gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 06 June 2018 12:17

சதுர்த்தி திதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

&&&&&


சதுர்த்தி திதி!

திதிக்குரிய விநாயகர்- வீர கணபதி, எள் தானம் செய்து எள்சாதம் சாப்பிடவும். பிள்ளையார் பிறந்த இந்த திதி விநாயகர் பூஜைக்குரிய நாள். சுக்லபட்ச சதுர்த்தியன்று விரதமிருந்து தொடர்ந்து ஒருவருடம் செய்யவும். பால் ஆகாரம் சாப்பிடவும். புரட்டாசி சுக்ல சதுர்த்தியன்று செய்யும் பூஜை சிவா-க்ஷேமம் என்றும், மாசி சுக்ல சதுர்த்தியில் செய்யும் பூஜை சாந்தா என்றும், செவ்வாய்கிழமையுடன் இனைந்துவரும் சுக்ல சதுர்த்தியை சுகா என்றும் சதுர்த்தி விரதம் மூன்று வகைப்படும்.

அங்காரக சதுர்த்தி! சங்கடஹர சதுர்த்தி! மகரிஷி வசிஷ்டர் பரம்பரையில் வந்த பரத்வாஜர் நர்மதை நதியோரம் தவம் செய்து வந்தார். அங்கு வந்த தேவமங்கை நீராடிக் கொண்டிருக்க அம்மங்கையை மோகித்து விவாகம் செய்து ஒண்டு அவந்தி நகரத்தில் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்ததும் அந்த தேவலோக மங்கை தேவலோகம் சென்றுவிட்டால். பரத்வாஜரும் அக்குழந்தையை விட்டு மீண்டும் தவமேற்கொண்டார். தனியே விடப்பட்ட செக்கர்வானம் போன்ற நிறத்துடன் இருந்த குழந்தையை பூதேவி அங்காரகன் எனப் பெயரிட்டு வளர்த்துவர எழு வயது அடைந்ததும் தன் தந்தை பற்றி விபரங்களைக் கேட்க பூமாதேவி அக்குழந்தையை அவன் தந்தை பரத்வாஜரிடம் சேர்க்க அவரிடம் கல்வி பயின்று சகலகலா வல்லவனாக விளங்கிய அவன் சர்வ வல்லமை பெற வெண்டும் என விரும்பியதால் பரத்வாஜர் அவனை கணபதியை நோக்கித் தவமிருக்கச் சொன்னார். அவன் தவத்தைக் கண்டு காட்சி கொடுத்த விநாயகரிடம். சர்வ மங்களமான உருவத்துடன் தங்களை தரிசித்த என்னை மங்களன் என்றும், நான் அமிர்தம் அருந்தி அமரனாக வேண்டும், சதுர்த்தியில் தங்களின் தரிசனம் கிட்டியதால் இந்த நாளை விசேடமாக கொண்டாட வேண்டும், என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வத்தை அளிக்கும் கிரகமாக மிளிர வேண்டும் என்ற வரங்களைப் பெற்றார். -அங்காரக சதுர்த்தி. செவ்வாய்க் கிழமை வரும் அங்காரக சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி ஆனது. நாளடைவில் கிருஷபட்ச சதுர்த்தியை ஏற்று விரதம் மேற்கொள்கின்றனர். அவந்தி நகரில் தனக்கு தரிசனம் கிடைத்த தென்மேற்கில் ஜவாஸியா கிராமம் என்ற இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்- சிந்தாமணி விநாயகர். விநாயகர் உதவியால் விண்ணுலகம் அடைந்து அமிர்தம் உண்டு அமரனாகி கிரகப் பதவி அடைந்தார். உஜ்ஜயினில் உள்ள ஆறு விநாயகர் தலங்களில் இந்த சிந்தாமணி விநாயகர் தலமே பெரியது. சிறப்புடையது. இது அங்காரக சேத்திரம்.

சதுர்த்தி விரதம்/ஆவணி சதுர்த்தி விரதம்- விநாயகர் சதுர்த்தி விரதம்- பார்வதிதேவி தான் குளிக்கும் வாசனைப் பொடிகளால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்த நாள் ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில். அந்த நாளே பிள்ளையார் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகின்றது. பிள்ளையாரை அலங்காரம் செய்வது என்பது அவரவர் வழக்கப்படி என்பது இப்பூஜையின் சிறப்பு.

நைவேத்தியப் பொருள்கள் யானைக்கு பிடித்தமான அரிசி வெல்லம் கொண்டு தயாரித்த கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள் என வைத்து வழிபடலாம். வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி பூஜை அறையில் மாகோலம் போட்டு புதிய பிள்ளையாரை அங்கு வைத்து அலங்கரித்து துதிகள் பாடி தீப ஆராதணை காட்டி வழிபடவும். மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டு சந்திரனைப் பார்க்க வேண்டும். பிறகு பழ ஆகாரங்கள் எடுத்துக்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளவும்.

$$$$$

Read 15250 times Last modified on சனிக்கிழமை, 15 September 2018 20:46
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27087328
All
27087328
Your IP: 3.135.190.101
2024-04-26 19:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg