gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.!
வெள்ளிக்கிழமை, 20 July 2018 18:46

வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

####

சின்னதிருவடி! வீர, விவேக, ஞான ஆஞ்சநேயர்!

மாமனாரால் மரணம் என்று ஈசனிடம் இராவணன் வரம் பெற்றதனால் மண்டோதரியின் தந்தையான விஷ்ணு மானிட அவதாரம் எடுக்க வேண்டிய நிலை உருவானது. மேலும் உமை ஒருமுறை தான் தன் கணவனை பிரிந்து. இருப்பது அறிந்தும் அதற்கு தன் சகோதரன் திருமால் உதவ வில்லை என்ற கோபத்தால் நீயும் ஒருநாள் உன் மனைவியைப் பிரிந்து துயரப்படுவாய் என்று சாபம் கொடுத்துள்ளார். இவைகளே விஷ்ணுவின் இராமவாதரத்திற்கான காரணங்கள்.

11வது ருத்திரர்!

இந்த நிகழ்வுகள் நடைபெற விஷ்ணு இராமா அவதாரம் எடுக்க முடிவானதும், அந்த சாதாரான மனித அவதாரத்தில் அசாதாரண காரியங்கள் எதுவும் இராமரால் செய்ய முடியாது என்பதாலும் சிவபக்தனான இராவணனை சிவாம்சத்தின் உதவியினால்தான் அழிக்க முடியும் என்பதால் அவருக்கு உதவிட 11வது ருத்திர அம்சமாக ஓர் அவதாரம் எடுக்க ருத்திரர் முடிவு செய்தார். ஏனெனில் இராவணன் சிவபெருமானின் அருள் பெற வேண்டி 11 ருத்திரர்களுக்கும் சிர ஆகுதி யாகம் செய்தான். அவனுக்கு பத்து சிரங்கள்தான் இருந்ததால் அவனால் பத்து ருத்திரர்களைத் தான் திருப்திப்படுத்த முடிந்தது. எனவே அந்த 11வது ருத்திர அம்சம் அவன் பக்திக்கு கட்டுப் படாது. அதனால் அந்த 11வது ருத்திர அம்சமாக அவதாரம் எடுக்க சிவன் முடிவு எடுத்தார். அப்போது உமையும் கூட வருவதாகக் கூறினார்.

வானர உருவம்!

வானரவீரன் ஒருவன் ஈசனை நோக்கி தவமிருந்து மகன்வரம் கேட்க இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை இருப்பினும் என்னை நோக்கி தவமிருந்ததால் உனக்கு ஓர் மகள் தருகின்றேன் அவள் மூலம் நீ வேண்டிய பலசாலியான, புத்திசாலியான மரணமில்லாத மகன் பிறப்பான் என்று அருள். அஞ்சனை என்ற பெண்னைப் பெற்றான். அவள் வானர வானர மன்னன் கேசரியை காதலித்து மணம் புரிந்து குழந்தை இல்லாததால் வருந்த தேவதை வடிவான குறத்தி சொல்லியபடி வேங்கடகிரியில் பிள்ளை வரம் வேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தாள்.

எந்த உரு கொண்டு அவதாரம் எடுக்கலாம் என்று சிவபெருமான் நினைத்தபோது அவருக்குத் தோன்றிய உருவம் வானரம். வானரம் என்றால் வீடு வாசல் தேவையில்லை. எந்த பந்தத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எதுவும் கட்டுப் படுத்தாது. உணவு சமைத்தோ அல்லது சமைக்காததோ அதனால் பிரச்சனையில்லை. சக்தி வானரத்தின் வாலாக வர விருப்பம் தெரிவிக்க வானரம் உருவம் கொள்ள நினைத்து சிவன் தன்னை விதைக் கருவாக மாற்றிக்கொண்டார். ஈசனும் தேவியும் வானரங்களாக மாறியிருந்த போது அவர்களால் ஒர்கனி உதிர அதை வாயுபகவான் அஞ்சனையில் கரத்தில் சேர்க்க, தினமும் தன் கைக்கு வரும் கனி என்று நினனத்து உண்ண அதனால் அவள் கருவுற்றாள். நிலை அறிந்த அஞ்சனை வருந்த 'ஈசனின் கரு என அசரீரி ஒலித்து. தன் கணவரிடம் சொல்லி அக்குழந்தைக்கு அஞ்சனையின் மைந்தன் எனப் பொருள்படும்படி ஆஞ்சநேயன் என்று பெயரிட்டாள். இந்த சம்பவம் நடந்த மலை அஞ்சனா பர்வதம்..ஹம்பிஅருகில்,ஆனேகுந்தி-2. கருவிதையை சிவனின் அம்சம் தனக்கு மகனாக வர வேண்டி தவமிருந்த கேசரி மனைவி அஞ்சனையிடம் கனியாக வாயு சேர்த்ததால் வாயு புத்திரன் என்பர்.

சுந்திரன்! மாருதி! ஆஞ்சநேயர்! அனுமன்!

அஞ்சனை மைந்தன் சுந்திரனாகப் பிறந்தார். குழந்தை தூங்க அஞ்சனை இறை வழிபாட்டிற்கு செல்ல விழித்த சுந்தரன் வானில் சொக்கச் செவேலென்று பிரகாசிக்கும் சூரியனைப் பழம் என நினைத்து அதை பிடிக்கத் தாவினார். இந்தக் குழந்தை எங்கே சூரியனைப் பிடித்து விடுமோ என்று அஞ்சிய இந்திரன் தன் வஞ்ராயுதத்தை வீச அது முழந்தையின் முகத்தில் தாக்க முகவாய் சற்றே நீண்டது அதனால் அனுமன் எனப்பட்டார். மருத் என்றால் காற்று. வாயுவின் புத்திரன் என்பதால் மாருதி என்றும் அஞ்சனையின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்பட்டார்.

சூரியனே குரு!

எல்லாவற்றையும் கற்று உலகிற்கு வழிகாட்டியாக இருக்கும் சூரியனைக் குருவாகக் கொண்டு அவர் விருப்பப்படி நகர்ந்து கொண்டிருக்கும் அவரைத் தொடர்ந்து தானும் சென்றே கல்வி கற்றார். சூரியன் ஆஞ்சநேயரை நவவியாகரண பண்டிதர் என்றழைத்தார்.

உச்சநிலை!

மார்கழிமாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். வைணவத்தில் இராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதால் ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்சநிலை ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரே ரூபமாய் திகழும் அனுமன். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு புத்தி, பலம், தைரியம் தந்திடும் வரப்பிரசாதி. ராமதூதனாக ராமபக்திக்கு இலக்கணம் வகுத்தவர்.

அனுமனின் சமயோசித அறிவு: ‘கண்டேன் சீதையை’-

இலங்கைக்குச் செல்ல சமுத்திரத்தின்மேல் பாலம் கட்ட கற்களைப் போட அவை நீரில் மூழ்கின. அப்போது என்ன செய்வது என்று அனைவரும் யோசனையில் ஆழ்ந்திருக்க ஆஞ்சநேயர் முனிவரின் சாபம் பெற்ற தன் நண்பர்கள் நளன், நீலன் என்ற இரு வானரங்களையும் அழைத்து அவர்களைக் கற்களைத் தூக்கிவரச் செய்து கடலில் போடவைத்தபோது அந்தக் கற்கள் கடலில் மிதந்தது. அதன் பின்னர் மிக விரைவாக இலங்கைக்குப் பாலம் கட்டும் பணி நடந்தேறியது. நளனும் நீலனும் சிறுவயதில் விளையாட்டாக ஒருமுனிவர் தின பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை எடுத்து பக்கத்தில் இருந்த நதியில் வீச முனிவருக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஆற்றில் மூழ்கி அந்தச் சாளக்கிராமக் கற்களை எடுப்பதே பெரிய வேலையாயிருந்தது. அதனால் கோபங்கொண்ட முனிவர் இனி நீங்கள் எந்தக் கல்லை நீரில் வீசினாலும் அது மூழ்காது என சாபம் கொடுத்தார். இதை பயன்படுத்தியே நளன், நீலன் உதவியுடன் அனுமானும் மற்றவர்களும் பாலம் கட்டி முடித்தனர்.

இதற்கு முன்னமே சீதையை கண்டிராத அனுமன் இலங்கையில் பார்க்கும் பெண்களை எல்லாம் அழகுடன் தெரிய எப்படி அடையாளம் கணப்போகின்றோம் என திகைத்தார். கயவனால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்ரீராமபிரானின் பத்தினியை அரண்மணையிலோ அந்தப் புரத்திலோ வைத்திருக்க மாட்டார். எங்காவது ஒரு தனி இடத்தில்தான் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று தேடி அசோக வனத்தில் கண்டார். சீதா பிராட்டியரிடம் பெற்ற ஜடைவில்லையைக் கொண்டு வந்தார். மற்ற திசைகளுக்குத் தேடச் சென்ற அனைவரும் எங்கேயும் அன்னை இல்லை என்ற செய்தியுடன் வந்து விட்டனர். இலங்கை சென்ற அனுமன் என்ன தகவல் கொண்டு வருவாரோ என தவித்திருந்த இராமரைக் கண்டதும் முதலில் சீதையை என்று ஆரம்பித்தால் என்னவோ ஏதோ என்று நினைக்கக் கூடும். ஆதலால் வந்ததும் ராமரை வணங்கி ‘கண்டேன் சீதையை’ என்றார்,

கல்யாணபிரம்ச்சாரி அனுமன்!-

அனுமன் பிரமச்சாரி என்பது அனைவருக்கும் தெரியும் அது என்ன கல்யாண பிரமச்சாரி! சஞ்சீவி மலையை வேகமாகக் கொண்டு வரும்போது அந்த வேகத்தால் உடலில் வெப்பம் அதிகரிக்க அந்த வெப்பத்தை தணிக்க அவரின் தந்தை வாயு தென்றலாக அனுமன் உடலைத் தீண்ட வெம்மையில் குளுமை பரவியதும் வியர்வை துளிர்க்க அப்போது அனுமன் கடல்மீது பறந்து கொண்டிருந்ததால் அந்த வியர்வைத் துளிகள் கடலில் சிந்தியது. சமுத்திரத்தில் மீன் உருவில் விளையாடிக்கொண்டிருந்த தேவகன்னி சுவர்ச்ச்சலை அதை விழுங்க அது அவள் வயிற்றில் ஒரு கருவாக மாறியது.

மச்சமாக இருந்தபோது தோன்றியதால் மச்ச குமரன் என அழைக்கப்பட்டு வீரனாகி தன் தாயின் மீன் வடிவினை தனது கொடியில் (த்வஜம்) கொண்டதால் மகரத்வஜன் என்று பெயர் பெற்றான். இராவணின் உறவினனான மயில் ராவணிடம் கோட்டை தலமைக் காவலானகப் பணிபுரிந்து வந்தான். யுத்தம் நடந்த சமயத்தில் மாருதியின் காவலில் இருந்த ராம், லட்சுமணனை மயில் ராவணன் வீபீடனாக வந்து கவர்ந்து சென்று கோட்டையில் அடைத்தான். அவர்களை மீட்கச் சென்ற அனுமன் மகரத்வஜனுடன் போர் புரிந்தான். போர் தொடர்ந்து நடைபெற சிறிது நிறுத்திவிட்டு அவனைப் பற்றி விசாரித்ததில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் மகரத்வஜன் மயில்ராவணன் உயிர் இருக்குமிடமான ஐந்து வண்டுகளைப்பற்றி சொல்ல அந்த ஐந்து வண்டுகளையும் தன் ஐமுகவாயில் போட்டு அனுமன் கடிக்க மயில்ராவணன் இறந்தான். ராம, லசுமணனை அனுமன் மீட்டு வந்தார். இதனால்தான் அனுமன் கல்யாண பிரமச்சாரி எனப்பட்டார்.

சனியின் தொல்லையில்லை!

ராம இராவணான் யுத்தத்தில் வானரப் படைகள் மயங்கிச்சாய, ஜாம்பவானின் ஆலோசனிப்படி சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர அனுமனை அனுப்பினர். அவசரத்தில் சரியான மூலிகையை கண்டு பிடிக்க முடியாத அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தான். அவன் முயற்சியை தடுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ள கிரகம் சனீஸ்வரன் இராவனண் ஏவினான். தன்னைத் தடுத்த சனீஸ்வரனை ஆஞ்சநேயர் காலில் போட்டு மிதிக்க அவரின் பலம் தாங்காமல் சனி அலறி விடுபட வழிதெறியாமல் முழித்து கடையில் இராம நாமம்கூற அதைக்கேட்ட அனுமன் இனி ராமநாமம் சொல்லும் என் பக்தர் எவருக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது என உறுதி மொழி பெற்று சனியை விடுவித்தார். அது முதல் சனிபகவான் அனுமன் பக்தர்களைத் தொந்தரவு செய்வதில்லை.

 அனுமனை சோதித்த ஈசன்!

சிவபக்தன் இராவணனை கொன்ற தோஷம் ராமரைப் பற்ற அங்குவந்த அகத்தியரிடம் இத்துன்பம் நீங்க வழிகேட்க இரண்டரை நாழிகைக்குள் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றார். லிங்கம் கொண்டுவர அனுமன் கைலாயம் விரைய அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் சூரியனை அனுப்ப சூரியனின் வெப்பத்தால் தகித்த அனுமன் சூரியனை விழுங்க முயற்சித்தார். இந்த முயற்சியை கைவிட்டு விடு என்று சொன்ன ராகு பகவானுடன் போர் புரிய, போரில் தோற்ற ராகு ‘உன்னை வழிபடுபவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன், என் தோஷம் அவர்களைவிட்டு நீங்கும் என்று வரம் அளித்தார்.

பின் கைலாயம் சென்று லிங்கத்தை எடுத்துக் கொண்டு வரும்போது சனிபகவான் உன்னை நான் பீடிக்கப் போகின்றேன் அந்த லிங்கத்தை என்னிடம் கொடு என்று அனுமனின் வாலைப் பிடித்து இழுத்தார். சினம் கொண்ட அனுமன் தன் வாலால் சனியை சுற்றி கீழெ தள்ள பூமியில் விழுந்த சனி உன் வால் அறுந்து போகட்டும் என சாபம் கொடுதார். சிவபெருமான் என்பக்தனான அனுமனின் செயலுக்கு தேவையில்லாமல் இடையூறு தந்த நீ உன் பதவியை இழப்பாய் என்றார். சாபவிமோசனம் கேட்ட சனிக்கு திருக்குரங்குக்கா சென்று வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிவாய் என்றார்.

அந்தணர் வேடத்தில் வந்த காலபைரவர் இதைவிட சக்தி வாய்ந்த லிங்கம் சுருட்டப்பள்ளியில் உள்ளது என்றதும் கையிலிருந்த லிங்கத்தை அவரிடம் கொடுத்துவிட்டு சுருட்டப்பள்ளி சென்று லிங்கத்தை பெயர்தெடுக்க முயன்றார். முடியவில்லை. நேரம் கழியவே அந்தணரிடம் கொடுத்த லிங்கத்தையாவது திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சென்றபோது அந்தணர் அங்கு இல்லை. தான் அவரிடம் கொடுத்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது கண்டு வருத்தப்பட்டார். உடனே காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவரச் சென்றார்.

சேதுக்கரையில் இறைவனை நினைத்து சீதை மணற் லிங்கம் செய்ய அனுமன் வர காலதாமதம் ஆனதால் ராமர் சீதை செய்த லிங்கத்தை வைத்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும் போது காசியின் காவல் தெய்வமான பைரவர் என்னுடைய எல்லைப் பகுதியிலிருந்து நீ லிங்கத்தை என் அனுமதியின்று எடுத்துச் செல்லக்கூடாது என தடுக்க இருவருக்கும் போர் மூண்டது. காலபைரவர் தோற்க லிங்கத்தை எடுத்துக் கொண்டு சேதுக் கரைக்கு விரைந்த அனுமனிடம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து வழிபட்டு ராமரின் தோஷம் நீங்கியது என்றார். மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இத்தனை கஷ்டப்பட்டு கொண்டு வந்த லிங்கம் உபயோகமில்லயே என அனுமன் முகம் வாடியது.

அனுமனிடம் நீ கொண்டுவந்த லிங்கத்தையும் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவோம் என்றார். ராமர். சீதை செய்த மணல் லிங்கத்தை தன் ஊரான சித்திரக்கூடத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டால் தன் பாவம் தீரும் என்று நினைத்த அனுமன் மணல் லிங்கத்தை தன் வாலல் கட்டி இழுக்க முயற்சித்தார். எவ்வளவு முயற்சித்தும் முடிய வில்லை. சனியின் சாபப்படி வால் அறுந்தது. நீ செய்த அபச்சாரத்தால் உன் வால் அறுந்தது. அது தீர நீ தல யாத்திரை செல் என்றார் ராமர்.

யாத்திரையின்போது பழவாறு என்ற கணபதி நதிக்கரையோரம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இங்கேயே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு மேலும் இத் தலம் உன் பெயரால் விளங்கும் என அசரீரி ஒலித்தது. அப்போது பார்வதி வயதான பெண் உருவெடுத்து அந்த நதியோரம் லிங்கம் வைத்து பூஜை செய்தார். அங்கு வந்த அனுமன் அவரை வணங்கி தன் சாபத்தை சொல்ல பார்வதி பூஜித்த அந்த லிங்கத்தை அனுமனுக்கு கொடுத்துவிட்டு நீ பூஜை செய் என்றார். அனுமனை சோதிக்க எண்ணிய பெருமான் அந்தனர் வேடம் கொண்டு அனுமனிடம் யாசகம் கேட்டார். தன்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை என்ற அனுமனிடம் உன் இரு காதிலும் உள்ள குண்டலங்களை கொடு என்றார். அதிர்ந்த போன அனுமன் யார் கண்களுக்கும் தெரியாத அந்த குண்டலங்கள் அந்தணருக்கு தெரிகின்றது என்றால் வந்திருப்பது ஈசன் என்றுணர்ந்து வணங்கி தன் இரு குண்டலங்களையும் அறுத்துக் கொடுத்தார்.

மகிழ்வுற்ற ஈசன் சிவசக்தி சமேதராய் காட்சி கொடுத்து அனுமனின் சாபம் தீரவும் வால் பழையபடி வளரவும் இழந்தசக்தி திரும்ப கிடைக்கவும் அருள் புரிந்தார். சிவபெருமான் அனுமனின் காதிலுள்ள குண்டலங்களைப் பெற்றதால் இறைவன்: குந்தளேஸ்வரர்(சு), குண்டலகர்ணேஸ்வரர். இறைவி: குந்தளாம்பிகை. குந்தள நாயகி, ஏலாசௌந்தரி அம்மன் சிவபக்த ஆஞ்சநேய பீடம். சனி, ராகு கிரக தோஷம், பில்லி, சூன்யம் பாதிப்புகள் நீங்கும் தலம். திருகுரக்குக்கா.தி.த-82+அ-39. திருக்குரக்காவல். அனுமன் வழிபட்டது. குரங்கு இனமான ஆஞ்சநேயர் காவல் புரிந்ததால் குரங்குக்கா என்று அழைக்கப்பட்டு திருக்குரக்கா என்று அழைக்கப்படுகின்றது. திருவோண நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரால் லிங்கம் பிரதிஷ்டை- திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் சிறப்பு. அமாவாசையன்று அம்பாளுக்கு ஓமம். அப்பர் -பாடல் பெற்ற தலம்.

அனுமனின் வருத்தம்! எல்லாவற்றிலும் இறைவனின் சந்நித்யம்! ஆன்மீகன் ஆனந்தம்!

ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளையாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான்.

தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா.. நீ என் பக்தன்.. எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன்.. உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். ஆன்மாக்களே எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படாத உண்மைகள். ஆனால் அவைகள் ஒன்றினுள் இருப்பது நமக்குத் தெரியும். தெரிந்த ஒன்றினுள் தெரியாத ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம். பாலில் ஒன்றிற்குள் ஒன்று இருப்பதைப்போலவே எல்லாவற்றினுள்ளும் இறைவன் இருக்கின்றான்.

காற்று மூங்கிலில் மோதும்போது இசை தோன்றுவதில்லை. அதே மூங்கிலில் துவாரம் ஏற்படுத்தி புல்லாங்குழல் ஆனபிறகு அதனூடே செல்லும் காற்று இனிமையான ஓசையை தருகின்றது. அதைப்போன்றே ஆகமமுறைப்படி கட்டப்பட்டுள்ள கோவில்களில் இறைவனின் சந்நித்யம் நிறைந்து அருள் அதிர்வலைகள் இயங்கிக் கொண்டிருப்பதால் கோவில்களுக்குச் செல்லும் ஆன்மீகன் ஆனந்தம் அடைகின்றான்.

சனி-இராகு தோஷம்!

எல்லோரையும் கலங்கச் செய்யும் சனியை கலங்கச் செய்தவர் ஆஞ்சநேயர்.. இதனால் சனி தோசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு பலன் அடைகின்றனர். ராகு-கேது விற்குப் பிடித்த உளுந்தும் சனிக்குப் பிடித்த எள் எண்ணெய்யாலும் தயாரித்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்குச் சார்த்தி வழிபட்டால் சனிராகு இடையூரிலிருந்து உயிர்கள் விடுபடுவார்கள்.

வடைமாலை அலங்கார தரிசன பலன் –சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும் பிணிகள் நீங்கும். வடைமாலை சார்த்தி வழிபடும்போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை மைந்தா போற்றி! அஞ்சினை வென்றாய் போற்றி!
வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி!
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி!

வெண்ணெய் காப்பு!

இராம இராவண யுத்தத்தில் அனுமனுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதைக் கண்ட சீதா அவருக்கு வெண்ணெய் தந்து அந்த காயத்தின்மேல் தடவச் சொல்ல அனுமனுக்கு காயங்கள் குளிர்ந்து ஆறுதல் அடைந்தார். அதனால் வெண்ணெய் தடவுவது அவருக்கு குளிச்சியை ஏற்படுத்தும் என்பதால் வெண்ணெய் காப்பு செய்து பக்தர்கள் நீண்ட ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை.

வெண்ணெய் காப்பு- அலங்கார தரிசன பலன்- நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். முயற்சிகளில் வெற்ரி கிட்டும். வெண்ணெய் காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்ப வாரிம் பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷா ஸாந்தகம்


வெற்றி இலை!

அசோக வனத்தில் இருந்தபோது சீதையை இராம நாமத்தால் குளிரவைத்தார் அனுமன். மேலும் இராமரது கணையாழியைக் கொடுத்து வணங்கினான் அனுமன் அப்போது மகிழ்வுற்ற சீதை அருகிலிருந்த இலையைப் பறித்து அனுமன் தலையில் போட்டு எப்போதும் உனக்கு வெற்றி கிட்டட்டும் என ஆசீர்வாதித்தாள். அந்த வெற்றி இலையே காலப் போக்கில் வெற்றிலை என்றானது. அதனால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுவது பழக்கமானது.

வெற்றிலை மாலை - அலங்கார தரிசன பலன்- சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வெற்றிலை மாலை காப்பு- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அன்னை கை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலை நீயும் எங்ஙனம் கடந்தாய். என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி!

முத்தங்கி சேவை - அலங்கார தரிசன பலன்- ராஜயோகம் கிடைக்கும். முத்தங்கி சேவை - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத
ராம தூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ!

சந்தனக் காப்பு - அலங்கார தரிசன பலன்- செல்வ வளர்ச்சி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். சந்தனக் காப்பு - சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக் படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பலேத்!

மஞ்சள் பட்டு வஸ்திரம் - அலங்கார தரிசன பலன்- சுக்கிர தோஷம் விலகும். பார்வை நலம் கிட்டும். மஞ்சள் பட்டு வஸ்திரம்- சார்த்தி வழிபடும் போது சொல்லவேண்டிய துதி-

அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமோ!

எழுமிச்சைமாலை!

ஆண் தெய்வங்களுக்கு எழுமிச்சைமாலை சர்த்துவதில்லை. ஆனால் அனுமன் சக்தியின் அம்சம் ஆதலால் அவருக்கு எழுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி சூன்யம், திருஷ்டி தோஷங்கள் விலகும்

பூ / துளசி மாலை:

ஆரோக்கியம் பெருகும். நியாயமான சகல காரியங்களும் வெற்றி. சர்வ சம்பத்து சேரும். வாழ்க்கை வசந்தமாகும்.

செந்தூர ஆஞ்சநேயர்!

சீதா தேவி தன் நெற்றியிலும் வகிட்டிலும் செந்தூரம் இடுவதைப் பார்த்த அனுமன் அதன் காரணம் கேட்க, நெற்றியில் வைப்பது சுமங்கலி அடையாளம், வகிட்டில் வைப்பது லட்சுமி சீனிவாசன் மார்பில் வாசம் செய்வதுபோல் எப்போது தானும் ராமரின் இதயத்தில் வசம் செய்ய என்பதைக் கேட்ட அனுமனுக்கு தானும் அப்படி செந்தூரம் இட்டால் ராமனை பிரியாமலிக்கலாம் என்ற நினைவில் நெற்றில் வைக்க தனக்கு அது அழகாயில்லை என்று முகம் முழுவதும் பூச, அதுவும் திருப்தி தராததால் உடல் முழுவதும் பூசிக் கொண்டார். இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு செந்தூரம் சாத்துகின்றோம். செந்தூரம் அணிந்த ஆஞ்சநேயர் சகல நன்மைகளையும் தருவார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்! 

இராம இராவணப் போரில் இராவணன் அழிந்தனால் கோபம் கொண்ட சதகண்டன் என்ற அசுரன் தன்னுடன் போரிட இராமரை அழைக்க அசுரனுடன் அனுமனின் தோளில் அமர்ந்து போரிட்டார். அப்போது மாயாவியான அசுரனிடம் போர் புரிய தனக்கு அனுமதி கேட்ட அனுமன் தன் பலத்தால் அனுமன், நரசிங்கம், கருடன், பன்றி, குதிரை ஆகிய ஐந்து முகங்களை கொண்ட உடலுடன் சதுகண்டனிடம் போரிட்டு அவனை வீழ்த்தினார். அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவர் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

அனுமன் முகம் கிழக்கில்-பகை அழியும், கருடன் முகம் மேற்கில்- எப்போதும் எதிலும் வெற்றி. வராஹர் முகம் வடக்கில்-ஊழ்வினை நோய், விஷ நோய் போக்கும், நரசிம்ம முகம் தெற்கில்-தீராத கடன், பொருள் இழப்பு நீக்கி மனதில் நிம்மதி சாந்தி நிலவும். ஹயக்ரீவர் முகம் மேல்நோக்கி- பில்லி சூன்யம், துஷ்ட தேவதைகள் கெடுதல்கள் நீக்கும், ஆகிய ஐந்து முகங்களுடன் அருள் பாலிக்கின்றார்.

பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களில் தனி சன்னதியிலும் சிவன் கோவில்களில் தூணிலும் அருள் பாலிப்பது வழக்கம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் இடம் பெறும். இவரது சன்னதியில் துளசி பிரதான பிரசாதம்.

ஆஞ்சநேயரை வழிபட்டால், நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்குச்சாதுர்யம் முதலிய நன்மைகள் கிட்டும். நவகிரக தோஷங்கள் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நலம் பெறுவர்.

#####

Read 8633 times Last modified on வியாழக்கிழமை, 07 March 2019 19:59
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]ail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19372908
All
19372908
Your IP: 162.158.78.138
2020-10-25 15:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg