gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

எண் கணிதம்

Written by

ஓம்சிவாயநமக!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மணியாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

0=0=0=0=0=0

எண்கணிதம்

எல்லாவற்றிற்கும் வேதங்கள் அடிப்படை. ஆகமங்கள் அதனின் விரிவு. அதனால் பயனாவது 64 கலைகளாகும். இந்தக் கலைகளுக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்புகளை அளவிடமுடியாது. அதில் ஒன்று சோதிடக்கலை. அதில் ஒரு பகுதியாக எண்கணித சோதிடம் (Numerology) இருக்கின்றது. தனித்தன்மைவாய்ந்த எழுத்துக்களைப்போல் எண்களுக்கும் உயிர்சக்தி இருக்கின்றது. இந்த நாளில் பிறந்தவர்க்கு இன்ன எண் முக்கியமானது என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எண் எது எனத்தெரிந்து கொண்டால் அது பொருந்துகிறதா என நீங்களே சரி பார்க்கலாம்.

உலகின் மனிதசமுதாயத்தின் வளர்ச்சி, உணர்வு, அறிவு முதலிய செயல்களுக்கு காரணம் என இந்துக்கள் நம்பும் நவகோள்களும் அதன் எண்களும் குணச்சிறப்பையும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் ஓர் நிரந்தரக் காலக்கண்ணாடி எண்கணிதமாகும். மனித குலத்தின் எண்ணம் சொல் செயல் மூன்றிற்கும் காரணம் நவகோள்களும் அதன் எண்களும் ஆகும். இதை நம்புவர்களும், நம்பாதவர்களும் உண்டு. உண்மைகளை எவரும் முற்றிலும் தெரிந்தவரில்லை. ஏனெனில் அரிய பெரிய உண்மைகள் ஏராளமாக நிறைந்துள்ளன. அதில் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற முறையில் இந்தப் பகுதியில் அவரவர் தத்தம் எண்ணை அறிந்து அதன் பலன்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்ற அடிப்படையில் பிறவி எண், முக்கியமான ஆண்டுகள், கெட்ட எண்கள், அதிர்ஷ்ட எண்கள்,கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள், கலப்பு பெயர் எண்கள், தினப்பலன்கள் மற்றும் பிறவி எண், பெயர் எண்களுக்கு பலன்களைஏழுபரம்பரை ஜோதிடர் நண்பர். மா. முத்துசாமி அவர்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்வியலில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உந்துதலில் இயக்கப்பட்டு வருகின்றோம். நாம் எதனால் இயக்கப்பட்டு வருகின்றோம் என்பதை தெரிந்துகொள்ள எண்கணிதம் உதவிபுரியும். மனிதனின் நடத்தை, எண்ணம், எதிர்நோக்கம், உணர்வு, செயல் ஆகியவற்றிற்கு காரணமான கோள்களின் உறவை அது விளக்குகின்றது. இதன் சிறப்பு என்ன வென்றால் யார் துணையுமின்று நீங்களே தமக்குத்தாமே பலன்களைக் கண்டறியலாம். முன்னதாகப் பலன்களைக் கண்டறிவதால் தீமைகளை இயன்றவரை நீக்கவும், நன்மைகளை மேலும் நன்மையாக்கவும் செயல் பட்டு வெற்றி காணலாம்.

இந்த எண் கணிதத்திற்கு தேவையானவை நான்கு. அவை உங்கள் பெயர், பிறந்ததேதி, மாதம், வருடம், ஆகியவை மட்டுமே. இதற்கு ஆங்கிலத் தேதியும் ஆங்கில எழுத்துக்களுமே சரியா பொருந்தும். ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களே மிக முக்கியமானது. மற்ற எண்கள் எல்லாம் அதன் கூட்டுத்தொகை இந்த ஒன்பதினுள் அடங்கும். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை. நம் முன்னோர்கள் ஒன்பது எனும் எண்ணே கணிதத்தில் முடிவான எண்ணாக இருப்பதை அறிந்து நவக்கிரகங்கள், நவதான்யங்கள், நவபாஷாணங்கள் என ஒன்பதாக பிரித்துள்ளனர். ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்றாலும் 108 அல்லது 1008 என கூட்டுத்தொகை ஒன்பது வருமாறு உபயோகித்தனர்.

ஒருவரின் பிறந்த தேதி உதாரணமாக 27—05-1945 என எடுத்துக் கொண்டால் அதை 2+7+0+5+ 1+9+4+5=33. அதாவது அவருடைய அதிர்ஷ்ட எண் 3+3= 6. இது போன்றே ஒவ்வொருவரும் கணக்கிட்டு அவரவரது எண்ணைக் கண்டு உள்ளே அந்த எண்ணிற்குரிய பலன் கண்டறிந்து கொள்ளவும்.

வாழ்க்கையில் மாற்றங்கள்- பிறவி எண் (பிறவி தேதி) வேறுமுறை-

பிறந்த தேதியைக் கொண்டாடுவதால் சென்ற ஆண்டின் வெற்றி தோல்விகளின் நன்மை தீமைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இனிவரும் ஆண்டில் சுபிட்சம் வேண்டலாம். கொண்டாட்டத்தினால் ஆயுள் நீடிக்கும். புகழ் மேலோங்கும். இறைவனை அன்றைய தினம் வணங்குவது மேலான பலன்களைத்தரும். பிறந்த தினத்தை ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுவதை விட ஒவ்வொரு மாதமும் பிறந்த தேதியன்று ஆலயம் சென்று வழிபடல் சிறப்பாகும் என்பது குருஸ்ரீ பகோராயின் கருத்தாகும்.

எந்த மாதம் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி முக்கியமானது. அப்படி பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு பிறந்த மாதம் தெரிந்தால் கீழ்க்காணும் முறையில் பிறவி எண்ணை தெரிந்து அதன் பலாபலன்களை அறியலாம்.

ஜனவரி15முதல் பிப்ரவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-8

பிப்ரவரி15முதல் மார்ச்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-4

மார்ச்15முதல் ஏப்ரல்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-7

ஏப்ரல்15முதல் மே14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

மே15முதல் ஜூன்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

ஜூன்15முதல் ஜூலை14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

ஜூலை15முதல் ஆகஸ்ட்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-2

ஆகஸ்ட்15முதல் செப்டம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-1

செப்டம்பர்15முதல் அக்டோபர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

அக்டோபர்15முதல் நவம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

நவம்பர்15முதல் டிசம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

டிசம்பர்15முதல் ஜனவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-3

முன்பு பிறந்த தேதி எண், மாத எண், வருட எண், ஆகியவற்றைக் கூட்டி கலப்பு எண்ணை ஒன்றைப் படையாக்கி பலன் பார்த்தோம். இதில் பிறவி எண்ணைக் கொண்டு வாழ்வின் மற்ற பலன்களை அறிவோம். பொதுவாக வாழ்வில் மாற்றம் நன்மையாகவும் தீமையாகவும் இருப்பதுண்டு. முன்பே தெரிந்தால் மாற்றங்களை சந்திக்க நாம் தயாராக இருக்க முடியும்.

ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் - 1945+1+9+4+5 = 1964 வரும். அதனுடன் பிறந்த தேதி மாதம் இரண்டையும் கூட்டினால் – 1964+2+7+5 = 1978 வரும். அதனுடன் வருடத்தைக் கூட்ட- 1978+45 = 2013. பலன் என்ன வென்றால் 1945 ம்வருடம் பிறந்தவர்க்கு 1964ல் ஒரு மாற்றமும் 1978 ல் ஒரு மாற்றமும், 2013 ல் ஒரு மாற்றமும் ஏற்படவேண்டும். முதல் இரண்டு மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும் மூன்றாவது பெரிய மாற்றமாக இருக்கும்.

முக்கியமான ஆண்டுகள்.

ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் 1+9+4+5=19 வரும் .இதை பிறந்த வருடத்துடன் மீண்டும் மீண்டும் கூட்டினால் 1945+19=1964+19=1983+19=2002+19=2021. அதாவது 1964, 1983, 2002, 2021 ஆகிய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

நம்பிக்கையில் கெட்ட எண்கள் 3. 13, 8, 18

எண் மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.ஒரு வீட்டில் திருமணமாகாத 3 ஆண்கள் இருக்கக்கூடாது

2.விதைவைகள் 3 பேர் ஒரே வீட்டில் இருக்கலாகாது.

3.இரண்டு மனைவிகள் இறந்த ஒருவர் 3 வது திருமணம் செய்யக் கூடாது. மீறி திருமணம் செய்ய விரும்பினால் வாழைமர சடங்குகள் செய்து வெட்டி புதைத்து கருமம் செய்தபின் திருமணம் செய்யலாம்.

4.வெளியில் புறப்பட்டுச் செல்லும்போது 3 பேராகப் புறப்படக்கூடாது.

5.ஒரு தீக்குச்சியைவைத்து 3 முறை பற்ற வைக்கக் கூடாது.

எண் பதின்மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.வெளியூர் பயணம் 13ம் தேதி புறப்படக்கூடாது.

2.எந்த ஒரு புது வேலையையும் 13ம் தேதியில் ஆரம்பிக்கக்கூடாது.

3.திருமண மண்டபத்தில் 13ம் இடத்தில் அமரவேண்டாம்.

எண் எட்டு, பதினெட்டு ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.அஷ்டமிதிதி வளர்பிறை, தேய்பிறை 8ம் நாள் நல்ல காரியம் செய்யக் கூடாது.

2.ஒருவருடைய லக்னம் அல்லது ராசிக்கு 8ம் இடத்திற்கு சனி, செவ்வாய், குரு வந்தால் தீமை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்-

1,2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97 ஆகிய எண்களை அதே எண்ணாலும் ஒன்றாலும் மட்டுமே வகுக்க முடியும். இந்த எண்கள் மிக்க அதிர்ஷ்ட எண்களாகும். குலுக்குச் சிட்டில் இருந்தால் வெற்றியைத் தருபவை.

கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள்

எண்10- அதிர்ஷ்ட சக்கரம், மரியாதை புகழ் தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும். பெரிய அளவில் விளம்பரமாகும்.

எண்11- அபாயகரமானது, மறைமுகமான அபாயம், நம்பிக்கைத் துரோகம் ஆகியன குறிக்கும். பெரிய சங்கடங்களைச் சமாளிக்க வேண்டும்.

எண்12- சஞ்சலம், மனம் கலக்கம், சதியால் ஏமாந்தவன் பலியிடப்படுதலைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்13- சாவைக் குறிக்கும். திட்டம் எண்ணான இது இடம் ஆகியவற்றின் மாறுதலைக் குறிக்கும். அதிகாரம் தவறான வழியில் செலுத்தப்பட்டால் தனக்கு அழிவு, எதிர்பாரா கெடுதல் நேரிடும்.

எண்14- இயற்கையின் சீற்றத்தினால் விபத்தும் நீர் நெருப்பு, காற்றால் ஆபத்தும் ஏற்படும். பணாம் சூதாட்டம், வியாபார மாறுதலுக்கு நல்ல எண். மற்றவர்களின் முட்டாள் தனத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்15- காரியம் கைகூட மந்திர வித்தைகளைக் கையாள்வர். நல்ல அதிர்ஷ்ட எண்களுடன் சேர்ந்தால் பலம் பொருந்திய நன்மை கிடைக்கும். 4, 8 உடன் சேர்ந்தால் எதற்கும் துணிந்து சுயநலமாக செயல்படுவர். கலைஞர்கள், இசைவாணர்களுடன் தொடர்பு இருக்கும். சிற்றின்ப ஆசை மிகுந்தவர்கள்

எண்16- கெடுதல், அபாயம் திட்டம் தோல்வியடைதல் குறிக்கும் எதிர்கால திட்டங்களில் இது வந்தால் தவிர்க்கவும்

எண்17- அன்பிற்கும் சமாதானத்திற்கும் அடையாளம். தடைகள், சோதனைகள் வென்று வாழ்க்கை நடத்துவர். அமரத்துவம் பெற்றபின்னும் பெயர் நிலைத்து நிற்கும். பிறந்த எண் 8 க்கு எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

எண்18- ஆத்ம சக்தியை பொருளாதார வாழ்க்கையை கெடுக்கும். சண்டை சச்சரவுகள் வரும். சமுதாயப்புரட்சிகள், கலகங்கள் ஏற்படுத்தும். எதிர்கால பொருத்தத்தில் வந்தால் கவனமுடன் இருக்கவும்.

எண்19- இது சூரியனைக் குறிக்கும். மகிழ்ச்சி, வெற்றி, புகழ் மதிப்பு ஆகியன குறிக்கும்.

எண்20- தீர்ப்பை குறிக்கும். புதிய கருத்துக்கள், திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றின் எழுச்சியை சொல்லும் எதிர்காலத்திற்கு இது நல்ல எண் அல்ல. பொதுவான வாழ்க்கையின் உயர்வுக்கு உகந்ததல்ல.

எண்21- புகழ் வெற்றி உயர்வு ஆகியவை போரட்டத்திற்கு பின் கிடைக்கும். நல்ல எண்ணாகும்.

எண்22- கனவு காணும் ஒருவன் அபாயம் வரும்போது விழித்துக் கொள்வான். தவறான யோசனைகளைக் கேட்பதினால் துயரம் வரும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்23- உயர்ந்தோர் அதிகாரத்தின் உதவியும் நட்பும் கிடைக்கும். வெற்றியும் செல்வமும் தரும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்24- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்25- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்26- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்27- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்28- எல்லா திறமைகளையும் பெற்றிருந்தாலும் சேமிப்பு இல்லை என்றால் பின்னாளில் வறுமையில் கஷ்டம் ஏற்படும். மற்றவர்களை நம்புவதாலும் எதிரிகளாலும் சட்டத்தினால் ஏற்படும் அபாயங்களைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்29- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்30- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்31- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்32- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்33- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்34- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்35- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்36- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்37- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்38- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்39- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்40- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்41- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்

எண்42- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்43- புரட்சி, வீழ்ச்சியை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல

எண்44- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்45- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்46- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்47- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்48- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்49- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்50- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்51- எந்த துறையிலும் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். இராணுவத்தில் நல்ல வெற்றியடைவர். எதிரி ஆபத்தால் கொலை செய்ய வாய்ப்புண்டு.

எண்52- புரட்சி, வீழ்ச்சி யை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

கலப்பு பெயர் எண்கள்

ஒருவர் எப்பெயரால் எல்லோராலும் அழைக்கப் படுகின்றார்களோ அப்பெயரையே எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக பெயர் கோவிந்தராஜன் என்றிருந்தால் எப்படிக் கையெழுத்திடுகிறாரோ அப்படியே எடுக்க வேண்டும். கோவிந்தராசன் என எடுக்கக்கூடாது. தந்தை பெயர் பழனியப்பன் என்றிருந்தால் ப. எனச் சேர்த்திருந்தாலும் அதற்குரிய ஆங்கில எழுத்தைக் எடுக்க வேண்டும். மேலும் சுவாமி என்பதை SWAMY எனவும் SAMY எனவும் எழுதுவர். அதில் வரும் ஒரு எழுத்து பலனை மாற்றக் கூடியது. அதனால் எப்படி கையெழுத்து போடுகின்றார்களோ அப்படியே எடுத்துக் கொள்ளவும்.

ஆங்கில எழுத்துக்களுக்குச் சரியான மதிப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

A-1, B-2, C-3, D-4, E-5, F-8, G-3, H-5, I-1, J-1, K-2, L-3, M-4, N-5, O-7, P-8, Q-1, R-2, S-3, T-4, U-6, V-6, W-6, X-5, Y-1, Z-7 அல்லது

1--A,I,J,Q,Y; 2--B,K,R; 3-C,G,L,S; 4--D,M,T; 5--E,H,N,X; 6--U,V,W; 7--O,Z; 8--F,P என்று வைத்துக் கொண்டு உங்கள் பெயருக்கு உள்ள எழுத்துக்களுக்குச் சரியான எண்களை எழுதிக் கொள்ளவும். P.GOVINDARAJAN என்பதற்கு P-8, G-3, O-7, V-6, I-1, N-5, D-4, A-1, R-2, A-1, J-1, A-1, N-5 என்று எழுதி 8+3+7+6+1+5+4+1+2+1+1+1+5=45=9 கூட்டவும். 9 வரும். பிறந்த எண்ணும் பெயர் எண்ணும் ஒன்றாக வந்தால் நன்மை. பெயர் எண்ணை மாற்ற விரும்பினால் எந்த எண் என்று கணக்கிட்டு பெயரில் தேவைப்படும் இடத்தில் A வை சேர்த்துக்கொண்டு கணக்கிடவும். அல்லது முன்னால் ஊர், தந்தையின் தகப்பனார் முதல் எழுத்தைச் சேர்த்து கணக்கிடலாம். அதன்பின் அவ்வாறே பெயரைச் சொல்லி கையெழுத்திடவேண்டும். அதற்குரிய மாற்றங்களை அரசாங்கத்திற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எழுத்துக்களைச் சேர்த்து அதிர்ஷ்ட எண் வராதவர்கள் வேறு பெயருக்கு எழுத்துக்களைக் கணக்கிட்டு அந்தபெயரை மாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் எண் தான் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்ட எண். இது எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமானது. வீடு, கார், டெலிபோன், வியாபார அலுவலக எண் ஆகியன இந்த எண்ணில் அமைந்தால் நன்மை பயக்கும். கலப்பெண்ணின் பலனும் நல்லதாக அமையவேண்டும்.

தினப்பலன்கள்-

ஒரு காரியத்தை ஆரம்பிக்க அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக்கொண்டே அந்த நாளின் பலன் அறியலாம். அதற்கு அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக் தனித்தனியே கூட்டி பின் மொத்தமாக கூட்டி வரும் எண்ணுடன் பெயர் எண்ணையும் கூட்டி ஒற்றைபடையாக இருந்தால் வெற்றியடையும். இரட்டைப்படையானால் தாமதம் அடையும். அதைக் கீழ்கண்டவாறு அறியவும்.

நீங்கள் ஒரு காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1945 மே மாதம் 27ம்தேதி வெள்ளிக்கிழமை காலை1030மணி என வைத்துக்கொண்டால் 1030மணியை 10ஐ தாண்டியதால் 11எனவும். வெள்ளிக்கிழமை வாரத்தின் 6வது நாள் பெயர்எண்- 9 என கொள்ளவும். அதாவது 1945 வருடத்துடன், 5 மாதம்+ 27 தேதி+ 6 வெள்ளி+ 11 மணி+ பெயர் எண் 9 கூட்டினால் 1945+5+27+6+11+9=2003=5. 5 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக.

உதாரணம்-காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1971 மேமாதம் 15ம்தேதி புதன்கிழமை காலை1130மணி என வைத்துக்கொண்டால் 1130மணியை 11ஐ தாண்டியதால் 12எனவும். புதன்கிழமை வாரத்தின் 4வது நாள் பெயர்எண்- 1 என கொள்ளவும். அதாவது 1971 வருடத்துடன், 5 மாதம்+ 15 தேதி+ 4 புதன்+ 12 மணி+ 1 பெயர் எண் கூட்டினால் 1971+5+15+4+12+1=2008=1. 1 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக. மேலும் பிறவி எண்ணும் இதுவும் ஒத்து வந்திருப்பதால் காரியம் சிறப்பாக நிச்சயம் வெற்றிபெரும்.

இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை என்றாலும் ஏதேனும் சந்தேகம் தோன்றின் இனையதள மின்னஞ்சலின் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும். இந்த பகுதிதனை உபயோகித்து உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் நடந்த நாளுக்கும் உங்கள் எண்ணுக்கும் உள்ள தொடர்பை புரிந்து உண்மையை உணரந்து எதிர்கால குழப்பங்களிலிருந்து தெளிவடைய அன்புடன் –குருஸ்ரீ பகோரா.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880747
All
26880747
Your IP: 54.81.185.66
2024-03-19 16:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg