gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும்

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

Written by

7.எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

பிறவிஎண்-7

மார்ச்15முதல் ஏப்ரல்14வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 7, 16, 25 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-7

எண்ணின் அதிபதி-

இரண்டு அதிபதிகள், சனீஸ்வரபகவான், கேதுபகவான்.

அதிர்ஷ்ட நாட்கள்-

7, 16, 25

அதிர்ஷ்ட கிழமைகள்-

ஞாயிறு, திங்கள்

ஒற்றுமையான எண்கள் –

ஏழு எண்ணுள்ளவர்களுக்கு 1, 2, எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,2,7 வரக்கூடிய 1,2,7,10,11,16,19,20,28,29 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

27 லிருந்து முன்னேற்றம். 45 லிருந்து 54 வரை வெற்றிகளும் வெகுமதிகளும் ஏற்படும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,4 பகை-இல்லை சமம்-3,6,8,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

தெய்வீகத்தன்மையும் நேர்மையையும் அடிப்படையாக கொண்டவர்கள். மதிப்பிற்குரிய பெருமக்களாக இருப்பார்கள். கவி, சங்கீதம் பாடுதல், பிரமிக்கத்தக்க எழுதும் திறமை உடையவர்கள். ரகசிய கலைகளில் நல்ல தேர்ச்சிபெறும் வாய்ப்பைப் பெறுவர். யோகிகளாகவும், சன்னியாசிகளாகவும் ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பொதுஜன விரோதியாகவும் மாறவாய்ப்புண்டு. நேர்மையான எல்லா தொழிலும் இவர்களுக்கு ஏற்றது. மற்றவர்களின் உதவியில்லா சொந்த முயற்சியே இவர்களுக்கு வெற்றி தருபவை. அதிக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். விரோதிகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அஞ்சாமை புகழ் சேர்க்கும். உரிமைக்காக போராடுவர். வாழ்நாளில் இவர்களின் சாதனைகள் உணரப்படாமல் இறந்தபின் போற்றிப் புகழப்படுவார்கள். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

மலச்சிக்கல், வாதநோய்கள் ஏற்படும். தோல்வியாதிகளும் ஏற்படலாம்.

உடை-

வெண்மை சிறந்தது. லேசான மஞ்சள், வெளிர்பச்சை வெளிர் நீலம் நன்மைகளைத் தரும்.

 

பெயர் எண் ஏழு- பலன்கள்

தன் முயற்சியால் செய்யும் தோழில் சிறப்பானது. சித்திரத்தொழில் செய்வோருக்கு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் முடிவில் வெற்றியையும் சிறப்பையும் பெறுவர். பெரிய தனவந்தர் குடும்பத்தில் பிறந்திருக்கமாட்டார். ஆரம்பமுதல் தன் சுய முயற்சியில் முன்னேறுவார். நண்பர்கள் பெற்றோர்கள் உதவி கிடைக்காது. அப்படி ஆதரவு அளிப்பவர்கள் அவர்கள் செய்யும் உதவிக்கு பலமடங்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். வாணிபத்தில் ஈடுபட்டால் உள்நாடு வெளிநாடு அளவில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வர். பிறரை வசப்படுத்துவதில் தனித்திறமை பெற்றவர்.  காரியங்கள் வெற்றியடைய தன் முழு பலத்தையும் உபயோகிப்பார்கள். தம்மிடையே உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொள்வர். ஒரு விசயம் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் தன் மனத்திற்கு பிடித்திருந்தால்தான் ஒப்புக்கொள்வார். சிந்தனை சிற்பிகள். தனிமையை விரும்புவார்கள். கவலையையும் துயரத்தையும் தவிர்க்கவும். மன நிம்மதி இருந்தால்தான் வேலையில் இவர்களால் கவனம் செலுத்தமுடியும்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 2, 11, 20, 29 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். மற்ற தேதி, மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் இரண்டு வரும் தினங்கள் நன்மை தரும். மேலும் 1,10,19,28 சாதகமான தேதிகள். இந்த தேதிகள் ஞாயிறு திங்கள் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஏழிற்கு உரிய திசை- தென்மேற்கு. கிழமை-ஞாயிறு, செவ்வாய்

அதிர்ஷ்ட நவரத்தினம்-

வைடூரியம்- கருஞ்சிவப்பு வைடூரியம் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியது. பிரகாசமாகவும், கடினமாகவும், கணமாகவும் இருக்கும். அணிபவர் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கெட்ட காரியங்களைச் செய்யக்கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் கடும் நாசம் ஏற்படும். பரிசுத்தமானவர்களுக்கு எல்லா நன்மைகளையும் பெறுவர். ஆரோக்யம் பெறுவர். பணம் தட்டுப்பாடு இருக்காது. ஆயுள் நீடிக்கும். அடங்காத மனைவியும் அடங்கி நடப்பர். மகிழ்வு அடைவர்.

உடல் பாதிப்பு வயது-

தோல் சம்பந்தமான கட்டிகள், சொறி, சிரங்கு, அலர்ஜி ஆகியவை வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கீரை மற்றும் பழங்கள் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் இரண்டு வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 2,11,20,29,38,47,56,65,74,83,92,101 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17157252
All
17157252
Your IP: 162.158.78.218
2020-06-02 13:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg