gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 19 June 2024 04:10

குலதெய்வம்!

Written by

ஒம் நமசிவய ஒம்

#####

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

குலதெய்வம்!

            அரகஜா நம் பலருக்குத் தெரியாமல் போன ஒரு தாந்திரீக பொருள். நம்மில் பல பேருக்கு குலதெய்வம் எது என்று தெரியாமல் இருக்கின்றனர், நம் குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்கும் ஒரு தாந்திரீக பொருள் அரகஜா. இது சிவ வழிபாட்டிற்கும், காலபைரவரின் வழிபாட்டிற்கும், அபிஷேகத்திற்கு பயன்படும் ஒரு தாந்திரீக பொருள். அத்தர் புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம், போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள். இதனுடைய பலன் அபரிமிதமானது, பலருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றாலும், குலதெய்வத்தை வரவழைக்க இந்த அரகஜா மிகவும் நமக்கு துணை புரியும், வீட்டில் குலதெய்வத்திற்கு வழிபாட்டிற்கு மஞ்சள் அரகஜா இரண்டையும் ஒன்றாக கலந்து திலகமிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நம் குலதெய்வம் நம் இருப்பிடம் தேடி வரும். இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகளில் இருந்து விடுபடலாம். அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம் மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கும் அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம். இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும், மேலும் சனி திசை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச் சனி, போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜாவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு நம்மை விட்டு மிகவும் விலகும். அரகஜா மிகவும் அற்புதமாக வேலை செய்யும் ஒரு தாந்திரீக பொருள். அரகஜா சனி திசை 19 வருடத்திற்கும், ஏழரை நாட்டு சனி காலத்திற்கும், தினம் திலகமாக இட்டு சென்றால் நமக்கு வரக்கூடிய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள நம்மை பலப்படுத்தும் ஒரு தாந்திரீக பொருள். இதிலிருந்து வரும் சுகந்தமான மணம் நம் மனதை எப்பொழுதும் நேர்மையாக நேர் வழியில் இட்டுச் செல்லும். எப்பொழுதும் நம் மனதில் பாசிட்டிவ்வான எண்ணங்களை வரவழைக்கும். தூண்டும் மனதில் தீய எண்ணத்தை அறவே விலக்கி தெய்வ சிந்தனையும், ஆற்றலையும் நம்மை சுற்றி பிரகாசிக்க வைக்கும். வீடுகளில் வழிபாடு செய்யக்கூடிய இடங்களில் வியாபாரம் செய்யக்கூடிய ஸ்தலங்களில் அரகஜா மஞ்சள் இவைகளை திலகமாக சுவர்களில் இட்டு வழிபாடு செய்தாலும் அந்த இடம் பாசிட்டிவான சக்திகளை வைத்து தெய்வீக ஆற்றலை அங்கு நடமாட செய்யும், இன்று பல யாகங்களும் பூஜைகளும் செய்து மன நிறைவு அடையாதவர்களும் இந்த அரகஜா பயன்படுத்தி சனியினுடைய பாதிப்பிலிருந்து குலதெய்வத்தின் அருளைப் பெற்று பயன் அடையுங்கள். குருவே சரணம். --குருஸ்ரீ

#####

புதன்கிழமை, 15 March 2023 16:38

தோஷங்கள்!

Written by

ஓம்நமசிவய!


பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!


#*#*#*#*#

 

59.தோஷங்கள்!

 

சர்ப்ப, பித்ரு, மாத்ரு, சகோதர, மாதுல, பிராமண, பத்தினி, மந்திர, பிரேத ஆகிய சாபங்களால் ஏற்படும் புத்ர தோஷங்களினால் குழந்தை பிறந்த சில நாட்களில் இறப்பது, பாசமுள்ள பிள்ளைகள் வளர்ந்து இளைஞர் / இளம் பெண்ணாக இருக்கும்போது இறப்பது, பெண் குழந்தைகளுக்கு காலங்கடந்து திருமணம் நடப்பது, திருமணம் முடிந்து குறுகிய காலத்தில் வாழாவெட்டியாக பிறந்த வீட்டிற்கு திரும்புவது, மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளையாக பிறப்பது போன்றவைகள் நிகழ்கின்றன.

முன்பிறவியில் தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப் படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியாக பராமரிக்காமல் இருப்பது பித்ரு / பிதுரு சாபமாகின்றது. இதன் காரணமாக இப்பிறவியில் தன் தந்தையோடும் தன் பிள்ளைகளுடனும் ஒத்துப் போகமுடியாது. எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும் வேதனையும் தினசரி நடக்க வாய்ப்புண்டு.

சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக் கொள்வதாலும் சகோதர்களைக் கொடுமைப் படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம். இதனால் ஏற்படும் புத்திர தோஷம்.

சொத்துப் பிரச்சனையில் தாய் மாமனை அவமானப்படுத்தியும், சண்டை போட்டும் தாய் மாமன் சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம். இதனால் தாய்வழிப் பகையும், புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும். பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும் விவாகரத்து ஆவதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.

சாதுக்கள், மகான்கள், சிவனடியார்களை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராமண சாபம். இதனால் ஊனமுற்ற குழந்தை பிறப்பது மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது ஊமை, குருடு, செவிடு போன்ற குறையுள்ள குழைந்தைகள் பிறப்பதும் கடுமையான புத்திர தோஷம்.

மனைவியை கொடுமை படுத்துவதாலும் குடும்பத்தைவிட்டு வைப்பாட்டி வீடே கதி என்று இருந்து பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி இருப்பதும் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதும் மனைவி சாபத்தால் ஏற்படும் பத்தினி சாபம். இதனால் மனைவி மக்களால் அவமானப்படுத்தப்பட்டு பண்டாரம், பரதேசியாக பிச்சை எடுத்து கடைசிக் காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லை என வருந்தி அனாதையாக இறந்து போவது ஆகும்.

மாந்தீரிகர்களைத் தேடிப்போய் தனக்கு வேண்டாதர்களுக்கு பில்லி சூன்யம் வைப்பதும் குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருந்து இந்த சாபத்திற்கு ஆளாகியதனால் மருத்துவத்திற்கு புலப்படாத நோய்கள் உருவாகி சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழித்து குடும்ப விருத்தியில்லாமல் தொழில் அமையாமல் தொழிலில் நட்டமடைந்து, பிள்ளைகள் ஊதாரித்தனமாக நடந்து துஷ்ட பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சந்தித்து வேதனை அடைவர்.

இந்த தோஷங்கள் நீங்க பரிகாரமாக குருபகவானுக்கு வியாழன் அர்ச்சனை செய்து முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திக் காலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு அன்னதானம் செய்யலாம். பௌர்ணமி / ஜன்ம நட்சத்திரத்தன்று குலதெய்வம் கோவிலில் வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.


#*#*#*#*#

ஓம்நமசிவய!


திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!


#*#*#*#*#

 

58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!

 

ஒன்பது என்பதன் பகுப்பு பல பொருள்களுக்கு அமைந்துள்ளது. உடலை ஒன்பது வாசல் கொண்ட ஆலயம் என்பர். 1லிருந்து 9வரை அனைத்து எண்களையும் கூட்டினால் வருவது 45 அதையும் கூட்டினால் வருவது 9. இந்த 9 ஐ 1+8 என எடுத்துக் கொள்ளல் வேண்டும். அதாவது முதலில் இருக்கும் ஒன்று நம்மிடம் உள்ள நிறை. அடுத்து வரும் 8 என்பது நம்முள் இருக்கும் குறைகள். படிப்படியாக நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்துவர குறை குறைந்து கொண்டுவர வர நிறை அதிகரித்துக் கொண்டு வந்து இறுதியில் முழு நிறையான 9 ஆகிவிடும்.

உலகத்தின் கண்டங்கள், சிறப்பான மேகங்கள், நவநிதிகள், தாரணை யோகம், தர்மங்கள், நவஉலோகங்கள், நவமணிகள், நவரத்தின புலவர்கள் என வாழ்க்கையில் வெற்றிபெற 9 எண்ணின் தொடர்பை முன்னோர்கள் அடிப்படையாக வைத்துள்ளனர்.

நீங்களும் வாழ்வில் சிறப்படைய 9 எண்ணின் உயர் நிலையை அடைய சுய நிலை இழக்காமல் படிப்படியாக குற்றங்களைக் குறைத்துக் கொண்டு நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்பது வாசல்களை அடக்கி ஒடுக்கி செயலாற்றும் திறன் கொண்டால் ஒருவன் பிரம்ம நிலையில் இருப்பவன் ஆகின்றான்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

 

#*#*#*#*#

 

57.ஏழுகோடி மந்திரங்கள்!

 

7கோடி மந்திரங்கள் எனப் பொருள் கொள்ளாமல் ஏழு வகையான முடிவுகளைக் கொண்ட மந்திரங்கள்- எனப் பொருள் கொள்ள வேண்டும். கோடி-கடைசியில் உள்ளவை என அர்த்தம். அவை 1.நமஹா-ஐஸ்வர்யம் அளிப்பது, 2.சுவாஹா-தைரியம் கொடுப்பது, 3.சுவாதா-வசீகரம் தருவது, 4.பட்-விக்னங்களைத் துரத்துவது, 5.உம்பட்-காமாதிகளை போக்குவது, 6.வௌஷட்-தேவதைகளை இழுப்பது, 7.வஷட்-தேவதைகளை வசம் செய்வது என்பனவாகும். இந்தச் சொற்களும் சொற்களைக் கொண்டு முடியும் வரிகள் எல்லாம் மந்திரங்கள் ஆகும். மந்- நினைப்பவரை என்றும், திர-காப்பது என்றும் பொருள். எனவே மந்திரம் என்பது அதை நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் கொள்ளவேண்டும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்!

ஆதித்தியர்-12 பேர், உருத்திரர்-11 பேர், வசுக்கள்-8 பேர், அஸ்வினி தேவர்கள்-2 பேர் ஆக மொத்தம் 33 பேர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவார தேவதைகள் உண்டு. எனவே தேவர்கள் 33 பேரை சொல்லும்போது அவர்களின் பரிவார தேவதைகளையும் சேர்த்து சொல்வதனால் 33முக்கோடி தேவர்கள் என்றானது. ஒரு கோவிலில் மூலக் கடவுளை வழிபடும்போது அங்குள்ள பரிவாரதேவதைகளை வழிபடுதல் போன்றேதே இது.

மந்திரம் கால், மதி முக்கால்!

சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச் செல்லும். சந்திரகலை நடக்கும்போது 3/2 பாகமாகிய மச்சை(எலும்பினுள் இருக்கும் சாரம்) வழி செல்லும். இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால் என்பர் பெரியோர். மந்திரம் என்பது சூரியன்- கால், மதி-சந்திரன்- முக்கால் என்பதாகும். வாசி யோகத்தை கற்றவர் ஓர் அங்குலமுள்ள நேத்திர ஸ்தானமிருந்து பகிர்முக நோக்கில் எண் சாண்(அரைமுழம்) உடலின்கண் உள்ளதை நடப்பதைப் பார்க்கலாம்.

நூறில் ஒன்று!

நூறில் ஒன்று கூடவா தேறாது என சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பார்த்தால் கௌரவர்களின் 100 பேரில் ஒருவன் கூடவா நல்லவர் இல்லை எனக் கேட்கலாம். ஆம் நல்லவர் இருந்தனர். சூதில் தருமன் தோற்றபின் மனைவி திரௌபதியை பணயம் வைக்குமாறு சகுனி கூற தர்மன் சம்மதித்து தோற்றான். இது அனைவரும் அறிந்ததே! ஆனால் அப்போது சூதில் இதை பயணம் வை என்று எதிராளிக்குச் சொல்லக்கூடாது என்பதே தர்மம். அப்படியிருக்க சகுனி சொல்லி துரியோதனன் கேட்க தர்மன் திரௌபதியை பயணம் வைத்தது சரியாகாது. திரௌபதி பயணப் பொருளாக மாட்டாள் இது தர்மம் அல்ல என எதிர்த்தவன் விகர்ணன் என்ற துரியோதணைன் தம்பி. இந்த செயலைக் கண்டு வெட்கி தலை குனிந்து நின்றவன் இன்னொரு தம்பி யுயுத்ஸு. அன்று அரசவையிலிருந்து இவர்களை வெளியேற்றினான் துரியோதனன். யுயுத்ஸூவே சக்ரவியூகத்தில் நிராயுதபாணியான அபிமன்யு கொல்லப்பட்ட விதம் அதர்மம் எனக்கூறி போர்க்களத்திலிருந்து அப்போது வெளியேறியவன்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 16:30

ஓம்சாந்தி 3முறை ஏன்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

#*#*#*#*#

 

56.ஓம்சாந்தி 3முறை ஏன்!

 

மனித வாழ்வில் சந்திக்கும் இடர் துன்பங்களுக்கு மூலகாரணங்கள்

1.ஆதிதெய்வீக- நம் கட்டுப்பாட்டில் இல்லாத தெய்வீக சக்திகளால் ஏற்படும் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள்,

2.ஆதி பௌதிக-மனிதருக்குள் ஏற்படும் துன்பம், போராட்டம், கலவரங்கள், ஆசை காரணமாக ஏற்படும் ஆபத்துகள்,

3.ஆத்யாத்மிக- மனித உடல், மனம் சார்ந்த நோய்கள், பிரச்சனைகள். ஆகிய இம்மூன்றினாலும் தடைகள் இடற்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதால் மூன்றுமுறை ஓம் சாந்தி சொல்லப்படுகின்றது.


#*#*#*#*#

ஓம்நமசிவய!


யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!


#*#*#*#*#

 

55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!

 

மரம் என்றால் எதாவது ஒரு மரத்தை நிழலுக்காக அல்லது கட்டிடத்தின் முன் அழகு படுத்த வளர்க்கலாம். ஆனால் இங்கே சொல்லப்படுவது ஒருவருடைய நட்சத்திரத்திற்குரிய மரத்தை தன் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். அதன் பலன்கள்- அந்த மரம் வளர வளர அவருடைய வாழ்வு வளம் பெரும். மரம் வளர்ப்பவருடைய பாவக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் ஒப்பற்ற அற்புதமான ஆன்மீகத் தொடர்பை செய்ய வல்லது. அவருடைய தோஷங்களை அந்த மரம் ஈர்க்கும் தன்மையுடையது. அந்த மரம் பூத்துக் குழுங்கும்போது அவரின் வாழ்வு செழிப்பான நிலையில் இருக்கும். கர்ம வினைகள் குறைந்து விடும்.

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பன்னீர் மரக்கன்றையும், வெண்குஷ்டத்தால் பதிக்கப் பட்டவர்கள் புளிய மரக்கன்றையும், ஆஸ்மாவினால் பதிக்கப் பட்டவர்கள் முசுக்கொட்டை மரக்கன்றையும், தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வேப்ப மரக்கன்றையும், மூலநோயால் பாதிக்கப் பட்டவர்கள் நாவல் மரக்கன்றையும், இதயநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அரச மரக்கன்றையும், வயிறு சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் புன்னை மரக்கன்றையும், காதுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் கடுக்காய் மரக்கன்றையும், சிறுநீரகக் கோளாறு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பனை மரக்கன்றையும், தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் பூவரசம் மரக்கன்றையும் நட்டு வளர்த்து வருவது நோய்கள் விரைவில் நீங்கி நலம் பெறலாம் என விருட்ச சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

#*#*#*#*#

ஓம்நமசிவய!


ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!


#*#*#*#*#

 

54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!

 

பால், மலர், கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலம் / மண் பெரிய கட்டிடங்கள் கட்ட பயன்படும்.

புன்னை, ஜாதிமுல்லை, தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது.

தயிர். நெய், எண்ணெய், ரத்தம், மீன் போன்ற வாடை வீசினால் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்களாகும்.

மாயானம். பள்ளமான நிலம், யுத்தம் செய்த இடம், கோவில் புற்று இருந்த இடம் ஆகிய இடங்களில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் ஆகியவற்றின் நிழல் விடுகளில் படக்கூடாது.

நிலத்தை கொத்தும்போது அல்லது குழி தோண்டும்போது யானை, குதிரை, மூங்கில். வீணை, சமுத்திரம் ஆகியன எழுப்பும் ஓசை கேட்டால் அந்த பூமி/ நிலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

புதிய விவசாய நிலத்தை உழுது தனியங்களை பயிர்செய்து, பயிர் விளைந்த நிலையில் பசுக்களைவிட்டு மேய விட்டால், பசுக்களின் சிறுநீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து வரும் நீர், நுரை ஆகியவை பூமியில் கலப்பதனால் அந்த பூமியின் சகல தோஷங்களும் நீங்கும். நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தை வளப்படும்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 16:24

சகுனங்கள்!

Written by

ஓம்நமசிவய!

 

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

 

#*#*#*#*#

 

53.சகுனங்கள்!

 

சகுனங்கள் இறைவன் ஆத்மாக்களுக்கு காட்டும் முன்னறிவிப்புகளாகும். பறவைகள் தென்படும் நேரம், திசை, இடம், சத்தம், ஓசையின் இயல்பு, பறவையினம் ஆகியன கொண்டு சகுனங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல சகுனங்கள்-

ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் நல்லது நடக்கப்போகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.

வீட்டை விட்டு வெளியில் முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது கறுப்பு நிறமில்லதா தானியங்கள், பஞ்சு, வைக்கோல், சாணம், நாணயங்கள் பார்த்துச் செல்லல் நல்ல சகுனம். எதிரில் திருமணமான சுமங்கலிகள், பசு, பால்விற்பவர்கள் இவர்களைப் பார்த்தால் நல்லது.

வெளியில் புறப்படும்போது எதிரிலோ, இடது புறத்திலோ மயில் வந்தால் நல்ல சகுனம் வெற்றி நிச்சயம்.

வெளியில் புறப்படும்போது காக்கையின் குரல் இடது புறம் கேட்டால் நன்மை.

காக்கை சேற்றில் மண்ணை கிளறுவது, அசுத்தங்களைக் கொத்திக் கொண்டுவந்து அருகில் போடுவது நன்மை பயக்கும் சகுனங்கள்.

ஒரு வீட்டின் முன் காக்கை அமர்ந்து கரைந்தாலோ அல்லது நடை பயின்றாலோ அது விருந்தாளிகள் வருவதைக் குறிக்கும் சகுனம்.

சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பொருளை காக்கை கொண்டுவந்து வீட்டின் முன் போட்டால் அது பணம் அல்லது பொருள் வரவுக்கான சகுனம்.

இரவு நேரத்தில் வீட்டின் எருமை உறுமினால் நன்மை.
கறவைப் பசுவும், எருமையும் தன் முன்னங்கால் குளம்புகளால் பூமியைத் தோண்டுவதும் கொம்புகளில் மண் ஒட்டிக் கொண்டிருத்தலும் நன்மை பயக்கும்.

குதிரை உடலைச் சிலிர்த்து தலையை உதறி உக்கிரமாகப் பார்த்தல் நன்மை.

வெளியில் புறப்படுபவர்கள் எதிரே வரும் அல்லது பார்க்கும் வெண்ணிற மலர்கள், நீர்க் குடங்கள், வயோதிகர்கள், ஆடு, பசு, காளைமாடு, கன்றுடன் கூடிய பசு, சவம், சந்தனம், தானியம், பொரி, எள், சலவைத் துணி, மாமிசம், நெய், குதிரை, யானை, தீப்பந்தம், பசும்புல், பணிவான உறவுகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், பழங்கள், தயிர், கண்ணாடி, பால், கரும்பு சங்குசப்தம், கருடன் சத்தம் கேட்டாலும், காடை, காக்கை இடமாக பறந்தாலும், ஆகியவற்றை காண்பது நல்ல சகுனம்.

ஒருவன் தூங்கி எழுந்ததும் தாமரைப்பூ தீபம், தணல், தன்னுடைய உள்ளங்கை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு, கண்ணாடி, சூரியன், கோபுரம், சிவலிங்கம், சந்தனம், கடல், வயல், மலை ஆகியன பார்ப்பது மிகமிக நன்மை பயக்கும்.

தீய சகுனங்கள்- அப சகுணங்கள்

ஆணுக்கு இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் என மாறினால் அது கெட்ட சகுனமாகும்.

வெளியில் செல்வோரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது. அபசகுனம்.

மருந்து கடைக்காரன், மருந்து வாங்கி வருபவன், கசாப்புக் கடைக்காரன் எதிரில் வருவது அபசகுனம்.

ஆடை நழுவுதல், குடை விழுதல், கால் தடுக்குதல், தடுமாறுதல், இழுத்துக் கொள்ளுதல் ஆகியன எதோ பிரச்சனை நிகழப்போகிறது என்பதை முன்னரே அறிவிப்பவை.

பறவைகள் இயல்பிற்கு மாறாக இயங்குவது தவறான சகுனமாகும். இரவில் கத்தும் ஆந்தை பகலில் கத்துவதும் பகலில் கத்தும் காக்கை இரவில் கரைவதும் தீய சகுனங்கள்.

வெளியில் புறப்படும்போது மயில் அகவல் குரல் கேட்டால் உடமைகள் களவு போகும் என்பது சகுனமாகும். காக்கையின் குரல் வலது புறம் கேட்டால் அது தீமை. தவளை கண்டபடி கத்தினால் தீமை. மான் வந்து குதித்து விட்டுச் சென்றால் மரணம் வருவதைக் குறிப்பதாகும்.

அண்டங்காக்கை ஒருவரது நிழலையோ அல்லது அவரது துணியையோ கொத்தினால் அது அபசகுனம். தீமைகள் ஏற்படும். கவனமுடன் இருக்க வேண்டும்.

மான், கிளி, நாய், மூஞ்சுறு, ஆகியன வலமிருந்து இடம் போனால் அபசகுனம்.

நரி, குரங்கு, மாடு, எறுமை ஆகியன இடமிருந்து வலம் போனால் அபசகுனம்.

நாய் ஊளையிடுவது அபசகுனம்.

வெளியில் செல்லும்போது வளர்ப்பு நாய் இடது கையையோ, வலது பக்கத்தையோ முகர்ந்து பார்த்தல் அபசகுனம். எதிரில் விறகு வண்டி ஒற்றை பிராமணன் வந்தால் சகுனம் சரியில்லை.

வளர்க்கும் பசு அபயகரமாக அலறினால் அது கெடுதல்.

குதிரை நீரில் மூழ்கினாலோ, கால் தடுக்கி விழுந்தாலோ, கண்களில் நீர் வடிய எஜமானின் காலை நக்கினாலோ அபசகுனம்.

யானை மதம் கொண்டு ஓடுதல் அரசுக்கு அபசகுனம்.

பாம்பு, பன்றி, முயல், எண்ணெய்த்தலை, அவிழ்ந்த தலை, சதா திரிபவன், ஈரத்துணி, அரளி/கனகாம்பரம் போன்ற சிவந்த புஷ்பங்கள், உப்பு, இடருதல், துணியவிழ்தல், அழுகை, கலகம், தும்மல், தடைவார்த்தை கேட்டல் ஆகிய சகுணங்கள் கண்டால் காரியம் ஜயம் உண்டாகாது.

ஆபரணங்கள்-சகுணம்!

ரத்தினங்கள், முத்து, நீலம், வைடூர்யம், இந்திர நீலம், சந்திரகாந்தக் கல், சூர்ய காந்தக் கல், ஸ்படிகம், புஷ்பராகம், ராஜபட்டம், ராஜமயம், ஜோதிராம் ஆகிய ரத்தின வகைகள் அணிந்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். அவை நல்ல நீரோட்டத்துடன் உட்புறம் ஒளி வீசுவதாகவும், குற்ற மற்றதாகவும், நன்கு பதிக்கப்பட்டிருத்தலும் வேண்டும். பிளவு பட்டிருத்தலோ, ஒளி மங்கியதாகவோ, சொர சொரப்பான தன்மை உடையதாகவோ இருக்கக்கூடாது.

கந்தகம், முத்துச் சிப்பி, கோமேதகம், ருத்திராட்சம், பவளம், மாணிக்கம் ஆகியவற்றை தங்கத்தில் பதித்து அணிந்தால் வெற்றிகள் கிட்டும்.

மரகதக் கல் கிளியைப் போன்ற நிறத்துடன் குளிர்ச்சியானதாக இருக்க வேண்டும். பத்ம ராகம் பிரகாசமானதாயும் முத்துக்கள் உருண்டையாயும் வெண்மை நிறத்துடனும் இருந்தால் மிக விசேஷம்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

#*#*#*#*#

 

52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!

 

கனவு கான்பது மனித இயல்பு. அவற்றிற்கு பலன்களும் உண்டு. தூங்கும்போது ஏற்படும் கனவிற்கு நற்பலன்களும், தீயபலன்களும் ஏற்படலாம்.

நற்பலன்தரும் கனவுகள்-

மலையின் மீது ஏறுதல்
குதிரை-யானை-காளை இவற்றின்மீது சவாரி செய்தல்
வெள்ளை நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குதல்,
கேசம் நரைத்துப் போயிருத்தல்,
வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருத்தல்,
பசு, எருமை, பெண்குதிரை, சிங்கம், யானை ஆகியவற்றிடம் பால் அருந்துதல்,
கையில் கத்தியுடன் நடத்தல்,
பெரியோர், தேவர்களிடம் ஆசி பெறுதல்,
பசுவின் கொம்பிலிருந்து கொட்டும் நீர் தெளிக்கப்படுதல் ஆகியன வரப்போகும் நன்மைகளை உணர்த்துபவை.

மரணம், விபத்திற்கு ஆளாதல்,
அரசின் பரிசு பெறுதல்,
குதிரை-யானை-காளை இவற்றைக் காணுதல்,
அரச சபைக்குச் செல்லுதல்,
உறவினர்கள் சேர்க்கை,
கொடி மரத்தில் ஏறுதல்,
மேல் மாடியில் நடத்தல்
நிர்மலமான ஆகாயம் பார்த்தல்,
காய் கனிகளுடன் இருக்கும் மரங்கள் ஆகியன மன மகிழ்ச்சியுடன் நன்மை தருபவை.

சிரச்சேதம், சந்திரக்கலையிலிருந்து விழுதல், சிங்காசனத்தில் அமர்ந்து முடி சூடுதல் ஆகியன அரசுப் பதவிகளைக் கொடுக்கும் கனவுகள்.

ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் அதிர்ஷ்டம் வரப்போகும் அறிகுறிகள்.

தீய பலன்தரும் கனவுகள்-

நாபி தவிர மற்ற இடங்களில் தாவரம் வளர்ந்திருப்பது போல காண்பது,
மொட்டைத்தலை,
சேறு படிந்த உடல்,
நிர்வாண உடல்,
உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல்,
தொட்டிலில்படுத்து ஆடுதல்
கம்பி வாத்தியங்கள் இசைத்தல்,
இறந்த பாம்பு வழியில் கிடத்தல்,
செந்நிறப் பூக்கள்: பூத்து குலுங்கள், ஆகியன வரப் போகும் துன்பத்தை தெரிவிப்பன.

கரடி, கழுதை, நாய், ஒட்டகச் சவாரி,
சந்திர சூரியர்கள் நிலை பெயர்தல்,
மீண்டும் கர்ப்ப வாசம் அடைதல்,
சிதையில் எரிதல்,
பூகம்பம் போன்ற பேரிடர்கள்,
மூத்தோர் சினத்திற்கு ஆளாகுதல் ஆகியவை துன்பத்தை அளிப்பவை.

ஆணின் இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் துன்பத்திற்கான அறிகுறிகள்

இது போன்ற தீய கனவுகள் கண்டால் விழித்தெழுந்து கைகால்கள் முகம் கழுவி கிழக்கு முகமாக அமர்ந்து இறைவனை- சிவனை ஓம் என்ற பிரணவம் உச்சரித்து தியானம் செய்து பின்னரே உறங்கத் தொடங்க வேண்டும். அப்போது அதன் பாதிப்புகள் குறையும்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

#*#*#*#*#

 

51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!

 

 

இடைஞ்சல்கள் மூன்றுவகைப்படும். திவ்ய, அந்தரிக்ஷ, பௌமம் உத்பாதங்களின் விளைவு ஒருவார காலம் நீடிக்கும். இதற்கு பரிகாரமாக வேள்விகள் செய்யலாம். அப்படிச் செய்யாவிடில் உத்பாதங்களின் விளைவு நெடுங்காலம் நீடிக்கும்.

திவ்ய-தெய்வீகமாய் ஏற்படுபவை. கிரகம், நட்சத்திரம் ஆகியவற்றால் பயம் ஏற்பட்டு நடக்கக் கூடாது நடந்து விடுமோ என்ற சந்தேகம்

அந்தரிக்ஷம்- பூமியின் சுழற்சியால், இயற்கை பாதிப்பால் ஏற்படுபவை. எரி நட்சத்திரபாதை, திசைகளின் விபரீத சுழற்சியால் மண்டலங்கள் வானில் தோன்றுதல், சூரிய சந்திரர் ஒளியில் மாற்றங்கள், ஆகாயத்தில் கந்தர்வ நகரம் காணுதல், ஆதீத மழை அல்லது மழை இன்மை எல்லாம் அந்தரிஷம் எனப்படும்

பௌமம்- நீர் நிலைகள், மரங்கள், பூகம்பம், பூமி அதிர்வு, எரிமலை ஆகியன பூமியின் உத்பாதம். மின்னல் சமுத்திரத்திற்கு அடியில் ஏற்படும் நெருப்பு- வடவாமுகாக்னி திடீர் எழுச்சி, சர்ப்பங்கள் மேலேறி வருதல் எல்லாம் துர் நிமித்தங்கள். மேகத்திலிருந்து விழும் மழை பாறைகள் மீது விழுந்து கீழிறங்கி பிராணிகளுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும்.

#*#*#*#*#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27435673
All
27435673
Your IP: 3.230.173.188
2024-06-24 15:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg