ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி!
#####
அறம் செய்வான் திறம்!
251. தம்மை அறிபவர் சிவபெருமானது திருவடியை வணங்குபவர் ஆவர். தம்மை அறிபவர் அறத்தை மெற்கொள்பவர். தம்மை அறிபவரே சில உண்மை தத்துவங்களை அறிபவர். தம்மை அறிபவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.
252. எல்லோருக்கும் முடியக்கூடியது என்று சொன்னால் அது உணவை உண்பதற்கு முன்னால் இறைவனுக்கு ஒர் பச்சிலை வைத்து வணங்குதலும், பசுவுக்கு ஒருவாய் புல் அளித்தலும், உண்பதற்கு முன்பு சிறிது உணவை பிறர்க்கு கொடுத்து உண்பதும் பிறரிடம் இனிய சொற்களைப் பேசுதலும் ஆகும்
253. அகப்பற்று புறப்பற்று நீக்கிய ஞானியருக்கு அளிக்கும் உணவே அறமாகும் என்று அற நூல்கள் கூறுகின்றன. அவ்வாறிருந்தும் கல்வியால் சிறந்து விளங்கும் மனிதர் எதிர்பர்த்து ஒரு கிணற்றங்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ உள்ள சிவஞானியரை அழைத்து உண்ணச் செய்வதன் பயனை அறியவில்லையே!
254. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி அறிவைப் பெருக்கி அறம் செய்யாமல் இருப்பவரே! செல்வம் வந்த நாளிலும் அறம் செய்ய வில்லை, உலக நோக்கில் விழிப்புடன் இருந்து என்ன செய்யப் போகின்றீர். உடல் எரிந்து அழியும் வரை அறம் செய்யாமல் காத்திருந்து என்ன பயன்.
255. உயிரின் நிலையை அறியாமல், நல்லவர் என்று எண்ணாமல், இங்கு வறுமை உள்ளது என்பது அறியாமல், இளையவர் என்று கருதாமல் வலிமை உடைய உயிரை இயமன் கொண்டு செல்வான். .எனவே காலதேவன் வருமுன் உடலை நிலைக்கச் செய்ய நல்ல தவத்தை செய்வீர்!
256. அகப்பற்றும் புறப்பற்றும் துறந்தவர்க்கு உலகில் எந்த வகையிலும் உறவு இல்லை. இறந்து பட்டவருக்கு உலக இனபமும் இல்லை. இப்பிறவியில் அறம் செய்யாதவர்களுக்கு இறைவன் வழித் துணையும் இல்லை. இவர்கள் அறம் செய்யும் வகையை அறியாதவர்கள்.
257. அறிவை தெய்வமாக மதிக்கும் உயிர்கள் முற்பிறவிப்பில் செய்த தவத்தின் காரணமாக அறம் செய்து மேன்மை அடைவர். உடலே தெய்வம் என்று நினைக்கும் உயிர்கள் தானே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது இயமன் வருவதை அறியாது அழிந்து போவர்.
258. உயிர்களைப் பீடித்திருக்கும் வினையான கடலின்று கரையேறுவதற்கான் தோனியாய் உயிர்க்கும் உயிரின் உறவிற்கும் களைப்பை நீக்கி காகக இரண்டு வழிகள் உள. அழியாப் புகழை உடைய இறைவன் திருஅடியைப் பற்றி அறத்தை செய்வது ஒன்று. மற்றொன்று இல்வாழ்வை நிகழ்தக்கூடிய அறிவு. இவ்விரண்டுமே மறுமைக்கு துணையாகும்.
259. பற்றாய் நின்ற உண்மைப் பொருளை உலகில் குறைகள் ஏதும் சொல்லாதவனாய் அறநெறி தவிர பிற நெறியில் செல்லாமல் இருந்து உய்ர்கள் மற்றவர்க்கு கொடுத்த ஒன்றே துணையாகும். அது சிவம் வழிகாட்டிய முத்தி அடைவதற்கான வழியாகும்.
#####