ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
பிறர்மனை விரும்பாமை!
201. அன்பு கொண்ட மனைவி அகத்தில் இருக்க அவளை விட்டு பிறரால் காக்கப்படும் மனைவியை விரும்புகின்ற காமுகர் செயல் வீட்டில் உள்ள பழுத்துப்போன பலாப்பழத்தை உண்ணாமல் காட்டில் பழுத்துள்ள ஈச்சம்பழத்தை பெறத் துன்பப் படுவது போன்றது.
202. செம்மையாக வளர்க்கப்பட்டு கிடைத்த இனிய மாம்பழத்தை சேமிப்பு பொருளாக அறையில் வைத்துவிட்டு தகுதியற்ற புளியம் பழத்திற்காக மரக்கிளையில் ஏறி ஆலோசனை இல்லாமல் வருந்துவர். பிற மனைவியை விரும்பினால் கெடுதலே உண்டாகும்..
203. பொருள்களிடத்து பிடிப்பு கொண்டவரும் அறிவை குறைத்து ஆளும் அறியாமையான இருளில் தோன்/றிய மின்னொளி போன்ற சிறிய அறிவைப் பெரிது என்றெண்ணுபவரும் மருட்சி கொண்ட மங்கையரிடம் மய்க்கம் கொண்டு அதை மாற்ற முடியாமல் வருந்துவர்.
#####
மகளிர் இழிவு!
204. இலை முதலானவற்றால் அழகுடன் குலை மிகுந்த அழகுடன் இருந்தாலும் எட்டிப் பழம் உண்ணுவதற்கு ஏற்றதல்ல. அதுபோல் கொங்கை அழகைக் காட்டி புன்முறுவல் செய்து கவர்ச்சி காட்டும் மங்கையிரிடம் இருந்து விலகி அவரிடம் செல்லும் எண்ணத்தைவிட்டு விட வேண்டும்..
205. அடுத்த மனையில் புகுந்து அந்த மனைக்குரிய மங்கை விரும்புவது என்பது மலைச் சுனையில் புகும் நீர் மூழ்குபவரைத் தன்னுள் இழுத்து தன் குழிக்குள் சிக்க வைப்பதுபோல் சிக்க வைக்கும். கனவு போலத் தோற்றமளிக்கும் அந்த மங்கையரிடம் ஏறப்ட்ட இன்பம் மற்றும் சிறிய அன்பை உண்மையானது என எண்ணக்கூடாது.
206. அழகுடன் கூடிய வாழ்வை அடைந்துள்ள இளைய பெண் யானையைப் போன்ற பெண்கள் மழையைக் கண்ட புல்போன்று தழைத்திருந்தாலும் மயங்கிய் தேவரைப் பார்த்தால் முன்பு தம்மை புணர்ந்தவரை வெளியே இருங்கள் என்றும் கூறி ஒரு குறிப்பும் இல்லாமல் வெளியில் தள்ளி அனுப்பிவிடுவர்.
207. உலக மங்கையரோடு புணர்வதால் என்ன பயன் உண்டாகிவிடும்!. உண்மையான பொருளை உள்ளத்தில் கொண்ட ஞானியரும் கூறும் விதியும் அதுவே!. மங்கையர் புணர்ச்சி வெளியே ஆலைக் கரும்பின் சுவையைப் போன்று இனிமையாகவும் அகத்தே வேம்பிலை போலவும் கசக்கும் தன்மையுடையது.
208. ஆடவர் தம் சுக்கிலத்தை பாசி படிந்த மங்கையர் கருங்குழியில் நட்டு இன்பத்தை அடைவர். அவரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மறைவாகச் செல்லக்கூடிய சிறிய வாயிலில் நுழைந்தாவது போய்க் கெட்டு அழிவர்.
#####