gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நாம் ஒவ்வொருவரும் உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய சக்தியுடையவர்களாக இருப்போம்.!
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:22

ஞானி செயல்! அவாவறுத்தல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

ஞானி செயல்!

2610. தனமையை அளிக்காத ஐம்புலன்களின் தன்மையை ஆராய்ந்தால் தன்மையைத் தரும் தன் இயல்பை உணர்ந்த தத்துவ ஞானியர் முன் பிறப்பில் செய்த பழவினைகள் வந்து சேருமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். அதன் பின்பு இப்பிறவியில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாமல் அவற்றினின்ரும் நீங்க முயற்சி செய்பவர் ஆவார்.

2611. தன் உண்மையை உணர்ந்த ஞானியர் பழ வினையில் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். தலையின் மீது விளங்கும் சிவனின் திருவருளால் பின் வர இருக்கும் வினையயைத் தோற்றம் எடுக்காமலே அழித்து விடுவர்.

2611. சீவர்களின் மனம் மொழி செயல்களால் வலிய வினை வந்து சேரும். சீவர்களின் முக் கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றியதாகில் வலிய வினை வந்து பற்றும்படி இல்லை. சாதனையால் மனம் சொல் செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாறி அமைத்துக் கொள்ளும் ஞானியாவர்.

#####

அவாவறுத்தல்!

2613. பிராணனையும் சுழுமுனையையும் பற்றிப் பேசியும் பேசுவதுடன் அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருளின் மீது செல்லும் ஆசையையும் மக்கள் மீது செல்லும் ஆசையையும் அகற்றுங்கள். அங்ஙனம் நீங்கியபின்பு இறைவன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்படும்.

2614. சிவபெருமான் வீட்டுச் சுவரின் மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியான் மண்டபத்தில் இருப்பவன் அல்லன். வீட்டுக் கூடங்களில் இருப்பவன் ஆவான். ஆலயங்களில் இருப்பவன் அல்லன். ஆனால் மனத்தில் ஆசையை விட்டவரின் மனத்தில் உள்ளிருந்தபடியே அவரை இயக்கி முத்தி அருளுபவன்.

2615. எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள். இறைவனோடு கூட ஆசையை செலுத்தாமல் கைவிடுங்கள் ஆசை உண்டாக ஆசை உண்டாக அவற்றால் உயிர்க்குத் துன்பம் வரும். ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.

2616. நுண்மையான பூதங்கள் சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்பன. அவை சீவர்களை உலகமுகமாய்த் தூண்டி துன்பப் படுத்துகின்றன. அவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவன ஆதலால் உண்டாகும் பற்றுகளை விட்டு அழித்து ஆசையை விட்டு உண்மையான் ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிமுகப் படுத்துவதாகும்.

2617. நிறைமதியில் பொங்கும் கடல்போல் அளவு இல்லாது அளவின்றிப் பொங்கி உலகை அழிக்கின்ற பல ஊழிகள் சென்றன. இன்ப துன்பமான கடலில் ஆழ்ந்து தேவர் முதலியவர் இறந்தனர். உலகத்தவர் ஆசைக கடலுள் பட்டுப் பிறவியை விடாதவர் ஆயினர். ஆனால் ஈசன் ஆனந்தக் கடலில் நிலையாய் நின்று அருளுகின்றான்.

2618. நெடுங்காலம் நீங்கமல் நின்று இருவினைகளையும் மூன்று மலங்களையும் அகற்றாமல் ஆன செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூயமை பெறுதலும் பின்பு படைப்பு முதலிய ஐந்து தொழில்களையும் நீக்கி அருள் மயமாக்கி ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானியரின் தூய்மையான நிலைகளாகும்.

2619. சீவன் தன் உண்மை வடிவம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்மீது கொள்ளும் ஆசையை விட்டு நின்றால் எண்பெருஞ்சித்திகள் கிட்டும். உறுதியான சிவப் பற்றுடைய ஞானி தன் தேகத்தை நழுவ விடடால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர்.

2620. சீவன் சிவமாக ஆக வேண்டும் என்று இறைவனை அன்புடன் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதி நிலையை அடைகின்றான். என்ற உண்மையை உலகத்தவர் உணரமாட்டார். ஆயின் இச்சீவன் பலவகையான பிறவிகளை எடுத்துப் பல உலகங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக் கொண்டிருப்பதே ஆகும்.

2621. இவ்வுலகம் முழுவதும் துன்பம் தரும் பருவுடலில் விழுவதும் அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிற்வியில் சேர்ப்பதும் ஆகியவற்றைச் செய்யும் நான்முகன் முதலிய ஐவரை அறிவுடையோர் விரும்ப மாட்டார். வெறுப்பைச் செய்கின்ற பருவுடலில் நுண்ணுடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியை அவர்கள் பொருந்தியிருப்பதால்.

2622. மேல் வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தை பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துகு அடிப்படை எது என்பதை அறிய மாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்துள்ள உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழ் உள்ள அக்கினியை மேலே எழும்படி செய்து ஒளிமயமாய்க் கண்டால் முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்குதற்கு மூலகாரணமாய்ப் பொருந்தும்.

#####

Read 71 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

18331618
All
18331618
Your IP: 162.158.79.137
2020-08-04 20:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg