gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:39

அட்டமாசித்தி!

Written by
Rate this item
(0 votes)


ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

அட்டமாசித்தி!

640. ஒருமித்த மனத்துடன் எட்டு திசைகளிலும் மேலான பொருளாய் விளங்கும் சிவனை அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து அந்த எட்டு திசைகளிலும் அச்சிவத்தை வணங்கி எட்டு சித்திகள் அடைந்து அட்டமா சித்திகளை தம்முள் நிலைப் பெறச் செய்யுங்கள்..

641 தேவர்களின் பண்பிற்கு ஏற்றவாறு வழங்கும் பண்புடைய சிவன் திருவடிகளை அடைக்கலம் என்ற குற்ற மில்லா தூய்மையான பரவெளியைக் கண்டதால் எனக்கு அதைவிட அரிய பொருள் இல்லை. எட்டு பெருஞ்சக்திகளை அருளி எனக்கு பிறவியை நீக்கி அருள் செய்தான்.

642 .குருவின் அருளினால் மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி சிவசக்தியுடன் பொருந்தி குறீவழியாக வெளியே போவதைத் தடுத்து நல்ல சமய்த்தில் தியான முறையின் சாம்பவி, கேசரி முத்திரைகளில் ஒன்றைக் கொண்டு அரிய சிவசக்தியை அடைந்து அதன் பேறாக எட்டு சக்திகளை அடையலாம்.

643. ஆகாசம் முதலிய ஐந்து பூதங்கள் கலை, காலம், மாயை ஆகிய தத்துவங்களில் சேராமல் அகன்ற ஆன்ம அறிவை பொருந்தி நீங்காத சக்தியுடன் சேர்ந்தால் மேன்மையான உடலை பெறலாம்.

644. இருபதினாயிரத்து எண்ணூறு பேதங்களை உடைய கன்ம யோகக் உடல் உழைப்பிற்கானது.. அரிய இவற்றை அட்டாங்க யோகத்தினுள் அடக்கினால் எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்க வல்லவை.

645. சந்திர நாடி இடைகலையில் பன்னிரண்டு அங்குலம் அளவு இழுக்கப்பெரும் மூச்சு பிங்கலை வழி வெளிப்படுதல் நான்கு அங்குல அளவு போக மீதம் எட்டு அங்குல அளவு உள்ளே தங்கும். இதை பன்னிரண்டு ஆண்டுகள் உலகப் பற்றின்றி கவனித்தால் உறுதியான எட்டு பெருஞ் சித்திகளை அடையலாம்.

646. உயிர்களுடைய உறவினர்கள் சூழ்ந்து இருந்தால் அது பந்தமாகும். மிக்க கலை அறிவு, நுட்ப அறிவு, நிறைந்த அறிவு இவற்றினால் எண் பெருஞ் சித்திகளை அடைய முடியாது. பேதமாய் பெருகும் ஒலியை பன்னிரண்டு ஆண்டுகள் கேட்பதே சித்தியை அளிக்க வல்லது.

647. நாத தரிசனம் கிட்டப்பெற்றவர் ஏழு ஆண்டுகளில் சண்டமாருதம்போல் செல்லும் வேகத்தை அடைவர். நடை தளராமல் பல மைல்கள் செல்லும் வலிமையை அடைவர். எட்டாம் ஆண்டில் நரை மூப்பு தோன்றாது. அடுத்த ஆண்டில் அயல் உடல் புகுதல் நிகழ்த்தலாம்.

648. பத்து ஆண்டுகள் கீழே போகும் சக்தியை மேலே நிரப்பியிருந்தால் உருத்திரன் போல் விளங்கலாம். பதினீராண்டில் எட்டு சித்திகளும் ஏற்படும்.மேல் கீழ் உலகங்களில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்தவராக பன்னிரண்டாண்டில் விளங்குவர்.

649. தானே அணிமாவும், பெரிய மகிமாவும், கனமான கரிமாவும், இலேசான இலகிமாவும், அழியாத உடலைப் பெறுதலான பிராத்தியும் அயல் உடலை அடையும் ஆற்றலான பிராகாமியமும் உண்மையான ஈசாத்துவமும். தன் வயம் செல்லும் தத்துவமும் ஆகியன எட்டு சித்திகள்.

650. சிவயோகியானவன் அணுவின் தன்மையை அடைந்து பல உயிர்களைத் தாங்கிய காலத்தும் அவற்றை ஒடுக்கிய காலத்தும் மாற்றம் ஏதுமில்லை. சித்திகளை உடைய அவற்றுள் அப்போது மேல் எழுந்த ஓம் என்ற நாதம் சகசிர தளத்தை அடைந்து மேலே எழுந்து சென்ற விதமே முக்தி அடைந்தாகும்.

651. கதிரன் தோற்றம் முதல் முந்நூற்று அறுபது என்பது பகல் முப்பது நாழிகை ஆகும். பகற் காலத்தில் படைப்புக் கிராமம் ஆகாசம், காற்று, தீ, நீர், நிலம் எனவும் இரவுக் காலத்தில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் எனவும் அறிந்து விடியலில் கதிரவன் தோற்றத்திற்குமுன் ஆறு நாழிகையும், பின் ஆறு நாழிகையும் பிரணவ யோகத்திற்கு பயன்படுத்தி கொப்பூழ் தாமரையில் உள்ள கதிரவனைத் தலைக்கு கொண்டு போனால் விந்துவும், நாதமும் அமைவதை அறிவர்.

652 மனம் வெளியில் செல்லாமல் மாறுபட்டு சிவமாகி முக்தியை ஆராய்ந்து அடைந்த பிரணவ வழிபாட்டால் சிவனுடன் கூடிய முத்தர் ஆவர். ஐம்பொறிகளுக்கும் தொடர்பில்லாதவர்கள் ஆதலால் மனத்தூய்மை பெற்று. அறிவு என்ற வானத்தில் தத்துவம் யாவற்றையும் விட்டு சிவத்துடன் பொருந்தியிருப்பர்.

653. ஒன்றை ஒன்று மிகாமலும் குறையாமலும் ஒன்பது (பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன்) வாயுக்களும் இயங்க வேண்டும்.. இந்த ஒன்பதைத் தவிர பத்தாவதான தனஞ்சயன் என்ற காற்று ஒத்து இயங்கும் தன்மையிடையது. ஆதலால் இந்த ஒன்பது வாயுக்களுடன் தனஞ்சயன் கூடியிருந்தால் உடலும் உயிரும் நீங்காது இருக்கும்.

654. தனஞ்சயன் வாயு மற்ற வாயுக்கள் உள்ள ஒன்பது நாடிகளில் (இடைகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புசை, சங்கினி, குரு) பொருந்தியிருக்கும்.. அது இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமான அகந்தை மண்டலத்தில் பொருந்தியிருக்கும். அது இல்லாவிடில் உடல் வெடித்துச் சிதறிவிடும்.

655. உடலில் வீங்கும் கட்டி, புண், குட்டம், வீக்க நோய்கள் ஆன சோகை, காலில் வாதம், கூன், முடம், கண்ணில் பொருந்தி வீங்கும் நோய்கள் ஆகியவை தனஞ்சயன் மாற்றத்தால் ஏற்படுபவன

656. கண்களில் உண்டாகும் ஆணிகள் என்ற பூக்க்கள், காச நோய் ஆகியவை தன்ஞ்சயன் வாயுவால் ஏற்படுவதில்லை. கூர்மன் என்ற வாயு பொருந்தியிருக்காவிடில் கண் நோய் உண்டாகும்.

657. கண்கள், இருதயம் ஆகியவற்றில் நாடியின் ஓசை விளங்கும். சிறு துடி அளவிற்கு ஒலியை உண்டாக்கும் சுடரான பேரொளியை தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், திருமால், நான்முகன் ஆகியோர் இடைவிடாமல் அங்கே பொருந்தி உணர்ந்திருப்பர்.

658. இருகண் துளைகள், இரு காது துளைகள், இரு நாசித்துளைகள், ஒரு வாய்த்துளை ஒரு குதம், ஒரு குய்யம் ஆகிய ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் இடைகலை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய இடம் சுழுமுனையாகும், அவை அங்கு தங்கியிருக்க தவம் செய்ய வல்லவர்க்கு உடல் நன்மை அடையும்.

659. சிறந்த குண்டலியான தீயின்கீழ் சுழுமுனை நாடியை செல்லும்படி செய்து கதிரவன் –இடதுகலையில் இயங்கும் பிராணனை சந்திரன் வலதுகலையில் செல்லும்படி செய்து ஏழு உலகங்களையும் தாங்கும் வையில் யோக நெறிய்யை அடைவர்.

660. பிரமந்திரத்தால் விளங்கும் சிவசக்தியை நாடி வலையில் அகப்பட்ட மானைப் போல் சந்திரகலை சூரியகலையில் செல்லாது மூச்சுக் காற்றை சுழுமுனையில் செலுத்தினால் விலைக்கும் உண்பதற்க்கும் சேர்த்து வைத்த விதைபோல் பயன்படுவர்.

661. மூலாதரத்திலிருந்து மேலே சென்று சகசரத/ளத்தில் சிவமான பொருளைக் கண்டு வணங்கியவர் அங்குள்ள நாடியில் உள்ளே நாதத்தை எழுப்புவர். அங்கே உண்டாகும் அமுதத்தை உண்டு உடலில் உள்ள காம குரோதம் முதலிய பகைவர்களைச் சிறைப்படுத்துவர்.

662. சகசிரதளத்துடன் கட்டப்பட்ட சுழுமுனை நாடியில் உயிர்களை உலகில் பிறவிக்கு ஆட்படுத்தி தொழில் செய்யும் ஒன்பது (வாமை, சேட்டை, காளி, ரௌத்திரி, கலவிகராணி, பலவிகராணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி) சக்திகள், உயிர்கள் பக்குவப் பட்டால் தன் செயல் அற்று சக்தியுடன் பொருந்துவர். அச்சமயத்தில் மூலாதரத்தில் இயங்கிக்கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரம் வழி ஆக்ஞை சக்கரத்தை அடையும்போது முழு சக்தியாய் விளங்கும்.

663. பராசக்தியே ஏழு கண்னியராய் இச்சா, ஞானம், கிரியை ஆகிய சக்திகளால் இருபத்தொருவர் ஆகி அவர்கள் ஐந்து தொழிலுக்கும் நூற்றுஐந்து கன்னியர் ஆயினர், திருமால், நான்முகன், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்ற ஐவருக்கும்தொழிலாற்றக் காரணமாகி இருப்பாள் பராசக்தி.

664. vவிரிந்து நின்ற பராசக்தி ஒடுங்குயபோது பலவித போகங்களை விளையும்படி செய்வாள். மறைந்து சிவத்துடன் நின்று பின் ஒடுங்கியிருந்தால் பூமி முதலிய பூதங்களும் ப்ரவி பின் ஒடுங்கி விடும். தீ மேல் எழும் நாதத்தால் ஓங்கி விளங்குவாயாக.

665. நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடைகலை, பிங்கலை அடைபட்டு சுழுமுனை திறக்கும்,. மூச்சு மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சக்திகளும் நீங்கிச் சந்திர மண்டலத்தில் புருவத்தின் நடுவில் விந்துத் தானத்தில் அடங்கும்.

666. மனது ஒருமை அடைந்து ஒடுங்கி புருவத்தின் நடுவில் இருந்தால் மூச்சுக்காற்று கட்டுப்பட்டு நிற்கும். வெளி நோக்கம் இல்லாது அக நோக்கம் கொண்ட உயிர்க்கு கடமை செய்ய பெருமான் தன்னையே அறியச் செய்வான்.

667. சுழுமுனை பாயும் இடத்தில் நாத ஒலியுடன் சென்று அங்கு நிலை பெற்றுள்ள சிவசக்தியை சேர்ந்து மனதில் உள்ள இருள் என்ற பகைவனைக் காட்டும், சுழுமுனையே தூண்டா விளக்காக அமையும்.

668. அணுவில் அணுவாதல், பெரியதில் பெரியது ஆதல், அசைக்கமுடியாத கனம் ஆகுதல், புகைபோல் இலேசாகுதல், மேல் உள்ள வானைத் தொடுதல், எல்லா பூதங்களிலும் கலந்து எழுதல், உயிர்களுக்கு கருத்தா ஆகுதல், எல்லாவற்றையும் வசியம் செய்து தானாக இருத்தல் ஆகிய எட்டுமே அணிமா முதலான சக்திகளாகும்.

669. அட்டாங்க யோகத்தால் மூச்சுக்காற்றை அடக்கி ஆண்டால் எண்பெரும் சித்திகளும் சித்தியாகும். மூலாதாரத்தில் உள்ள குண்டலியானது சுழுமுனை வழி போய் அக்னி, சந்திர மண்டலம் கடந்து மேல் உள்ள சந்திர மண்டலத்தில் அமுதத்தை உண்ணலாம்.

670. அட்டாஙக யோகத்தால் பெருஞ்சித்திகள் எட்டு மட்டுமின்றி ஞானங்கள் எல்லாம் வெளிப்படும். எண் வகையான சித்திகளும் தானேயான திரிபுரைச் சக்தி அருளினால் இயல்பாகவே சித்தியும் புத்தியும் உண்டாகும்.

671. எட்டி சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானம் கைவரப்பெற்றால் அவர் சித்தர் ஆகலாம். அவர்கள் சிவலோகத்தை அடைந்தால் அவர்களின் விரும்பும் பொருளான சிவத்தை கண்டு அவருடன் சேர்ந்திருப்பர்

672. சிரசில் சந்திர சூரிய கலைகளை மாற்றி அடித்த தளையைப் போன்று சுழுமுனையை ஆக்கி, விந்துவின் நிக்கம் இல்லாது இருப்பவர்க்கு நரம்பில்லாத பிரணவ உடல் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர். அந்த உலகத்தில் அணிமா முதலிய எட்டு சித்திகளை அடைவர்.

673. விந்து சேர்த்து வைத்து ஓர் ஆண்டு யோக முயற்சியில் இருந்தால் புக்ழ்மிக்க அணிமா என்ற சித்தி கிட்டப்பெறும். அது கைவரப்பெற்ற சித்தனும் நுட்பமான பஞ்சைவிட நுட்பமாய் மெலிந்து இருப்பவனை வெல்ல முடியாது.

674. ஆக்கத்தை தரும் பராசக்தியுடன் மூலாதாரத்தினின்று மேலே போகும் எல்லாத் தத்துவங்களும் அந்த சக்தியே ஆதாரமாய் இருந்து செல்லும் காலத்தில் தனது வயப்பட்டு இருந்தால் ஐந்து ஆண்டுகளில் ‘இலகிமா’ வசப்படும்.

675. இலகிமா என்ற சித்தியைப் பெற்று இறைவனைக் கண்டபின் தானே ஒளியாய் விளங்கி அந்த ஒளியுடன் திகழ்ந்திருப்பான். பால் ஒளியாக பரவி நின்ற ஆன்மா எல்லாவற்றிற்கு மேலான சிவபரம் பொருளைத் தரிசிக்கும்..

676. மெய்ஞானம் உணர்த்திய அருட்சக்தியோடு தத் எனப்படும் சிவம் கூட மறைந்த பொருளாகிய மகிமா ஓர் ஆண்டில் உள்ளங்கையில் உள்ள பொருள் போன்று கிட்டும்.

677. இடகலை பிங்கலை என்ற நாடிகளுடன் சேர்ந்த சுழுமுனை தலையில் மேலே சென்று அங்குள்ள ஒளியைக் கண்டபின் ஆகின்ற காலங்கள் அழியாது. இனி வரப்போகும் காலத்திற்கு வெளியே நின்று மற்ற தத்துவங்களை தன் வ்ழியாக்கும்.

678. மகிமா சித்தி பெற்றவனால் ஞானம் தழைத்திடும். உலகம் துயர் நீங்கிச் செழுமை அடையும். தன் வாயிலாக செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வயப்பட்டு நிற்க அவன் சிவனருள் வசப்பட்டு நிற்பான்.

679. பராசக்தியுடன் தூலமாய் காணப்படும் பொருள்கள் யாவும் நுண்மையாய் ஒடுங்கி நிற்கும். அந்த நுண்ணிய ஒளிப் பொருள்களை கண்டு ஓர் ஆண்டு தாரணை செய்தால் அதன்மூலம் சித்தி ஏற்பட்டு வேண்டியதை அடையச் செய்யும்.

680. மின் ஒளியைக் கண்டபின் விரிந்த ஆயிரம் இதழ் தாமரையில் உலகப் பொருள்களின் விரிவைக் காணலாம். அப்போது பொருந்தும் கால தத்துவம் புரம்பாக நிற்கும். கழிகின்ற காலங்கள் கழிந்து போகாது.

681. மின்னொளியைக் கண்டபின் எங்கும் போக வேண்டியதில்லை. வருவதும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதலால் பிறப்பும் இல்லை. தாமதம், இராசதம், சாத்துவிகம் ஆகிய மூன்று குணங்கள் இல்லை. உண்மை உணர்வதற்கு பிரமந்திரத்தின் உள் தொளையான சுழுமுனையில் விளங்கும் பலவகை ஒளிகளையும் அறியலாம்.

682. பராசக்தியுடன் ஆன்மா பொருந்தியிருந்தால் தத்துவக் கூட்டங்களை அமைக்கும். பூதக் கூட்டங்கள் நீங்கும். உள்ளம் ஒருமையுடன் பராசக்தியைச் சேர்ந்து இருந்தால் பரந்த அயல் உடல் புகுதல் யோகிர்க்கு அமையும்.

683. ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் கூறும் ஒளி இருப்பதை அறியாதவர்கள் மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர் ஆவார். அதனை ஒலி ஒளியாக தரிசித்திருப்பவர்க்கு சிரசிற்குமேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடு பேறும் எளிதில் கிட்டும்.

684. உயிர்களிடம் நிலை பெற்றிருக்கும் சிவ சக்தியுடன் நுண்ணியமாக புலப்படும் ஒளி அணுக்கள் எல்லாம் தலைக்குமேல் உள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளியாக பாய்வதை ஓராண்டு செய்தால் பழைய உடலில் பொருந்தி உள்ள சதாசிவ தத்துவம் அடையப் பெறுவர்.

685. வளரும் சக்தியின் ஒளியை நடு நெற்றியில் அமையப் பெற்றவன் சந்திரன் போல் தன்மையுடையவன் ஆவான். வளரும் சந்திர கலை முழுவதும் பெற்று விட்டால் சந்திரகலை விளங்கப் பெற்ற சிவன் சதாசிவ நிலையைப் பெற்றவன் ஆவான்.

686. ஈசத்துவம் பெற்றவர் படைப்புத் தொழிலைச் செய்ய வல்லோர் ஆவர். அவரே காத்தலைச் செய்பவர். அவரே அழித்தலையும் செய்யும் வல்லவர். அவரே தமக்குத் தாமே நிகரான தன்மையுடையவர் ஆவர்.

687. குளிந்த கதிர்களுடன் கூடிய சந்திர கலையில் விளங்கும் பலவகை பஞ்ச பூத அணுக்களை ஓர் ஆண்டு காலம் வேறு வேறாக காணாமல் பால் வண்ணனின் நீல ஒளியைக் கண்டால் ஆன்மா சிரசின் மேல் ஒளியாய் விளங்கும்.

688. உண்மைப் பொருளாய் தாரணை முதலியவற்றால் உண்டாவது நல்லது என்று பாராட்டப்படும் கவர்ந்திடும் தனமையாகும். தன் விருப்பின்படி நடக்கும் உயிர் இனத்திற்கு எல்லாம் சிவமான தன்மையுடையவன் ஆவான்.

689. சிறப்பாகச் சிவத்தனமை பெற்ற சித்தன் நுண்மையானதாகிய தன் ஆன்மாவை அறிந்து பொன்னொளியுடன் கூடிய உடலைப் புலன்களின் குறும்புகளின்று விடுபட உலகிற்கு நன்மை செய்யும் சதாசிவ நாயகியைக் காண்பான்.

690. நல்ல கொடியைப் போன்ற நன்மையைச் செய்யும் சதாசிவ நாயகியுடன் அக்கொடி போன்ற சக்தி தன்னிடம் ஓராண்டு நிலை பெறுவதற்கு தியானம் செய்பவன் பொன்னொளி என்ற உலகங்களில் நினைத்த போது சென்றுவருகின்ற காமேசுவர தன்மையை அடைவான்.

691. யாவற்றையும் தன்வயப்படுத்தும் தன்மை வந்தபின் ஆயிரம் இதழ் தாமரையில் தங்கியுள்ள உருவான ஒளிகள் அதனதன் தன்மைக்கு ஏற்ப புவனங்களாய் ஆகிவிடும். அருட்சக்தியானது வாசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சக்தியுடன் வேறுபாடின்றி வாக்கு ரூபமான ஒளித்தனமை பெற்று நாயகானாய் விளங்கும்.

692. நாயகன் தன்மையுடைய சிவப்பேரொளியைத் தரிசித்தபின் அந்த ஒளியை தாய் வீடாக நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பான். எல்லா உலகங்களையும் போய்க் கண்டவன் உடலுள் பேய்கள் போன்ற காமம் குரோதம் ஆகியவற்றுடன் வாழும் மற்ற உலகங்களுக்கு சித்தி அடைந்தவன் செல்ல விரும்பமாட்டான்.

693. பேரொளியான இறைவனை உலக ஒளியைக் காண்பது போல நடுக்கம் இல்லாது கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விஷ்வ வியாபியாக ஒரே ஒளியாக பிராண ஒளியைக் காண்பான்.

694. சுழு முனையில் மின் ஒளிபோன்று விளங்கும் பராசக்தியின் ஒளியுடன் நின்று அதற்கு தொடர்புள்ள ஐநூற்றுப்பதி மூன்றிலும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை. ஆகியவற்றில் சுழுமுனை இடைகலை பிங்கலையுடன் அனுசரித்து நிற்கும். இடைகலை, பிங்கலை, காந்தாரி, அத்தி, புடை, சிங்குவை, சங்கினி, பூடா, குரு, சரஸ்வதி ஆகிய பத்து நாடிகளும் இந்த பத்து நாடிகள் வேறு ஐநூறு நாடிகளுடன் கலந்து ஆகமொத்தம் ஐநூற்றுப் பதிமூன்று) கலந்து நிற்கும். அதாவது சுழுமுனையின் ஆளுமை ஐநூற்றுப் பதிமூன்று நாடிகளிலும் உள்ளது.

695. அமிர்தத்தைப் பெருக்கும் தலையில் நிரோதினி கலை உள்ளது. அமுதத்தைப் பெருக்கி மாற்றம் செய்வதற்கென உள்ள ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் வழியே மேல் நிலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரைக்குச் செல்ல வழியாகும். இந்த வழியைக் கொண்டு உயிரை வளர்ப்பது சிவசக்தி இர்ண்டாகும்.

696. சிவ தத்துவத்தில் சுத்தவித்தை மகேசுவர தத்துவத்திற்குமேல் சதாக்கியத்தில் இருக்கும் மனோன்மணியான சதாசிவ நாயகி இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் வழி தலைக்குச் சென்று விளங்கும். இரு நாடிகளும் ஆயிரம் இதழ் தாமரையை அடைந்து விரியுமுன் ஐம்பத்தொரு எழுத்துக்களாய் உணர்த்தப்பட்டு ஆதாரங்களை கடந்து உருவாகி இருக்கும். யோகியின் காலத்தைக் கடக்கச் செய்வது ஐந்து முகம் கொண்ட சதாசிவநாயகி ஆகும்.

697. பத்து திசைகளும் பத்து முகங்களும் உடைய சதாசிவ நாயகிக்கு பிராணன் முதலிய பத்து காற்றுகளும் பத்துக் கருவிகளாகும். ஐந்து முகச் சக்திக்கு இவைகளின்றி கவிழ்ந்த ஆயிரம் இதழ் தாமரை நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரை என்ற இரண்டும் கருவிகளாகும். இந்த சதாசிவ நாயகியின் ஆற்றலானது விரிந்த ஆயிரம் இதழ் தாமரையில் விளங்கி திக்குகளையும் காற்றுகளையும் கடக்கத் துணை செய்யும்.

698. எங்கும் பரந்துள்ள பராசக்தி சுழுமுனை நாடியில் பொருந்தி செல்லும் வகை யாதெனில் கவிழ்ந்த தாமரையை விரிந்த தாமரையாக மாற்றி அமைத்துக் காலத்தில் விளங்குபவளாகவும் காலத்தைக் கடந்தவளாகவும் விளங்குவாள்.

699. தலையின் முன் பக்கத்தில் இருக்கும் நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரையில் உள்ள பராசக்தியுடன் முன் செல்லும் வாயுவானது, ஐம்பதொரு எழுத்துக்களுடன் ஆறு ஆதாரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஐமுகச் சக்தி பராசக்தியாகி முன்னர் இருந்த காற்று அடங்கும் நிலயை அடையும்

700. ஆராய்ந்து அளவிடமுடியாத ஒப்பில்லா பராசக்தியுடன் காற்றின் அளவை ஆராய்ந்து அறிந்தால் அந்தக்காற்று ஒரு நாளைக்கு ஐநூற்று முப்பதொன்றாய் குறைந்து ப்ராசக்தியுடன் ஒன்றாய் கலப்பதால் மூச்சு நீண்டு மெல்ல விடுவதால் ஆயுள் நீடிக்கும்.

701. செல்வமாக விளங்கும் ஒளிமண்டலத்தை தாண்டி இருக்கும் சிவனிடத்து செல்வமாய் இருக்கும் மூச்சுக் காற்று இயங்கும் தன்மையில் இருநூற்று முப்பத்ட்டாகக் குறைந்து பிரணவத்தை நடத்தும்.

702. மூலாதாரத்திலின்று எழுகின்ற பேரொளியுடன் இருக்கும் பராசக்தியிடம் சுழுமுனை வழி பாயும் மூச்சுக் காற்று நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்தில் இருக்கும் தீயே பேரொளியாய் மாறி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளிலும் கலந்து இருக்கும்

703. ஆறாம் கலையான நிரோதினி சக்தியை நெற்றியின்மேல் பாகத்தில் தியானித்தால் புகை போன்ற நிறம் தோன்றத் தொடங்கி ஏழாம் சந்திரகலையைப் பெருக்கி யோகியை இரண்டு மடங்கு ஆனந்தத்தில் மூழ்கச் செய்து எட்டாம் இடமான நாதாந்தத்தில். மனம் எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றி ஒன்பதாம் நிலையான சக்தி கலையில் உடலை இய்க்கிவந்த மூச்சுக் காற்று அடங்கும்.

704. சந்திரன், சூரியன், ஆன்மா மூன்றும் விளங்கும் நிமிர்ந்த ஆயிர இதழ் கமலத்தில் சந்திரகலை இருப்பதை உணர்ந்து உலகில் உயிர்வாழும்போதே சிவ ஒளியுடன் சீவ ஒளியைச் சேர்த்து சமாதி நிலையில் இருக்கும் யோகி சுழுமுனை உச்சியில் உணர்ந்து உணர்ந்து சிவம் என்ற நிலையை அடைவான்.

705. ஆசை அழிதல், சுற்றத்தவாரிடமிருந்து விலகியிருத்தல். பணிவைத்தரும் சிவஞானம், பதிஞானம் மிகுதல், சுருங்குதலைஉடைய வாயினர் ஆதல், பேச்சு அடங்குதல், சித்தி பெறுதல், தொலைவில் நடப்பதைக் கேட்டல், நுண்மையாக மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல் ஆகியவற்றை யோகியர் அறிவர்.

706. இறப்பு மூப்பு ஆகியவற்றைக் கடத்தல், அயல் உடலில் புகும் ஆற்றலைப் பெறுதல். பாதுகாப்பான பிரணவ உடலைப் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவ சூரியனை பற்றிய கேள்விஞானம் அடைதல் ஆகியவற்றையும் யோகியர் அறிவர்.

707. கடலால் சூழ்ப்பட்ட உலகத்தை வலமாய் சுற்றி வந்து கால் வருத்தம் அடைய தல யாத்திரை செய்வதால் பயன் ஏதுமில்லை. அன்புடன் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைபவர் தலைவன் எங்கும் இருக்கின்றான் என நினைத்து வழிபட்டு பயன் அடைவார்.

708. மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நான்முகனும், மணிபூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும், இருக்க அதற்குமேல் நெற்றிமுதல் தலை உச்சிவரை பரந்துள்ள சிவ அம்சமான சதாசிவனும் சதாசிவ நிலைக்கு மேல் உள்ள பரநாத நாதாந்தமும் கடந்து அருள் வழங்குவது சிவசக்தி.

709. ஆறு ஆதரங்களுக்குரிய தேவதைகளுடன் பொருந்தி பரை பொருந்தும் பரனோடு மேதை முதலான பதினாறு கலைகளின் பிரசாத நெறியின்மேல் விளங்கும் ஒளியில் வாக்கும் மனமும் இறந்து எண்ணம் அற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகம்.

710. சந்திரகலை, சூர்யகலை பொருந்தியுள்ள சுழுமுனையின் உச்சியில் சிவனைத் துதித்து வணங்கினால் தேவர் ஆகலாம். பிரசாத நெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிப் போகின்ற அடியார்க்கு நிலைத்த முக்தியை அளிக்கும் இறைவனும் அருள் செய்வான்.

711. உயிர்ப்பு நிலைக் கட்ட வல்லார்கள் எங்கும் மறைந்து நின்று இருக்க வல்லவர்கள். தேன் மிக்க தாமரை சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை ஏற்படுத்தி உச்சித்துளையில் மோதும்படி செய்து ஐம்பொறியறிவு நீங்கி சுழுமுனையிலே நின்று அங்கு நடம் புரியும் சிவனை அறிந்தவற்கு யமன் இல்லை.

#####

Read 1470 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:13
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24892351
All
24892351
Your IP: 44.201.94.236
2023-04-02 13:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg