gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தர்மத்திற்கு சாபம்!

    மாண்டவ்யமுனி யோக தியானத்தில் இருந்தார். திருடர்களைத் தேடிக்கொண்டு அவ்வழி வந்த காவலர் தலைவன், முனிவரைப்பார்த்து திருடர்கள் இந்தப்பக்கம் வந்தனரா எனக்கேட்டான். மாண்டவ்யர் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் எதையும் செவியுறவில்லை. திருடர்களைத் தேடிய காவலாளிகள் அருகில் ஓர் ஆசிரமம் இருக்ககண்டு அதனுள் சென்று தேடினர். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்கள் அங்கே இருக்க அதைக் கைப்பற்றினர். ஆசிரமத்தின் பின்னால் ஒளிந்திருந்த திருடர்களையும் கைது செய்தனர்.
    காவல்கார தலைவனுக்கு ஒரு சிறிய சந்தேகம். அந்த முனிவர்தான் இந்த கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்தான். மன்னரிடம் தகவல் அளித்தான். மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார்.
    மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்டார்.
   தர்மதேவதை நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறியதைக்கேட்ட மாண்டவ்யருக்கு கோபம் உச்சத்தை அடைந்தது. இது அநியாயம். அறியா பருவத்தில் செய்த தவறுக்கு இந்த கடுமையான தண்டனை அளித்த தர்மதேவதை பூமியில் மனிதப் பிறவி எடுக்க சாபம் கொடுத்தார்,
    அதன்படி பூமியில் பிறந்தவரே விதுரர். அவரின் உபதேசங்கள்தான் விதுரநீதி என்பதாகும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

கோபம்.!

    ஆற்றின் இரு கரையிலும் ஆசிரமங்கள். ஓர் இளைஞன் அக்கரையில் உள்ளவரிடம் ஆசி வாங்க விரும்பினான். அவனைப் பார்த்த இக்கரையில் இருந்தவர் அக்கரைக்கு செல்லும் காரணத்தைக் கேட்டார். அந்த இளைஞன் அவரை என் குருவாக மதிக்கின்றேன் அதனால் அவரிடம் ஆசிபெறச் செல்கின்றேன் என்றான்.
    உடனே இந்தக்குரு அந்தக் கரையில் இருப்பவன் ஒரு குருவே அல்ல. அவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைப்போல் நீரில் நடக்க முடியாது. வானத்தில் பறக்க முடியாது. அங்கே போய் அவனிடம் நீ என்ன கற்றுக் கொள்ளப்போகிறாய் என சினத்துடன் கூறினார். நீ முட்டாளாக இருந்தால் அங்கே போ என்றார்.
    அந்த இளைஞன் நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அவரால் சாதனைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அவர் கோபப் படமாட்டார். அது உங்களால் செய்ய முடியாதது. எனவேதான் நான் அவரை குருவாக ஏற்றுள்ளேன் என்றான். குரு சிந்தனையிள் ஆழ்ந்தார்.
   நீரில் நடப்பதைவிட, வானில் பறப்பதைவிட கோபப்படாமல் நடப்பதுதான் அதிசயம் எனக்கூறி அக்கரைக்குச் சென்றான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உபதேசங்களின் பயன்!

     அந்த ஊரில் அவரே பெரிய செல்வந்தர். தனவான். அவர் ஒருநாள் ஒரு ஞானியைச் சந்தித்தார். சுவாமி, என்னைக் காப்பாற்றும்படியான ஒரு உபதேசம் கூறுங்கள் எனக் கேட்டுப் பெற்றார். அவர் சொன்னது, ‘எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை ஒருமுறைக்கு மூன்றுமுறை தீர ஆலோசித்து, உன் மனசாட்சிக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அதைச் செயல்படுத்து’ என்பதாகும். செல்வந்தருக்கு அந்த வாக்கியம் மிகவும் பிடித்திருந்தது. அதை அவர் தன் படுக்கை அறையில் எழுதிவைத்தார்.
    அந்த ஞானியின் தர்ம செலவினங்களுக்கு சில லட்சங்களை நிதியாக அளித்தார். செல்வந்தர் இப்படி செலவு செய்வது அவசியமில்லை, பணத்தை விரையம் செய்கிறார் என அவரின் சொத்துக்குக்கு வாரிசுகளில் ஒருவர் நினைத்தார். தன் பங்கில் பணம் குறைகிறதே என்ற வருத்தம் அவரை ஓர் தீச்செயல் செய்ய தூண்டியது. சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தார்.
    அப்போது செல்வந்தர் நோய்வாய்ப்பட்டார். நோய் குணமாகாததால் அடிக்கடி வைத்தியரை மாற்றினர். ஒரு வைத்தியர் செல்வந்தருக்கு மருந்து கொடுக்கும்போது சுற்றும் முற்றும் பார்த்து இடுப்பில் மறைவாக வைத்திருந்த குப்பியை எடுத்து கலக்கினார். செல்வந்தருக்கு கொடுக்க நினைக்கும்போது அவர் அறையில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்தார்.
     அதைப் படித்ததும் தன்னை யாரோ கவனிக்கின்றார்கள் என்ற பயம் வந்தது. தன் செயல் பாட்டின் விளைவுகளை யோசிக்காமல் செய்து விட்டோமோ என்ற நினைவு வந்தது. மனசாட்சிப்படி ஒரு வைத்தியர் இப்படி செய்வது சரியில்லை என்ற நினைவும் சேர பதட்டத்துடன் சென்று முன் தான் கலந்து வைத்திருந்த மருந்தை எடுத்துக் கொட்டிவிட்டு, வேறு மருந்தைச் செல்வந்தரிடம் கொடுத்தார்.
     இவர் செயல்களைக் கவனித்த செல்வந்தர், எதையோ கலந்து பின் அதை கொட்டி விட்டு வேறுமருந்தை கொடுக்கின்றீர்கள் என்றார். பதறிய வைத்தியர் உண்மையை உலறி விட்டார். செல்வந்தரின் உறவினர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தான் தவறு செய்ததாகவும், நீங்கள் எழுதிவைத்திருந்த இந்த உபதேசம்தான் என்னை திருத்தியது என்றும், தன்னை மன்னிக்கும் படியும் கூறினார்.
  உறவினர் தண்டிக்கப்பட்டார். மகான்களின் உபதேசங்கள் வெறும் வார்த்தைகளல்ல. அந்த சொற்களின் அர்த்தங்களை உணரத் தொடங்கிய உயிர்களுக்கு உலக வாழ்வு ஆனந்தம்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

எதிர்பார்ப்பு!

    என்னிடம் இருந்த விலை உயர்ந்த துணியை தையல்காரரிடம் கொடுத்து என் அளவிற்கு ஜிப்பா தைத்து கொடுங்கள் என்றார் ஒருவர். அந்த தையல்காரர் துணி பத்தாது எனக் கூறிவிட்டார். வேறு ஒரு தையல்காரர் அதே துணியை வாங்கி தைத்துக் கொடுத்தார். அடுத்த நாள் அந்த பக்கம் சென்றேன். அந்த தையல்காரரின் சிறிய பையனுக்கு ஒரு சட்டை அதே துணியில் தைத்திருந்தார், ஒரு தையல்காரர் முடியாது என்ற சொன்ன துணியில் அடுத்த தையல்காரர் ஜிப்பாவும் தைத்து மீதிஒரு சிறிய சட்டையை தைத்திருக்கின்றார் என்றால், முதல் தையல்காரார் ஏன் முடியாது எனச் சொன்னார் என்று அறிய ஆவல் பிறந்தது.
    கோபத்துடன் அந்த தையல்காரரை சந்தித்து அடுத்த தையல்காரர் ஜிப்பாவும், சட்டையும் தைத்ததைச் சொன்னார். அதற்கு அந்த தையல்காரர் அவனுக்கு இரண்டு வயது மகன். துணியை மிச்சம் பிடித்து தைத்துவிட்டான். என் மகனுக்கு பத்து வயது. அவ்வளவு துணி மிச்சம் பிடிக்கமுடியாது என்பதால்தான் துணி பற்றாது எனக் கூறினேன் என்றான்.
    என்ன எதிர்பார்ப்பு. நமக்கு துணி எடுப்பதுமில்லாமல் தையல்காரரின் மகன்களுக்கும் சேர்த்து துணி எடுக்க வேண்டியிருக்கின்றது எனப் புலம்பினார் ஜிப்பாக்காரர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

சுயநலம்! என்குழந்தை!

    ஒரு சேரிப் பகுதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும்போது இருவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டனர். அவர்களை எட்டிப்பார்த்த மற்றக் குழந்தைகளும் சாக்கடையில் வீழ்ந்தன, எல்லா குழந்தைகள் மேலும் சாக்கடையின் சகதிகள். சப்தம் கேட்டு வந்த பெண் ஒவ்வொரு குழந்தையாகக் அருகில் இருந்த குழாயின் நீரினால் கழிவி விட்டாள்.
     அதற்குள் மற்ற குழந்தைகளின் தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் குழந்தைகளும் நீரில் கழுவியிருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு நன்றி சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண் எல்ல குழந்தைகளும் சகதியினால் அடையாளம் தெரியாமல் இருந்தனர். எது என் குழந்தை எனத் தெரிந்து கொள்ளவே நான் நீரில் கழுவி விட்டேன் என்றாள்.
     தன் குழந்தையை கண்டுபிடிக்க எல்லா குழந்தையின் முக அழுக்கையும் நீக்கினாள் தாய். அதுபோன்றே நாம் யார் எனத்தெரிந்து கொள்ள, நம் உண்மையான முகத்தின் அடையாளம் காண அதை மூடியுள்ள ஆணவம், கர்வம், பொறாமை, பேராசை போன்ற திரைகளை நீக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

முயலுக்கு 3கால்!

    ஒரு சிற்பி நிறைய சிலைகள் செய்து பார்வைக்கு வைத்திருந்தார். அவரின் நண்பர் அவைகளைப் பார்வையிட வந்திருந்தார். பார்த்தார். ரசித்தார். எல்லாம் நன்றாயிருந்தது. இருந்தலும் தனக்கும் சிலைகள் பற்றி தெரியும் எனக் காண்பித்துக் கொள்ள நினைத்தார். ஓர் சிலையின் முன் நின்று இந்த சிலையின் மூக்கு நீளம் என்றார்.
    நண்பனின் போக்கை புரிந்த சிற்பி, ஒர் உளியை எடுத்துக் கொண்டு நண்பர்முன் ஏணியில் ஏறி அந்த சிலையின் மூக்கின் அருகில் சென்றார். சிலையை சீர் திருத்துவது போல பாவனை செய்தார். சிலை சேதமடையாவண்ணம் அதன் மூக்குப் பகுதியில் தட்டினார். சிலைமேல் இருந்த துகள்கள் கீழே விழுந்தன. ஏற்கனவே மேலேறும்போது தன் கையில் கொண்டுவந்த துகள்களை கீழே போட்டுவிட்டு, கீழ் இறங்கி வந்தார் சிற்பி.
    நண்பரிடம் உங்கள் ரசனை பிரமாதம். நீங்கள் சொன்ன பின்புதான் அந்தக் குறை எனக்கும் தெரிந்தது. இப்போது எப்படி இருக்கின்றது என்றார். ஒன்றும் புரியாவிட்டலும் எல்லாம் தெரிந்தமாதிரி, ஆகா சிலை அற்புதமாக இறுக்கின்றது என்றார் தான் பிடித்ததற்கு 3கால் என்னும் நண்பர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தங்கத்தில் திருப்தி இல்லை!

    ஏழை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவர் தெய்வ வரம் பெற்று விட்டதாகவும், எல்லோர் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதாக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். இவன் நிலை அறிந்த நண்பர் அருகில் கிடந்த செங்கல் கட்டியை எடுத்து அதை நோக்கி தன் சுட்டு விரலை நீட்ட அது தங்கமாக மாறியது.
    அந்த தங்க கட்டியை வைத்து உன் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள் என்றார். இப்போது திருப்தியா என்றவருக்கு, ஏழையின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் முகச்சுழிப்பைக் கண்டார். அவன் திருப்தியடையவில்லை என உணர்ந்தார்
    வேறு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார். ஏழை, உங்களின் சுட்டு விரல் வேண்டும் என்று தன் பேராசையை வெளிப்படுத்தினான். கிடைத்த தங்கத்தைக் கொண்டு தன் வாழ்வை சீர்படுத்தத் தெரியாதவனுக்கு, அந்த தங்கமும் நல்ல பயனைத்தராது என்று மௌனமாக சென்றுவிட்டார் நண்பர்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

போனமுறை விழுந்த இடம்!

    வேட்டையாடுவதில் விருப்பம் உள்ள இருவர் வேட்டையாடச் சென்றனர். இவர்கள் வலையில் இரண்டு குட்டி யாணைகள் கிடைத்தது. மகிழ்வுற்ற இருவரும் இரண்டு யாணைகளையும் கூட்டி வந்தனர். காட்டிலிருந்து நகருக்குவர ஓர் விமானத்தை ஏற்பாடு செய்தனர். விமானி இரண்டு யணைக் குட்டிகளை கொண்டு செல்லமுடியாது. பாரம் அதிகம் ஒன்றை ஏற்றிச் செல்லலாம் என்றான். அவர்கள் சென்றமுறை இரண்டு யாணைக்குட்டிகளை ஏற்றிக் கொண்டுச் செல்ல அப்போதிருந்த விமானி ஒத்துக் கொண்டார் என்றனர். மேலும் உங்களுக்கு அதைவிட கூடுதல் பணம் தருகின்றோம் என்றனர். விமானி சம்மதித்தான்
     வண்டியில் பாரம் ஏற்றப்பட்டது. சிறிது தடுமாற்றத்துடன் புறப்பட்ட அந்த சிறிய விமானம் சிறிது தூரம் சென்றதும் மிகவும் தடுமாறி கீழே வயல் பகுதியில் விழுந்தது. அப்போது வேட்டைக்காரரில் ஒருவன் கேட்டான், நாம் இப்போது எங்கே விழுந்து இருக்கின்றோம் என்று. அடுத்தவன், போனவாரம் விழுந்தோமே அதற்குப் பக்கத்தில்தான் என்றான். என்ன புத்திசாலித்தனம் இது.
    தண்டனை என்பது தவறுக்கு. ஒருமுறை தவறு செய்து அதிக பாரம் ஏற்றி அதனால் கீழே விழுந்தவர்கள் அதை அனுபவமாக வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட வேண்டும். அப்படி அனுபவங்களை பாடமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இப்படி ஒவ்வொரு முறையும் கீழே விழவேண்டியதுதான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

திருடனுக்கு தெரிந்த மரியாதை!

    ஓரு கதை ஆசிரியருக்கு, அவர் கதை எழுதும் போது யாரவது குறுக்கீடு செய்தால் கோபம் வரும். ஒரு நாள் அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது திருடன் வந்தான். அவர் எதையும் கவனிக்காமல் எழுதுவதில் கருத்தாக செயல் பட்டதால், திருடனுக்கு அவன் வந்தவேலை சுலபமாக முடிந்தது. தன்னால் முடிந்த அளவுக்கு பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டான். அவர் தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்
    வெளியில் சென்றிருந்த அவர் மனைவி வீட்டிற்கு வந்தார். கணவர் எழுதிக் கொண்டிருப்பதால் தொந்தரவு செய்யக்கூடாது என்று அமைதியாக உள்ளே சென்றார். உள்ளே சென்றவர் பதட்டத்துடன் கூச்சலுட்டுக் கொண்டு வந்தார். பெட்டி திறந்திருக்கின்றது, யாரோ எனது நகைகளை எல்லாம் திருடிக்கொண்டு சென்று விட்டனர் என்றார்.
    மனைவியின் அலறலின் காரணத்தை சரியாக அறியாமல், தன் எழுதுவதற்கு இடைஞ்சல் செய்வதாக நினைத்து, ‘ஒரு திருடன் எனது வேலைக்குக் காட்டும் மரியாதைகூட, உனக்குத் தெரியவில்லையே’ எனச் சப்தம் போட்டார். குடும்பத்தின் இழப்புகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்யும் தொழிலில் ஈடுபாடு. இதுபோன்ற கண்மூடித்தனமான பற்றுதல்கள் பெரிய இழப்புகளை உண்டுபண்ணும்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அலட்சியம் நஷ்டம்!

    கரடு முரடான பாதையில் ஐவர் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாந்தமான பகுதியில் ஜன நடமாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. திடீரென்று வானிலிருந்து ஓர் அசரீரை போன்ற சப்தம் வந்தது. அனைவரும் நின்று உற்றுக் கேட்டனர். அந்தக் குரல் அனைவரையும் கீழே இருக்கும் கற்களை பொறுக்கச் சொல்லியது. குரலை வேதவாக்காக கருதியவன் உடனே கற்களைப் பொறுக்கினான். கற்களையா பொறுக்குவது என நினைத்த இருவர் சிறிது யோசனையுடன் சில கற்களை எடுத்தனர். மற்ற இருவர் யாரோ சொன்னார் என்பதற்காக நான் ஏன் கல்லைப் பொறுக்கவேண்டும் என்ற அலட்சியத்துடன் நின்றனர்.
    கண்களை மூடுங்கள் என்று மீண்டும் குரல். ஏனோத் தெரியவில்லை அனைவரும் ஒன்றும் யோசிக்காமல் கண்களை மூடினர். சிறிது நேரத்தில் மீண்டும் அந்தக் குரல் கண்களைத் திறங்கள் என்று. அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் யார் யார், அங்கு கற்களை சேகரித்து இருந்தனரோ அவை எல்லாம் ரத்தினங்களாக மாறியிருந்தது.
     எதிர்பாரா இடத்தில் ஒலித்த அசரீரையை கேட்டு செயல் பட்டவர்களுக்கு அதன் பலன் கிடைத்தது. வெறும் கற்களை எடுப்பதில் என்ன. எடுத்துதான் பார்ப்போமே என்று அதிக கற்களை எடுத்தவன் ஆனந்தம் அடைந்தான். குறைந்த கற்களை எடுத்தவன் மனம் வருந்தினான். அலட்சியம் செய்தவன் வேதனையுடன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமே என்று அழுதனர்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27106158
All
27106158
Your IP: 18.223.0.53
2024-04-28 17:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg