gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:43

சிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64

Written by
Rate this item
(2 votes)

ஓம்நமசிவய!

ஐயனே போற்றி போற்றி ஒப்பிலா ஒருவ போற்றி
ஒள்ளிய வடிவே போற்றி ஒற்றைவெண் கொம்பாய் போற்றி
ஒளிநுதற் கண்ணாய் போற்றி ஓட்பங்கள் தருவாய் போற்றி
ஒலியெலாம் ஆவாய் போற்றி ஒழுகுமும் மதத்தாய் போற்றி


சிவ அஷ்டாஷ்ட திருஉருவங்கள்!

ஒரு மரம் ஒரு வித்திலிருந்து முளைவிட்டு தோன்றுகின்றது. மரத்தை நாம் காண்பதற்கு முன்பாக அது வித்தாக ரூபாருபமாக வித்து வடிவத்தில் இருந்தது. அம்மரமே வித்தாக தோன்றுவதற்கு முன் எவ்வித ரூபமில்லாமல் இருக்கின்றது. ஒரு விதை இவ்வாறு அரூபமாயிருந்து ரூபாருபமாகிய ரூபத்தை பெறுகின்றது. இது போன்றே ஒரு குட்டியும் ஒரு பிள்ளையும் ஒரு பிண்டத்தில் தோன்றும். பிண்டமும் எவ்வித ரூபமற்ற ஒன்றிலிருந்து உண்டாகும். இவ்வாறு எல்லாவற்றையும் நோக்குங்கால் இப்பூவுலகில் அண்ட சராசரங்கள் எல்லாம் உருவங்கள் பெறுமாறு இயக்கும் இறைவனும் இவ்வகையிலே திருவுருவம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அருவம், உருவம், அருவுருவம் என மூவகையாகக் காட்சி தரும் இறைவனே தன்னை உணர்த்த பல உருவத் திருமேனியாக தரிசிக்க சில வடிவங்கள் மேற்கொண்டுள்ளான்.

சிவ வடிவங்கள் நான்கு வகை:

சிவனின் வடிவங்கள்-64. இவை சௌமியம் போக, யோக, கோப வடிவங்கள் என் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சௌமியம்- புன்சிரிப்பு, இன்முகத்துடனும் இருக்கும் விக்ரகங்கள்
யோகம்- யோக நிலையில் உள்ள விக்ரகங்கள் (தட்சிணாமூர்த்தி)
போகம்- மனைவியுடன் ஒரே பீடத்தில் நின்றபடி அல்லது அமர்ந்தபடி இருக்கும் விக்ரகங்கள்
கோபம்-உக்ர வடிவிலான மூர்த்தங்கள்(வீரபத்திரர்)

பஞ்சமுக தரிசனம்

சிவ அடியவர் ஒவ்வொருவருக்கும் சிவனின் பஞ்சமூர்த்த தரிசனம் கிடைக்க வேண்டும். பஞ்சமூர்த்தம் என்பது சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகும். பிரம்மன் ஒவ்வொரு கற்ப யுகத்திலும் சிவனை நினைந்து தவமிருந்து ஒவ்வொரு முகமாக தரிசனம் கண்டு இன்புற்றார். அந்த ஒவ்வொரு முகத்திற்கும் ஐந்து வடிவங்கள் என மொத்தம் 25 வடிவங்கள் சிறப்பானதாக கருதப்படும்.

சத்யோஜாதம்-படைத்தல் 

சுவேத லோகித கற்பத்தில் தவமிருந்த பிரம்மனுக்கு காலை இளம் சூரியனைப் போன்ற பேரெழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தந்து அருளினார். இந்த பொலிவே சத்யோஜாதம் எனப்படும். சத்யோஜாதம் - பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி 

மேற்கு நோக்கிய சத்யோஜாதம் முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம் அசிதம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.

இந்த மேற்குமுக சத்யோஜாத தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை.
1.இலிங்கோத்பவர்,
2.சுகாசனர்-நல்லிருக்கை நாதர்,
3.ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்,
4.அர்த்தநாரீஸ்வரர்-உமைபங்கன்,
5.உமாமகேசர்- உமேசர்,

காலை இளம் சூரியனைப் போன்ற பேரேழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தரும் பிருதிவித் தத்துவம் - சத்யோஜாதம் – மேற்கு நோக்கிய முகத் தோற்றத்திற்குகந்த முகங்கள். இலிங்கோத்பவர், சுகாசனர்-நல்லிருக்கை நாதர், .ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர், அர்த்தநாரீஸ்வரர்-உமைபங்கன், உமாமகேசர்- உமேசர், ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்து வந்தால் நல்ல பயன் கிட்டும்.


ஒம் கிருட்டிணன் ஒம் சிவாய நமா -- மலையை தூக்கும் பலம்
ஒம் சல சலீம் செல சல் சௌ சல சிவாய நங்-- காம இன்பம் கிடைக்க
ஓம் சிவாய பேதனமே -- அமிர்தம் உண்ணலாம்
ஓம் சிவாயநமா -- நிர்வாண நிலை அடைய
ஒம் ளங் ளங் இஷங் இஷங் சிவாய ஒம் -- உயிரின் உருவத்தை காண
ஓம் ஸ்ரீயும் உங் சிவாய நமா -- தியான பலன்கள்

வாமதேவம்-காத்தல்,

ரத கற்பத்தில் பிரம்மன் தவமிருந்து மானும் மழுவுடன் சிவபெருமான் காட்சி அருள். இந்த வாமதேவ திருத் தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்

வடக்கு நோக்கிய வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சமம், சுகத்திரம், அஞ்சுமான், சுப்ரபேதம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின

இந்த வடக்குமுக வாமதேவ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
6.கங்காளர்,
7.சக்ரதானர்,
8.கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி,
9.சண்டேசானுக்ரஹர்,
10.ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி,

வாம முகம் மானும் மழுவுடன் காட்சி தரும் வாமதேவ- நீர்த் தத்துவ தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வடக்கு நோக்கிய தோற்றத்திற்குகந்த கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி, சண்டேசானுக்ரஹர், .ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.

ஒம் அங்கீச ஊங் சிவாய நமா --சூட்சுமபயணம் செல்ல(மனோசக்தி)
ஒம் இரக்ஷி இரக்ஷி இரக்ஷி இரக்ஷி ஸ்ரீம்சிவாயநமா --சூரிய ரதம் தோன்ற
ஒம் உங் தேங் ஒங் சிவாய நமா --ஐந்து தருக்கள் வணங்க
ஒம் ஐயும் கிலியும் சிவாய நமா --தேவ விமானம் வர
ஒம் ஒங் சங் கங் மமையு நமா --தேவர்களை தரிசிக்க
ஒம் ஓம் டேபுர நமசிவாயம் --அமிர்தம் உண்ணலாம்
ஒம் கங் கங் ணங் ரிஷிர் சிலிங்கம் --காமம் கொள்ள
ஒம் கெய்ங் கெங்க் கெய்ங் அங் ஒங் சிவாய நமா --ஆகாயத்தில் பறக்கும் சக்தி
ஒம் கேங் சேங் சிவாய சேங் நமா --இந்திரலோகத்தைக் காண
ஒம் சவ்வும் அவ்வும் சிவாய சுந்தராய நமா --வாலைதேவி தோன்றி மரைய
ஒம் சவ்வும் சிவாய ஓம் உம்பட் --சிவன் தோன்ற சிவனுள் ஒடுங்க
ஒம் சியும் சியும் ணங் சிவாய நமா --ஆண்மைதன்மை அதிகரிக்க
ஒம் சிலியுங் மங் மங் பங்க சிவாய உம்பட் --இந்திரனை வரவழைக்க
ஓம் சீயுங் கோஷ்ய கோஷ்ய சங் சதாசிவாய நமா --4வேதத்தை அறியும் ஆற்றல்
ஒம் டேங் டேங் ஒங்கு சிவாய ஸ்வாஹா --பூமி புதையல்கள் தெரிய
ஒம் பிறங் பிறங் சிவாய ஓம் நம ஸ்வாஹா --இறந்தவரை எழுப்ப
ஒம் ரங் ரங் சிவ் நமா --பராசக்தி முன்னே வர
ஒம் லீயுங் சிங் சிங் வாய நமா --நட்சத்திரங்கள் தோன்றி மறைய
ஒம் வங் நமசிவாய நம ஓம் --புல்லாங்குழல் இசைக்கும் திறன்
ஒம் வங் வங் சிங் சிவாய நமா --உலகில் எவ்விடத்திலும் செல்லவழி

தத்புருஷம்-மறைத்தல்

பீதகற்பத்தில் பிரம்மன் ஈசனைப் பணிந்து தியானம் செய்து கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி- இதுவே தத்புருஷ தோற்றம் ஆகும். இந்த தோற்றத்தில் காயத்திரி தேவியை சிருஷ்டித்து நான்முகனுக்கு அளித்தார். இந்த தத்புருஷ தோற்றத்தையோ, காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும் என்றார். தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்

கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.

இந்த கிழக்குமுக தத்புருஷ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
11.பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்,
12.காமாந்தகர்-காமதகனமூர்த்தி,
13.காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி,
14.சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி,
15.திரிபுராந்தகர்.

தத்புருஷ முகம் கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி தரும் வாயுத் தத்துவம் தத்புருஷ தோற்றத்தையோ காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும். கிழக்குமுக தோற்றத்திற்குகந்த முகங்கள் பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர், காமாந்தகர்-காமதகனமூர்த்தி, காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி, சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி, திரிபுராந்தகர் ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.


ஒம் அங் உங் வங் சிவாய நமா -- சகல நோய்கள் தீர
ஒம் அங்கீச சிவாய நமா -- உலகைச் சுற்றிவர,பயணம் செய்ய
ஓம் அங்கு சிவாய நமா -- நினைத்த குழந்தை கிடைக்க
ஒம் அம் அம் சிவாய நமா -- ஞான சித்திகள் கிட்ட
ஓம் அலங்கே நம சிவாய நமா -- ராஜ்யம் உண்டாக
ஒம் உம் நம சிவாய -- 18 வகை ஜூரங்கள் குணமாக
ஒம் ஊங் கிறீயும் நம சிவாய நமா -- மோட்சம் கிடைக்க
ஒம் ஒங் ஊங் சிவாய நமா உங் நமா-- 18 வகை குஷ்டங்கள் நீங்க
ஒம் ஒங் கிறியும் ஒங் நம சிவாய --- வியாபார லாபம், வெற்றி
ஒம் கிலியும் நம சிவாய -- அரசு வசியமாக,காரியங்கள் வெற்றி
ஒம் சவ்வும் நம சிவாய நமா -- ராஜாங்க வாழ்க்கை அமைய
ஓம் செல நக நமசிவாய -- 64 விஷங்கள் நீங்க
ஓம் நம சிவாய நமா -- பேய் பிசாசுகள் அலறி ஓட
ஒம் நம சிவாயம் -- இறப்பை வெல்ல
ஒம் நமசிவ -- உச்சாடனங்கள் செய்ய
ஓம் லங் கங் நமசிவாய -- மழை வரவழைக்க
ஒம் லங் கிறியும் நம சிவாய -- விவசாய தான்யங்கள் பெருக
ஒம் லீங் க்ஷீம் சிவாய நம -- பெண்கள் வசியம்
ஒம் லூங் ஒங் நம சிவாய -- தலையில் ஏற்படும் நோய்கள் தீர
ஒம் வநம சிவாய -- கைலாச மோட்சம் கிடைக்க
ஒம் ஸ்ரீயும் நம சிவாய -- திருடர்கள் தொல்லை தீர
ஒம் ஹம் ஹம் சிவாய நமா - ஆயுள் அதிகரிக்க

அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்)

நீலகற்பத்தில் கடும் தவமிருந்து பிரம்மன், தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் சிவபெருமான் காட்சி. இது அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா

தெற்கு நோக்கிய அகோர முகத்திலிருந்து விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.

இந்த தெற்குமுக அகோர தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
16.கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி,
17.வீரபத்திரர்,
18.தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர்,
19.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி,
20.கிராதகர்-கிராத மூர்த்தி

அகோர முகம் தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் காட்சி தரும் தேஜஸ் தத்துவம் அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். தெற்குமுக தோற்றத்திற்குகந்த .கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி, .வீரபத்திரர், தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர், நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி, கிராதகர்-கிராத மூர்த்தி ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.


ஒம் அங் ஒங் விங் சிவாய ஒம் --மழையை நிறுத்தலாம்
ஒம் அங்கீச அங்கீச ஒம் சிவாய நமா --வானத்தில் உள்ளவற்றைக் காண
ஒம் அங்கீச சிவாய நமா --முக்குணத்தை வெல்ல
ஒம் ஒங் சங் கிங் சிவாய நம --தேவ கன்னியரை வெல்ல
ஒம் ஒங் சர்வ நம சிவாய --செல்வம் பெருக
ஒம் ஒங் நம சிவாய நமா --ஜல ஸ்தம்பனம் உண்டாக
ஒம் ஒங் யங் சிவாய --சூரியனை வெல்ல
ஒம் கேங் கேங் ஒம் நம சிவாய --சகல ஜனங்களும் வசியம்
ஒம் சங் சங் சிவாய நமா --தண்ணீரை மேலே எழுப்பலாம்
ஒம் சரணாய சிவாய நமா --பாதாள கௌனம் போக
ஒம் சிறுங் சிறுங் ஒம் சிவ சிவ ஒம் --அதிக பூமி லாபம்
ஒம் சீங் சிவ சிவ உங் ஊங் சிவாய நமா --கடலில் ஆறு ஓட
ஒம் துங் மவாய நமசி --வித்வேதன காரிய சித்தி
ஒம் நம சிவாய நமா --அரசு வசியம்
ஒம் நம சிவாய நமா --ஏழு கடலை வற்றச் செய்ய
ஒம் நூம் பயம் யுஞ் சிவாய நமா --6சாஸ்திரம்,4வேதங்கள் அறிய
ஒம் பிறங் பிறங் ஷங் ரங் சிங் சிவாய --நமா தென்னை மரங்களை வளைக்க
ஒம் புலையும் புலையும் சிவாய நமா --இசக்கி வசமாக
ஒம் மங் மங் மங் --உணவு இல்லாமல் உயிர் வாழ
ஒம் யம் ஒம் சிவா --விஷங்களை தடுக்க
ஒம் வசலா வசலா சிவாய நம --மழையில் நனையாமல் செல்ல
ஒம் விஞ் சிங் ஒம் நம சிவாய நமா --தெய்வலோகம் செல்ல
ஒம் ஹீ ஸ்ரீ சிவாய நமா --ஆற்றில் வெள்ளம் வர
சங் சங் யவாசி நம --தண்ணீரில் நடக்க

ஈசானம்-அருளல்

விசுவரூப கற்பத்தில் பிரம்மன் தவமிருந்து கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இருபக்கமும் இரு மாதர்களுடன் சிவபெருமான் காட்சி தந்து அருள். இது ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா

உச்சி நோக்கிய ஈசான முகத்திலிருந்து புரோற்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சருவோத்தம், பரமேஸ்வரம், கீரணம், வாதூலம் எனும் எட்டு ஆகமங்கள் தோன்றின

இந்த உச்சிமுக ஈசான தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
21.சோமாஸ்கந்தர்,
22.நடராஜர்,
23.இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன்,
24.கல்யாணசுந்தரர்-மணவழகர்,
25.சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்.

கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இரு பக்கமும் இரு மாதர்களுடன் காட்சி ஆகாசத் தத்துவம் ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். உச்சி நோக்கிய தோற்றத்திற்கு உகந்த முகங்கள் சோமாஸ்கந்தர், நடராஜர், .இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன், கல்யாணசுந்தரர்-மணவழகர், சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன் ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.

ஒம் இங் சிங் சங் ஒம் -- சொர்க்க வாசிகள் பணிவர்
ஒம் சிங் சிங் சிவாய ஒம் -- முக்காலமும் அறிய
ஒம் சிவாய நமா -- மலையை தூளாக்கும் சக்தி
ஒம் மங் நங் சிவ சிவாய ஒம் -- மறையும் சக்தி
ஒம் மய நசிவ ஸ்வாஹா -- பறக்கும் சக்தியுள்ள குளிகை
ஒம் வங் சிங் யங் யங் ஸ்வாஹா அரசு வணங்கும்
ஒம் வங் யங் சிங் ஒங் சிவாய -- எதிரிகள் ஒழிய
சிம் வயந ஒம் -- 64 சித்துக்களும் கிடைக்க
யவ நம சிவ ஒம் -- மனோன்மணிதேவி அருள்

64 உருவங்களில் மேற்கண்ட 25 வடிவங்கள் தவிர மற்ற சிவ வடிவங்கள்.
26.சிவலிங்கம்
27.முகலிங்கம்
28.சதாசிவம்
29.மகாசதாசிவம்
30.இடபாந்திகர்
31.புஜங்கலளித மூர்த்தி
32.புஜங்கத்திராச மூர்த்தி,
33.சந்தியா தாண்டவ மூர்த்தி
34.சதா நிருத்த மூர்த்தி
35.சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி
36.கங்காதரர், கங்காதரமூர்த்தி
37.கங்காவிசர்ச்சனர்
38.ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்
39.சார்த்தூலஹர மூர்த்தி
40.பாசுபத மூர்த்தி
41.சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்
42.யோகதட்சினாமூர்த்தி
43.வீணாதட்சிணாமூர்த்தி
44.இலகுளேசுவர மூர்த்தி
45.பைரவ மூர்த்தி
46.ஆபதோத்தாரண மூர்த்தி
47.வடுக மூர்த்தி
48.க்ஷேத்ரபாலக மூர்த்தி
49.அகோர அத்திர மூர்த்தி
50.தட்ச யக்ஞஹத மூர்த்தி
51.குருமூர்த்தி
52.அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்
53.ஏகபாத திரிமூர்த்தி
54.திரிபாத திரிமூர்த்தி
55.கௌரிவரப்பிரத மூர்த்தி
56.கௌரிலீலா சமன்விதமூர்த்தி
57.கருடாந்திக மூர்த்தி
58.பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்
59.கூர்ம சம்ஹாரமூர்த்தி
60.மச்ச சம்ஹாரமூர்த்தி
61.வராக சம்ஹாரமூர்த்தி
62.பிரார்த்தனா மூர்த்தி
63.இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி
64.சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்

######

Read 12408 times Last modified on வியாழக்கிழமை, 03 August 2023 11:12
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880631
All
26880631
Your IP: 52.205.218.160
2024-03-19 15:38

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg