1562. சிவத்தை அடைவதற்கு வழியாவதை அறிந்தவனான நானும் வேறு சில நெறிகளைத் தேடி திரிந்த அக்காலத்திலும் உண்மை மிக்கநெறியில் எண்ணம் என்ற கடலை நீந்தி ஏறுவதற்கு மேனமையான் நெறியாய் நின்றது நிகரற்ற சுடரே ஆகும்.

1563. ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளியப்பட்ட சிவநெறி அயல் சமயத்தாரார் ஆராய்ந்து மீண்டும் வந்து சேர்ந்த பெரு நெறியாகும். அகச்சமய்த்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அனுபவம் பெற அந்த அந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளிலே நின்று மீண்டும் வந்துபொருந்தி உய்வு பெருகின்ற நெறியாகும்.

1564. புறப்பொருளில் சென்ற மனத்தை அகப்பொருளான சிவத்தில் பொருந்துமாறு செய்யுங்கள். அதற்காக மூலாதாரத்திலிருந்து மேல் நொக்கிப் படரும் சி காரத்தால் உணர்தப்படும் திருவைந்தெழுத்தை சொல்லுங்கள். சிவநெறியைப் பொருந்தி இந்தச் சாதனையை செய்து வாருங்கள். நெற்றிக்கு முன்னே சிவந்த நிறம் பொருந்திய ஒலி தோன்றும்.

1565. யோகப் பயிற்சியாளருக்கு மின்னல் போன்ற ஒளியில் வெளிப்படுபவனும் அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயிலே வெளிப்படுபவனும் எந்த உருவில் நினைத்தாலும் அந்த உருவில் வெளிப்படுபவனும் ஆன்\வனைப் பரஞானத்தால் ஒளிமயமாகக் காணின் அதுவே அரநெறி சைவநெறியாம்.

1566. ஆரய்ந்து ஒளி நெறியே சிறந்தது என்று தெளிவு கொள்ளாத உயிரின் ஆற்றல் பலவாகும். அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன் நெறி புகுந்து அறிபவர் சிவனது திருவடியை பற்றி நின்று பொருந்தி உணர்வது ஒப்பில்லாத இன்பம் ஆகும்.

1567. சைவ சமய்த்தின் ஒப்பற்ற தலைவன் சிவபெருமான் அவன் உயிர்களுக்கு வகுத்துத்தந்த ஒளி நெறி ஒன்று உண்டு இது தெய்வத்தன்மை பொருந்திய சிவநெறியான சன்மார்க்கம் அதைச் சேர்ந்து உய்வு பெறுவதன் பொருட்டாக உலக மக்களுக்கு சிவன் அளித்தது.

1568. இந்த தவம் நல்லது. அந்த தவம் நல்லது என எண்ணும் பேதஞானம் படைத்த அறிவற்றவரைக் கண்டால் நகைக்கத் தோன்றுகிறது. எந்த த்வமாக இருந்தால் என்ன வேறுபாடு அற்று நின்று உண்ர்வார் முத்தியான ஊரை அடையக்கூடும்.

1569. சதாசிவம் ஐந்து முகங்களுடன் பொருந்தி எல்லோரிடமும் இருப்பான். அப்பெருமானுக்கு தத்புருடம், அகோரம், சத்தியோதம், வாமதேவம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்ற ஆறாவது முகமும் உண்டு. சிவத்தை அறிந்து வழிபடுபவர்களுகு சதாசிவத்தை போல் ஆறு முகங்களும் ஒன்றாய் இருக்கும். சிவத்தை அறிந்து வழிபடாதபோது அதோமுகம் கீழ் நோக்கி இருக்கும்.

1570. முதல்வனான சிவன் உலகு முழுவதும் கலந்து விளங்குவான். அலை கடல் சூழ் உலகு உயிர்களுமாய் நிற்கும் சிவத்துடன் பிரிப்பில்லாது நிற்கும் பராசத்தி ஆதியில் உலக் உற்பத்திக்கு உபகாரியாகவும் இறுதியில் ஒடுக்கிக் கொள்பவளாகவும் இருக்கின்றாள்.

1571. தன்னறிவினால் முனைந்து ஆராயந்து அறிபவர்கள் தேவர்கள், கந்தருவர் முதலானோர். ஆராய்ச்சியில் அறிய இயலாத இருக்கும் சைவத்தை திருவடியை வழிபடும் பேறு பெற்றாதால் நான் ஆராய்ந்து அறிந்தேன், அதனால் இப்பிறவியிலே மறுமை இன்பத்தை அடைந்தேன்.

1572. உடலைப் பெற்றதன் பய்ன் இறைவனை அறிந்து வழிபடுவதே என்பதை மக்கள் அறியவில்லை. அறிய இயலாமல் ஒன்றாக இருக்கும் வானத்தை ஆறு ஆதாரங்களில் இயங்கும்படி வைத்து அறிய இய்லாத வகையாய் ஆறு கோசங்களில் அனுபவம் அடைய்ச் செய்து வான் மயமான சிவம் அறியமுடியாத அண்டமாய் இருக்கின்?றது.

#####

Read 1681 times
Login to post comments