gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

தெய்வபலம்!

Written by

     பாண்டவர்கள் வேட்டைக்கு சென்றபோது திரௌபதியை, ஜயத்ரதன் கடத்திசெல்ல, அறிந்த பாண்டவர்கள் அவனை வழிமறித்து படைகளை அழித்து அவளை மீட்டனர். ஜயத்ரதனை தலைமுடி அகற்றி அவமானப்படுத்தினான் பீமன். தவம் செய்து அர்ஜுனனைத்தவிர மற்றவர்களை கொல்ல வரம் பெற்ற ஜயத்ரதன், போரில் அபிமன்யு இறக்க காரணமானான். போரிலிருந்து வீடுதிரும்பிய அர்சுனன் செய்தி கேட்டு ஜயத்ரதனை அழிக்க சபதம் மேற்கொண்டான். இதை அறிந்த துரோணர் வியூகம் அமைக்கையில் அர்சுணன் பார்வைக்கு படாத நிலையில், ஜயத்ரதனை ஒளித்து வைக்க, கண்ணன் இருள் சூழ்ந்த நிலையை மாயமாக உருவாக்க, அந்தி சாய்ந்ததாக நினைத்து வெளிவந்த ஜயந்திரனை, கண்ணன் அடையாளம் காட்டி தலையைக் கொய்து அவன் சபதத்தை நிறைவேற்றக் கூறினார்.
        மேலும் அந்த தலை அவன் தந்தையின் மடியில் விழச்செய் என்றார். கண்ணனின் வழி காட்டுதலின்படி அந்த தலை விருத்தக்ஷத்திரர் மடியில் திடிரென்று விழ, அவர் பதறி எழுந்ததால் அது மடியிலிருந்து மண்ணில் விழுந்தது. விருத்தக்ஷத்திரருக்கு மகன் பிறந்தபோது மகன் தலை அறுந்து பூமியில் விழும் அழிவுக்கு காரணமாணவனின் தலை சுக்கு நூறாகும் என்று சபித்தார். அதன்படி அறுந்து அவர்மடியில் விழுந்த தலையை அவர் கீழே போட்டதால் அவரின் தலையும் சுக்கு நூறாகியது. அர்ச்சுணனின் சபதம், நிறைவேறவும், அதேசமயம் ஜயத்ரதனின் தந்தை சாபத்திலிருந்து அர்சுணனை காப்பற்றவும் கண்ணன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அதுவே தெய்வ பலம்.

மரண முயற்சி!

Written by

        பறைவைகளில் கழுகு தன் வாழ்நாளில் எல்லா திறமைகளும் எப்போதும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தன் வயதின் பாதியில், வலிமை குன்றிய அலகை பாறையில் மோதி உடைத்துவிட்டு, மீண்டும் உறுதியாக புதிய அலகு வளரும் வரை காத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. அதன்பிறகு அந்த புதிய வலிமை மிகுந்த அலகினால் தன் கால் நகங்கள் மற்றும் இறக்கையின் சிறகுகளை பிய்த்து விட்டு, புதியன வளர பொருத்திருந்து மீண்டும் புதிய பிறவிபோல் பலவருடங்கள் வலிமையுடன் வாழ்கிறது.
        தானே தனது பிறவியை வலிமைப்படுத்தும் கழுகின் இந்த கடுமையான முயற்சி போற்றத் தக்கவையே. அந்த பிறவியில் அது எவ்வளவு கஷ்டங்களை தானே சந்தித்து வெற்றி அடைகிறது. எதிர்காலம் வலிமையுடையதாக இருக்க நாமும் அது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முயற்சி!

Written by

       ஓர் இளவரசி தன் அறிவுக் கூர்மையினால் அறிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட, பாதிக்கப்பட்ட அவர்கள் இளவரசிக்கு பாடம் புகட்டும் வகையில் ‘நுனிக் கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டிய’ ஓர் சர்வமுட்டாளை, தங்களது திறமையால் மணம் முடித்தனர். உண்மை தெரிந்ததும் இளவரசி அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றினாள்.
      மனம் வெதும்பிய அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, தண்ணீர் இறைக்கும் போது மேலும் கீழும் சென்றதால் கயிற்றின் தாரைகள் சுவற்றில் பதிந்திருக்கக் கண்டு, நாமும் ஏன் தெடர்ந்து முயற்சி செய்து அறிஞனாகக் கூடாது என நினைத்தார். தொடர்ந்து முயற்சிகள் செய்தார். கல்விமான் ஆனார். காளிதேவியின் அருளும் கிடைத்தது. வாழ்வில் உலகம் புகழும் வெற்றி கண்டார் ‘கவிகாளிதாஸ்’ என்றழைக்கப்பட்டார்.

பொறாமை!

Written by

       கர்ணணைப் போல் தான தருமங்கள் செய்து தானும் கொடையாளி என்றபெயரை, புகழை அடைய நினைத்த துரியோதனன், தன் அரண்மனை வாயிலில் “இங்கு யார் வந்து என்ன கேட்டாலும், ‘இல்லை’ எனச் சொல்லாமல் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தான். அவன் உளமார தர்மம் செய்ய முன்வராமல் வெறும் பெயரை அடையவே இவ்வாறு செய்கிறான், அதை அவனுக்கு உணர்த்த கிருஷ்ணர் எண்ணங் கொண்டார். நல்ல மழைக்காலம் அது. அப்போது அந்தணர் வேடமேற்று சென்ற அவரை வரவேற்ற துரியோதனனிடம், தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அப்போது உணவு தயாரிப்பதற்காக காய்ந்த விறகுகள் 1000 வண்டிகள் தந்து உதவ வேண்டும் எனக் கேட்டார். கேட்ட துரியோதனன் பேய்மழையில் எப்படி காய்ந்த விறகுகள் அதுவும் 1000 வண்டிகள் எனச் சலித்துக் கொண்டான். கிடைக்குமா என விசாரித்து விறகு இல்லை என்று கூற அந்தனர் வாயிலில் உள்ள தகவல் பலகையை சுட்டிக் காண்பித்து அதை அகற்றிவிட வேண்டினார். இருப்பதைத்தானே கொடுக்கமுடியும், இல்லாததைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும், இந்த சூழலில் காய்ந்த விறகை யாரேனும் கொடுத்தால் பலகையை அகற்றி விடுகிறேன் என்றான் துரியோதனன்.
       அடுத்து கர்ணனின் அரண்மனைக்கு சென்ற அந்தணருக்கு அங்கும் விறகு இல்லை எனத் தெரியவந்தது. அப்போது கர்ணன் அந்தனரை பக்கத்தில் உள்ள ஓர் வீட்டிற்கு சென்று பேச அழைத்தான். சிறிது வேளையில் அந்தணர் கேட்ட 1000 வண்டிகள் நிறைய காய்ந்த விறகுகள் தயாராக இருந்தன. எங்குமே காய்ந்த விறகு இல்லா நிலையில் கர்ணா உன்னால் எப்படி முடிந்தது இது என அந்தணர் கேட்க, நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான். அங்கிருந்த கர்ணனின் அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தேக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் விறகாகி இருந்தன.
      அந்த 1000விறகு வண்டிகளுடன் துரியோதனின் அரண்மனைக்குச் சென்று சந்தித்தார் அந்தணர், வெட்கத்தால் தலைகுணிந்த துரியோதனன் உடன் தகவல் பலகையை நீக்கினான். போட்டி, பொறாமையின்றி உள்ளார்ந்த நினைவுகளுடன் தர்மம் செய்தல் சிறப்பாகும். புகழ் வேண்டி செய்த தர்மங்கள் பலன் தராது.

வணங்குதல் சிறப்பு!

Written by

      ஓர் அரசன் ஓர் ஞானியின் காலில் விழுந்து தன்தலை அவர் பாதத்தில் படியும் படி வணங்கினான். ஏதும் புரியாத சேனாபதி இதைப்பற்றி கேட்க, மன்னர் தனக்கு ஓர் ஆட்டின் தலை, ஓர் புலித்தலை, ஓர் மனிதத் தலை கொண்டுவர பணித்தார். ஆட்டின் தலை சுலபமாகக் கிடைத்தது. புலியின் தலையை வேட்டையாடி பெற்றார். மனிதத்தலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மாயானத்தில் இறந்து கிடந்த ஓர் உடலிலிருந்து தலையைப் பெற்றார். அதை மன்னரிடம் காட்ட அவர் அவைகளை விற்று வரும்படி கூறினார்.
       ஆட்டுத்தலை விரைவில் உணவுக்காக விற்றது. புலியின் தலை அலங்காரத்திற்காக வாங்கப்பட்டது. மனிதனின் தலையை யாரும் வாங்கவில்லை. இத்தகவலை அரசனிடம் கூற அவர் அதை வாங்குபவருக்கு பணம் என அறிவித்தும் யாரும் வாங்க முன் வரவில்லை. மன்னர், சேனாதிபதியாரிடம், ‘யாரும் வாங்க முன்வராத மதிப்பில்லாத இந்த மனிதத் தலை மாபொரும் துறவிகளின், ஞானிகளின் காலடியில் வைத்து வணங்குவதே அதற்குறிய சிறப்பு’ என்றார்.

மாறுவேடம்!

Written by

        ஊரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை நண்பரிடமிருந்து இலவச அனுமதி சீட்டை பெற்று சென்றான். அரங்கத்தின் வாயிலில் இருப்பவர் பார்வையில் இவனுக்கு ஓர் குறுகுறுப்பு ஏற்பட நண்பனின் பெயரைச் சொல்லி தான் அந்த பத்திரிக்கையில் வேலை செய்வதாக சொன்னான். உடனே அவர் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் இப்போதுதான் உள்ளே சென்றார். வாருங்கள் அவர் இருக்குமிடம் காண்பிக்கின்றேன் என அழைத்தார்.
        சரியாக மாட்டிக் கொண்டோம் என்ற நினைவில் அவருடன் சென்றான். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இவரைத்தெரியுமா? என அறிமுகப்படுத்த முனைந்தார். அவர் உடனே சமாளித்து, அதற்கு என்ன இப்போ எனக்கோபத்துடன் கூறி, எனக்கு இவரைத் தெரியும் என சொல்லி அருகில் அமர்த்திக் கொண்டார். வாயில் காப்போர் மன்னிப்புக்கோரி அவ்விடம் விட்டு சென்றார். நண்பனுக்கு போன உயிர் திரும்பியது.
        மெள்ள ஆசிரியர் என அறிமுகப் படுத்தப்பட்டவரிடம், ஐயா, என் மானத்தைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி, என்றான். அவர் இதுக்கு எதுக்கு நன்றி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கின்றதுதானே என்றார். மேலும் ஒன்றும் புரியவில்லையா! நானும் பத்திரிக்கை ஆசிரியன் இல்லையப்பா! உன்னைப்போல் நானும் நண்பனிடம் இலவச சீட்டு பெற்று வந்தவன்தான் என்றார். இன்றைய உலகில் இதுபோன்று மாறு வேடமிட்டு திரிபவர்கள் நிறைய! வேடங்கள் கலைந்தால்தான் வெளிச்சமான உண்மை தெரியவரும். வேடங்கள் கலைவது எப்போது!

திருப்பிப்பார்!

Written by

      பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம், ஓர் ஊரின் பெயரைச் சொல்லி, அந்த ஊருக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு அவர் அது உங்களைப் பொறுத்தது என்றார். இதைக்கேட்ட நபர், பொறுமையிழந்து இதென்ன பதில், இப்படிச் சொன்னால் எப்படி புரிந்து கொள்வது என்றார்.
     அதற்கு அன்பரே நீங்கள் அந்த ஊரைத்தாண்டி வந்து விட்டீர்கள். அங்கு சரியாக விசாரனை செய்யாமல் இங்கு வந்து கேட்கிறீர்கள். இப்படியே பயனித்தால் சுற்றிச் சேரவேண்டும். திரும்பி பயணித்தால் விரைவில் சென்றடையலாம். திரும்பி பயணம் செய்ய எண்ணம் உண்டா! என அறியவே கேட்டேன் என்றார்.
       இதைப்போன்றே நாம் திரும்பிப் பார்க்கத் தயாராக இருக்கின்றோமா! நமது துயரங்களை மறக்க உலகைச்சுற்றி பயணம் போக முயற்சிக்காமல் திரும்பி நம்முள் பயணித்து தியானம் மூலம் நமது துக்கங்களை வெல்லலாம்.

ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும்!

Written by

    கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் வில் வித்தையை பயிற்றுவித்து வரும்போது, ஆசிரியர் துரோணர் பாண்டவர்களுக்கு நன்கு பயிற்றுவிக்கிறார் என துரியோதனன் சொன்னதைக்கேட்ட பீஷ்மர் நேரில் விசாரிக்க வந்தபோது, துரோணர் அர்சுனனை ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, நிலத்தில் ஓர் மந்திரத்தை எழுதி துரியோதணனை அழைத்து அந்த மந்திரத்தை படித்து அம்பு எய்தச் சொல்ல அந்த மரத்திலிருந்த இலைகளை எல்லாம் அது துளைத்தது. பின்னர் அனைவரையும் நீராட அழைத்துச் சென்றார்.
    அனைவரும் நீரடி திரும்பவரும்போது அர்ஜுனனும் வந்து சேர்ந்தான். அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தபோது அந்த மரத்திலிருந்த இலைகளில் எல்லாம் இரண்டு துளைகள் தென்பட்டது. இது எப்படி எனபீஷ்மர் கேட்டபோது, அர்ஜுனன் நான்தான் அம்பெய்தினேன் என்றான். துரோனர் அந்த மந்திரத்தை எழுதியபோது நீ இங்கு இல்லையே என்றார். குரு சொன்ன வேலையை செய்து திரும்பும்போது இந்த மரத்தில் இலைகளில் எல்லாம் துவாரம் இருக்க கண்டேன். அப்போது கீழே ஓர் மந்திரம் இருக்க கண்டு இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்க வேண்டும் எனக்கருதி மந்திரம் ஜபித்து அம்பெய்தினேன் என்றான்.
    பீஷ்மர் அர்ஜுனனை மிகவும் பாராட்டியதை கண்ட துரியோதணன் கேலிசெய்ய, துரோனர் துரியோதணா மீண்டும் அம்பெய்தி இலைகளை துளையிடு என்றார். துரியோதணன் மந்திரம் எழுதிய இடத்திற்கு வந்தபோது அங்கு அது காணப்படவில்லை. யார் காலிலும் மிதிபடக்கூடாது என அர்ஜுனன் அதை அழித்துவிட்டன். அதைக் காணது துரியோதணன் மந்த புத்திகாரனாக மருங்கி நின்றான். துரோனர் அர்ஜுனனை அம்பெய்த அழைத்தபோது உத்தம புத்திகாரனான அவன் அந்த மந்திரத்தை நினைவு கொண்டு மூன்றாவது துளையை இலைகளில் பதிவு செய்தான்.
    துரோணர் பயிர்ச்சியில் ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்றார். பீஷ்மர் உண்மை உணர்ந்து அமைதிகாத்து திரும்பினார்.

இலக்கில்லா பயணம்!

Written by

        இரயில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூட்டம் நிரம்பியிருந்தது. அடுத்த இரயில் நிலையத்தில் சீட்டு பரிசோதகர் ஏறினார். எல்லாருடைய சீட்டுகளையும் பரிசோதித்துக் கொண்டு வந்தார். ஒவ்வெருவரும் தங்களது சீட்டுகளை காண்பித்த வண்ணம் இருந்தனர். ஒருவர் மட்டும் அதைத் தேடிய வண்ணம் இருந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். வேறு சீட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றனர். நான் அதற்காக அழவில்லை. எங்கு போகவேண்டும் என்று அந்த சீட்டில் தான் எழுதியிருந்தார்கள் என்றார். பல மனிதர்களின் பயணங்கள் இப்படி இலக்கில்லாமல் எங்கு செல்ல வேண்டும் எனத்தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றது.

எங்கே போகப்போகிறோம்!

Written by

          அந்த சர்வ அதிகாரியிடம் வந்த சிறை அதிகாரி, சிறையில் கைதிகள் தொலைக்காட்சி வசதி கேட்டு போரட்டம் செய்வதை தயங்கி தயங்கி சொன்னார். கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். சிலநாட்கள் கழித்து சிறை அதிகாரி, கைதிகள் வாரம் ஒர்நாள் விடுமுறை வேண்டி போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார். அதையும் கொடுக்கச் சொல்லி ஆனை பிறப்பித்தார்.
     இப்படி சிறைச்சாலையிலிருந்து எந்தக் கோரிக்கைகள் வந்தாலும் உடனடியாக உத்தரவு பிறப்பித்து நிறைவேற்றுவதைக்கண்ட ஆலோசகர், நாம் சலுகை காட்டவேண்டியது கல்விச் சாலைகளுக்குத்தான், சிறைச்சாலைகளுக்கு அல்ல என்றார். ஆனால் சர்வ அதிகாரி, ஆலோசகரரைப் பார்த்து, பதவியில் இருந்து இறக்கப்பட்டால் நாம் செல்லவேண்டியிருப்பது கல்விச்சாலைகளுக்கு அல்ல, சிறைச்சாலைக்குத்தான் என்றார். அவர் தனக்கு எதிர்காலம் என்ன என்பதை புரிந்து செயல் பட்டுள்ளார். சராசரி மனிதனுக்கு இது புரியாததால் ஆட்டம் போடுகின்றான்.                                                                                                                                    நிகழ்காலத்தில் தவறு செய்பவன் எதிர்காலத்தை இழந்துவிடுகிறான். எதிர்காலத்தை சரியாகக் கணிக்காமல் செயல்படுபவன் நிகழ்காலத்தை இழந்து விடுகிறான்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879603
All
26879603
Your IP: 3.236.111.234
2024-03-19 10:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg