gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

அர்த்தகதி சக்ராசனம்

Written by

அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை- கடின தரம்-2

 

நற்பயன்கள்- இந்த ஆசனம் பக்கவாட்டத்தில் நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையை நமது முதுத்தண்டிற்கு அளிக்கின்றது. மேலும் கல்லீரலின் இயக்கத்தை மேன்மை படுத்துகின்றது.

1.கால்களின் பாதங்கள் அருகருகே இருக்குமாறு சேர்ந்து, கைகள் இராண்டும் தொடை அருகில் இருக்குமாறு நிற்கவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது கையை தலைக்குமேல் மெதுவாக தூக்கவும். கை காதை தொடுமாறும் கையின் பாதங்கள் இடது பக்கம் பார்த்த வண்ணமும் இருக்கட்டும்.

3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடது பக்கமாக மெதுவாக வளைந்து சாயவும். இடது கை இடது காலைத் தொட்டவாறு இருக்கட்டும்.மேலே உயர்த்திய வலது கை மடங்கக் கூடாது. அப்படியே சுமார் 1 நிமிடத்திற்கு இயற்கையாக நன்றாக சுவாசிக்கவும்.

4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து சய்த்த வலதுகையை தலையுடன் நேரான நிலைக்கு வரவும்.

5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் உயர்த்திய கையை கீழே கொண்டு வரவும்.

இந்த ஆசனத்தை இடது பக்க கையை உயர்த்தி வலது பக்கம் சாய்ந்து செய்யவும்.

இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.

சூர்ய நமஸ்காரம்

Written by

சூர்ய நமஸ்காரத்தில் யோகாசனம், பிரணாயாமம் இரண்டும் கலந்துள்ளது. மற்ற ஆசனங்கள் செய்வதற்கு ஓர் இலகுத் தண்மையை அளிக்கின்றது. ஆசனங்கள்யாவும் சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு.

சூர்ய வழிபாடு, “ஓ சூரியனே! பாத்திரத்தை மூடியிருக்கும் மூடியைப்போல் உன்னுடைய தங்கநிற மேனியின் ஒளிக்கற்றைகள் உண்மையின் கதவுகளை மூடியுள்ளது. எனக்காக, அதை திறந்து உண்மைதனை அறிய அதை நோக்கிச் செல்ல எனக்கு வழிவிடுவாயாக! உன்னை நான் வணங்குகின்றேன்.

1.சூர்யநமஸ்காரம்-12 நிலைகள் கொண்டது- கடின தரம்-12

                                                                                     

நற்பயன்கள்- ஆசனங்களில் முதன்மையானது. இதில் உள்ள மந்திரங்களில் உச்சரிக்கப்பட்டுள்ள ‘ஓம்’, ‘ஹ’, ‘ஆர்’ ஒலி மூளைப்பகுதியில் உள்ள மூச்சுப்பாதை, ஜீரனப்பாதை மற்றும் சுற்றியுள்ள நரம்புகளின் மையத்தை சீராக இயக்கி ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகின்றது.

சூரியனின் பலவித பெயர்களும் அதன் விளக்கமும் நம்முள் அந்த தன்மைகள் நட்பு, பூஜை, சக்தி, ஆரோக்கியம், பலம், ஒளி, மனோபலம் ஆகியவைகள் ஏற்பட வலியுருத்தி ஒப்பில்லா இறையை நோக்கி அந்த பண்புகளை நினைத்து தியானம் செய்து பயிற்சிகள் மூலம் அந்த இயற்கைப் பண்புகளை அடையலாம்.

கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், இடுப்பு, தொடை, கெண்டைக்கால், கணுக்கால், முகம், தோல் ஆகிய வெளி உறுப்புக்கள், தைராய்டு, பாரா தைராய்டு, பியூட்டரி, பீனியல், நுறையீரல் ஆகிய சுரப்பிகளும், மண்ணீரல், கல்லிரல், கணையம், இதயம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவைகள் தூண்டப்பட்டு நன்றாக இயங்கும்.

1.பிரணமாசனா- இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரிய பகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். நிமிர்ந்து நிற்கவும். “ஓம் ஹராம் மித்ராயே நமக“என்று மனதில் நினைக்கவும். (மித்திரன்-நண்பன்)

2.ஹஸ்த உத்தானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர தூக்கவும். கைகள் தலைக்குமேல் இருந்தவண்ணம் முதுகை பின்புறமாக எந்த அளவிற்கு வளைக்க முடியுமோ அந்த அளவிற்கு வளைக்கவும். உடலில் உள்ள ஆறாதாரச் சக்கரங்களை நினைத்து அதன்வழி மூச்சு மூலாதாரம் செல்வதாகவும். “ஒம் ஹரிம் ரவியே நமக“என்றும் மனதில் நினைக்கவும் (ரவி-ஒளிர்பவன்)

3.பாத ஹஸ்தாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் தலை முழங்காலைத் தொடுமாறும், கைபாதங்கள் கால்பாதங்களைத் தொடுமாறு வைத்து “ஒம் ஹரும் சூர்யாயா நமக“என்று மனதில் நினைக்கவும். (சூர்யா-அழகான)

4.அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது காலை பின்னால் நீட்டி, இடது காலின் பாதத்திற்கு இருபக்கமும் கையின் பாதங்கள் உறுதியாக நிலத்தில் படியுமாறு வைக்கவும். தலையை மேல் நோக்கி உயர்த்தவும். ”ஓம் ஹரய்ம் பானவே நமக“என்று மனதில் நினைக்கவும். (பானவே-சுறுசுறுப்பானவன்)

5.துவிபாத அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடதுகாலையும் பின்னால் நீட்டவும். இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிபடுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். ”ஓம் ஹரௌம் ககாயே நமக“என்று மனதில் நினைக்கவும். (ககாய-வானத்தில் ஊர்பவன்)

6.அஷ்டாங்க நமஸ்கார- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியே விட்டவண்ணம் இடுப்பை கீழேகொண்டுவந்து கால்பாதம் இரண்டு, முழங்கால் இரண்டு, மார்பு, கைகள் இரண்டு, முகநெற்றி ஆகியன நிலத்தை தொடுமாறு (அட்டாங்க வணக்கம்) வைத்துக் கொண்டு,”ஓம் ஹரஹா புஷிணே நமக“என்று மனதில் நினைக்கவும். (பூஷிணே-சக்தியை தருபவன்)

7.புஜங்காசானா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து மெதுவாக தலையை மேலே தூக்கி பின்நோக்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாய்க்கவும். ”ஓம் ஹராம் ஹிரண்யகர்பாய நமக“என்று மனதில் நினைக்கவும். (ஹிரண்யகர்பாய- தங்க நிறம் உடையவன்)

8.அதமுக்த சவாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிப் படுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். ”ஓம் ஹரிம் மாரீச்சயே நமக“என்று மனதில் நினைக்கவும். (மரீச்சம்- விடியற்கால நாயகன்)

9.அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடதுகாலை முன்பக்கமாக மடக்கி பாதம் நிலத்தில் இருகைகளுக்கிடையில் இருக்குமாறு வைக்கவும். வலது கால் பின்னால் நீண்டிருக்க வேண்டும். தலையை மேல்நோக்கி நிமிர்த்தவும். ”ஓம் ஹரூம் ஆதித்யாய நமக“என்று மனதில் நினைக்கவும். (ஆதித்தன்- அததி)

10.பாத ஹஸ்தாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து கைகளின் பாதங்கள் இரண்டும் கால்களின் பாதங்களைத் தொடுமாறும் தலை முழங்காலைத் தொடுமாறும் வைக்கவும். ”ஓம் ஹரய்ம் ஸவித்ரே நமக“என்று மனதில் நினைக்கவும். (ஸவித்-நல் ஒளி)

11.ஹஸ்த உத்தானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர மேலே தூக்கவும். மெதுவாக முதுகின் பின்பக்கமாக சாயவும், கைகளையும் தலையும் ஒரே கோட்டில் இருக்குமாறு வளையவும். ”ஓம் ஹரௌம் அர்க்காய நமக“என்று மனதில் நினைக்கவும். (அர்க்கன்-சக்தி மயமானவன்)

12.பிரணமாசனா- கைகளையும் தலையையும் பழைய நிலைக்கு கொண்டுவந்து இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரியபகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். “ஓம் ஹரஹ பாஸ்கராய நமக“என்று மனதில் நினைக்கவும். (பாஸ்கரன்-அறிவில் தெளிவு தருபவன்)

இந்த ஆசனத்தை இடது, வலது மாற்றி வைத்து செய்யவும்.

இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.

சமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை

Written by

சமாதி(அ)மெய்மறந்த உணர்வு நிலை
அடிப்படை ஏதுமின்றி மனம் முழுவதும் ஒரே அலை வடிவமாக இருந்து இடம், மையம் இவற்றின் உதவியின்றி எண்ணத்தின் கருத்து மட்டும் நிலைத்து இருப்பது சமாதியாகும். ‘நானே பிரம்மம்’ என்ற கருத்து மறைந்து அதுவே உண்மையாகிவிட்ட அனுபவமே சமாதி. இந்திரியங்கள் எதிலும் ஈடுபடாமலும் மனம் அங்கும் இங்கும் அலையாமலும், துன்பங்களை நீங்கி இன்ப நிலையை அனுபவிப்பது சமாதி. நிர்மலமான இதயத்தை அடையும்போது சமாதி நிலை ஆரம்பிக்கின்றது. முக்தி, - துரியம் – சமாதி எல்லாம் ஒரே நிலைப்பாடுதான். அதுவே ஜீவன் முக்தியாகும். மனத்தின் (உள்குட) ஆகாசம் பிரபஞ்ச மகா ஆகாசத்துடன் கலந்து ஒன்றாகும் போது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைகிறது.
12பிராணாயாமம்-1பிரத்தியாகாரம், 12பிரத்தியாகாரம்-1தாரணை, 12தாரணைகள்-1 தியானம், 12தியானம்- 1சமாதி ஆகும். மனத்தை ஒரு பொருளின்மீது 12 நொடிகள் நிறுத்தினால் அது தாரணை என்றும் அப்படி 12 தாரணைகளைக் கொண்டது ஒரு தியானம் (144 நொடிகள்) என்றும் அப்படி 12 தியானங்களைக் கொண்டது ஒரு சமாதியாகும்.(1728 நொடிகள்-28 நிமிடம் 48 நொடிகள்)
பிராணாயாமம், ஆசன வகைகளால் சமாதியை அடைய முடியாது, உடல் ஆரோக்கியத்திற்கும் குண்டலினி சக்தியை உயிர்த்தெழவும் செய்வதற்கானவை. தியானத்தல் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியும். பிரத்தியாஹாரத்தைச் செய்து விட்டுத்தான் தாரணை ஆரம்பிக்க வேண்டும். தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் இராஜயோகத்தின் இறுதில் உள்ளது. இவைகள் ஒன்று முடிந்து மற்றது தொடர்வதாகவே இருக்கும். இந்த மூன்றிற்கும் ‘ஸம்யமம்” என்று பெயர்.
மூச்சை நிறுத்தி அபானன் உயிர்காற்று உள்ளே சொல்லாவிடில் உடலின் உள்ளே ஆக்ஸிடேஜன் என்ற செல் எரிப்பு நிகழ்வு நிகழாமல் செல்கள் இறக்க நேரிடும். எனவே மூச்சை அடக்குவது என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது தெரியாமலும் காற்று செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் சிறுத்தும் பின் பெருத்தும் மாறுவது தெரியாமல் இருப்பது என்பதாகும். மனத்தின் விருத்திகள் அடங்கினால் மூச்சும் அடங்கும்.
காலை உதயத்திற்குமுன் எழவேண்டும் என்ற கருத்து தோன்றினால் இரு மலைகளுக்கிடையில் சூரியன் சிவப்பாக அழகாக மேலெழுவது, ஒளி மிக லேசாக உலகின்மேல் பரவுதல். பறவைகள் ஒலிகொடுத்துப் பறப்பது, காலக் கடன்களை முடிப்பது, குளிப்பது, குளித்து உணவருந்தி அன்றையப் பணியைச் செய்ய கிளம்புவது என்ற நினைவுகளுக்கிடையில், குளியலறையில் இருக்கும் பிரச்சனைகள், குழாய் நீர்பிரச்சனைகள், உணவு என்றதும் வீட்டிற்குரிய பொருள்கள் பற்றிய நினைவுகள் எல்லாம் நன் மனதில் விரியத் தொடங்க மனம் தயாராக இருக்கின்/றது. இந்த எண்ணங்களே விருத்தி என்பதாகும். இவை வெளியே தோன்றாதபோது மூச்சும் அதுபோல அடங்கும் என்பதாகும். நமக்கு வெளி உலகம் போல் நம்முள்ளே உள் உலகமும் உள்ளது. பிரளயத்திற்குப்பின் பிராணன் ஆகாசத்துடன் சேர்ந்து உருவாண பொருள்கள் வெளி உலகில். எல்லாப் பொருள்களையும் ஒருவன் அறிவதில்லை. சில பொருள்களைப்பற்றிய கருத்துக்களை அறிந்தவன் மனதில் அவைகள் ஓர் உலகமாக சுழன்று வருகின்றது. அந்தப் பொருளைப் பார்த்தால், நினைத்தால் அந்தப் பொருளுக்கும் அவன் மனதிற்கும் ஓர் தொடர்பு ஏற்படுகிறது. அதை பற்றி அவன் தியானித்தால் அந்தப் பொருளின் மற்ற எல்ல விவரமும் அவன் கருத்துக்குள் வரும்.
இதுபோலவே கடவுளைப் பற்றி கேட்ட நாம் அவர் இருக்குமிடத்தை எல்லாம் நினைத்து தியானித்தால் அந்த இடம் சென்று மனம் கடவுள் பற்றிய எல்லாம் அறியும். இந்த நிலையே சமாதி. எனவே கடவுளை மட்டும் நினைத்து தியானம் செய்ய மற்றவை பற்றிய நினைவுகளை அழித்தால் நம் மனத்தின் விருத்திகளும் குறையும். விருத்திகள் இல்லா நிலையே சமாதிக்கு வழிகாட்டும்.
நம்பிக்கை கொள்ளும்போதும், தெய்வ சக்திகளைத் தெரிந்து கொள்ளும்போதும் நம் உடலில் பிராணன் அதிகமாகும். அதுபோல் விருத்திகள் குறைந்து மனம் அடங்கும்போதும் பிராணன் அதிகமாகும். இப்படி அதிகமாகும் பிராணன் சக்தி உடல் உயிர் வாழ்விற்கு சமாதி காலத்தில் துணையாயிருக்கின்றது. இறந்த கால நிகழ்வுகள், எதிர்கால கற்பனைகள் இல்லாததால் பிராணன் உடம்பில் அதிகம் சேருகின்றது.
சமாதி நிலைக்குச் சென்ற ஒருவரை பஞ்சபூத சக்திகளின் அசைவுகளால் எழுப்பமுடியாது. தாமாக அவர்கள் விழிப்பு நிலைக்கு வந்தால்தான் உண்டு. சமாதி நிலையை அடைந்தவர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். உடலின் மனம் மூளையோடு உள்தொடர்பு கொள்ளாத நிலையில் அவை உடல் பற்றிய உணர்வை கொள்வதில்லை. அப்போது உடல் சமாதி நிலையை அடையும்.
உணர்வோடு கூடிய செயலைவிட உயர்ந்த ஒரு நிலையில் மனம் செயல்பட்டு உணர்வைத் தாண்டி செல்ல முடியும். உணர்வற்றச் செயல்கள் உணர்வு நிலைக்குக் கீழே இருப்பதுபோல் உணர்வுக்குமேல் ஓர் செயல் இருக்கின்றது. நான் என்ற அகங்காரம் அங்கில்லை. அது இருப்பதெல்லாம் மனத்தின் நடுநிலையில்தான். இந்நடுநிலையைக் கடந்து மேலோ, கீழோ இருக்கும்போது நான் என்ற எண்ணம் கிடையாது. அது இல்லாமல் மனம் செயல்படும். உணர்வு நிலையைக் கடந்து மனம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்போது சமாதி அல்லது பேரின்ப உணர்வு என்கிறோம்.
ஒரு மனிதன் ஆழ்ந்து உறங்கும்போது உணர்வு நிலைக்கு கீழே சென்று விடுவான். மூச்சு விடுவான். உடல் அசையும். உடலில் செயல்கள் நிகழ்கின்றன. ‘நான்’ என்ற எண்ணமற்ற நிலையில் இவைகள் நடைபெறுகின்றது. அவனிடம் உணர்வு இல்லை. தூக்கத்திலிருந்து அவன் விழிப்பு நிலைக்குத் திரும்பி வரும்பொழுது, எவன் தூங்கினானோ அவனாகவே வருகிறான். தூங்குவதற்குமுன் அவனிடமிருந்த அறிவு முழுவதும் அவனிடமே உள்ளது. அது கொஞ்சமும் அதிகமாகவில்லை. அனுபவமும் ஏற்படவில்லை.
ஆனால் ஒருவன் சமாதி நிலைக்குச் சென்றிருந்தாலும், சமாதி நிலையிலிருந்து விழிப்பு பெற்றாலும் அவன் ஓர் ஞானியாக திரும்புகிறான். அவனின் அறிந்த அறிவும் அனுபவமும் அதிகம்.
ஒரு நிலையில் எவ்வாறு உள்ளே நுழைந்தானோ அவ்வாறே வருகிறான். இன்னொரு நிலையில் அனுபூதி பெற்று ஞானியாக வருகிறான். தோற்றமும் பொழிவும் மாறுகிறது. சமாதி நிலையிலிருந்து வரும்போது உண்டாகும் ஞானம், உணர்வற்ற நிலையில் கிடைக்கும் அறிவையும் மனத்தின் உணர்வு நிலையில் ஆரய்ந்து கிடைக்குக் அறிவையும்விட மிகவும் உயர்வானது. உணர்விலும் உயர்ந்த சமாதி நிலை ஆகும்.

யோகி அடையாளம் பற்றி கீதையில்
“எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்புப் பூண்டவனாய், கருணை உடையவனாய், ‘என்னுடைய’ என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமையுடையவனாய், எப்போதும் மகிழ்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவன் எவனோ, அவனே எனது பக்தன்.”
“எவனிடமிருந்து உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் உலகத்திடமிருந்து துன்பம் அடைவதில்லையோ, எவன் மகிழ்சி, சினம், அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ அவன் எனக்குப் பிரியமானவன். எவன் எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும் இன்பம் வரினும் பொருட்படுத்தாதவனாய், ஒரு பொழுதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கான முயற்சியை விட்டவனாய், இகழ்சியையும் புகழ்சியையும் சமமாகக் கொள்பவனாய், மௌனியாயும், ஆழ்ந்த சிந்தனையுடையவனாயும் இருப்பவனாய், கிடைத்தைக் கொண்டு திருப்தியுற்றுக் களிப்புடன் இருப்பவனாய், வீடு வாசல் இல்லாதவனாய், உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திடச்சித்தம் உள்ளவனாய் இருக்கிறனோ, அவனே எனக்குப் பிடித்த பிரியமான பக்தன்.”

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

தியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்

Written by

தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
இராஜ யோகத்தின் நுட்பமான குறிக்கோளுக்கு அழைத்துச் செல்லுவது தியானம். இராஜயோகத்தின் முந்தைய ஆறு பகுதிகளும் ஏழாவதாகிய தியானத்தை நமக்குள் ஏற்படுத்த உறுதுணை செய்யும். வெளியிலோ அல்லது உள்ளேயோ மனதை ஒரு பொருள்மீது நிறுத்தப் பிரத்தியாஹாரம், தாரணை மூலம் பயிற்சி அளித்தபின் அது இடைவிடாது தொடர்ந்து அப்பொருளை நோக்கி ஒரே வழியில் ஓடும் சக்தியைப் பெறுகிறது. இதை தியானம் எனலாம்.
நம் முன்னே இருக்கும் ஒருப்பொருளைப் பற்றிய நனவு உணர்வும், நம்மைப் பற்றிய நனவு உணர்வும் நாமும் அந்தப் பொருளும் அங்கே இருப்பதை அறியச் செய்கிறது. ஆனால் நமக்கு ஏற்படும் அனுபவத்தின் பெரும் பகுதியை நம்மால் அறியமுடிவதில்லை. உடலின் உள்ளே இயங்கும் பல உறுப்புகளைப் பற்றியும், மூளையின் பல பகுதிகளைப் பற்றியும் எவருமே நுணுக்கமாக அறிந்து கொள்ள முடிவதில்லை.
நாம் உணவு உட்கொள்ளும்போது அதை உணர்ந்தே உண்ணுகிறோம் ஆனால் நம்மை அறியாமலே அது ஜீரணமாகிறது. ஜீரணித்தது இரத்தமாகும்போது நம்மை அறியாமலே நிகழ்வு நடைபெறுகிறது. அந்த இரத்தின் மூலம் உடலின் பல உறுப்புகள் சக்தியைப் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நமது நனவு உணர்வின்றி நடக்கின்றது. இதையெல்லாம். நாம்தான் செய்கின்றோம். நம் உடலில் பலர் இருந்து செயல் செய்ய முடியாது. உணவை உண்டு அதை ஜீரணிப்பது என்வேலை. உடலின் உறுப்புக்களுக்கு வலிமையைக் கொடுப்பது வேறு ஒருவர் என்று எப்படிக் கூறமுடியும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் உணர்வு நிலைக்கு கொண்டுவரலாம். தக்கப் பயிற்சிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நாம் கட்டுப்படுத்தலாம்.
நம் நனவு உணர்வுக்குப் புலப்படாத செயல்களையும் நாம்தான் செய்கிறோம். ஆனால் அவை நம்மை அறியாமல் நிகழ்கின்றன. அவ்வளவுதான். முதலாவதாக நனவு உணர்வு நிலையில் எல்லாச் செயல்களையும் நான் செய்கிறேன் என்ற உணர்வோடு நிகழும் செயல்கள். அடுத்ததாக எல்லாச் செயல்களும் நான் செய்கிறேன் என்ற உணர்வு அற்ற நிலையில் நடக்கும் செயல்கள். எனவே நம்முள் உணர்வு அற்ற செயலென்றும், உணர்வுடன் கூடிய செயல் என்றும் இரண்டுவிதமான செயல்கள் நடைபெறுகின்றது. விலங்குகளிடம் ஏற்படும் உணர்வற்ற செயல்களை இயல்புணர்வு என்கின்றோம். மனிதர்களிடம் உணர்வோடு கூடிய செயலைத்தான் காண்கின்றோம்.
தியானத்தை முதலில் சாதாரண தூலப் பொருள்களில் ஆரம்பித்து மெள்ள, மெள்ள நுண்ணியதாகி இறுதியில் பொருளில்லாமல் பழகவேண்டும். உணர்சிகளின் புறக்காரணங்களில் ஆழ்ந்து தியானிப்பதில் மனதை ஈடுபடுத்த வேண்டும். அடுத்து நரம்புகளில் ஏற்படும் அசைவுமீதும் இறுதியாக மனத்தின் எதிர்ச்செயலின்மீது தியானம் செய்ய வேண்டும். புற உணர்ச்சியின் காரணங்களை மட்டும் அது அறியக்கூடிய நிலையில் மனம் நுண்ணிய பொருள்களையும், உடல்களையும், உருவங்களையும் காணும் திறன் பெறுகிறது. இந்த உள் நிகழும் செயலை மட்டும் அறியும் சக்தியைப் பெறும்போது தன்னிடமோ, பிறரிடமோ செயல்களாக மாறுவதற்கு முன்பே அவை எண்ண அலைகளாக இருக்கும் பொழுதே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது.
மனதின் எதிர்ச் செயலை மட்டும் புரிந்தவனுக்கு எல்லா அறிவும் கிட்டும். அவன் தன் மனதின் அடித்தளத்தைக் காண்பான். அது அவனின் கட்டுப்பாட்டிற்கு வரும். பல சித்திகள் கைகூடும். அவன் தன்னை அறிவு வடிவான என்றுமே அழியாத எங்கும் நிறைந்துள்ள ஆன்மாவாக காண்பான். எதையும் விரும்பாது எதனுடனும் ஒட்டிக்கொள்ளாது இருக்கும் அவன் இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகுடனும் தெய்வீக அமைப்பும் கொண்டதாக காண்பான். தியானத்தில் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவன் ஆழ்ந்த தியானம் பழகியதன் பலனாக தான் தியானிக்கும் பொருளின் வெளித் தோற்றத்தை புறக்கணித்து அதன் உள் பாகத்தில் மட்டும் அதனுடைய கருத்தை மட்டும் தியானிக்கும் பொழுது அதைச் சமாதி என்கிறோம். அதாவது முதலில் ஒரு பொருளின்மீது மனம் தியானம் செய்கிறது. பயிற்சியின் காரணமாகத் தொடர்ந்து நீண்ட நேரம் அப்பொருளையே தியானிக்கும் ஆற்றல் பெறுகின்றது. பின் தொடர்ந்து தியானம் பழகுவதனால் தியானம் செய்த பொருளின் உள்ளே ஊடுருவி அது காரியமாக இருப்பதற்குள்ள காரணத்தை மட்டும் காணக்கூடிய ஆற்றல் பெறுகின்றது. அப்போது அந்தமனத்திற்கு எல்லாம் வசமாகிறது.
கடவுளின்   வடிவத்தில்  பாதம்  முதல்   தலை  முடிவரை   நினைத்துப்  பார்ப்பது
தினமும் படுக்குமுன் தான் செய்தவைகள் சரியா, தவறா என்றும் செய்ய வேண்டியவைகளைச்  செய்து விட்டோமா என்றும் மனதில்  நினைத்துப் பார்ப்பது
அடிக்கடி ஓம் என்ற நாதத்தில்தான் பிரபஞ்சப் பொருள்கள் படைக்கப் பெற்றுள்ளன என்றும் ஓம் என்று சொல்லும்போது பிரபஞ்சமே அதில் அடங்கி நம் மனதில் உள்ளது என உணர்தல்.
நான் பிரம்மமாய் இருக்கின்றேன் (அகம் ப்ரஹ்மாஸ்மி), நானே சிவனாய் இருக்கின்றேன் (ஸோஹம்) என்ற அளவில் எண்ணங்களை உயர்த்திக் கொள்ளல்,
மௌனம், குறைந்த உணவு உண்ணுதல், தனிமையில் இருப்பது, அதிகாலை விழிப்பு, குளிர்ந்த அல்லது மனதிற்குப் பிடித்த இடத்தில் இருப்பது,
கடின உழைப்பு, நிகழ்வுகளில் மனம் செலுத்துதல், பாசம், உறவு முதலியவற்றால் சூழப்படுதல் முதலியவற்றிலிருந்து விடுபடுதல்,
பகைமை, பொறாமை, களவு, பழிச் சொல்லல், இரக்கமில்லாமை ஆகிய எண்ணங்களை விட்டுப் பழகல்,
ஆகியன தியானத்திற்கு மிகுந்த உதவி புரிந்து உறுதுணையாக நிற்கும்.
அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குறைந்தது 3 மணி நேரம் தியானம் செய்யவும். பின் மதியம், மாலை, படுக்கைக்குப் போகுமுன் என பழகவும். இப்படிப் பழகினால் 6 மாதங்களுக்குள் சமாதி யோகம் பயிலும் நிலைக்கு உயரலாம்.
யோகம் செய்வதற்குரிய தூண்டுதல் மிகுந்த இடங்களில் அல்லது அந்த இடத்தின் சுவர்ப் படங்களின் முன்னால் அமர்ந்து செய்யலாம். பிரபஞ்ச மாதிரிப்படம், சூரியக் குடும்பங்களின் வட்டப்பாதைகள் ஆகியனவற்றை அடிகடி கற்பனை செய்து கொள்ளவேண்டும். இந்த நதிக்கரைகள், புண்ணியத் தலங்கள் மற்றும் அகன்ற பரிமாணங்களும் பார்க்கப்பட்டு மனத்தால் கற்பனை செய்யப் படும்போது ஆங்கே பல்லாயிரம் ஆண்டுகளாக நீக்கமற நிறைந்துள்ள யோகிகளின் எண்ண அசைவுகள் நம்மை வந்தடையும். ஞானிகள் அதிர்வு அலைகள் நிறைந்த இடம் நாம் வசிக்கும் பூமிதான்.
முத்தியும் சித்தியும் பெற்ற நிகழ்வுகளைப் பற்றி படித்தும் கேட்டும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் நினைத்து தியானித்தால் சிறப்பு பெறுவீர்.
ஓர் இடத்தை இருப்பிடமாககொண்டு மனதை அங்கு இருக்கும்படிச் செய்தால் மனதில் ஒருவித அலைகள் உண்டாகின்றன. மற்ற அலைகள் இதை கலைப்பதில்லை. விழுங்குவதுமில்லை. படிப்படியாக இவை முன்னனிக்குவர மற்றவை பின் வாங்கும். நல்ல அலைகள் எல்லாம் ஒன்றாகி ஓர் அலை மட்டும் சித்தத்தில் எஞ்சும். அந்த அலையே தியானமாகும்.
மனதை ஒரு பொருளின்மீது 12 நொடிக்கு நிறுத்தினால் அது தாரணை என்றும், அதுபோன்ற 12 தாரணைகள் ஒரு தியானம் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஓம், காயத்ரி மந்திரங்களை உடம்பில் செலுத்தி மனத்திலும் உச்சரித்து நினைத்தல் சிறப்பு. “எந்த பரமாத்மா நமது புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைக்கும் அந்த பகவானின் சிறப்பான ஒளிமிகுந்த ஜோதி சொரூபத்தை தியானிக்கின்றேன்”
ஆகாசம் பிரபஞ்சம் முழுவதும் இருக்க இடம் கொடுத்தது என்று அடிக்கடி உச்சரிப்போடு நினைத்து பழகினால் ஆகாச பூதம் வசமாகும். அண்டத்தில் உள்ள எதையும் நினைத்து தியானம் செய்யலாம்.
1.உங்கள் மூக்கின் நுனியைப் பாருங்கள். இது மனதை ஒருமுகப் படுத்த உதவும். தலைக்குமேல் சில அங்குல உயரத்தில் ஒரு தாமரை இருப்பதாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினையுங்கள். எட்டு இதழ்கள் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். பூவின் கோசரங்களும், சூலகமும் தியாகத்தைக் குறிக்கும். தாமரையின் நடுவில் பொன்னொளி வீசுபவராய், சர்வ வல்லமை உள்ளவராய், தொடுவதற்கு அரியவராய், ஓங்காரத்தில் திளைத்து இருப்பவராய், மனம், வாக்குக்கு எட்டாதவராய் ஒளியால் சூழப்பட்ட அனைதிற்கும் ஈசனாய் இருப்பவரைத் தியானம் செய்யுங்கள்.
2.இதயத்தில் ஓர் சுடர் எரிவதாகவும் அச்சுடரை ஆன்மாவின் ஆன்மாவிகிய கட்வுளாகவும் நினைத்தும் தியானம் செய்யலாம்.
3.மனம் ஓர் இருட்டு குகை எனப் பாவனை செய்க
மெல்ல மெல்ல ஒரு நட்சத்திரம் போல் ஓர் ஒளி தெரிவதாக நினை
அது ஓர் சிவப்பு விளக்காக ஒளிர்விட்டு பிரகாசிப்பதாக நினை
அது கடவுளின் ஒளி என்று தியானம் செய்யவும்
பிறகு படிப்படியாகக் குறைந்து மனக் குகையில் மறைந்து விட்டதாக நினை.
குகையாக நினைக்கும்போது கண்களை மூடவும். ஒளித்தெரியும் போது மெல்ல திறக்கவும். மீண்டும் கண்களை மூடவும் செய்து தொடரவும்.
பின் அந்த உள்ஜோதியில் உடல் அடங்கி பெரிய ஜோதியில் ஐக்கியம் ஆவதாக நினைக்கவும். உறவுகள், சொத்துக்கள், உடல், பொருள் ஆவி எல்லாம் கடவுளில் ஐக்கியமாகி விட்டதாகவும் இனி அவற்றிற்கும் நமக்கும் எந்த தொடர்புமில்லை என உணர்க. நம் ஆன்மாவைத் தவிர நமக்கு உரியது எதுவும் இல்லை என உணரவும்.
புத்தியில் கலக்கம் இல்லாது, மனத்தில் புற அசைவுகள் இல்லாது பொறி புலன்களின் செயல்கள் இல்லாமல் தியானிப்பது முழுமையான தியானமாகும். ஆத்மா தனித்து நிற்கிறது. பாலில்- நெய்யையும், எள்ளில்- எண்ணெய்யையும், பிரிப்பதுபோல் தியானப்பயிற்சியால் ஆத்மாவில் உள்ள தெய்வம் தெரியவரும்.
தூக்கம் – கனவு – விழிப்பு ஆகிய 3 நிலைகளிலும் உடம்பே ஈடுபடுகிறது. ஆத்மா தனித்தே நிற்கிறது. ஆத்மா உடலில் மனம், பிராணன், பொறி, புலன்கள் ஆகியன தனியாக இயங்குகின்றன. ஐந்து கோசங்களாகிய அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் ஆகியன ஐக்கிய நிலையில் இருந்தாலும் ஆத்மாவுடன் இனைப்பு இல்லை.
ஓங்காரத் தியனம்-
பிரபஞ்சத்தின் முழு அடையாளமே ‘ஓம்’ ஒலியும் அதிலுள்ள பொருள்களும் ஆகும். ‘ஓம்’ என்றால் அ – உ – ம் – நாதம் – விந்து என்ற ஐந்தையும் குறிப்பது. இறைவனின் ஐந்து தொழில்களையும் குறிக்கும். ஓம் – ன் விரிவு, பரப்பு பிரபஞ்ச முழுவதிலுள்ள பொருள்கள். மனதில் ஓங்காரத்தை சொல்லும்போது அதன் அதிர்வு உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர் ஒலி ஏற்படுத்தும். இதை ஆத்மா உணருகிறது. எனவே இதை ஆத்ம ஒலி எனலாம்.
முன்பே ஆத்மாவும் பிரம்மமும் இணைகின்றது எனச் சொன்னோம். ஆகவே இப்போது ஆத்மா, பிரம்மம், ஓம் எல்லாம் ஒன்றாகிறது. அ- விழிப்பு நிலையாகவும், உ- கனவுநிலையாகவும், ம்- உறக்க நிலையாகவும் செயல் படுவதால் உடலின் உயிரோடு ‘ஓம்’ –ன் தொடர்பு புரியும். சச்சிதானந்த பிரம்மம் எனும் நிலையை ஆன்மாவிற்கு ‘ஓம்’ தியானத்தின் மூலம் கிடைக்கும். (சத்-எப்போதும் உள்ளது, சித்- ஞானமயமாயிருப்பது, ஆனந்தம் – ஆனந்தாமாயிருப்பது). இந்த ஒலி எங்கும் வியாபித்துள்ளது. இயற்கையின் அசைவில், காற்றின் அசைவில், நீரின் ஓட்டம் ஆகியவற்றில் இலகுவாக கேட்கலாம்.

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

தாரணை

Written by

தாராணை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மனதை நிறுத்திவைப்பது தாரணை. உடலின் பகுதிகளை ஏனையவற்றிலிருந்து பிரித்து அவற்றை மனம் உணரும்படி செய்வதாகும். கையின் மீது மனதை நிறுத்துங்கள் இப்படிச் சித்தம் ஏதாவது ஓரிடத்தில் நிலை நிறுத்தப்பட்டால் அது தாரணையாம். தாரணை வெளிப் பொருளில் மனதை நிலை நிறுத்துவதாகும். அணு முதல் அண்டம் வரை அல்லது பிரபஞ்சம் வரை ஒவ்வொன்றாக எடுத்து அதை மனதில் நிறுத்துவது. இதை ஒருமுகப்படுத்துவது அல்லது ‘ஏகாக்ரம்’ என்லாம்.
மனதில் காலம் – இடம் – காரணம் – காரியம் ஆகிய தொடர்புகளின் சக்திகள் இயங்கிக் கொண்டே இருக்கும். நம் வாழ்நாளில் சந்தித்த நிகழ்வுகள், செய்திகள் பற்றியன அவைகள். தேவைப்படும்போது அவை ஒன்று சேர்வதும், வேறு பொருளில் மனம் நிலை செய்யப்படும்போது இவைகள் மேலெழுந்து வராமல் இருப்பதுதான் தாரணை.
வெளியில் உள்ள பொருளின்மேல் மனத்தை நிறுத்தும் போது அவை பற்றிய விவரங்கள் காலம், இடம், காரண காரியங்கள் மனத்தில் தோன்ற விடாமல் செய்வதும் தாரணை. இச்செயலில் மனம் கட்டுப்பட்டிருந்தால் இந்திரியங்களின் மேல் மனம் செல்வது தடுக்கப்பட்டிருக்கும். சுற்றி நடப்பது எதுவும் தெரியாது.
சாக்கடையின் வாசனை அருகில் குடியிருப்பவனுக்கும் தெரியாது. அதை சுத்தி கரிப்பவனுக்கும் தெரியாது. மனத்திற்கும் மூக்கிற்கும் உள்ள தொடர்பானது தேவையில்லை என அற்றுப் போய்விடுகிறது. ஒன்றை மறந்த நிலை. இது இந்த யோகத்தினாலும், பக்தியினாலும் சாத்தியமே. சிறிய பொருளிலோ பெரியபொருளிலோ மனத்தை நிறுத்தும் போது 12 விநாடிகள் நிறுத்த வேண்டுவது தாரணை. சிறிய பொருளில் மனத்தை நிறுத்தும் போது மனதில் அது அடங்கும் உணர்வு நிலை தெரியும். பெரிய மலைத்தொடர்களை நிறுத்துவது கடினம். ஆனால் மனம் அதைவிடப் பல மடங்கு பெரியதாக விரியும் தன்மைக் கொண்டது.
உலகில் எல்லாப் பொருள்களுக்கும் 3 பகுதிகள் உண்டு. 1. ஆதிபௌதிகம்- நம் கண்ணால் காணும் பொருள். 2.ஆதியாத்மிகம்- நம் ஆத்மாவும் அந்தப் பொருளின் உள்ளமைப்பும் ஒத்திருக்கும். 3.ஆதிதைவிகம்- அந்தப் பொருளை உருவாக்கி அதைக் கண்காணிக்கும் சக்தி, ஒருபொருளை நினைக்கும்போது இந்த மூன்று பகுதிகளுக்குள்ளும் தொடர்பு ஏற்பட்டு அவன் பலனடைகிறான். யோக நிலையில் இமயத்தைப்பற்றி மனதில், நானே இமயம் என்று உடலை நினைத்தும், தன் அங்க அசைவுயாவும் மலையில் நிகழ்வதாக உணர்வதும் ஆகும். மலைமீது யாத்திரைகள் தன் உடலின்மேல் நடப்பதாக பாவிக்கலாம்.
மனத்தின் கவனத்தை வேறு எதிலும் செல்லவிடாமல் முதுகுத்தண்டு வழியாகச் செலுத்தி, தன் உடல் உள்பட பிரபஞ்சம் யாவையும் சூன்யவெளியாகப் பாவித்து, கண் விழித்தும் ஒன்றும் பார்க்காமலும், காது இருந்தும் ஒன்றும் கேளாமலும் இருக்கும் நிலையே தாரணையாகும். உலகமெங்கும் பிரம்மம் போல் எல்லாமாக தான் இருப்பதாக உணர்ந்தால் எந்த ஒன்றையும் பார்க்கவோ, கேட்கவோ முடியாது- தி-மந்திரம்-581
முதுகுத்தண்டில் உள்ள நீண்ட நாடியாகிய சுழுமுனை நாடிவழியாகக் குண்டலினி- பிராணச் சக்தியுடன் மனமும் சென்றால், தலையின் உள்ளே பொது நடனம் புரியும் ஆனந்தமாயமான ஜோதியைக் கண்டால், அருவிபோல் அமுதம் ஊறிப்பாயும். தி-மந்திரம்-589
தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரை-சகஸ்ராரத்தில் கடவுளுடன் சேரும் எண்ணத்துடன் மூலாதாரத்தில் பராசக்தி குண்டலினியாய் இருக்கிறாள். ஓம் மந்திரத்தால் அவளை எழுப்பினால் சிவசக்தி இணைப்பு தலையில் நடக்கும்.- இதனால் யோகி இளைஞனாக என்றும் இருப்பான். ஒளி காண்பது, ஒலி கேட்பது, ஆமுதம் ஊறுவது ஆகிய எல்லாம் சிவசக்தி ஐக்கியத்தின் அடையாளம். தி-மந்திரம்-590
ஆசன வாயை மனத்தால் மூடி கும்பகம் செய்யும் காற்றால் குண்டலினியை எழுப்பி சுழுமுனை வழியாக ஆராதாரக் கதவுகளை திறந்து வைத்து இனிய மனத்துடன், கொக்கு மடை வாயிலில் காத்திருப்பதுபோல் காந்திருந்தால், யோகம் ஊழிக்காலம் வரை உடம்பை அழியாமல் காப்பாற்றும். தி-மந்திரம்-591
உடல் உயிருடன் கலந்து இருக்கும். அதன் ஆயுட்காலத்தை அறிந்தால் அது மூச்சுக்காற்றுடன் தொடர்பு உடையது என தெரியும். காற்றை கும்பகத்தால் அடக்கி பிராணாயாமம் செய்து பழகினால் ஆயுட் காலம் குறையாது. தி-மந்திரம்-592
வாய் திறவாமல் மௌனம் சாதிப்போர் மனத்தில் ஒரு செல்வம் இருக்கும். வாய் திறந்து பேசுவோர் பிராண சக்தியை மூச்சை விடுவது போல் வெளியே விடுவர். மௌனம் காப்போர் சந்திர அமுதினை ஊறுமாறு செய்வதால் ஆயிரம் தாமரை இதழ்கொண்ட சகஸ்ராரம் கோழையில்லா வீரரான இவர்க்கு கண்டிப்பாக வழி விடும். தி-மந்திரம்-593
வெளியில் போகும் காற்றை தனக்குள் அடக்கினால், ஏழு ஜன்னல்களும் இரு பெரிய வாயிலும் கொண்ட உடல் சிவசக்தி கூடும் பள்ளியறையாகும். ஆகவே உடம்பு பலகாலம் அழியாது. தி-மந்திரம்-594
பத்து இந்திரியங்களில் ஞானேந்திரியமாகிய ஐந்தும் வசம் செய்யப்படாமல் போனால் அவை யோக முயற்சிக்குத் துணையாய் இருக்காது. அப்போது வருந்தி என்ன பயன். காற்றை அளவாக இழுத்து கும்பகம் பயின்றால் மனமாகிய குரங்கை உடலின் கோட்டையில் அடைத்து யோக சித்தி பெறலாம். தி-மந்திரம்-595
இப்படி திட்டங்களால் யோகத்தை சாதிக்க முடியாமல் பலர் இறந்தனர். இதை இனியும் மதிக்காதவர் யோக சித்தி அடைவர் என உறுதியாக சொல்ல முடியாது. கோடிக்கணக்கானோர் வீடுபேறைப் பற்றி பேசுகின்றனர். அதையும் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆற்று வெள்ளத்தில் இடிந்திருக்கும் கரை மேலும் இடிவதுபோல் மரணத்தால் இவ்வுடல் அழியும். அதற்குள் சாதனை புரியவேண்டும். தி-மந்திரம்-596
இடிந்த கரைப்போல் வாழ்வு முதுமை, அச்சம் என்கிற மரணம் இவற்றால் அரிக்கப்படும். கடவுளிலிருந்து இந்த உடல் வரை எப்படி படைப்புகள் தொடர்ந்தனவோ, அதே முறையில் உரியவற்றில் ஒன்றிவிட்டால் தற்பரமாகிய கடவுளுடன் ஒன்றுவது போலாகும். இதுவே தாரணை. தி-மந்திரம்-597

எண்ணும் பயிற்சி-
1.சுவை, ஒளி, உறு, ஓசை, நாற்றம் எனப்படும் தன்மாத்திரைகள் ஆகிய சூக்ம பூதங்கள் (ரூப, ரச, கந்தம், சப்த, பரிசம்)-5
2.இவற்றிலிருந்து விரிவடைந்த பெருவடிவப் பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)-5
3.தன் மாத்திரைகளில் உண்டாகிய ஞானேந்திரியங்கள்(காது, கண், மூக்கு, வாய், தோல்)-5
4.அதனால் உண்டாகிய கர்மேந்திரியங்கள்(கேட்டல், பார்த்தல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்)-5
5. அந்தக்கரணம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம்-4
மொத்த ஆன்ம தத்துவம்- 24
1. சிவ தத்துவம்-5
2. வித்யாதத்துவம்-7
3. ஆன்ம தத்துவம்-24
மொத்தம் 36
உடம்பை பஞ்ச பெரும் பூதங்களில் அடக்கி அவற்றை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய தன் மாத்திரைகளில் அடக்கி – மனம் புத்தி சித்த அகங்காரங்களை அவை தோன்றிய மூலப் பிரகிருதியில் அடங்கச் செய்து விட்டால், ஆன்மாவும் பிரம்மமும் சத்சித் ஆனந்தம் எனும் பிரம்மத்தில் கலந்துவிடும். இப்படி நினைத்து அடக்கவும்.- முதலில் நாமே வரிசையாக எண்ண வேண்டும். பிறகு மூலப் பிரகிருதியிலிருந்து மறுபடியும் பிரிந்து பிரபஞ்சமாகவும் உடலாகவும் வருவதாக எண்ண வேண்டும்.
என் உடல் பஞ்ச பூதங்களில் அடங்குகிறது.
என் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
பஞ்ச பூதங்களூம் அணு வடிவமாகிய தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் மூலம் தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
என் மனம் சித்தத்திலும், சித்தம் புத்தியிலும், புத்தி அகங்காரத்திலும், அகங்காரம் மூலப்பிரகிருதியிலும் அடங்குகிறது
ஆன்மாவைத்தவிர எல்லாம் மூலப்பிரகிருதியில் அடங்குகிறது.
மூலப்பிரகிருதியும் மாயையில் அடங்குகிறது.
மாயையில் வித்யா தத்துவங்கள் ஏழும் அடங்குகிறது.
சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்த மாயையில் அடங்குகின்றது.
இரு மாயைகளும் ஒன்றாகின்றது.
சத் – சித் ஆனந்தத்தில் ஆன்மா கரைந்து மற்றவை எல்லாம் அடங்கிய பிரமத்திடம் தானும் நெருங்கி நிற்கிறது.
இப்படி எண்ணியதை மீண்டும் சென்ற வழியிலே திரும்பி வருவதாக எண்ணவும்.
பிராணாயாமத்தின் பிறகும் பிரத்தியாகாரம், தாரணை ஆகிய பயிற்சிகளால் மனம் மகிழ்ச்சியில் இருப்பதை உணரலாம். ‘ஏகாக்ரம்’ செய்யும்போது பிராணன் யோகியின் தலையில் மிதந்து நிற்கும். தலையில் ஏற்படும் கனம், பரபரப்பு, அலைவு ஆகிய நிகழ்வுகளால் இதை உணராலாம்.
கண்ணால் பார்த்த பொருளை அடுத்து கண்களை மூடி மனத்தில் அதே பொருள்களை நினைத்து பழக வேண்டும். கண்ணால் பார்த்தபோது அறியாமை நீங்கும். மனத்தால் பார்க்கும்போது பொருளின் சக்தியும் செயலும் புரியும். பொருள்களிலிருந்து மனத்தையும் பிரித்தும் பழகலாம். மனத்தால் பார்க்கும்போது ‘ஓம்’ – ‘ஓம் நமசிவாயா’ – ‘ஓம் நமசிவாயா’ – ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திர உச்சரிப்புக்கள் மிகுந்த பலனைத் தரும்.
மௌனம் தாரணைக்கு எப்போதும் துணை செய்யும். எனவே மௌனமாக இருக்கப் பழக வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது மௌனமாக இருந்தால் பலன் உண்டு. அப்போது மனம் எதை, எதை நினைக்கின்றது, எங்கெங்கே போகின்றது என்பதைப் பார்த்து அதை தடுக்கவும். இருக்குமிடம் அமைதியை தராவிட்டால் யாருமில்லா இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
தீவிரப் பழக்கத்திற்குப்பின் புருவ மத்தியில் அசையும் உணர்வு ஏற்படும். அங்கே ஒளி தென்படக்கூடும். அந்நிலையில் நீங்கள் நினைத்தது உடனடியாகத் தெரியும்.

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

பிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்

Written by

பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
ஓர் ஆன்மா தன் விருப்பப்படி மனதை நரம்பு மையங்களுடன் சேர்க்கவோ பிரிக்கவோ செய்வதில் சக்தி பெறுதல் பிரத்தியாஹாரம் எனப்படும். பிரத்தியாஹாரம் மனதின் ஆற்றல்கள் பெறிகள் மூலமாகப் புறத்தில் போய் வீனாகச் செலவழியாமல் அவற்றைத் தடுத்து உள்பக்கம் திருப்பி சித்தத்தின் வலிமையான ஆட்சிக்குள் அதைக் குவித்தல் என்பதாகும். அதாவது ‘பொருளை உள்ளத்தினுள் சேமித்து வைப்பது ஆகும். இதைச் செய்ய முடிந்தவன் நல்லொழுக்கம், நற்குணம் வாய்க்கப் பெற்று முக்தி பெறும் மார்க்கத்தில் சிறந்த முன்னேற்றம் காணமுடியும்.
அதற்கு மனதை அடக்கவேண்டும். ஆசனத்தில் அமர்ந்து மனதை அதன் வழி செல்ல விடுங்கள். என்ன என்ன நினைக்கின்றது எனப்பாருங்கள். நீர்க்குமிழி போல் வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்கும். குரங்கு மணம் என்று சொல்லுவதால் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். அது எங்கே சென்றாலும் பொருமையாக அதைக் கவனியுங்கள். கொடிய எண்ணங்கள் எழும். அந்த மாதிரி எண்ணங்கள் உங்களின் மனதில் இருந்ததை நினைத்து ஆச்சரியப்படுங்கள். மனம் வேறு என்ன நினைக்கின்றது என அதன் போக்கில் விடுங்கள். நாள் செல்லச் செல்ல மனதின் போக்கு மாறி வருவதையும் அது அமைதியாவதையும் உணரலாம்.
அறிவே வலிமை தரும். மனம் என்ன செய்கின்றது என்பதை அறியாமல் எப்படி அதை அடக்குவது. முதலில் பலதரப்பட்ட எண்ணங்கள் மனதில் உதயமாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த எண்ணங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஒன்றும் இல்லா நிலையை அடையும் போது மனம் அமைதியடையும். அதற்கு தகுந்த பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
நீராவியை உள்ளே விட்டால் எந்திரம் இயங்குகின்றது. கண் முன்னாள் பொருள் இருந்தால் அவைப் புலப்படும். பொருள்கள் புலப்பட்டு நாம் எந்திரம் ஆகிறோம். நாம் அதனால் கட்டுப்படவில்லை என நிரூபிக்க வேண்டும். அப்படி மனதை அடக்கி புலன்களுடன் தொடர்பு கொள்ளாமல் தடுப்பதுதான் பிரத்தியாஹாரம்.
ஒரு பொருளைப் பற்றிய காட்சி மனதில் ஏற்படுவதற்கு முதலில் புறக்காரணங்கள், அடுத்தபடியாக உட்கருவிகள் மூளை மையங்கள் மூலமாக இயங்குகின்றன. அடுத்தபடியாக மனம் உள்ளது. இவையெல்லம் ஒன்றுகூடி ஒரு பொருளோடு சேரும்போது நாம் காட்சி காண்கின்றோம்.
மனதை ஒரு பொறியோடு இனைந்திருக்க செய்வது கடினம். “நல்லவனாக இரு”, “திருடாதே”, “பொய்சொல்லாதே” என்று சொன்னால் மட்டும் போதாது. அதை எப்படி செய்யாமல் இருப்பது என விளங்கச் சொல்லவேண்டும். உண்மையில் மனதை அடக்கியாள கற்றுக் கொடுக்கும்போது தான் அவர்களுக்கு உண்மையான உதவி செய்கிறோம்.
விரும்பியோ, விரும்பாமலோ மனம் பொறிகள்பால் கவரப்பட்டு பொருந்துகின்றது. உள்ளேயும், வெளியேயும் நிகழும் செயல்கள் எல்லாம் மனம், பொறிகள் என்ற மையங்களோடு தன்னைப் பொருத்திக் கொள்வதால் நிகழ்கின்றது. இதனால் தவறான காரியங்களைச் செய்து பின்னால் வருத்தமடைகின்றனர். மனதை அடக்கி ஆண்டால் இது நிகழாது. மனம் பொறிகள்பால் சேராது. எண்ணங்களும் செயல்களும் கட்டுப்பட்டிருக்கும்.
மனோவசியத்தால் மற்றவர் நம் மனதை அடக்க நேர்ந்தால் கேடு நிகழும். நோக்கங்கள் சிதறும். ஆன்மாவின் குறிக்கோள் சுதந்திரமடைவது. மற்றவர் மனோவசியத்தால் ஒருவனது புலனை புறக்கணிக்கும் அளவிற்கு அவன் மனத்தை வலிமையுள்ளதாக்கலாம். அந்த மனம் வலிமை இழந்ததாகும். அவனின் நரம்பு நிலைகள் வசியத்தினால் அவனுக்கு இறுதியில் கேடு விளைவிக்கும். இந்த வசியமானது ஓடும் குதிரையை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தாமல் மண்டையில் ஓங்கி அடித்து அதை மயங்கச் செய்தலுக்கு ஒப்பாகும். வசியத்திற்குட்பட்டவன் முழுமன வலிமை பெறுவதற்குப் பதில் வலிமை முற்றிலும் குன்றிய மனதின் காரணமாக பைத்தியக்காரனாகிவிடுவான். எனவே நம் மனதை நாமே அடக்கவேண்டும்.
ஜடப்பொருள், எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலிப்பெற்று அகம், புறம் ஆகிய இருவகை இயற்கைகளையும் அடக்கியாளக்கூடிய திறன் வேண்டும். உடலையும், மனத்தையும் நீங்களே அடக்கியாளுங்கள். நோய்வாய்பட்டிருந்தால் தவிர எந்த வெளிச்சக்தியும் உங்கள் மனதின்மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. உணர்ச்சிவசப்படும் எந்த மக்கள் மீதும் ஒருவகை போலியான தற்காலிக கட்டுப்பாட்டை உண்டு பண்ணி மனதை பறிகொடுக்க வைத்து மக்களை இழி நிலைக்கு ஆளாக்கும் தீய சக்திகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.
பயிற்சிகள் தொடர்ந்து செய்து பழகவும். வேறுபட்ட உணர்வுகள் கொண்டவர்களுடன் பழகுவதை குறைக்கவும். அவர்களின் உணர்வுகளின் தாக்கங்கள் பயிற்சிக்கு இடையூராக இருக்கும். கூடுமானவரையில் தனித்து பயிற்சி செய்யுங்கள். உரையாடுதல் மனதைச் சிதறடிக்குமாதலால் அதிகம் போசதீர்கள். ஓர்நாள் உழைத்தபின் அந்த வேலையின் பளு மனத்தை குலைத்துவிடுமாதலால் அதிக வேலைசெய்யக் கூடாது.
யோகத்தினால் தீங்கு எதுவும் இல்லை, நன்மையுண்டு. நாடி நரம்புகளில் பதைபதைப்பை முதலில் தனிக்கும். மனம் அமைதி கிட்டும். ஆராயும் பொருளை தெளிவாக அறியவைக்கும். மனம், உடல், நலம்பெறும். முதலில் உடல் நலம் பெறும். பின் குரலில் கரகரப்பு மறைந்து இனிமை ஏற்படும். பயிற்சியில் வெற்றிபெற உணவுப் பழக்கம் சீராக வேண்டும். அதிகம் உண்ணுதலோ, குறைவாக உண்ணுவதோ கூடாது. கட்டுப்பாடான உணவு உட்கொள்ளவேண்டும். பால், பயிறுவகைகள், பழங்கள் உட்கொள்வது நல்லது.
மனதை ஒருமுகப்படுத்தும்போது ஒரு குண்டூசி விழுதல்கூட பெரிய சத்தமாகத் தெரியும். உறுப்புகள் நுட்பமாய் செயல்படும்போது காட்சிகளும் நுண்ணீயதாகும். குழப்பங்களை விட்டெழித்து புறத்தூண்டுதல்கள் கலக்காமல் மனதை மூடி உள்ளே உள்ள உண்மையை ஒளிரச் செய்யுங்கள். சாதனைகள் வெற்றிபெற தொடர் செயல் வேண்டும். ஒருமுறையைச் செய்து பாதியில் விட்டுவிட்டு பிறகு வேறுமுறையில் செய்தால் பலன் கிடைக்காது. தேந்தெடுத்த முறையில் அதையே நினைத்து கனவுகண்டு அந்த வெற்றிக்காகவே வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த ஒரே நோக்கத்திற்காக உழைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிடல் வேண்டும். இடைவிடாத முயற்சியும் மிகுந்த மனவலிமையும் பெற்றவர்களால்தான் வெற்றி காணமுடியும்.
“நான் கடலை குடித்திடுவேன், எனது மனவலிமையால் மலைகள் தவிடு பொடியாகும்” என்பது போன்ற மன உறுதியுடன் உழைப்பைக் கலந்து செயலுடன் இலட்சிய வெற்றி காண்பீர்.
எண்ண அலைகள் பாதியாக குறைவதற்கு இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம் அகியவைகள் துணை நின்றுள்ளன.
தூல உடம்பு –ஞான இந்திரியம்- பஞ்ச இந்திரியம் என்பன- காது, கண், மூக்கு, வாய், தோல் ஆகியன. அவை பொறி எனவும் கூறப்படும்.
தன்மாத்திரைகள்- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவை பொருள்களை உணர்வதற்கு காரணமாகின்றன. அவை புலன்கள் எனப்படும்.
பஞ்சபூதங்களின் நுண்ணியவடிவம்- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. நுண்வடிவங்களின் உயிர்கள் உடம்பாகும். பஞ்ச பூதங்களின் பெருவடிவம் – பிரபஞ்சம் ஆகும்.
நுண்ணிய புலன்கள் தளர ஆரம்பித்தால், பொறிகள்- தூல உடலின் கருவிகள் கலங்கிவிடும். நெறி மயங்கி குளறி விடும். அறிவு அழியும். கபம் எழுந்து செய்வது அறியாமல் திகைக்கச் செய்யும். எனவே நுண் உடம்பே பரு உடலைப் பணி செய்ய வைக்கின்றது. பரு உடலுக்கும் நுண் உடம்பிறகும் நடுவே மனம் செயல்பட்டு வாழவைக்கின்றது.
ஆழ்ந்து ஓர் இடத்தில் மனதைச் செலுத்தினால் பக்கத்தில் உள்ள நாற்றங்கள் தெரிவதில்லை. என்ன நடந்தாலும் தெரிவது இல்லை. மனம் ஒன்றைப்பற்றி அதில் ஒன்றும்போது நுண்ணுடம்பும், பரு உடம்பும் சேர்ந்து செய்யும் செயல் நடப்பதில்லை. அதனால் மனம் விருத்தியாகி எண்ண அலைகள் அதிகமாவது குறையும். இந்த நிலையை வரவழைப்பது பிரத்தியாஹாரம் ஆகும்.
புலன்களாகிய தன்மாத்திரைகளை விட்டு விட்டு ஒரு பொருளில் ஈடுபடும் பொறிகள் சித்தத்தின் உறவை மட்டும் ஏற்பது பிரத்தியாஹாரம் ஆகும். பொருள்களிடத்தில் சேரும் இந்திரியங்களை- பொறிகளை- வலிந்து தடுப்பது பிரத்தியாஹாரம். பொருள்கள் பொறிகளை வசம் செய்ய முடிவதில்லை. பொறிகளும் தாமாக எந்த ஒருபொருளிலும் படியமுடிவதில்லை. புலனும் பொறியும் இணையமுடியாமல் பிரிக்கப்படுகின்றது. இதை இணைக்கும் மனம் வேறு பணிக்குத் திருப்பப்பட்டதால் இவை செயல் இழந்தன. ஆத்மா சித்தத்தின் வழி செயல்படும்.
பார்ப்பவன் மனிதனாகவும் பார்ப்பது கண்ணாகவும் பார்க்கப்படுவது தென்னை மரம் என்றால் அது இயல்பாக நடப்பது. பார்ப்பவன் ஆத்மா பார்ப்பது மனம்/புலன்/பொறி ஆகவும் பார்க்கப்படுவது தென்னைமரம் என்றால் புலனும், பொறியும் இனையாமல் மனம் முழுவடிவில் இல்லாமல் இருப்பதால் தென்னைமரம் தெரிவதில்லை. இந்நிலையில் ஆத்மா மனம், புலன், பொறிகளை ஒன்றாக்கி விளங்க அங்கே ஆத்மஞானம், ஆனந்தம் வரும். பார்க்கப்படுவது தென்னை மரத்திற்குப் பதில் பிரம்மமாயிருந்தால் மனம், புலன், பொறிகள் செயல் இழக்க, எப்போதும் ஆத்மாவும் பிரம்மாவும் ஒன்றுபட்டவை ஆகையால் இனைகிறது. பிரம்மானந்தம், போரானந்தம் நம்மையடையும். இது பிரத்தியாஹாரத்தைப் பழகுவதனால் நம்மால் சாத்யமாகும்.
“யத் யத் பச்யதி தத் ஸர்வமாத் யேதி ப்ரத் ஹாரஹ” –உபநிஷத்
பார்க்கும் ஆத்மாவும் பார்க்கப்படும் பிரம்மமும் ஒன்றாகி விடும்போது எல்லாம் எங்கும் ஆத்மாவே என்ற நிலை ஏற்படும். மற்றபொருள்களை காணாது நினையாது ஒதுக்கி விடுதல், உணரவைப்பது பிரத்தியாஹாரம்.
ஆத்மாவைக் காணும் கருத்து மேலோங்கினால் புலன் பொறிகள் மனத்தை விட்டு அகல, வேதத்தின் யோகநெறியில் மகிழ்ந்து இருக்கும் இறைவனை கண்டு அவனுடன் இணையலாம். தி-மந்திரம்-578
தொப்புளிலிருந்து 12 விரல்கள் தொலைவில் உள்ள மூலாதாரத்தில் பதிந்து சொல்லும் “ஓம்” பிரணவ மந்திரத்தை அறிந்து சொல்ல கடவுள் அங்கே வெளிப்படுவான்- தி-மந்திரம்-579
மலத் துவாரத்திற்குமேல் 2 விரல் உயரத்திலும், சிறுநீர் துளைக்கும் கீழ் 2 விரலும் ஆகிய இடத்திலிருந்து தொப்புளுக்கு கீழே 4 விரல்வரை குண்டலினி சக்தி இருக்கிறது- தி-மந்திரம்-580
மூக்கு நுனியிலிருந்து 12 விரல் தூரத்தில் உள்ளது அதோமுகம்- தண்டுவடம் தொடங்குமிடம். அதில் மனதை பதியவைத்து தியானம் செய்தால் பெரிய சித்தயோகம் கைக்கூடும். உடம்பிற்கு அழிவில்லை. தி-மந்திரம்-581
சுழுமுனை நாடியில் சுடர் ஒளி மின்னல் கொடிபோல் தோன்றினால் பரமானந்தம் உண்டாகும். கண்டத்தில் தொண்டைக் குழியில் நீல ஒளி உண்டானால் உடல் கட்டுப்படாத மகிழ்ச்சியில் துள்ளும். தி-மந்திரம்-582
மூலாதாரத்தில் முடியும் சுழுமுனை நாடியின் துவாரத்தையும், தலை உச்சியில் உள்ள பிரம்ம நாளமாகிய நடுத்துளையையும் மனதில் இனைத்து ஒன்றாக்கி விழிகள் மூடாமல் வெளியே விழித்திருக்க- ஆயுட்காலம் வென்று வாழும் காலமாகும்.- தி-மந்திரம்-583
மலத் துவரத்திற்குமேல் 2 விரல் தொடங்கி மேலே 8 விரல் வரை குண்டலினி இருக்குமிடம். அதைத் தியானித்தால் எல்லாவற்றின் கருவாய் நிற்கும் சோதியான கடவுள் கலந்து நிற்கிறான் என்பதை உணரலாம். தி-மந்திரம்-584
மாயையின் உபாதியை ஒடுக்கவும். ஜோதியான சிவனை நம்மை விட்டுப் பிரிப்பது நான் என்னும் தன் அறிவு. அந்த அறிவாகிய உபாதியையும் கரைத்து நீயும் சிவத்தில் கரைந்து உள்நோக்கி உன் நிலை அறிக. இதுவே பிரஹாரத்தின் பெருமையும் முழுமையும் ஆகும். தி-மந்திரம்-585
காற்றை உள்ளே இழுத்து வெளியேற்றாமல் நிறுத்தியதால் உடலில் புறப்பட்ட பிராணனால் உள்ளம் வலிமை பெரும். உள் இருந்த கடவுள் வெளியேறாததால் அவனை அங்கே கண்டு கொள்ள முடியும். தி-மந்திரம்-586
பிரத்தியாஹாரத்தில் மனதின் உள்ளே பிரபஞ்சத்தை காணலாம். மயக்கம் தரும் மாயை நீக்கி சிவனை நாடும் சிறப்பான உணர்வு சிந்தையினால் அந்த தருணத்தில் உணர்திட்டால் அறிய விரும்பும் காட்சி ஒளிமயமாகத் தெரியும். தி-மந்திரம்-587
பிரத்தியாஹாரப் பயிற்சி-
முதல் முறை- 1.கால்பாதம், 2.கால் கட்டை விரல், 3.கணுக்கால், 4.கெண்டைக்கால், 5.முழங்கால், 6.மலவாய், 7.தொடை, 8.ஆண் (+பெண்) குறி, 9. தொப்புள், 10.இதயம் (மார்பு), 11.கழுத்து, 12. தாடை, 13. மூக்கு, 14.கண், 15.புருவமத்தி, 16.நெற்றி, 17.தலை உச்சி, 18.இந்திரயோனி (உண்ணாக்கு) –இந்த பதினெட்டு மர்மத் தானங்களில் உணர்வை நிறுத்தி பிற இடங்களில் உணர்வு செல்லாது காப்பது பிரத்தியாஹாரம். கீழிருந்து மேலாகவும் பின் மேலிருந்து கீழாகவும் ஒவ்வொன்றையும் நினைத்து மனதில் நிறுத்தி பழகவும்.
1.அமைதிதரும் ஆசனத்தில் அமரவும்.
2.உடல் முழுவதும் சூன்யம் ஆகிவிட்டதாகவும், நான் என்ற உணர்வும் மட்டும் இருப்பதாக கருதவும்.
3.முதலில் கட்டைவிரலை மட்டும் நினைக்கவும். கண்களைத் திறந்து வெளியை காண்பது போல் காண்க. கண்ணில் ஒரு பொருளும் விழியில் தெரியவில்லை என்று மனதை அடக்கவும். கால் கட்டைவிரல் மட்டும் மனக்கண்ணிற்குத் தெரிவதாகவும் பிற ஒன்றும் தெரியாததாகவும் எண்ணவும்.
4.பிறகு படிப்படியாக ஒவ்வொன்றாக இதேபோல் வரிசையாக நினைத்து செய்க. ஒன்றை நினைத்து முடிந்ததும் அடுத்ததை மட்டுமே நினைக்கவும்.
5.தலை உச்சிவரை சென்றபின் கீழிரங்கி வரிசையாக நினைக்கவும்.20 விநாடிகள் ஒவ்வொரு உறுப்புக்கும் எனக் கொண்டால் மொத்தம் 18 உறுப்புக்கள்.அதாவது 18 x 2(மேலே+கீழே) x 20 விநாடிகள் =720 விநாடிகள் = 12 நிமிடங்கள்.
நேரத்தைக் குத்து மதிப்பாக கொள்ள வேண்டும். அதைக் கணக்கிட்டுக் கொண்டு மனதை விரிவடையச் செய்யக்கூடாது.
ஆரம்ப பயிற்சிகள் முடிந்ததும் ஒவ்வொரு உறுப்புக்கும் 12 நிமிடங்கள் எனக் கொண்டு மொத்தம் 18x2x12 நிமிடங்கள் = 7மணி 12 நிமிடம் செய்யவும்
இதற்கு மலைஉச்சி, அருவிக்கரை, ஏரிக்குளக் கரைகள், ஆற்று ஓரம், ஆற்று மையம், கடற்கரை, ஆல் அல்லது அரசு மர நிழல் ஆகிய இடங்களில் தர்பையின்மேல் பருத்தி துணிப் பரப்பி காலை 6மணி முதல் செய்ய ஆரம்பித்து மதியம் 2 மணிக்குள் முடிக்கலாம்.
அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, அஷ்டமி, சிவராத்ரி, கார்த்திகை மற்றும் பிறந்த நட்சத்திரம், முன்னோர் திதிகள் ஆகிய நாட்களில் செய்வது சித்தி பல கிட்டும்.
இராண்டாம் முறை- மேற்குறிப்பிட்ட தினங்களில், இடங்களில் உடலின் ஆறு ஆதாரங்களுடன் அல்லது அதனுடன் சகஸ்ரம் (1000 இதழ் தாமரை) குருபாதுகா ஆகிய இரண்டையும் சேர்த்து, எட்டையும் தேர்வு செய்து, ஆதாரத்தின் இடம், வடிவம், நிறம், மந்திரம், பூஜை எல்லாம் ஒவ்வொன்றிற்கும் 12 நிமிடம் எனச் செய்து மொத்தம் 8 x12 = 96 = 1 மணி 36 நிமிடம் செய்து பலன் காணவும்..
எந்த முறையானாலும் பயிற்சி முடிந்தபின், தவறாமல் முதலில் செய்த சூன்யத் தியானத்தைக் கலைத்து முழு உடம்பையும் மனத்தின் மூலம் உணரவேண்டும். இதைச் செய்யாவிடில் கேடுவிளையும்.

#@#@#@#@#@

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

1. இமயம்

2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5.பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

பிரணாயாமம் (அ) பிராணணைக்கட்டுப்படுத்தல்

Written by

பிரணாயாமம்(அ) பிராணானைக் கட்டுப்படுத்துதல்
நாடிகளைத் தூய்மைப்படுத்துதல், பிராணன், சித்து பிராணான், சித்து பிராணனைக் கட்டுப் படுத்துதல் (பயிற்சி) என நான்கு வகைகளாக பார்ப்போம்.
1.நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்துதல்-
முதலில் நேராக நிமிர்ந்து உங்களுக்கு பழகிய ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும். முதுகுத்தண்டு முதுகெழும்புடன் சேர்ந்திராவிடினும் அதனுள் இருப்பதால் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால்தான் சுவாசப்பயிற்சிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மார்பு, கழுத்து, தலை ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமரவும்.
அடுத்து நமது நரம்புகளை வசப்படுத்தவேண்டும். நரம்பு மையம் சுவாசபையையும் மற்ற நரம்புகளையும் அடக்கி தன் இயக்கத்தில் இயங்க வைக்கின்றது. ஒழுங்கான, வசமான சுவாசமே நரம்புகளின் சரியான இயக்கத்திற்கு ஏற்றது. பொதுவாக நாம் விடும் மூச்சு ஏற்றத் தாழ்வுடன் ஒழுங்கற்று இருக்கின்றது. ஆண், பெண் மூச்சுவிடுவதில் வேறுபாடுகள் உள்ளது. எனவே அளவான மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுதான் முதன்மையான பயிற்சி.
வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். இடைவெளிவிடாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும். பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் 9 முறை செய்து பழகவும். சில நாட்களுக்குப்பின் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும்.
இந்த பயிற்சி நம் உடலை வசப்படுத்தும். 15 லிருந்து 30 நாட்களுக்குள் நாடிகள் தூய்மையடைந்துவிடும். “ஓம்” என்ற சொல்லின் உச்சரிப்புடன் மூச்சின் இயக்கம் சரி சமமாக ஒழுங்காக இயங்கும்போது உடல் முழுவதும் ஓர் உணர்ச்சி ஏற்பட்டு உடல் வசப்படுவதை உணரலாம். அப்போது உறக்கத்தைவிட சிறந்த ஒய்வு என்பதன் பலன் தெரியவரும். ஓய்வு கிட்டியபின் தளர்ச்சி பெற்றிருந்த நரம்புகள் அமைதியடையும். நமது உடம்பில் 72 லட்சம் நரம்புகள் இருப்பதாக கணக்கிட்டிருக்கின்றார்கள். இதற்குமுன் இப்படியெரு ஓய்வை அனுபவித்திருக்க மாட்டீர்கள். இதுதான் நாடிசுத்தி எனப்படும்.
இதன் பின்னர்தாம் பிராணாயாமம் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

2.பிராணன்-
பிரணாயாமம் என்பது சுவாசம் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் அதற்கும் உள்ள தொடர்பு குறைவானது. பிரணாயாமம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் பயிற்சிகளில் ஒன்று சுவாசம். மூச்சுவிடுதல் என்பது உயிர் தத்துவம். பிராணன் அந்த தத்துவத்தைக் குறிக்கின்றது. பிராணன் என்றால் ஆக்ஜிசன் அல்ல. பிராணான் என்பது ஒருவரது உடலிலுள்ள உயிர்சக்திகள். ஆயாமம் என்றால் அதை அடக்கி ஆளுதல் என்பதாம். எனவே பிரணாயாமம் என்றால் பிராணனை அடக்கி ஆளுதல் என்பதாகும்.
நமது பிரபஞ்சம் இரண்டு பொருள்களினால் ஆனது. 1. ஆகாசம்- எங்கும் வியாபித்து பொருள்கள் அனைத்திலும் ஊடுருவியுள்ளது ஆகாசம். கூட்டுப்பொருள்கள் அனைத்தும் உருவம் உள்ள பொருள்களும் ஆகாசத்தினின்றே வெளிப்பட்டுள்ளன. அந்த ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருள்களாகவும், திடப் பொருள்களாகவும் மாறுகிறது. ஆகாசமே சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரங்கள், மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் மற்றும் நாம் இன்று காணும் உணரும் பொருள்கள் எல்லாமயின. ஆகாசம் ஓர் சூட்சமப் பொருள். கண்ணால் பார்க்க இயலாது. அது உருவம் பெற்றால்தான், தூலப் பொருளாய் ஆகும்போதுதான் நம்மால் காணமுடியும். துவக்கத்தில் இருந்த ஆகாசத்திலிருந்தே வாயுக்கள், திரவங்கள், திடப்பொருள்கள் எல்லாம் தோன்றி கல்பங்கள் முடியும் போது மீண்டும் சூட்சமப் பொருள்களாக மாறிவிடுகின்றது. மறுபடியும் படைப்பு தோன்றும் போது ஆகாசத்திலிருந்தே பொருளகள் தோற்றுவிக்கப் படுகின்றன.
பிராண சக்தி - இந்த பிராண சக்தியால் ஆகாசம் பிரபஞ்சமாக மாறும். பிரபஞ்சத்தில் ஆகாசம் எங்கும் நிறைந்திருப்பதுபோல் பிராண சக்தியும் எங்கும் நிறைந்து எல்லையற்றதாய் இருக்கின்றது. கல்பத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லாம் ஆகாசத்தில் ஒடுங்கிவிடும். எல்லா பிரபஞ்ச சக்திகளும் பிராண சக்தியாக மாறிவிடும். அடுத்த கல்பத்தில் பிராணனிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படும். இயங்குசக்தி, புவிக்கவர்ச்சி, காந்தக்கவர்ச்சி, உடலில் செயல் புரியும் இயக்கம், நாடிஓட்டம், எண்ணச்சக்தி ஆக அனைத்துமாகத் தோன்றுவதும் பிராணனே. இந்த சக்திகள் தொடக்கத்தில் உள்ள சக்தியாக மாறும்போது அதை பிராணன் என்கிறோம்.
கல்பத்தின் இறுதியில் பிரபஞ்ச சக்திகள் ஒடுங்கியிருந்து பிரளயத்திற்குப் பின் படைப்பின் போது பிராணன் ஆகாசத்துடன் மோதும்போது வாயு, திரவ, திடப் பொருள்கள் என்று உண்டாகும்போது பிராணனும் பல சக்திகளாக மாறுகிறது. அதை அறிந்து அடக்கி ஆளும் முறையே பிரணாயாமம் எனப்படும்.
பிராணனை வசப்படுத்துகின்றவன், உடலையும், உள்ளத்தை பற்றிய எல்லா சக்திகளையும் அறிந்து, தனது மனத்தையும் மற்ற மனங்களையும் உடலையும் அடக்கி ஆளும் திறமை கொள்வான். பிராணசக்தி அனைத்து சக்திகளின் பொதுவான வெளித்தோற்றமாகும்.
நனவு உணர்வுடன் கூடிய எண்ணங்களை ஆராயலாம். தீர்மானிக்கலாம். நினைக்கலாம். பகுத்தறிவைப் பயன் படுத்தலாம். சிந்தனைக்கு எல்லையுண்டு. ஆராயும்போது ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடும். எனவே பகுத்தறிவு ஒரு வரம்பிற்குட்பட்டது. மனம் தியானத்தில் குவிந்து பகுத்தறிவு எல்லையைத்தாண்டி செல்கின்றது. உணர்வினாலும், ஆராய்ச்சியினாலும், கிடைக்கமுடியாத பல விஷயங்கள் மனதில் நேருக்கு நேராகப் புலப்படும். எனவே உடலின் நுண்ணிய சக்தியாகிய பிராணனின் வெளிப்பாடுகளை பயிற்சியினால் அடக்கி பயன்படுத்தினால் மனம் சக்தியடைந்து நனவு உணர்விற்கு மேம்பட்ட உயர்நிலையை சமாதி நிலையை அடைந்து செயல்படும்.
பிரபஞ்சத்தில் இடைவெளியின்றி தொடர்ச்சியாக ஒரே தன்மையான சடப் பொருள்கள் இருக்கின்றது. நமக்கும் சூரியனுக்குமிடையில் உள்ள சடப் பொருள்கள் அனைத்தும் ஒரே தன்மையுடையது. ஓடிவரும் ஆற்றில் கணநேரத்தில் நீங்கள் பார்த்த நீர் அகன்று அந்த இடத்தில் நீர் இருக்கும். அது நீங்கள் முதலில் பார்த்த நீராக இருக்காது. பிரபஞ்சம் முழுவதும் மூலப் பொருளாக ஆகாசம் இயங்குகின்றது. பிரபஞ்ச வடிவங்கள் ஒவ்வொன்றும் நீர்சுழி போன்று ஒன்றில் சிலகாலம் இருந்து மற்றொன்றில் புகுகின்றது. அது பிராணியாக இருக்கலாம், உலோக கட்டியாக இருக்கலாம். எல்லாம் மாறுதல் அடைந்து பிரிந்து வேறு பொருளாக மாறிக்கொண்டே இருக்கின்றது.
மனமும் அதைப் போன்றதே. சடப்பொருள் ஆகாசத்தால் வெளிப்படுத்தப்படும் போது பிராணனின் செயல் நுண்ணியதாக இருக்கும்போதும், ஆகாசம் நுண்ணிய அதிர்வுகளுடன் கூடிய மனமாக காட்சி தரும். அந்த நுண்ணிய அதிர்வு நிலையை நாம் அடைந்து பிரபஞ்சம் நுண்ணிய அதிர்வுகளால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு உணரலாம். பிரபஞ்சம் தூல நிலையில் சடப்பொருள்கள் மயமாய் இருக்கும். சூட்சம நிலையில் எண்ணங்கள் மயமாய் இருக்கும். இச்சக்திகள் அமைதியான செயல்படாத ஒடுக்க நிலையில் இருந்து பின் பலவித சக்தியாக தோற்றமளிக்கும். மறுபடியும் செயலற்ற நிலைக்கு சென்று திரும்பும். இந்த நிகழ்வு இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பிராணசக்தியை அடக்கியாள்வது பிராணாயாமம் என்பதாகும்.
உடலில் பிராணனின் வெளிப்பாடு புலனாகுவது நுறையீரல்களின் இயக்கத்தினால். சுவாசப்பையின் செயலைக் கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாயம். மூச்சு பிராணாயாமத்தை உண்டாக்குவதில்லை மூச்சை உண்டுபண்ணி இச்செயலால் மூச்சை உள்ளே இழுக்கின்றது. பிராணன் சுவாசப்பைகளைச் செயல் படுத்துகின்றது. சுவாசப்பை காற்றை உள்ளே இழுக்கின்றது. எனவே பிராணாயாமம் மூச்சு விடுவதல்ல, சுவாசப்பைகளை இயக்கும் தசைகளை அடக்கியாள்வது ஆகும். நரம்புகள் மூலம் தசைகளுக்கும் அங்கிருந்து சுவாசப்பைகளுக்கும் சென்று ஒரே வகையில் இயங்க அசையச் செய்யும் சக்தியே பிராணன்.
உடலின் நுண்ணிய இயக்கங்களை உணர நாம் விரும்புகிறோம். மனம் வெளியில் செல்கின்றது. அகத்தின் நிகழ்வுகளை உணர்வதில்லை. நரம்புகள் உடல் முழுவதும் சென்று தசைகளை இயக்குகிறது. ஊக்கமும் சக்தியும் அளிக்கின்றது. அந்த சக்தியை நாம் உணருவது பிரணாயாமம் பயிற்சியின் மூலம்தான்.
பிரணாமயப் பயிற்சியில் இந்த சக்தி பிராணனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பின் உடலில் உள்ள பிராணனின் மற்ற செயல்களும் மெல்ல மெல்ல கட்டுப்பாட்டின் கீழ்வரும். உடலில் ஓய்ந்து இருக்கும் இயக்கங்களையும் அசைவுகளையும் கடின உழைப்பு, பயிற்சியாலும் புதுப்பித்து இயங்க வைக்கலாம். எனவே உடல் முழுவதும் பிராணனை நிரப்பி உடலில் எந்த இடத்திலும் ஏற்படும் வியாதியையும் கட்டுப்படுத்தமுடியும்.
உலகில் எல்லாம் ஒருவரிடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றும் தன்மையுடையது. உங்கள் உடலில் ஏற்படும் குழப்பம் மற்றவர்களுக்குத் தாவும். உடல் நலமாகவும், பலமாகவும் இருக்கும்போது அந்த தன்மையை சுற்றி இருப்பவர்களுக்கு உண்டாக்கலாம். நோயுற்று துன்பமுற்றிருந்தாலும் சூழ இருப்பவர்களுக்கு அதே துன்பத்தை உண்டாக்கலாம். மனிதன் மற்றவனை குணப்படுத்தும்போது தன்னுடல் நலத்தை மற்றவனுக்கு அளிக்கின்றான். தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் உடல் நலத்தையும் மற்றவருக்கு அளிக்க முடியும். தூரத்தில் இருக்கும் ஒருவனுக்கு பிராண சக்தியை அளித்து நோயைக் குணப்படுத்தலாம். பிராணன் ஓர் பகுதியில் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் அதன் சமன்நிலை வேறுபடுவதால் ஏற்படும் நோய்களை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து குறைந்த இடத்திற்கு அளித்து நோய்களைக் குணப்படுத்த முடியும்.
ஒருவர் ஒருவரிடம் பேசும் பொழுது அவரின் பிராண சக்தியை வெற்றிகரமாக இயக்க நிலைக்கு கொண்டுவந்து ஊக்கமுடன் பேச ஆரம்பித்தால் மற்றவர் ஆர்வத்துடன் கேட்பர். ஊக்கமின்றி பேச ஆரம்பித்தல் மற்றவர் கேட்பதில் விருப்பம் இருக்காது. உலகின் தீர்க்க தரிசிகள் தங்கள் பிராண சக்தியை வசப்படுத்தி உயர்ந்த இயக்க நிலைக்கு கொண்டுவந்து அந்த சித்த சக்தியால் மற்றவர்களை ஆளத்தக்க சக்தியை பெற்றுள்ளனர்.
பிராணனை நாம் ஒருவகைச் சலனத்தில் வெளிப்படுத்துகிறோம். அதே சலன எல்லைக்குள் இருக்கும் பிராணிகள் ஒன்றை ஒன்று காணமுடியும். உயர்ந்த சலனத்தில் உள்ள பிராணிகள் இருந்தால் அவற்றைக் காணமுடியாது. பிராணனை உயர்ந்த அதிர்வு எண்ணில் இயக்குவதால் நம்மால் காணமுடிவதில்லை. எனவே ஒரே வகை அதிர்வு நிலை உள்ள பிராணனைப் பெற்ற உயிர்கள் ஒன்றையொன்று காணுதல் இயலும். யோக சக்தியால் ஒருவருடைய பிராணனின் அதிர்வு நிலையை மற்றவைகளுக்கு இனையாக அதிகரித்து அவற்றை காணலாம்.

3.சித்து பிராணான்-
முதுகுத்தண்டில் இடது -இடகலை, வலது- பிங்கலை என இரண்டு நரம்பு ஓட்டங்கள் உண்டு. ஞானேந்திரிய நரம்புகள் என இடை நரம்புகளையும், கர்மேந்திரிய நரம்புகள் என பிங்கலை நரம்புகளையும் கூறுவர். துளை பொருந்திய நாளம் சுழுமுனை எனப்படும். அதன் கீழ்ப்பகுதி “குண்டலினிக் கமலம்” எனப்படும். முக்கோண வடிவமான அதில் குண்டலினி சக்தி பாம்புபோல் சுருண்டு படுத்து உறங்குவதாக கொள்ளவும். அந்த சக்தி விழித்தெழும்போது பிராணசக்தியாக சுழுமுனை நாடிவழியாக மேல் எழ மனத்திரைகள் அகல தெய்வீக காட்சிகளும் அற்புத ஆற்றல்களும் அதனை அடையும். இந்த சக்தி ஆதாரச் சக்கரங்கள் வழியாக மூளையை அடைந்தவுடன் உடல். உள்ளம் இவற்றிலிருந்து பிரிந்த நிலை ஏற்பட்டு ஆன்மா சுதந்திரமாக இருப்பதை உணரும். உடலில் உள்ள அனுக்களில் இருந்து இந்த பிராண சக்தி திரட்டப்பட்டு ஒன்று சேர்ந்து மேல் எழுகின்றது. சுழுமுனை வழி செல்லும் இதை சித்து பிராணன் என்கிறோம்.
மூச்சு இழுத்ததும் கரியமிலவாயு வெளியேறி ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கின்றது. ஒரு வினாடி நேரத்தில் ஏறுதல் இறங்குதல் ஆகிய இரு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இயல்பாக உண்டாவதைவிட மூச்சை அடக்கும்போது பிராணன் அதிக அளவில் உற்பத்தியாகின்றது.
மூச்சுப் பயிற்சியினால் சுவாசம் ஒழுங்காக நடைபெறும்போது உடல் மூலக்கூறுகள் ஒருவழிப்படுகின்றன. மனம் இச்சா-விருப்ப சக்தியாக மாறும் பொழுது நரம்பு ஓட்டங்கள் மின்சக்தி போல் இயங்கும். அதன் காரணமாக நரம்புகள் திசை நோக்கும். விருப்பசக்தி நரம்பு ஓட்டமாக மாறும்போது அது மின் சக்தியாக மாறுதல் அடையும். உடல் அசைவுகள் ஒழுங்காக செயல் பட்டால் உடல் ஒரு மின் உற்பத்திக் களஞ்சியமாக மாறும். இந்த சக்தியைத்தான் யோகம் செய்பவர்கள் அடையவிரும்புகின்றனர்.
நம் கற்பனை, கனவு காண்பது எல்லாம் ஆகாசத்தில் காணவேண்டும். இது மஹாகாசம் அல்லது பூதாகாசம் எனப்படும். யோகசக்தியடைந்தவன் மற்றவர்களின் எண்ணங்களை அறியும்போது புலன்களுக்கு எட்டாதவற்றை உணரும்போதும் “சித்தகாசம்” என்ற மனவெளியில் காண்கின்றான். ஆன்மா தனது சொந்த ஒளியில் பிரகாசிக்கும் போது அதை சித்தகாசம் அல்லது அறிவுவெளி என்போம். குண்டலிசக்தி வெளிக்கிளம்பி சுழுமுனை நாடியில் நுழைந்ததும் காட்சி எல்லாம் சிதாகாசத்தில் உண்டாகிறது. அது மூளையை அடைந்ததும் உருவமற்ற காட்சியை சிதாகாசத்தில் பெறுகிறது.
மின்சார இயக்கத்தில் மின்சாரத்தை கம்பி மூலம் அனுப்புகின்றோம். ஆனால் மனத்தின் இயங் குசக்திகளை ஞானேந்திரிய-இடை, கர்மேந்திரிய-பிங்கலை நரம்புகளின் உதவியின்றி சுழுமுனை குழாய் வழியாகச் செலுத்தினால் எல்லா அறிவும் நமக்கு கிடைக்கும்.
குண்டலினி சக்தி ஒவ்வொரு சக்கரத்தின் வழி செல்லும்போது அளப்பரிய எதிர் இயக்கம் உண்டாகும். சிறிதளவு சக்தியால் ஏற்படும் எதிர் இயக்கம் மனக் கற்பனையை ஏற்படுத்தும். தியானத்தால் சேமித்த சக்தி சக்கரங்களைத் தாக்கி அற்புதமான வலிமை மிகுந்த எதிர் இயக்கம் உண்டாகிறது. கனவு, கற்பனையைவிடச் சிறந்தது. பொறிகளின் உணர்வைவிட வலிமையானது. புலன்களைக் கடந்த காட்சி. ஆன்ம தரிசனம், ஞான ஒளி தோன்றும். மனதின் பலவழிகளும் திறக்கப்பட்டு பிரபஞ்சத்தை நுட்பமான காரண நிலையில் காணமுடியும். அண்டங்களுக்கு உணர்ச்சியாகவும், செயலாகவும் அமைந்த ஆதிகாரணம் தெளிவாகி எல்லா அறிவும், காரிய அறிவும் புலப்படும்.

4.சித்து பிராணனைக் கட்டுப்படுத்துதல் (பயிற்சிகள்).
சுழுமுனையில் பயனிக்கும் பிராணனைக் கட்டுப்படுத்துதல் - பதினாறு வகையானப் பயிற்சிகளைப் பார்ப்போம்.
குறிப்பு:- இருதயம் பலவீனமானவர்கள், மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எல்லா பிரணாயாமமும் செய்ய வேண்டாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும், மற்றும் கர்ப்பிணி பெண்கள் கபால்பட்டி, வாஹ்யா, அக்னிசார் பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
காயத்ரி மந்திரம்- “மூன்று அடுக்காக உள்ள பிரபஞ்சம் முழுவதையும் எது ஒளிரச்செய்கிறதோ அதுவே என் அறிவையும் துலங்கச் செய்கின்றது. அதை நான் வணங்குகின்றேன்."

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா

நற்பயன்கள்- நுரையீரல்கள், இரத்த நாளங்கள், இருதயம், மூளை, தசைகள் சிறந்து இயங்க உதவுகின்றது.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி

நற்பயன்கள்- விஷக்கிருமிகள் உற்பத்தியாக உதவும் வேண்டாத டாக்ஸின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும். நெகட்டிவ் எனர்ஜிகள் எல்லாம் வெளியேற்றப்படுவதால் பாஸிட்டிவ் சக்திகள், எனர்ஜிகள் அதிகமாகி உடலில் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும். உடலும் உள்ளமும் தூய்மை பெரும். ஜீரண உறுப்புக்கள் சீராகும். உள் உறுப்புக்கள் எல்லாம் ஆரோக்கியத்துடன் செயல்படும். கொலஸ்ட்ரால் குறையும். தைராய்டு குணமாகும். முடி உதிர்வது நிற்கும். வளர்ச்சி ஏற்படும். கண்பார்வை கோளாறுகள் சரியாகும். காதில் சீழ் வடிதல் சரியாகும். தோல் வியாதிகள் குறையும். கண்களில் கருவட்டம் சரியாகும். முகத்தில் சுருக்கம் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் இதைச் செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.
முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்- நாடி சுத்தி-

உடலை வசப்படுத்த அளவாக மூச்சை இழுத்து வெளியே விடுவது ஆகும். இது முன்பகுதியில் நாடிகளைத் சரிசெய்து தூய்மைப்படுத்துதல் என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது.
நற்பயன்கள்- பிரணாயாமம் செய்வதற்கு இது நல்ல அடித்தளம் அமைக்கும். உடம்பிலுள்ள 72 லட்சம் நாடிகளும், இணைக்கும் சக்கரங்களும் சுத்தப் படுத்தப்படுகின்றன. அதனால் உடம்பினுள் ஓர் ஒளி தோன்றும், கண்களின் ஒளி பிரகாசமாகும், இயற்கையான ஆர்வம் ஏற்படும். நுரையீரல்கள், இதயம், வயிறு ஆகியன சுத்தமாக்கப்படுகின்றது. சீரான சுவாசத்திற்கு வழி காட்டும். நுறையீரல்களின் கொள்ளளவு அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும். இதயத் துடிப்பு சரியாக பராமரிக்கப்படும். நரம்பு மண்டலம் சரியாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
3.பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
4.உள்ளே காற்றை இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் ஒரே அளவாக இருக்கட்டும். இதை ஒரு நாடி சுத்தி எனக்கணக்கிட்டு குறைந்தது 9 முறை செய்ய ஆரம்பிக்கவும்.
5.சில நாட்களுக்குப்பின் காற்றை உள்ளே, வெளியேவிடும் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும்.

இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் செய்து பழகவும். பழக்கத்தில் 25 வரையும் அதற்கு மேலும் செய்யலாம்.

நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா

நற்பயன்கள்- இருமல், நீடித்த சளி, சைனஸ், இறுக்கத்தினால் ஏற்படும் தலைவலி ஆகியவை நீங்க உதவி செய்யும். ஜீரணசக்திக்கு உதவும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா

 

நற்பயன்கள்- இருமல், நீடித்த சளி, சைனஸ், இறுக்கத்தினால் ஏற்படும் தலைவலி ஆகியவை நீங்க உதவி செய்யும். ஜீரணசக்திக்கு உதவும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித் (சூரிய நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஆறாம் பயிற்சி- உள் கும்பகம்

 

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித்துளையை வலதுகட்டை விரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள். சில நொடிகள் காற்றை உள்ளே நிறுத்துங்கள். இரு நாசித் துவாரங்களையும் விரல்களால் மூடவும்.
3.அப்பொழுது மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள். அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். அந்த நினைவை அப்படியே அங்கு சிறிது நேரம் வைத்திருந்து பின் அந்த நிலை நிறுத்திய நரம்பு இயக்கத்தை மேலே வலது நாசித் துளைக்கு மெதுவாக இழுப்பதாக நினைக்கவும்.
4.சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை வெளியில் விடுங்கள்.
5.உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 4 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 16 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 8 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும். இடது வலது மாற்றிச் செய்யவும். இதை ஒருபிராணாயாமம் எனலாம்.
தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம்.

ஏழாம் பயிற்சி- வெளிக் கும்பகம். 

 

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித் துளையை வலது கட்டைவிரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்பும் பொழுது (பூரகம்) மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள்.
3.அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். இதற்கு 4 நொடிகள்.
4.பிறகு சுண்டுவிரல், மோதிரவிரல்களால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை உடனே வெளியில் (ரேசகம்) 8 நொடிக்கு அனுப்புங்கள்.
5.பிறகு இடது நாசித் துளையைச் சுண்டு விரல், மோதிர விரல்களாலும், வலது நாசித்துளையை கட்டை விரலாலும் அடைத்துக்கொண்டு வெளியில் காற்றை 16 நொடிகள் நிறுத்தவும் (கும்பகம்). இடது வலது மாற்றிச் செய்யவும் இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

ஆறாம் பயிற்சியில் கும்பம் உள்ளே நிகழ்ந்தது. ஏழாம் பயிற்சியில் கும்பம் வெளியே நடைபெறுகிறது. காற்றை உள்ளே சுவாசப்பையில் நிறுத்திவைக்கும் பிராணாயாமத்தின் எண்ணிக்கையை அதிகமாகச் செய்யக்கூடாது.
தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம். மெதுவாக எண்ணிக்கையும் நேரத்தையும் அதிகரிக்கலாம். உடலில் ஆற்றல் மிகுதலையும், இன்பம் எழுவதையும் உணரலாம். அப்போது பிராணாயமத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஒழுங்கீனமாக பயிற்சிகள் செய்யத் துனிந்தால் அப்பயிற்சிகள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மூச்சை இழுத்தல் 1மடங்கு: அடக்குதல் 4மடங்கு: வெளிவிடல் 2மடங்கு இது பிரணாயமத்தின் இலட்சிய அளவு. அதன்படி 12:48:24 நொடிகள் முதல் வகை. உடல் வியர்க்கும். 24:96:48 நொடிகள் நடுத்தரமானது. இதில் உடல் நடுங்கும். 36:144:72 நொடிகள் உயர்ந்த வகையாகும். இதில் உடல் இலேசாக இருக்கும். உள்ளத்தில் பேரானந்தம் பிறக்கும். ஒவ்வொரு பிராணாயாமத்திற்கும் முன்னால் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நலம் விளைவிக்கும்.

எட்டாம் பயிற்சி-பாராம்ரி- (தேனி சப்த நிலை)

 

நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஒன்பதாம் பயிற்சி- உத்கீத்

 

நற்பயன்கள்-அதிர்வுகளால் நரம்புகள் பலம்பெறும். இயக்கம் சீராகும். 
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.

பத்தாம் பயிற்சி- வாஹ்யா-உட்டியாணா (வயிற்றை உள்ளிழுத்தல்)

 

நற்பயன்கள்- அடிவயிற்றை மார்பு கூட்டுக்குள் போகுமாறு செய்தல். சிறுகுடல், பெருங்குடல் கசங்கி நன்றாக இயங்கும். மார்புக்கூட்டை ஒட்டியுள்ள உள் உறுப்புக்கள் நன்கு இயங்கி நன்மைகள தரும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பதினோராம் பயிற்சி- அக்னிசார்- (வயிற்றை மடக்குதல்)

 

நற்பயன்கள்- அடிவயிற்றை மார்பு கூட்டுக்குள் போகுமாறு செய்தல். சிறுகுடல், பெருங்குடல் கசங்கி நன்றாக இயங்கும். மார்புக்கூட்டை ஒட்டியுள்ள உள் உறுப்புக்கள் நன்கு இயங்கி நன்மைகள தரும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பன்னிரண்டாம் பயிற்சி- மௌலி (வயிற்றை சுழற்றுதல்)

 

நற்பயன்கள்- வயிற்றை சுழற்றுவது. மலச்சிக்கல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, குடல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் இருதயம் அருகிலுள்ள தசைகள் பலமடையும். குண்டலினியை விழிப்படையச் செய்யும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் இடப்பகுதியில் கவனமாக ஆரம்பித்துத்து கடிகார வட்டப்பாதையில் சுற்றுவதுபோல் வயிற்றை சுழற்றவும்.
3.அப்படியே சில நொடிகள் செய்யவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பதிமூன்றாம் பயிற்சி-உஜ்ஜயி

 

நற்பயன்கள்- காற்று வழியில் ஏற்படுத்தப்படும் தடை சுவாசிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே காற்றை சில நொடிகள் தங்கவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் தொண்டையில் ஓர் சப்தத்துடன் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். காற்று வெளியில் தாராளமாக வராமல் ஓர் தடையுடன் அனுப்பவேண்டும். அதாவது வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் சப்தம் எழுப்பவும். அது வெளிவரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினான்காம் பயிற்சி-க்ஷீத்கரி- (நாக்கு மடங்கிய நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
3.நாக்கை பின்புறமாக மடித்து மெதுவாக அழுத்திப் பிடிக்கவும். நாக்கின் இரண்டு பக்கத்திலும் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்)
4.பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினைந்தாம் பயிற்சி-க்ஷீத்தலி- (நாக்கு வளைந்த நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினாராம் பயிற்சி-சதான்த- (பற்கள் வழி உறிஞ்சும் நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. இந்த பயிற்சி பற்கள் மற்றும் ஈறுகளினால் ஏற்படும் உபாதைகளைச் குறையச் செய்யும். ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களைக் கடித்தவாறு இருக்கட்டும். கடித்த நிலையில் உள்ள இருத்தாடைப் பற்களுக்கும் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே மெதுவாக தடையில்லாமல் இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பொதுவான பலன்கள்- ஒரு மனிதனுக்கு 21,600 சுவாசம் ஒருநாளைக்கு என்பர்.
ஒருமணிக்கு-21600/24 = 900 சுவாசம். ஒரு நிமிடத்திற்கு-900/60 = 15 சுவாசம்.
நான்கு விநாடிக்கு 1 சுவாசம். சராசரியான மனிதர் அனைவருக்கும்.
தினந்தோறும் பயிற்சி செய்பவர்களுக்கு உடல் உள்ளம் அமைதி பெறும். குரல் இனிமையடையும். குண்டலினி சக்தி விழிப்படையும். இயற்கை மாறும். அதன் இரகசியங்கள் உங்களுக்கு தெரியவரும். ஞானம் எளிதில் உங்களை வந்தடையும். உங்கள் மனமே ஞானத்தின் இருப்பிடமாக மாறும்.
உடலில் உள்ள ஆற்றல்கள் மேன்மை பெறும்போது அவை ‘ஓஜஸ்’ எனும் சக்தியாக மாறுகிறது. உடலில் உள்ள சக்திகளில் உயர்ந்தது ஓஜஸ் சக்தி. மூலாதாரத்திலிருந்து மூளைக்குச் சென்று சேகரித்து வைக்கப்படுகிறது. எந்த அளவிற்கு ஓஜஸ் சக்தி உள்ளதோ அந்த அளவிற்கு ஒருவன் ஆற்றல் உள்ளவன் ஆகின்றான், ஆன்மீக ஞானம் பெறுகின்றான்.

திருமந்திரக் கருத்துக்கள்:-
கொல்லான், பொய்கூறான், திருடமாட்டான், நல்ல குணங்களைவுடையவன், அடக்கம் உடையவன், நடுநிலை தவறான், பகிர்ந்து உண்பான், குற்றம் இல்லாதவன், மது அருந்தாதவன் இயமம் வழி நிற்பவன்- தி.ம.554
வேதத்தில் கூறும் பறம்பொருள் தன் தலைமேல் இருப்பதாகவும், அது ஜோதி வடிவாகவும் இந்த ஜோதியை நாபிக்குகீழ் உள்ள பராசக்தி வடிவமான குண்டலினி சக்தி மேலெழுந்து அடையும் என்ற நீதியை உணர்வது நியதி- தி.ம.555
ஸ்வஸ்திகாசனம், வீராசனம், முக்தாசனம், கோமுக்தாசனம், பத்மாசனம், சிம்மாசனம், பத்ராசனம், மயூராசனம் ஆகிய ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டவை- தி.ம.563
ஐந்து பொறிகளுக்கும் நாயகன் ஆகிய மனத்தையுடைய தலைவனின் உயிர் உய்ய பிராணன் உதவுகிறது. மெய்யாகப் பின்பற்றினால் வாகனம் ஏறி பயனிக்க இக்குதிரை இடம் தரும் வேளையில் பொய்யாக பின்பற்றுபவரை கீழே தள்ளி விழவைத்துவிடும்- தி.ம.564
தூயவனாகிய ஆன்மாவில் மனம், பிராணன் என்ற நல்ல குதிரைகளை நுட்பமான கடவுள் அருளாலும், குருவின் அருளாலும் பிடித்தால்தான் அவை வசமாகும்- தி.ம.565
மனமும், பிராணனும் ஆகிய அக்குதிரைகளை அடக்கினால் கள்ளுண்டு மகிழ்வர்போல் களிப்படையலாம். நடையில் ஓர் விசை இருக்கும். சோம்பல் தவிரும். தியானம் செய்வோர்க்கு இது உண்மையாகும்.- தி.ம.566
மனமும், பிராணனும் ஒத்து இயங்கினால் இறந்து, பிறக்கும் வாழ்வு இனி இல்லை. பேச்சில் மௌனம் சாதித்து, பிராணனை நாடிகளில் மாற்றி எழுப்பி சக்தி அதிகம் பெறுவீர்- தி.ம.567
வாமம்-இடது மூக்கால் காற்றை இழுத்தல் பூரகம்-16 விநாடி, கும்பகம்-64 விநாடி மூச்சை அடக்குதல், ரேசகம்-32 விநாடி வலது மூக்கால் வெளிவிடுவது. 1:4:2 விகிதமாம்- தி.ம.568
மூச்சுக்காற்றை வாங்கி வயிறு புடைக்குமாறு அடக்கினால் உடல் நாளடைவில் பளபளப்பு அடையும். வயது முதிர்ந்தாலும் இளமையான தோற்றம் இருக்கும். குருவின் திருவருளுடன் பயிற்சிகளில் வெற்றி பெற்றால் வெட்டவெளியில் காற்றிலும் செல்லலாம்- தி.ம.569
எந்த ஆசனத்தில் இருந்தாலும் இடப்பக்க பிராணாயாமம் செய்யவும். இதனால் உடம்பிற்கு அழிவு இல்லை. வலப்பக்கம் செய்யும் போது அளவுகள் மாறாமல் செய்தால் உடம்பில் சங்கின் ஓசை கேட்டு கடவுளை உணரலாம்.- தி.ம.570
பூரகத்தில் ஏற்றி ரோசகத்தில் இறக்கி கும்பத்தில் அடக்கும் கணக்கினையும் கால அளவையும் அறிந்தவர் இயமனை வென்றவராவார்.- தி.ம.571
வயிறு, இதயம், மேல்பக்கம் பெறுகுமாறு மூச்சை இழுத்து – உள்ளடக்குமாறு மூச்சை வெளியே விட்டு- தொப்புள் பகுதியுள் கும்பகம் அடக்கி பயிற்சி செய்தால் சிவனின் அருளைப் பெறலாம்- தி.ம.572
மூச்சுக்காற்றை வெளியில் விடும்போது அந்த இடத்தில் வைத்த தவிடுகூட அசையாதபடி மெல்ல விடவேண்டும். பத்து நாடிகளும் நிறையும்படியாக உள்வந்த அபானனும் மேலேறும் பிராணனும் அடங்குமாறு கும்பகம்செய்து புரிந்தவர்க்கு இயமன் துன்பமில்லை- தி.ம.574
உடலில் இருந்து புறப்பட்ட பிறாணனும் உள்ளே வந்த அபானனும் பல இடத்தும் திரியாமல் ஒரு நெறியுடன் மனதையும் அடக்கிப் பயிற்சி செய்தால் உள்ளே இருக்கும் கடவுள் வெளியே செல்லான்- தி.ம.575
இழுக்கும் மூச்சின் கனம்-12 விரல் அளவு (அங்குலம்). அடக்கும்போது அதன் கனம்-8 விரல். வெளிவிடும்போது கனம்-4 விரல் அளவு. இந்த அளவில் பயிற்சி செய்தால் பஞ்சாட்சர ஜபத்தின் பலன் கிட்டும்- தி.ம.576
பகல் வெப்பத்தால் காற்று லேசாகுவதும் இரவின் குளிர்ச்சியால் கனமாகுவதாலும் மூச்சு விடுவதில் இயற்கை மாறுதல் நிகழும். இந்த மாற்றம் தவிர ஒரே அளவாக பகலிலும் இரவிலும் பன்னிரண்டு விரல் கனம் மாறாது பிராணாயமம் செய்து வந்தால் பகல் இரவுகளின் விளைவு இல்லை- தி.ம.577

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

ஆசனம் (அ) இருக்கை

ஆசனம் (அ) இருக்கை 

உடலை அமர்த்தும் நிலை. பயிற்சியில் உயர் நிலை அடைய தினமும் உடலையும், உள்ளத்தைப் பற்றிய பயிற்சிகளையும் செய்து பழக வேண்டும். பயிற்சிகளுக்கு எந்த ஆசனம் இலகுவாக இருக்கின்றதோ அதை தெரிவு கொள்ளவும்.

1.கண்ணுக்குத் தெரியும் – தூல உடம்பு (பரு), 2.சூக்கும உடம்பு (நுண்) – 3.பரம்பரியம் முதலாக வந்த ஜீன்ஸ் தொடர்புடைய - காரண உடம்பு (மிகு நுண்- அதி சூக்கும), என மூன்று உடம்புகள் நமக்குள் உள்ளன. இவை மூன்றும் யோக ஆசனங்கள் செய்வதால் வலிமையும், தூய்மையும் அடைகின்றன. பிணிநீக்கம், நீண்ட ஆயுள், முதலியன யோக ஆசனம் செய்பவருக்கு பயன்களாக அமையும்.
வாயு ஒவ்வோர் பகுதியில் திசுக்களில் அடைபட்டு வெளியேற முடியாமல் இருப்பது பந்தம் எனப்படும். 1.மார்பு நடுவில் இருப்பது இருதய பந்தம், 2.வயிறு, சிறுகுடல், பெருங்குடல், ஈரல் பகுதியில் இருப்பது ஊட்டியான பந்தம், 3. மலக்குடலில் இருப்பது மூலபந்தம். இந்த மூன்று பந்தங்களும் வாயுவினால் உண்டாகின்றது. நாட்பட இவைகள் சிறு சிறு பிணிகள் வரவும், நோய்கள் குணமாகமல் இருக்கவும் வாய்ப்பாகிறது.
ஆசனங்கள் செய்யச் செய்ய இரத்த ஒட்டம் சீராகி திசுக்கள் முழுவதுமாக இயங்கி வாயுக்களை வெளியேற்றி நோயின்றி வாழ உதவுகிறது. ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வோர் இடத்திலுள்ள திசுக்களை இயக்குகின்றது. முடிந்தவரை எல்லா ஆசனங்களையும் பயிற்சி செய்து பழகுவது நல்லது.
மூச்சுப் பயிற்சியால் சில இடங்களில் உள்ள பந்தங்களும், ஆசனங்களால் சில
இடங்களில் உள்ள பந்தங்களும் நீங்கும்.
பயிற்சிக்கு முன்பாக கவனிக்க வேண்டியவை.
1.சூர்ய உதயத்திற்குமுன், இயற்கை கடன்களை முடித்து, தேவையானால் ஒரு குவளை நீர் அருந்தவும்.
2.உடல் உறுத்தாமல் இருக்கவும், நிலத்துடன் தொடர்பு இல்லாம்லிருக்கவும் ஓர் விரிப்பு சுமார் 3’ x 6’ அளவில் சிறப்பு.
3.கூடுமான வரையில் காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும்.
4.பலவந்தமாக எந்த ஆசனமும் செய்யக்கூடாது. பயிற்சியின் போது பெருமூச்சு, அதிக வியர்வை வந்தால் அதிகசக்தி விரையம், எனவே உடனடி ஓய்வு எடுக்க வேண்டும்.
5.பயிற்சியின்போது காலி வயிற்றுடன் இருக்கவேண்டும். உணவு உண்ட 4 மணி நேரத்திற்குப்பின் செய்யலாம். அதிகாலை வேளை மிகச்சிறந்தது.
6.புத்தகத்தையும், குறுந்தகடையும் பார்த்து கவனமுடன் செய்து பழகலாம். உங்களால் முடியாதபோது ஓய்வு எடுத்துக் கொள்ளவும். ஒருவர் மேற்பார்வையில் செய்து பழகியபின் தனியாக செய்வது நன்றாக வரும்.
7.இரத்தக் கொதிப்பு, இருதயக் கோளாறு உள்ளவர்கள் உட்யாணா, மௌலி, மயூராசனம், சிரசாசனம், விருச்சக ஆசனம் செய்யக்கூடாது. அவர்கள் எந்தப் பயிற்சியையும் தனியே செய்ய வேண்டாம், தகுந்த ஒருவரின் மேற்பார்வையில் செய்வது சிறப்பு.
8.5-வயது முதல் 80-வயதுவரை எல்லா வயதினரும் எல்லா பயிற்சிகளையும் செய்யலாம். ஆணால் உட்யாணா, மௌலி போன்றவைகளை 15- வயதிற்குமேல் செய்து பழகலாம்.
9.எல்லா ஆசனங்களும் பழகியபின் சிரசானம் செய்யவும்.
10.ஒவ்வொறு ஆசனங்களையும் குறைந்தது 3 / 5 முறை செய்யவும்.
ஆசனங்களுக்குமுன் சில உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஆசனங்கள் செய்ய ஆரம்பித்தால் உடல் எதிர்பார்த்தபடி இலகுவாக வளைந்து கொடுக்கும். பொதுவாக ஆசனங்களை நாம் மூன்று நிலைகளில் இருந்து செய்யலாம். அவை 
நின்ற வண்ணம் ஆசனங்கள்-செய்யுமுன் செய்யும் முன்பயிற்சிகள்.1,2,3,4,5,6,7,8. 

1.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. முழங்கையை மடக்காமல் கைகளை முகத்திற்கு நேராக நீட்டவும். கைகளுக்கிடையில் தோள்பட்டை அளவு இடைவெளி இருக்கவேண்டும். 3. பின் கைகளை அப்படியே தலைக்கு மேலேயும் காதுகளை ஒட்டியவாறும் தூக்கவும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

2.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. முழங்கையை மடக்காமல் கைகளை முகத்திற்கு நேராக நீட்டவும். கைகளுக்கிடையில் தோள்பட்டை அளவு இடைவெளி இருக்கவேண்டும். 3. பின் கைகளை மடக்காமல் அப்படியே பக்கவாட்டில் கொண்டுவரவும். கைகள் தோள்பட்டைக்கு சமமாக இருக்கட்டும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

3.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. முழங்கையை மடக்காமல் கைகளை அப்படியே தலைக்கு மேலேயும் காதுகளை ஒட்டியவாறும் தூக்கவும். கைகளுக்கிடையில் தோள்பட்டை அளவு இடைவெளி இருக்கவேண்டும். 3. பின் கைகளை மடக்காமல் அப்படியே பக்கவாட்டில் கொண்டுவரவும். கைகள் தோள்பட்டைக்கு சமமாக இருக்கட்டும். 3.படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

4.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. கால்களை அகட்டி வைத்து முழங்கையை மடக்காமல் கைகளை அப்படியே தோள்பட்டை அளவிற்கு தூக்கவும். 3. இடுப்பை இடதுபக்கம் லேசாக வளைத்து இடதுகை தோள்பட்டை அளவில் முதுகு நேராகவும் வலதுகை தோள்பட்டை அளவில் நெஞ்சிற்கு நேராகவும் இருக்கட்டும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 5. இடுப்பை வலதுபக்கம் வளைத்து இடதுகை தோள்பட்டை அளவில் நெஞ்சிற்கு நேராகவும் வலதுகை தோள்பட்டை அளவில் முதுகு நேராகவும் இருக்கட்டும். 6. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

5.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. முழங்கையை மடக்காமல் இடது கைகளின் ஐந்து விரல்களயும் குவித்து வைத்து தலைக்குமேல் உயர்த்தி அப்படியே கீழாக கொண்டுவரவும். கடிகார முள் சுற்றுவதுபோல் 3/5 முறை சுற்றவும். 3. பின் கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் அதேபோல் 3/5 முறை சுற்றவும். 4. முழங்கையை மடக்காமல் வலது கைகளின் ஐந்து விரல்களயும் குவித்து வைத்து தலைக்குமேல் உயர்த்தி அப்படியே கீழாக கொண்டுவரவும். கடிகார முள் சுற்றுவதுபோல் 3/5 முறை சுற்றவும். 5. பின் கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் அதேபோல் 3/5 முறை சுற்றவும்.

 

6.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. இடது காலை ஒருஅடி முன்னால் வைக்கவும். கைகளின் விரல்களை ஒன்றாக குவித்துக் கொண்டு வலதுகையை உயரத் தூக்கும்போது இடதுகை கீழாகவும் இடதுகையைத் தூக்கும்போது வலது கை கீழாக இருக்கும்படி கடிகார முள் சுற்றுவது போல் இருகைகளையும் சுற்றவும். 3/5 முறை சுற்றவும். 3. வலது காலை ஒருஅடி முன்னால் வைக்கவும். கைகளின் விரல்களை ஒன்றாக குவித்துக் கொண்டு இடதுகையை உயரத் தூக்கும்போது வலதுகை கீழாகவும் வலதுகையைத் தூக்கும்போது இடது கை கீழாக இருக்கும்படி கடிகார முள் சுற்றுவதற்கு எதிர் திசையில் இருகைகளையும் சுற்றவும். 3/5 முறை செய்யவும்.

 

7.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. இடது காலை ஒருஅடி முன்னால் வைக்கவும். கைகளின் பாதங்கள் ஒன்றைஒன்று பார்த்தவாறு நீட்டும்போது வலது குதிங்காலை உயர்த்தி முன்விரல்களில் நிற்குமாறு இருக்கவும். 3. அப்படியே முழங்கையை மடக்காமல் தலைக்குமேல் உயரே தூக்கவும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 5. வலது காலை ஒருஅடி முன்னால் வைக்கவும். கைகளின் பாதங்கள் ஒன்றைஒன்று பார்த்தவாறு நீட்டும்போது இடது குதிங்காலை உயர்த்தி முன்விரல்களில் நிற்குமாறு இருக்கவும். 6. அப்படியே முழங்கையை மடக்காமல் தலைக்குமேல் உயரே தூக்கவும். 7. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 3/5 முறை செய்யவும்.

 

8.1. பாதங்கள் இரண்டும் அருகே இருக்குமாறு நேராக நிற்கவும். கைகளிரண்டும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டியிருக்கவேண்டும். 2. இடது முழங்காலை மடக்கி தூக்கி வலது காலில் உறுதியுடன் தரையில் நின்று இரு கைப் பாதங்களால் கணுக்காலைத் தொடவும். 3. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 4. வலது முழங்காலை மடக்கி தூக்கி இடது காலில் உறுதியுடன் தரையில் நின்று இரு கைப் பாதங்களால் கணுக்காலைத் தொடவும். 5. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
பிரபஞ்ச சக்தியை, இறையை பணிந்து செயல்பட்டால் நலம் கிட்டும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதனால்… வழிபாடு.
"பிரபஞ்சத்தின் அனைத்துமாக இருக்கும் அவர் எங்களைப் பாதுகாத்து காப்பாற்றட்டும். அவர் எங்களுக்குச் சக்திகளை ஊட்டி அருள்புரியட்டும். எங்களுக்குச் சக்தி தந்து எங்களின் செயல்களுக்கு வலிமை தரட்டும். இந்த பயிற்சிகள் எங்களுக்குள் ஒளியூட்டி நல்ல பலன் தரட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து அன்புடன் நேசித்து எங்கும் அமைதி நிலவட்டும். அமைதி பரவட்டும். வாழ்க இந்த யோகபூமி."
பதஞ்சலி முனி யோக, பிரணாயாம நெறிமுறைகளுக்கு முன்னோடி என்பதால் அவரை வணங்குகின்றோம்.
"மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக் கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பனிவான வணக்கங்கள்."       

நின்ற வண்ணம் (13 ஆசனங்கள்)

1.சூர்ய நமஸ்காரம்-12 நிலைகள் கொண்டது- கடின தரம்-12
2.அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை- கடின தரம்-2
3.திரிகோணாசனம்-முக்கோண நிலை- கடின தரம்-2
4.பரிவ்ரட்டதிரி கோணாசனம்-குறுக்கு முக்கோணநிலை -கடினதரம்-5
5.பர்ஸவ கோணாசனம்-பக்கவாட்ட கோண நிலை- கடின தரம்-7
6.அர்த்த சந்திராசனம்-சந்திர பிறை நிலை- கடின தரம்-2
7.அர்த்த சக்ராசனம்- அரை சக்கர நிலை- கடின தரம்-2
8.பாத ஹஸ்தாசனம்-முன்குனிந்த நிலை-கடின தரம்-3
9.ஏகபாத ஆசனம்-ஒருபாத நிலை- கடின தரம்-5
10.நடராஜ ஆசனம்-சிதம்பர நிலை- கடின தரம்-3
11.கருடாசனம்-கருட நிலை- கடின தரம்-3
12.தடா ஆசனம்-உறுதி நிலை- கடின தரம்-1
13.விருக்ஷாசனம்-மர நிலை- கடின தரம்-4
சூர்ய நமஸ்காரத்தில் யோகாசனம், பிரணாயாமம் இரண்டும் கலந்துள்ளது. மற்ற ஆசனங்கள் செய்வதற்கு ஓர் இலகுத் தண்மையை அளிக்கின்றது. ஆசனங்கள்யாவும் சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு.
சூர்ய வழிபாடு, “ஓ சூரியனே! பாத்திரத்தை மூடியிருக்கும் மூடியைப்போல் உன்னுடைய தங்கநிற மேனியின் ஒளிக்கற்றைகள் உண்மையின் கதவுகளை மூடியுள்ளது. எனக்காக, அதை திறந்து உண்மைதனை அறிய அதை நோக்கிச் செல்ல எனக்கு வழிவிடுவாயாக! உன்னை நான் வணங்குகின்றேன்".
1.சூர்ய நமஸ்காரம்-12 நிலைகள் கொண்டது- கடின தரம்-12
நற்பயன்கள்- ஆசனங்களில் முதன்மையானது. இதில் உள்ள மந்திரங்களில் உச்சரிக்கப்பட்டுள்ள ‘ஓம்’, ‘ஹ’, ‘ஆர்’ ஒலி மூளைப்பகுதியில் உள்ள மூச்சுப்பாதை, ஜீரனப்பாதை மற்றும் சுற்றியுள்ள நரம்புகளின் மையத்தை சீராக இயக்கி ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகின்றது.
சூரியனின் பலவித பெயர்களும் அதன் விளக்கமும் நம்முள் அந்த தன்மைகள் நட்பு, பூஜை, சக்தி, ஆரோக்கியம், பலம், ஒளி, மனோபலம் ஆகியவைகள் ஏற்பட வலியுருத்தி ஒப்பில்லா இறையை நோக்கி அந்த பண்புகளை நினைத்து தியானம் செய்து பயிற்சிகள் மூலம் அந்த இயற்கைப் பண்புகளை அடையலாம்.
கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், இடுப்பு, தொடை, கெண்டைக்கால், கணுக்கால், முகம், தோல் ஆகிய வெளி உறுப்புக்கள், தைராய்டு, பாரா தைராய்டு, பியூட்டரி, பீனியல், நுறையீரல் ஆகிய சுரப்பிகளும், மண்ணீரல், கல்லிரல், கணையம், இதயம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவைகள் தூண்டப்பட்டு நன்றாக இயங்கும்.
1.பிரணமாசனா- இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரிய பகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். நிமிர்ந்து நிற்கவும். “ஓம் ஹராம் மித்ராயே நமக“என்று மனதில் நினைக்கவும். (மித்திரன்-நண்பன்)
2.ஹஸ்த உத்தானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர தூக்கவும். கைகள் தலைக்குமேல் இருந்தவண்ணம் முதுகை பின்புறமாக எந்த அளவிற்கு வளைக்க முடியுமோ அந்த அளவிற்கு வளைக்கவும். உடலில் உள்ள ஆறாதாரச் சக்கரங்களை நினைத்து அதன்வழி மூச்சு மூலாதாரம் செல்வதாகவும். “ஒம் ஹரிம் ரவியே நமக“என்றும் மனதில் நினைக்கவும்.(ரவி-ஒளிர்பவன்)
3.பாத ஹஸ்தாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் தலை முழங்காலைத் தொடுமாறும், கைபாதங்கள் கால்பாதங்களைத் தொடுமாறு வைத்து “ஒம் ஹரும் சூர்யாயா நமக“என்று மனதில் நினைக்கவும். (சூர்யா-அழகான)
4.அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது காலை பின்னால் நீட்டி, இடது காலின் பாதத்திற்கு இருபக்கமும் கையின் பாதங்கள் உறுதியாக நிலத்தில் படியுமாறு வைக்கவும். தலையை மேல் நோக்கி உயர்த்தவும். ”ஓம் ஹரய்ம் பானவே நமக “ என்று மனதில் நினைக்கவும். (பானவே-சுறுசுறுப்பானவன்)
5.துவிபாத அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடதுகாலையும் பின்னால் நீட்டவும். இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிபடுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். ” ஓம் ஹரௌம் ககாயே நமக“என்று மனதில் நினைக்கவும். (ககாய-வானத்தில் ஊர்பவன்)
6.அஷ்டாங்க நமஸ்கார- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியே விட்டவண்ணம் இடுப்பை கீழேகொண்டுவந்து கால்பாதம் இரண்டு, முழங்கால் இரண்டு, மார்பு, கைகள் இரண்டு, முகநெற்றி ஆகியன நிலத்தை தொடுமாறு (அட்டாங்க வணக்கம்) வைத்துக் கொண்டு, ”ஓம் ஹரஹா புஷிணே நமக“என்று மனதில் நினைக்கவும். (பூஷிணே-சக்தியை தருபவன்)
7.புஜங்காசானா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து மெதுவாக தலையை மேலே தூக்கி பின்நோக்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாய்க்கவும். ”ஓம் ஹராம் ஹிரண்யகர்பாய நமக“ என்று மனதில் நினைக்கவும். (ஹிரண்யகர்பாய- தங்க நிறம் உடையவன்)
8.அதமுக்த சவாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிப் படுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். ”ஓம் ஹரிம் மாரீச்சயே நமக“என்று மனதில் நினைக்கவும். (மரீச்சம்- விடியற்கால நாயகன்)
9.அஸ்வ சஞ்சலானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடதுகாலை முன்பக்கமாக மடக்கி பாதம் நிலத்தில் இருகைகளுக்கிடையில் இருக்குமாறு வைக்கவும். வலது கால் பின்னால் நீண்டிருக்க வேண்டும். தலையை மேல்நோக்கி நிமிர்த்தவும். ” ஓம் ஹரூம் ஆதித்யாய நமக “என்று மனதில் நினைக்கவும். (ஆதித்தன்- அததி)
10.பாத ஹஸ்தாசனா- மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து கைகளின் பாதங்கள் இரண்டும் கால்களின் பாதங்களைத் தொடுமாறும் தலை முழங்காலைத் தொடுமாறும் வைக்கவும். ” ஓம் ஹரய்ம் ஸவித்ரே நமக“என்று மனதில் நினைக்கவும். (ஸவித்-நல் ஒளி)
11.ஹஸ்த உத்தானாசனா- மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர மேலே தூக்கவும். மெதுவாக முதுகின் பின்பக்கமாக சாயவும், கைகளையும் தலையும் ஒரே கோட்டில் இருக்குமாறு வளையவும். ” ஓம் ஹரௌம் அர்க்காய நமக“என்று மனதில் நினைக்கவும். (அர்க்கன்-சக்தி மயமானவன்)
12.பிரணமாசனா- கைகளையும் தலையையும் பழைய நிலைக்கு கொண்டுவந்து இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரியபகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். “ஓம் ஹரஹ பாஸ்கராய நமக“என்று மனதில் நினைக்கவும். (பாஸ்கரன்-அறிவில் தெளிவு தருபவன்)
இந்த 12ஆசனத்தையும் இடது, வலது மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
2.அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- இந்த ஆசனம் பக்கவாட்டத்தில் நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையை நமது முதுத்தண்டிற்கு அளிக்கின்றது. மேலும் கல்லீரலின் இயக்கத்தை மேன்மை படுத்துகின்றது.
1.கால்களின் பாதங்கள் அருகருகே இருக்குமாறு சேர்ந்து, கைகள் இராண்டும் தொடை அருகில் இருக்குமாறு நிற்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது கையை தலைக்குமேல் மெதுவாக தூக்கவும். கை காதை தொடுமாறும் கையின் பாதங்கள் இடது பக்கம் பார்த்த வண்ணமும் இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடது பக்கமாக மெதுவாக வளைந்து சாயவும். இடது கை இடது காலைத் தொட்டவாறு இருக்கட்டும்.மேலே உயர்த்திய வலது கை மடங்கக் கூடாது. அப்படியே சுமார் 1 நிமிடத்திற்கு இயற்கையாக நன்றாக சுவாசிக்கவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து சய்த்த வலதுகையை தலையுடன் நேரான நிலைக்கு வரவும்.
5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் உயர்த்திய கையை கீழே கொண்டு வரவும்
இந்த ஆசனத்தை இடது பக்க கையை உயர்த்தி வலது பக்கம் சாய்ந்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
3.திரிகோணாசனம்-முக்கோண நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- தொடை மற்றும் கெண்டைக்கால் தசைகளை வலிமையுறச் செய்கிறது. கூன் முதுகை நிமிர்த்தி, முதுகு வலியைப் போக்கும். மேலும் பாதங்களை சமநிலைப்படுத்தும்.
1.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து பாதங்களுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியிருக்குமாறு நேராக நின்றுகொண்டு இருகைகளையும் கிடையான மட்டமான சமநிலைக்கு வரும் அளவிற்கு உயர்த்தவும்.
2.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் அதே நிலையில் மெதுவாக வலது பக்கம் சாயவும். வலது கையின் விரல்கள் வலது பாதத்தை தொட்டவாறு இருக்கட்டும். இடது கை உயரத் தூக்கியவாறு வலதுகைக்கு நேராக இருக்கட்டும். முகம் இடது கையின் பாதங்களைப் பார்த்தவாறு நேராக இருக்க வேண்டும்.
3.சில நொடிகளுக்குப்பின் நேரான நிலைக்கு அப்படியே நிமிரவும். சமநிலையில் இருக்கும் கைகளை முதலிலும் பின் கால் பாதங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரவும்.
இந்த ஆசனத்தை வலது பக்க கையை உயர்த்தி இடது பக்கம் சாய்ந்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
4.பரிவ்ரட்டதிரிகோணாசனம்-குறுக்குமுக்கோணநிலை-கடினதரம்-5
நற்பயன்கள்-முதுகுத்தண்டிற்கு நல்ல இலகுவான சுழலும் தன்மையை மேம்படுத்துகிறது. உருக்குலைந்த சரியான நிலையில் இல்லா முதுகுத்தண்டுவடப் பகுதிகளை சீராக்குகின்றது. சிறுநீரகத்திற்கு வலிமைதந்து உயிரூட்டுகிறது. மூட்டுகளுக்கு வலுவூட்டும். ஜீரண மையத்திற்கு உதவி செய்து தண்டுவடத்தில் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவும். முதுகுவலி, இடுப்புவலி, சுரப்பிகள் வீக்கம் முதலியன வராமல் தடுக்கும்.
முதல்நிலை-
1.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து நேராக நின்றுகொண்டு இருகைகளையும் கிடையான மட்டமான சமநிலைக்கு வரும் அளவிற்கு உயர்த்தவும்
2.பாதங்களுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியிருக்குமாறு நேராக நின்று கொண்டு முகம் நிலத்தை நோக்கிய வண்ணம் இருக்கவும்.
3.மெதுவாக முன்பக்கமாக இடுப்பை வளைத்து இடது கையை வலது காலின் பாதத்தின்மேல் வைக்கவும். இருமுழங்கால்களும் மடங்காமல் இருக்கவேண்டும். வலது கையை நேராக உயர்த்தி தலை வலது கையின் பாதங்களை நோக்கியவாறு இருக்கட்டும்.
4.ஒரு நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும் .மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை வலது கையை இடது காலின்மீது வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
இரண்டாம்நிலை-
1.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து நேராக நின்றுகொண்டு இருகைகளையும் கிடையான மட்டமான சமநிலைக்கு வரும் அளவிற்கு உயர்த்தவும்.
2.பாதங்களுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியிருக்குமாறு நேராக நின்று கொண்டு முகம் நிலத்தை நோக்கிய வண்ணம் இருக்கவும்.
3.மெதுவாக முன்பக்கமாக இடுப்பை வளைத்து இடது, வலது இருகை பாதங்களையும் வலது காலின் பாதத்தின்மேல் வைக்கவும். இருமுழங்கால்களும் மடங்காமல் இருக்கவேண்டும். தலை வலது முழங்காலை நோக்கியவாறு இருக்கட்டும்.
4.ஒரு நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும் .மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை வலது, இடது இருகைகளையும் இடதுகால் பாதத்தின்மீது வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
5.பர்ஸவ கோணாசனம்-பக்கவாட்ட கோண நிலை- கடின தரம்-7
நற்பயன்கள்- மார்பை விரிவுபடுத்த உதவும். தொடைகளில் ஏற்படும் குறைகள் நீங்கும். முதுகு வலியை நீக்கும். குடல்களில் விடாப்பிடியாக தங்கும் கழிவுகளை அகற்றி மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும். மூட்டுகளுக்கு வலுவூட்டும். ஜீரண மையத்திற்கு உதவி செய்து தண்டுவடத்தில் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவும்.
முதல்நிலை-
1.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து பாதங்களுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியிருக்குமாறு நேராக நின்றுகொண்டு இருகைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகம் நிலத்தை நோக்கிய வண்ணம் இருக்கவும்.
2.அப்படியே குனிந்தவண்ணம் இடுப்பை முதலில் இடது பக்கம் அப்படியே பின்பக்கம் பின் வலப்பக்கம் ஆக சுற்றவும். முன்பக்கம் வரும்போது மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம், பின்பக்கம் வருபோது மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தும் இருக்கவும்
3.மூன்று முறை சுற்றவும். பிறகு வலதுபக்கம் ஆரம்பித்து 3 முறை சுற்றவும்.
இரண்டாம்நிலை-
1.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து பாதங்களுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியிருக்குமாறு நேராக நின்றுகொண்டு இருகைகளையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.வலது பாதத்தை வலது பக்கமாகத் திருப்பி இடது பாதத்தை வலது காலுக்கு நேர்கோணத்தில் வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இடது காலை நேராக வைத்துக் கொண்டு வலதுகால் முழங்காலை மடக்கி வைக்கவும். இரண்டு கால்களின் தூரத்தை சரிசெய்து நேர்கோணத்தில் இருக்கும்படி செய்யவும். உடம்பை வலது தொடையோடு ஒட்டி இருக்குமாறும், வலது கைபாதம் வலது கால்பாதமருகில் இருக்கும்படி வைக்கவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது கையை காதுக்குமேல் வைத்துக் கொண்டு முகம் இடது கையை பார்த்த வண்ணம் இருக்கட்டும். இடது கால் பாதம் முழுவதும் தரையில் இருக்கட்டும்.
5.ஒரு நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும். மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
6.அர்த்த சந்திராசனம்-சந்திரபிறை நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- பின்பக்க கீழ்முதுகு, மார்பு மற்றும் குடல் முதலிய ஜீரண உறுப்புகள் அடங்கிய பகுதி ஆகியவற்றிற்கு வலிமை தருகின்றது. அவற்றின் இயக்கங்களுக்கு உதவி.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நிற்க.
2.கைகள் இரண்டின் பாதங்களை ஒன்று சேர்த்தவாறு நெஞ்சருகில் அஞ்சலி முத்திரை போல் கொண்டு வரவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்தவாறே உயர்த்தவும். கைகள் காதுகளோடு சேர்ந்திருக்கட்டும்.
4.உடலை மெதுவாக பின்நோக்கி வளைக்கவும். தலையையும் பின்புறமாக சாய்க்கவும். கால்கள் மடங்காமல் அப்படியே சில நொடிகள் இருக்கவும். மெதுவாக தடா ஆசனமாகிய நிலைக்கு ஒன்றன்பின் ஒன்றாக வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
7.அர்த்த சக்ராசனம்- அரை சக்கர நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- முதுகுத்தண்டின் இலகுவாக வளையும் தன்மையை மேம்படுத்துகின்றது. முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மூளைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல செயல் உதவி புரிகின்றது.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நின்று மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கவும்
2.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இருகைபாதங்களினால் இடுப்பை அழுத்தமாக பிடிக்கவும்
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்துக் கொண்டு தலையை பின்பக்கமாக சாய்த்தவாறு இடுப்பிற்குமேல் உடலைச் சாய்க்கவும். கால்கள் வளையக்கூடாது.
4.அப்படியே சில நொடிகள் இருக்கவும். இயல்பாக மூச்சுவிட்டுக்கொண்டு மெதுவாக பழைய தடா நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
8.பாத ஹஸ்தாசனம்-முன்குனிந்த நிலை-கடின தரம்-3
நற்பயன்கள்- முதுகுத்தண்டின் இலகுவாக வளையும் தன்மையை மேம்படுத்துகின்றது.
முதுகுவலியை நீக்கும். தொடைகளை பலப்படுத்தும். மலச்சிக்கலை சரிப்படுத்தும். பசியின்மையைப் போக்கும். ஸ்ரீக்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். பித்தப்பை, வாயு, சிறுநீரக கோளாறுகளை கட்டுப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நின்று மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கவும்
2.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இருகைகளையும் குப்பியவாறு உயர தூக்கவும். கைகள் காதுகளைத் தொட்டவாறு இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தவாறு வளையவும். உடம்பும் கால்களும் செங்கோண வடிவில் இருக்கட்டும். கைகள் அப்படியே நீட்டியவாறு இருக்கட்டும்.
4.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மேலும் குனியவும். முகம் முழங்காலைத் தொடுமாறும், கைகளின் பாதங்கள் கால்களின் பாதங்களை தொடுமாறு இருக்கவும். முழங்கால் மடங்கக்கூடாது.
5.அப்படியே சில நொடிகள் இருந்து பின் படிப்படியாக முதல் நிலைக்கு மெதுவாக வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
9.ஏகபாத ஆசனம்-ஒருபாத நிலை- கடின தரம்-5
நற்பயன்கள்- இடுப்பிற்கும், கீழ்முதுகிற்கும் வலிமையை கொடுக்கின்றது. உடல் / மனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும். கவனங்களை தீவிரமாக ஒரு முனைப்படுத்தும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நின்று மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கவும்
2.இடுப்பிற்கும் கண்ணிற்கும் இடையில் உள்ள ஓர் இடத்தில் கண்களின் பார்வை இந்த ஆசனம் செய்து முடிக்கும்வரை நேர்கோட்டில் இருக்கட்டும். ஆசனம் செய்யும் இடம் சுவரிலிருந்து சுமார் ஐந்து அடி தள்ளி இருக்கவேண்டும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தவாறு இருகைகளின் பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டவாறு நிலதிற்கு இணையாக இருக்குமாறு வைக்கவும்.
4.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் அப்படியே உடலை முன்னால் செங்கோணவடிவில் சாய்க்கவும்.
5.மூச்சை சீராக மெதுவாக இயக்கிக் கொண்டு இடது காலால் உடலை சமநிலைப் படுத்திக் கொண்டு வலது காலை மடக்கி உடம்பும் கைகளும் வலதுகாலும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு செய்யவும்.
6.இந்த நிலையில் சில நொடிகள் அப்படியே இருந்து பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்குத் திரும்பவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்.
10.நடராஜ ஆசனம்-சிதம்பர நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- கூர்ந்து நோக்கும் திறனை அதிகப்படுத்தி அறிவின் வலிமையை மேம்படுத்தும். அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகுத்தண்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.மார்பு, இடுப்பு, கால்களில் உள்ள தசைகளைச் சரிசெய்து சரியான இயக்கத்திற்கு உதவும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நிற்க.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது காலை மடித்து கனுக்காலை இடது கையால் பிடித்துக் கொள்ளவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் தொடர்ந்து வலது கையை 45 டிகிரி கோணத்தில் இருக்குமாறு உயர்த்திக்கொண்டு இடதுகாலையும் பிடித்திருக்கும் இடது கையையும் முடிந்தளவிற்கு உயர்த்தவும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து இயற்கையாக சுவாசிக்கவும். பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு திரும்பவும்
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
11.கருடாசனம்-கருட நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- கால், முழங்கால், கணுக்கால் ஆகியவைகளுக்கு பலம் தரும். கால்களில் ஏற்படும் நரம்பின் இழுப்புகளிலிருந்து சீரடையவும், கால்களின் சதைகள் சரியாக இயக்கமடையவும் உதவும்
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் இருக்குமாறு தடா ஆசனத்தில் நிற்க
2.முழங்காலை மடக்கி இடது காலைத்தூக்கி வலது காலைச் சுற்றி வலது தொடையின் மேலிருக்குமாறு வைக்கவும்.
3.இடதுகை வலதுகையை ஒன்றைஒன்று பின்னியிருக்குமாறும் கைபாதங்கள் கண்ணின் இமைகள் இருக்குமிடத்தில் இருக்குமாறும் வைக்கவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து அப்படியே சில நொடிகள் இருக்கவும்.
5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
12.தடா ஆசனம்-உறுதி நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்- முதுகுத்தண்டு, மற்றும் உடலில் ஏற்படும் குறைகளைத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சரியாக இந்த ஆசனத்தை உபயோகித்தலில் உடல் சரியான நிலயில் நிற்க உதவும். மேலும் மூளையின் கவனங்களை திசை திருப்பாமல் பூமியில் மலைபோன்று உறுதியாக நிற்கலாம்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் அழுத்தத்துடன் இருக்குமாறும் பாதங்கள் தொடையை பார்த்த வண்ணம் நிற்க. முதுகு நிமிர்ந்து இருக்கவேண்டும்
2.முழங்கால், தொடை, வயிறு, தொடையின் பின்பகுதி ஆகிய சதைகளுக்கு மெதுவாக சிறிது இறுக்கம் தருக. உங்களது எடையின் அளவை இருகால்களும் எந்த பக்கமும் சாயாமல் சமமாகத் தாங்குமாறு செய்யவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து தொடையின் பின்பகுதி சிறிது வளைந்து அடிவயிறு முன்னால் வரும்படியும் தலை சிறிதளவு பின்னால் செல்லும்படியாக இருத்திக் கொள்ளவும்.
4.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
13.விருக்ஷாசனம்-மர நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- சமநிலை, கூர்மையான கவனிக்கும்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகிய தன்மைகளை மனதில் மேம்படுத்தும். கால்களின் சதைகள் வலிமையடையும்.
1.இருகால்களையும் சேர்த்து கால்களின் முன்பாதம் சிறிது அழுத்தத்துடன் கைகள் இரண்டும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் அழுத்தத்துடன் இருக்குமாறும் பாதங்கள் தொடையை பார்த்த வண்ணம் நிற்க. முதுகு நிமிர்ந்து இருக்கவேண்டும்
2.மூன்று அடி தூரம் இருகால் பாதங்களுக்குமிடையில் இருக்குமாறு நிற்கவும். இரு கைகளை பக்கவாட்டில் உயர்த்தி நிலத்திற்கு சமநிலையில் இருக்குமாறு செய்யவும்.
3.கைகளின் பாதங்கள் கீழ் நிலம் நோக்கியிருக்குமாறு வைத்துக்கொண்டு கால்பெருவிரல் மற்றும் அடுத்த விரல்களை அழுத்திக் கொண்டு குதிங்காலை உயர்த்தி நிற்கவும்.
4.சீராக மூச்சை விட்டுக்கொண்டு சில நொடிகள் அப்படியே இருந்து பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
உட்கார்ந்த வண்ணம் ஆசனங்கள் செய்யுமுன் செய்யும் முன் பயிற்சிகள் -1,2,3,4,5,6.7,8,9,10,11

1.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. கணுக்கால்கள் சேர்ந்திருக்கட்டும். இரண்டு பாதத்தையும் முதலில் இடது பக்கம் திருப்பவும். பின் வலது பக்கம் திருப்பவும் 3/5 முறை செய்யவும்.

2.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இரண்டு பாதங்களுக்கிமிடையில் போதிய இடைவெளி இருக்கட்டும். 3. இரண்டு பாதத்தையும் முதலில் இடது பக்கம் திருப்பவும். பின் வலது பக்கம் திருப்பவும். இடது பக்கம் திருப்பும்போது வலது பாதம் தொடாமலும் வலதுபக்கம் திரும்பும்போது இடதுபாதம் தொடாமலிருக்கவேண்டும். 3/5 முறை செய்யவும்.

3.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இரண்டு பாதங்களுக்கிமிடையில் போதிய இடைவெளி இருக்கட்டும். 3. இடது பாதத்தை வலது பக்கமும் வலது பாதத்தை இடது பக்கமும் திருப்பவும். பெருவிரல்கள் தொடும்படி செய்யவும். 4. இடது பாதத்தை எதிர் திசையில் இடது பக்கமும், வலது பாதத்தை எதிர்திசையில் வலது பக்கமும் திருப்பவும். 3/5 முறை செய்யவும்.

4.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் 2. கணுக்கால்கள் சேர்ந்திருக்கட்டும். இரண்டு பாதத்தையும் முதலில் உடலை நோக்கி வளைக்கவும். முழங்கால் உயரத் தூக்கக்கூடாது. 3. பின் முன்பக்கமிருந்து அப்படியே எதிர் திசையில் வளைக்கவும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 3/5 முறை செய்யவும்.

5.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இடது காலத்தூக்கி இடது காலின் குதிங்கால் வலது பெருவிரலுக்கு அடுத்து இருக்கும்படி வைக்கவும். 3. ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் கால்பாதங்களை அப்படியே முதலில் இடப்பக்கம் திருப்பவும். 4. பின் எதிர் திசையில் வலப்பக்கம் திருப்பவும். இருபக்கமும் திருப்பும்போது பாதங்களின் சுண்டுவிரல்கள் நிலத்தில் படவேண்டும். 5. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 6. இடது, வலது காலைமாற்றிச் செய்யவும். 3/5 முறை செய்யவும்.

6.1. கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும். கைகளை புட்டத்தின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. முழங்கால்களை மடக்கி பாதம் புட்டத்தை ஒட்டியவாறு இருக்கட்டும். முழங்கால் கணுக்கால் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும். 3. சேர்ந்த முழங்காலை அப்படியே முதலில் இடப்பக்கம் மடக்கி நிலத்தில் படும் அளவிற்கு சாய்க்கவும். 4. பின் எதிர் திசையில் வலப்பக்கம் கொண்டுவந்து நிலத்தில் படுமாறு சாய்க்கவும். . 3/5 முறை செய்யவும்.

7.1.வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். கைகள் இரண்டையும் கோர்த்தவண்ணம் தலையின் பின்னால் வைத்து தலைக்கு அழுத்தம் கொடுக்கவும். அப்போது தலையின் மூலம் பின்பக்கம் எதிர் அழுத்தம் தரவும். 2.கைகள் இரண்டையும் கோர்த்தவண்ணம் தலையின் முன்னால் நெற்றியில் வைத்து தலைக்கு அழுத்தம் கொடுக்கவும். அப்போது தலையின் மூலம் முன்பக்கம் எதிர் அழுத்தம் தரவும். 3.இடது உள்ளங்கையால் இடது பக்கம் கண்ணிற்கு பக்கவாட்டில் தலையை அழுத்திவிடவும். அப்போது தலையின் மூலம் பக்கவாட்டில் எதிர் அழுத்தம் தரவும். 4.வலது உள்ளங்கையால் வலது பக்கம் கண்ணிற்கு பக்கவாட்டில் தலையை அழுத்திவிடவும். அப்போது தலையின் மூலம் பக்கவாட்டில் எதிர் அழுத்தம் தரவும். 3/5 முறை செய்யவும்.

8.1.வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். முகத்திற்கு நேராக விரல்களை மடக்கி நீட்டவும். 2.கைமணிக்கட்டு இரண்டையும் முதலில் கடிகாரமுள் சுற்றுப்பதையிலும் பின் அதற்கு எதிர் திசையிலும் சுழற்றவும். 3.மடக்கிய மணிகட்டை இரு தோள்பட்டையின்மீது வைத்து முழங்கையை முதலில் கடிகாரமுள் சுற்றுப்பதையிலும் பின் அதற்கு எதிர் திசையிலும் சுழற்றவும். 3/5 முறை செய்யவும்.

9.1.வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலைக்குமேல் இருகைப் பாதங்களையும் கொண்டு சென்று இடது கையால் வலது மணிக்கட்டையும், வலது கையால் இடது மணிக்கட்டையும் பிடித்துக்கொள்ளவும். 2.வலதுகை தலையைச் சுற்றி இருக்குமாறு இடது கையை கீழே எந்த அளவிற்கு கொண்டுவரமுடியுமோ அந்த அளவிற்கு கொண்டுவரவும். 3.அப்படியே இடதுகை தலையைச் சுற்றி இருக்குமாறு வலது கையை கீழே எந்த அளவிற்கு கொண்டுவரமுடியுமோ அந்த அளவிற்கு கொண்டுவரவும். எல்லாவற்றையும் 3/5 முறை செய்யவும்.

10.1.வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். 2.கைவிரல்களைக் கோர்த்து முகத்திற்கு நேராக நீட்டிப் பிடிக்கவும். 3.கண்களின் பார்வை சேர்ந்திருக்கும் இரு கட்டை விரல்களின்மேல் பதிய வைத்துக் கொள்ளுங்கள். 4.பின்கையை அப்படியே கடிகாரமுள் திசையில் முதலிலும் பின் எதிர் திசையிலும் மெதுவாகச் சுற்றவும். அப்படிச் சுற்றும்போது தலையைச் சுற்றாமல் விழிகளின் பார்வைமட்டும் சுழன்று கட்டை விரல்களைப் பார்க்க வேண்டும். கண்களுக்கான சிறந்த பயிற்சி இதுவாகும் 3/5முறை செய்யவும்.

11.1.கால்களை நீட்டி அமரவும். 2.இடது காலை மடக்கி வலது கால் தொடையின்மேல் வைக்கவும். இருகை விரல்களால் பாதத்தையும், கால்விரல்களையும் நன்கு அழுத்திவிடவும். பாதத்தின் ஓரத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டு வரவும். 3.பின் முதல் நிலைக்குவந்து வலது காலை மடக்கி இடது கால் தொடையின்மேல் வைக்கவும். இருகை விரல்களால் பாதத்தையும், கால்விரல்களையும் நன்கு அழுத்திவிடவும். பாதத்தின் ஓரத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டு வரவும்
உட்கார்ந்த வண்ணம் (25 ஆசனங்கள்)
1.பத்மாசனம்-தாமரை நிலை- கடின தரம்-6
2.சித்தாசனம்-சித்த நிலை- கடின தரம்-2
3.வஜ்ராசனம்-வைர நிலை- கடின தரம்-2
4.சுப்த வஜ்ராசனம்-வைர நிலை- கடின தரம்-2
5.வீர ஆசனம்-கதாநாயக நிலை- கடின தரம்-2
6.ஸிம்ம ஆசனம்-சிங்க நிலை- கடின தரம்-2
7.அர்த்தமத்யேந்த்ராசனம்-முதுகுபாதிதிரும்பியநிலை-கடினதரம்-4
8.வக்ராசனம்-வக்ர நிலை- கடின தரம்-3
9.ஆகர்ஷ்ணதனுர் ஆசனம்-வில் அம்பு நிலை- கடின தரம்-6
10.ஞானு சிரசானம்-ஞான சிரசுநிலை- கடின தரம்-2
11.பஸ்திமோச்சாணம்/உக்ர-சிறப்பான நிலை-கடின தரம்-3
12.பாதகோணஆசனம்-கட்டுப்பட்டகோணநிலை-கடின தரம்-4
13.பட்டாம்பூச்சி ஆசனம்-பறக்கும் நிலை- கடின தரம்-2
14.சாசன்காசனம்-யோகமுத்ரா-நிலவு நிலை- கடின தரம்-1
15.மண்டுகாசனம்-தவளை நிலை- கடினதரம்-1
16.பாலாசனம்-குழந்தை நிலை- கடின தரம்-1
17.கோமுக் ஆசனம்-பசுமுக நிலை- கடின தரம்-4
18.பூர்வோத்தாசனம்-பூர்வ நிலை- கடின தரம்-3
19.சக்ராசனம்-சக்ர நிலை- கடின தரம்-8
20.உஷட்ராசனம்-ஒட்டக நிலை- கடின தரம்-5
21.ஹம்சாசனம்-அன்னம் நிலை- கடின தரம்-6
22.மயூராசனம்-மயில் நிலை- கடின தரம்-9
23.விருச்சாகாசனம்-தேள் நிலை- கடின தரம்-9
24.அரசுஆசனம்(எ)சிரசானம்-அரசுநிலை-கடின தரம்-7
25.ஆஞ்சநேய ஆசனம்-அனுமன் நிலை- கடின தரம்-4
1.பத்மாசனம்-தாமரை நிலை- கடின தரம்-6
நற்பயன்கள்- ஓய்வு, ஒருமுனைப்படுத்துதல், தியானம், நாடிசுத்தி முதலியனவற்றிற்கு மிகவும் உகந்த ஆசனமாகும். உடல்முழுவதும் மனத்திற்குள்ளும் இயற்கையான சமநிலையை ஏற்படுத்தும். ஆசனங்களில் சிறந்தது எனப்படும்.
1.இருகால்களையும் முன்பக்கமாக நீட்டி உட்காரவும்
2.வலது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து இடது தொடையின்மேல் வயிறை ஒட்டிவாறு வைக்கவும்.
3.இடது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து வலது தொடையின்மேல் வயிறை ஒட்டியவாறு வைக்கவும்.
4.இரண்டு கணுக்கால்களும் நிலத்தில் படும்படியும் பாதங்கள் மேல்நோக்கிய வாறும் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு இறுக்கமாக இல்லாமல் தளர்வாக நேராக இருக்க வேண்டும்.
5.தொடர்ந்து உட்கார்ந்திருக்க லகுவாக இல்லாதிருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குமேல் கால்களின் நிலையை மாற்றி அமரலாம்.
2.சித்தாசனம்-சித்த நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- ஓய்வு, ஒருமுனைப்படுத்துதல், தியானம், நாடிசுத்தி முதலியனவற்றிற்கு மிகவும் உகந்த ஆசனமாகும்.பத்மாசனத்தைவிட கால்களுக்கு இலகுவாக இருக்கும். உடல்முழுவதும் மனத்திற்குள்ளும் இயற்கையான சமநிலையை ஏற்படுத்தும். சித்தர்களின் ஆசனம்.பத்மாசனத்திற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.
1.இருகால்களையும் முன்பக்கமாக நீட்டி உட்காரவும்
2.இடது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து வலது தொடையின் அருகில் வைக்கவும்.
3.வலது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து இடது தொடையின் அருகில் வைக்கவும்.
4.வலது காலின் வெளிஓரம் இடது காலின் வெளிஓரம் கூடுமான வரையில் ஒன்றியும் இடது கணுக்கால் மேல் வலது கணுக்கால் இருக்கும் படியும் வைக்கவும்
5.கைப் பாதங்கள் மேல் நோக்கியவாறு பெருவிரலும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து ஒரு வளையம்போல் வைத்துக்கொள்க.
3.வஜ்ராசனம்-வைர நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- ஓய்வு, ஒருமுனைப்படுத்துதல், தியானம், நாடிசுத்தி முதலியனவற்றிற்கு மிகவும் உகந்த ஆசனமாகும். பத்மாசனத்தைவிட கால்களுக்கு இலகுவாக இருக்கும். உடல்முழுவதும் மனத்திற்குள்ளும் இயற்கையான சமநிலையை ஏற்படுத்தும்.
1.இருகால்களையும் முன்பக்கமாக நீட்டி உட்காரவும்
2.வலது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
3.இடது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து இடது தொடையின் கீழ் வைக்கவும்.
4.கணுக்காலின்மேல் புட்டம் இருக்குமாறும் கைப் பாதங்கள் தொடையை நோக்கியவாறு இருக்குமாறும் வைத்துக்கொள்க. இயற்கையாக சுவாசிக்கவும்.
4.சுப்த வஜ்ராசனம்-வைர நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- புட்டத்திற்கு மேலும் சுற்றியுள்ள நரம்புக் கூட்டத்தை சீராக்கி புத்துணர்வு ஏற்படுத்துகின்றது. இடுப்பு, முழங்கால், இடுப்பின் கீழ்பகுதி ஆகியவைகளுக்கு சிறப்பானது.
1.இருகால்களையும் முன்பக்கமாக நீட்டி உட்காரவும். வலது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து வலது தொடையின் கீழ் வைக்கவும். இடது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து இடது தொடையின் கீழ் வைக்கவும்.
2.கணுக்காலின்மேல் புட்டம் இருக்குமாறும் கைப் பாதங்கள் தொடையை நோக்கியவாறு இருக்குமாறும் வைத்துக்கொள்க. இயற்கையாக சுவாசிக்கவும்.
3.மெதுவாக பின்பக்கமாக சாயவும். முதலில் வலது கையைமடக்கிப் கையின்பாதம் நிலத்தை நோக்கியவாறு வைத்து உடலின் பளுவை வலது தோளில் பெறவும். பின் இடது தோளில் மீதி பளுவைத் தாங்கிக் கொள்ளவும்.
4.முதுகு நிலத்தில் இருக்கும்படியும், கைகளை குறுக்காக தலைக்கு மேல் இருக்கும்படியும் வைக்கவும். முழங்கால்களை கூடுமான வரயில் ஒன்று சேர்த்திருக்கவும்.
5.அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
5.வீர ஆசனம்-கதாநாயக நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- ஓய்வு, ஒருமுனைப்படுத்துதல், தியானம், நாடிசுத்தி முதலியனவற்றிற்கு மிகவும் உகந்த ஆசனமாகும். பத்மாசனம், சித்தாசனம் ஆகியவைகளுக்கு மாற்றாசனமாகும்.. அடிவயிற்று தசைகளின் இயக்கத்திற்கு உதவிபுரியும். கால்களில் ஏற்படும் வலி மற்றும் சாதகமில்லா நிலையை சரி செய்யும்.
1.முழங்காலை மடக்கி காலின் மேல்பாதங்கள் நிலத்தில் தொடுமாறும் தொடைகளைத் தொட்டவாறும் அமரவும்.
2.முழங்கால்கள் அதே நிலையில் ஒன்றாக வைத்துக் கொண்டு பாதங்களை மேல் நோக்கிய நிலையில் ஒரு அடி அளவிற்கு நகர்த்தவும்.
3.புட்டம் தரைமீது இருக்கட்டும். தொடைகளின் அடிப்பக்கம் கால்களின் ஆடுசதையைத் தொட்டவாறு இருக்கட்டும்.
4.முழங்காலின்மேல் கைப் பாதங்கள் மேல் நோக்கியவாறு பெருவிரலும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து ஒரு வளையம்போல் சின் முத்திரையாக வைத்துக்கொள்க
5.மெதுவாக சுவாசிக்கவும். சுமார் ஆறு முழு சுவாசம் முடியும்வரை. பின் மெதுவாக முதல் நிலைக்கு வரவும்.
6.ஸிம்ம ஆசனம்- சிங்க நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- முகம், தாடை, வாய், தொண்டை, நாக்கு முதலிய பாகங்கள் பலனடைகின்றது. தாடைகளில் இறுக்கம், ஏற்றத்தாழ்வுகளினால் பற்கள் தேய்வது, பற்கள் பொருளை அரைக்கும்போது சரியாக செயல்படமை ஆகியவை சரியாகும். தொண்டையில் ஏற்படும் கரகரப்பு மற்றும் புண் முதலிவைகளை சரிசெய்யும்.
1.முழங்காலை மடக்கி காலின் மேல்பாதங்கள் நிலத்தில் தொடுமாறும் தொடைகளைத் தொட்டவாறும் அமரவும். புட்டங்கள் காலின் ஆடுசதைமேல் இருக்கட்டும்.
2.கைகளில் பந்து உருண்டை வைத்திருப்பது போல் முழங்காலில் கைகளை வைக்கவும். முதுகு நிமிர்ந்து நேராக இருக்க வேண்டும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முன்பக்கமாக சிறிது சாய்ந்து, தாடைகள் முழுவதும் விரிந்திருக்க நாக்கு வெளியில் வந்திருக்குமாறு செய்யவும். உங்கள் பார்வை புருவத்திற்குமிடையில் மூக்கு நுனியைப் பார்க்கவும்.
4.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் முன்பக்கம் சாய்ந்திருந்ததை நேராக உட்கார்ந்து முழங்காலிருந்து கைகளை எடுக்கவும். நாக்கை உள்ளே இழுத்து தாடைகளை மூடவும்.
7.அர்த்தமத்யேந்த்ராசனம்-முதுகு பாதிதிரும்பிய நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- முதுகுத்தண்டின் அசைவுகளை இலகுவாக்குவதற்கு மிகவும் சிறந்தது. கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு ஆகியவைகள் சரியாகும். வயிறு மற்றும் இடுப்பு சதைகளின் குறைபாடுகள் நீக்கப்பெறும். அடிவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்கி இரத்த ஓட்டம் சுரப்பிகளுக்கு சென்று சீராக இயங்க வைக்கின்றது.
1.கால்களை முன்னால் நீட்டி அமரவும். இடது முழங்காலை வளைத்து இடது பாதத்தை இடுப்பின் வலது பக்கம் தொடையின் கீழ் கனுக்கால் இருக்குமாறு வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது முழங்காலை மேலேதூக்கியவாறு இடது காலின் தொடையின்மேல் வலது காலின் கனுக்கால் தொடுமாறு வைக்கவும்
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் முதுகுத்தண்டை வலது பக்கம் திருப்பி இடது கையால் இடது காலைத் தொடவும். இடதுகை வலது தொடைமேல் இருக்கவும். வலது கைபாதம் வலது இடுப்பின் அருகில் நிலத்தின் மேல் வைக்கவும். முதுகையும் தலையையும் லேசாகத் வலது பக்கம் திருப்பியவாறு இருக்கவும்.
4.அப்படியே சில நொடிகள் இருந்து இயற்கையாக சுவாசிக்கவும். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது காலின் தொடையின்மேல் இருக்கும் வலது காலின் பாதம் இடது தொடையை தொட்டவாறு நிலத்தில் வைக்கவும்.
5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் முதுகுத்தண்டை வலது பக்கம் திருப்பி இடது கையால் இடது கால் பாதத்தைத் தொடவும். வலது கைபாதம் வலது இடுப்பின் அருகில் நிலத்தின் மேல் வைக்கவும். முதுகையும் தலையையும் லேசாகத் வலது பக்கம் திருப்பியவாறு அப்படியே சில நொடிகள் இருந்து இயற்கையாக சுவாசிக்கவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
8.வக்ராசனம்-வக்ர நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- முதுகுத்தண்டின் அசைவுகளை இலகுவாக்குவதற்கு மிகவும் சிறந்தது. கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு ஆகியவைகள் சரியாகும். வயிறு மற்றும் இடுப்பு சதைகளின் குறைபாடுகள் நீக்கப்பெறும். அடிவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்கி இரத்த ஓட்டம் சுரப்பிகளுக்கு சென்று சீராக இயங்க வைக்கின்றது.
முதல்நிலை-
1.கால்களை முன்னால் நீட்டி ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு அமரவும்.
2.இடது முழங்காலை உயரத்தூக்கி மடக்கி கால் மேல்பாதம் வலது கனுக்காலின் வெளிப்புறம் அருகில் இருக்குமாறு வைக்கவும்.
3.முதுகுத்தண்டு மற்றும் தலையை லேசாகத் இடது பக்கம் திருப்பி வலது கைப்பாதம் உயர்ந்திருக்கும் இடது முழங்காலின் வெளிப்பக்கம் ஒட்டியிருந்தவாறு வலது முழங்காலைத் தொடவும்.
4.இடது கைப்பாதம் இடது இடுப்பினருகில் நிலத்தில் வைக்கவும். ஒரு சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை-
1.கால்களை முன்னால் நீட்டி ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு அமரவும்.
2.இடது முழங்காலை உயரத்தூக்கி மடக்கி கால் மேல்பாதம் வலது கனுக்கால் அருகில் அதே பக்கம் இருக்குமாறு வைக்கவும்.
3.முதுகுத்தண்டு மற்றும் தலையை லேசாகத் இடது பக்கம் திருப்பி வலது கைப்பாதம் உயர்ந்திருக்கும் இடது முழங்காலின் வெளிப்பக்கம் ஒட்டியிருந்தவாறு வலது கனுக்காலைத் தொடவும்.
4.இடது கைப்பாதம் இடது இடுப்பினருகில் நிலத்தில் வைக்கவும். ஒரு சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
9.ஆகர்ஷ்ணதனுர் ஆசனம்-வில் அம்பு நிலை- கடின தரம்-6
நற்பயன்கள்- மனதில், எண்ணங்களில், செயலில் ஏற்படும் தடுமாற்றங்களுக்கு காரணமான நரம்புகளின் செயலைக் கட்டுப்படுத்தும்.
முதல்நிலை-
1.கால்களை நேராக நீட்டி அமரவும். இடது கால் பாதத்தை தூக்கி மடக்கி விரல்களை வலது கையால் பிடித்துக்கொள்ளவும்
2.வலது கையால் நீட்டியிருக்கும் இடது காலின் பெருவிரலை பிடிக்கவும் / தொடவும்.
3.நீட்டியிருக்கும் இடதுகால் நிலத்துடன் படிந்திருக்க வேண்டும். தலை குனிந்து கூடுமான வரை கைகளை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை-
1.கால்களை முன்னால் நீட்டி அமரவும். இடது காலை மடக்கி பெருவிரலை இடது கைகளால் பிடித்துக் கொண்டு காதின் அருகில் வருமாறு செய்யவும்.
2.வலது கையால் வலது காலின் பெருவிரலைப் பிடிக்கவும்.
3.வலதுகால் நிலத்தோடு ஒட்டியிருக்க வேண்டும். தலை குனிந்து கூடுமான வரை கைகளை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
10.ஞானு சிரசானம்-ஞான சிரசுநிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- தொடை, கணுக்கால், இடுப்பு தசைகளின் நெகிழ்சித்தனமை அதிகரிக்கும்.
1.கால்களை நேராக நீட்டி அமரவும்.
2.இடது கால் முழங்காலை மடக்கி வலது தொடைக்கருகில் பாதமிருக்குவாறு வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரு கைகளின் பாதங்களால் வலதுகாலின் பாதத்தைத் தொடவும்.
4.முகம் வலது முழங்காலின் அருகில் இருக்கவும். சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
11.பஸ்திமோச்சாணம்/உக்ர- சிறப்பான நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். இடுப்புவலி, முதுகு வலி வராமல் தடுக்கும். குடல் பித்தப்பை கோளாறு நீங்கும்.
1.கால்களை நேராக நீட்டி அமரவும்.
2.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரு கை பாதங்களாலும் இரு கால்களின் பாதங்களை குனிந்து தொடவும்.
3.முகம் முழங்கால்கள் அருகில் இருக்கவும். சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
12.பாதகோண ஆசனம்-கட்டுப்பட்ட கோணநிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- கீழ்முதுகின் அடிப்பக்கம், வயிறு, அடிவயிற்றெலும்பு, கால், முழங்கால் ஆகியவைகள் நல்ல இயக்கம் பெறும். பத்மாசனத்தில் நன்றாக அமரும் நிலை ஏற்படும்வரை இதைச் செய்தால் நல்ல பயன். உணவு அருந்திய பின்னும் இதை செய்யலாம்,
1.கால்களை நேராக நீட்டி அமரவும்
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகு, கழுத்து, தலை நேராகவும் தோள்பட்டைகள் நிமிர்ந்தும் இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரு கால்களையும் மடக்கி இரு பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம் இருக்கட்டும். இரு சுண்டு விரல்களும் நிலத்தை தொட்டவாறும். கைகளின் பாதங்களைக் கோர்த்து இருபாதங்களையும் பிடிக்கவும்.
4.முதுகுத்தண்டு நேராக வைத்து இரு கைகளால் கால் பாதங்களை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவரமுடியுமோ அவ்வளவு அருகில் வரவும். சில நொடிகள் அப்படியே இருந்து சீராக சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
13.பட்டாம்பூச்சி ஆசனம்-பறக்கும் நிலை- கடின தரம்-2
நற்பயன்கள்- கீழ்முதுகின் அடிப்பக்கம், வயிறு, அடிவயிற்றெலும்பு, கால், முழங்கால் ஆகியவைகள் நல்ல இயக்கம் பெறும். பத்மாசனத்தில் நன்றாக அமரும் நிலை ஏற்படும்வரை இதைச் செய்தால் நல்ல பயன். உணவு அருந்திய பின்னும் இதை செய்யலாம்,
1.கால்களை நேராக நீட்டி அமரவும்
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகு, கழுத்து, தலை நேராகவும் தோள்பட்டைகள் நிமிர்ந்தும் இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரு கால்களையும் மடக்கி இரு பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம் இருக்கட்டும். இரு சுண்டு விரல்களும் நிலத்தை தொட்டவாறும். கைகளின் பாதங்களைக் கோர்த்து இருபாதங்களையும் பிடிக்கவும்.
4.இயற்கையாக சுவாசித்து முதுகுத்தண்டை நேராக வைத்து இரு கைகளால் கால் பாதங்களை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவரமுடியுமோ அவ்வளவு அருகில் கொண்டுவந்து இரு முழங்கால்களையும் ஒரே சமத்தில் மேலும் கீழுமாக வேகமாக அசைக்கவும்.
5.சில நொடிகள் அப்படியே செய்து சீராக சுவாசிக்கவும். பின் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
14.சாசன்காசனம்-யோகமுத்ரா-நிலவு நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்- கீழ்முதுகின் அடிப்பக்கம், அடிவயிறு ஆகிய பகுதியில் உள்ள சுரப்பிகளை நன்றாக இயங்கவைத்து புட்டத்திற்கு மேலும் சுற்றியுள்ள நரம்புக் கூட்டத்தை சீராக்கி புத்துணர்வு ஏற்படுத்துகின்றது. இடுப்பு, முழங்கால், இடுப்பின் கீழ்பகுதி ஆகியவைகளுக்கு சிறப்பானது. இந்திரியங்களின் உற்பத்திக்கு உதவும்.
முதல்நிலை-
1.இருகால்களையும் முன்பக்கமாக நீட்டி உட்காரவும். வலது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டுவந்து வலது தொடையின் கீழ் வைக்கவும். இடது முழங்காலை மடக்கி பாதங்களை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு வந்து இடது தொடையின் கீழ் வைக்கவும். கணுக்காலின்மேல் புட்டம் இருக்குமாறும் கைப் பாதங்கள் தொடையை நோக்கியவாறு இருக்குமாறும் வைத்துக்கொள்க. இயற்கையாக சுவாசிக்கவும். (வஜ்ராசனம்).
2.இருகைகளையும் பின்னால் கொண்டு சென்று வலது கைமணிக்கட்டை இடது கையால் பிடிக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகை வளைத்து முன்நெற்றி முழங்காலுக்குமுன் நிலத்தை தொடுமாறு வைக்கவும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து. மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை-
1.வஜ்ராசனத்தில் அமரவும்.
2.இருகைகளையும் பின்னால் கொண்டு சென்று வலது கைமணிக்கட்டை இடது கையால் பிடிக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகை வளைத்து முன்நெற்றி முழங்காலுக்குமுன் நிலத்தை தொடுமாறு வைக்கவும்.
4.பின்னால் கோர்த்திருந்த இருகைகளையும் விடுவித்து மெதுவாக பக்கவாட்டில் கொண்டுவந்து தலைக்கு மேல் நேராக நீட்டி பாதங்களைச் சேர்த்து கூப்பிய வண்ணம் இருக்கவும்.
5.சில நொடிகள் அப்படியே இருந்து. மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
15.மண்டுகாசனம்- தவளை நிலை-கடினதரம்-1
நற்பயன்கள்- கீழ்முதுகின் அடிப்பக்கம், அடிவயிறு ஆகிய பகுதியில் உள்ள சுரப்பிகளை நன்றாக இயங்கவைத்து புட்டத்திற்கு மேலும் சுற்றியுள்ள நரம்புக் கூட்டத்தை சீராக்கி புத்துணர்வு ஏற்படுத்துகின்றது. இடுப்பு, முழங்கால், இடுப்பின் கீழ்பகுதி ஆகியவைகளுக்கு சிறப்பானது. இந்திரியங்களின் உற்பத்திக்கு உதவும்.
முதல் நிலை-
1.வஜ்ராசனத்தில் அமரவும்.
2.கைபாதங்களை மெதுவாக அடிவயிற்றில் ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகை வளைத்து முன்நெற்றி முழங்காலுக்குமுன் நிலத்தை தொடுமாறு வைக்கவும். கைகள் விலா எழும்புகளை அழுத்தக்கூடாது.
4.சில நொடிகள் அப்படியே இருந்து. மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம் நிலை-
1.வஜ்ராசனத்தில் அமரவும்.
2.கைபாத விரல்களை மடக்கி மெதுவாக அடிவயிற்றில் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகை வளைத்து முன்நெற்றி முழங்காலுக்குமுன் நிலத்தை தொடுமாறு வைக்கவும். கைகள் விலா எழும்புகளை அழுத்தக்கூடாது.
4.சில நொடிகள் அப்படியே இருந்து. மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
16.பாலாசனம்-குழந்தை நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்- கீழ்முதுகின் அடிப்பக்கம், அடிவயிறு ஆகிய பகுதியில் உள்ள சுரப்பிகளை நன்றாக இயங்கவைத்து புட்டத்திற்கு மேலும் சுற்றியுள்ள நரம்புக் கூட்டத்தை சீராக்கி புத்துணர்வு ஏற்படுத்துகின்றது. இடுப்பு, முழங்கால், இடுப்பின் கீழ்பகுதி தோள்பட்டை ஆகியவைகளுக்கு சிறப்பானது. இந்திரியங்களின் உற்பத்திக்கு உதவும்.
1.வஜ்ராசனத்தில் அமரவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து முதுகை வளைத்து முன்நெற்றி முழங்காலுக்குமுன் நிலத்தை தொடுமாறு வைக்கவும். கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து தலைக்குமேல் பாதங்கள் நிலத்தை பார்த்தவாறு வைக்கவும்.
3.பின் முன் நீட்டிய கைகளை மெதுவாக பக்கவாட்டில் கொண்டுவந்து தொடைகளைத் தொட்டவண்ணம் கால் பாதங்களுக்கருகில் கைப்பாதங்கள் மேல்நோக்கிவாறு வைக்கவும்
4.சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
17.கோமுக் ஆசனம்-பசுமுக நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- மேல்முதுகு, கைகள், மார்பு, ஜீரண உறுப்புகள் அடங்கிய வயிறு ஆகிய பகுதியை நன்றாக இயங்க வைக்கின்றது. தோள்பட்டை எளும்புகள் விரிவடைவதால் காற்றுப்பை விரிவாக்கம் பெறுகிறது. வயிற்றின் தசைகள் மேல் நோக்கி இயக்கம் பெறுவதால் வயிற்றின் இயக்கம் சீரமைக்கப்படுகின்றது. கழுத்து சுழுக்கு, முதுகுவலி, இறுகிய தோள்பட்டை ஆகியவைகளை சீராக்குகின்றது.
1.இருகால்களையும் நீட்டி அமரவும். இடது காலின் முழங்காலை மடக்கி இடது தொடையை ஒட்டியவாறு பாதங்கள் புட்டத்திற்கு அடியிலும் பாதங்களின் மேல்பாகம் நிலத்தை நோக்கியவாறு இருக்கட்டும்.
2.இடது கையினால் வலது பாதத்தை பிடித்து தூக்கி கொண்டு வந்து பாதங்கள் இடது புட்டத்திற்கு அருகில் இறுக்குமாறு வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வலது கையை தலைக்கு மேலேதூக்கி முழங்கையை மடக்கி நடுமுதுகுகை தொடுமாறு வைக்கவும். இடது கையை மடக்கி முதுகு பின்னால் கொண்டுவந்து வலது கைவிரல்களுடன் கோர்த்து இருக்கவும்.
4.சில நொடிகள் அப்படியே இருந்து சுவாசிக்கவும். பின் மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
18.பூர்வோத்தாச்னம்-பூர்வ நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- தோல்மூட்டு, கைமணிக்கட்டு, கணுக்கால், பாதம், இடுப்பு பலப்படும்.
1.இருகால்களையும் நீட்டி அமரவும். இருகைகளையும் இடுபின் சிறிது தூரத்தில் கால்களுக்கு நேர்கோட்டிலும், பாதங்கள் கால்களைப் பார்த்தவாறும் நிலத்தை தொட்டவாறும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இருகைப்பாதங்கள் கால் பாதங்களிலும் அழுத்தம் கொடுத்து மெதுவாக உடம்பைத் தூக்கவும். தலையை மேல் நோக்கி இருக்குமாறு வைக்கவும். முடிந்த அளவு இடுப்பை மேல்நோக்கி இருக்கும்படி தூக்கவும்.
3.சில நொடிகள் அப்படியே இருந்து பின் மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
19. சக்ராசனம்-சக்ர நிலை- கடின தரம்-8
நற்பயன்கள்- இந்த ஆசனம் முழுவதும் செய்ய முடியவில்லையென்றாலும் முடிந்த அளவு செய்தாலும் பயன் கிடைக்கும். முதுகுத்தண்டுவடத்திற்கு பலமும் நன்றாக வளையும் தன்மையும் கொடுக்கின்றது. கைகள், தோள்பட்டைகள், மேல்முதுகு ஆகியவைகளுக்கு பலமும் நரம்பு, தசைகளுக்கு இலகுவான இயக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உடம்பு முழுவதற்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தை அருந்திய சக்தியை அளிக்கும்.
1.சவ நிலையில் உடலை நிலத்தில் கிடத்தவும்.
2.மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் முழங்கால்களை மடக்கி புட்டங்கள் அருகில் பாதங்கள் நிலத்தில் இருக்குமாறு வைக்கவும்.
3.இரு முழங்கைகளையும் மடக்கி கைகளின் பாதங்கள் நிலத்தில் கால்களைப் பார்த்தவாறு தோள்பட்டை அருகில் வைக்கவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலை, முதுகு, புட்டம் ஆகியவற்றை மெதுவாக கைப்பாதங்களில் அழுத்தம் கொடுத்தவாறு மேலே தூக்கவும். உடலை மேலே தூக்கும்போது கால்கலையும், கைகளையும் முடிந்தவரையில் அருகே நகர்த்திக்கொண்டு உடலை எவ்வளவு தூக்கமுடியுமே அந்தளவிற்கு தூக்கவும்
5.மூச்சுக்காற்றை அப்படியே எவ்வளவு நேரம் உள்ளே தக்க வைக்கமுடியுமோ அந்த அளவிற்கு தக்கவைத்து அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
20.உஷட்ராசனம்-ஒட்டக நிலை- கடின தரம்-5
நற்பயன்கள்- இந்தஆசனம் முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மையை மேன்மை படுத்தும். இரத்தத்தின் ஒட்டத்தை மூளைப்பகுதிக்கு அதிகப்படுத்தும். முதுகு தசைகள், கைகள் மற்றும் தோள்களுக்கு வலுவூட்டும்.
1.வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
2.பின்பக்கமாகச் சாய்ந்து வலது கையால் வலது கால் மணிக்கட்டையும், இடது கையால் இடது கால் மணிக்கட்டையும் பிடிக்கவும்
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து புட்டத்தை மெதுவாக உயர்த்தி இடுப்பை வளைத்து வயிறு மேல்நோக்கி இருக்குமாறும் தாடை உடம்பிற்கு நேராகவும் இருக்குமாறும் வைக்கவும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். முடியவில்லை எனில் மெதுவாக சுவாசிக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்.
21.ஹம்சாசனம்-அன்னம் நிலை- கடின தரம்-6
நற்பயன்கள்-மணிக்கட்டு பலமடைந்து நன்றாக இயங்கும். ஜீரணசக்தி பெருகும். மலச்சிக்கல் நீங்கும். கணையம் நன்றாக இயங்கும்.
1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலை நிலத்தை தொட்டவாறும் கைகளின் பாதங்கள் பக்கவாட்டிலும் விரல்கள் கால்களை நோக்கியும் நிலம் பார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களின் விரல்கள் நிலத்தை தொட்டவண்ணம் இருக்கட்டும். முழங்கையை மடக்கி அடிவயிற்றில் வைத்து உடம்பின் பளுவை தாங்கியவாறு தலையைத் தூக்கவும்.
3.முழங்கால்களை நிமிர்த்தி நேராக வைக்கவும். கால்களின் முன்பாகம் விரல்கள் நிலத்தை தொட்டவாறு இருக்கட்டும்.
4.கால்கள், இடுப்பு, முதுகு, கழுத்து, தலை எல்லாம் ஓர் நேர் கோட்டில் இருக்கவும். உடல் நிலத்திலிருந்து சாய்தளத்தில் இருப்பது போல் இருக்கட்டும்.
5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
22.மயூராசனம்-மயில் நிலை- கடின தரம்-9
நற்பயன்கள்- மலச்சிக்கல், நெஞ்சு எரிதல், அஜீரணம் இவைகளை நீக்கும். வயிற்றில் ஏற்படும் குறைகள் நீங்கும். முன்கைகள், மணிக்கட்டு, தோள்பட்டை பலம் பெறும். வாயு உற்பத்தியாகி ஓர் இடத்தில் தங்கி ஏற்படுத்தும் கோளாறுகள் நீங்கும். இருதயம் பலவீனமானவர்கள் இதைச் செய்யக் கூடாது.
1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலை நிலத்தை தொட்டவாறும் கைகளின் பாதங்கள் பக்கவாட்டிலும் விரல்கள் கால்களை நோக்கியும் நிலம் பார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களின் விரல்கள் நிலத்தை தொட்டவண்ணம் இருக்கட்டும். முழங்கையை மடக்கி அடிவயிற்றில் வைத்து உடம்பின் பளுவை தாங்கியவாறு தலையைத் தூக்கவும்.
3.முழங்கால்களை நிமிர்த்தி நேராக வைக்கவும். மேலும் வயிற்றில் அழுத்தம் கொடுத்து கால்களை நிலத்திலிருந்து தூக்கவும். கால்களின் முன்பாகம் விரல்கள் நிலத்தை தொடாதவாறு இருக்கட்டும்.
4.கால்கள், இடுப்பு, முதுகு, கழுத்து, தலை எல்லாம் ஓர் நேர் கோட்டில் இருக்கவும். உடல் நிலத்திற்கு இணையாக கைகளின் உயரத்தில் இருக்கட்டும்.
5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
23.விருச்சாகாசனம்-தேள் நிலை- கடின தரம்-9
நற்பயன்கள்- முதுகுத்தண்டுவடத்திற்கு பலமும் நன்றாக வளையும் தன்மையும் கொடுக்கின்றது. கைகள், தோள்பட்டைகள், மேல்முதுகு ஆகியவைகளுக்கு பலமும் நரம்பு, தசைகளுக்கு இலகுவான இயக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உடம்பு முழுவதற்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தை அருந்திய சக்தியை அளிக்கும். கழுத்து, மார்பு, தண்டுவடத்திற்கு பலம் தரும்.
குறிப்பு: இந்த ஆசனம் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் மேற்பார்வையில் செய்ய வேண்டும். முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது சுவற்றில் சாய்ந்து நிற்கின்ற அளவில் தலை 2-3 அடி தூரத்தில் இருந்து செய்யவும். அழுத்தத்தை தாங்க முடியாமல் நிலை தடுமாறினால் சுவர்களில் சாயவும். ஆசனம் செய்தபின் முதல் நிலைக்கு வரும்போது கூட தடுமாறலாம். கவனம் தேவை.
1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலை நிலத்தை தொட்டவாறும் முழங்கையை மடக்கி கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தபடி தலைக்கு இருபக்கமும் வைக்கவும். கைபாதங்களுக்கிடையே தோள்பட்டை அளவிற்கு இடை வெளிவேண்டும்.
2.முழங்கை மற்றும் கைப்பாதங்களில் அழுத்தம் கொடுத்து முழங்காலை மடக்கி கால்களை தலைக்குமேல் முதுகு பின்னால் வளைந்தவாறு தூக்கவும்
3.தலயை மேலும் நிமிர்த்தி கைமற்றும் கைப்பாதங்களில் அழுத்தம் தாங்கி கால்களை உயரே தூக்கவும். கால்பாதங்கள் தலைக்குமேல் இருப்பதை உணருங்கள்.
4.எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கமுடியுமோ அதுவரை இருந்துவிட்டு பின் முதல் நிலைக்குப் படிப்படியாக வரவும்.
24.அரசு ஆசனம் எனப்படும் சிரசானம்-அரசு நிலை- கடின தரம்-7
நற்பயன்கள்- முதுகுத்தண்டுவடத்திற்கு பலமும் நன்றாக இனையும் தன்மையும் கொடுக்கின்றது. கைகள், தோள்பட்டைகள், மேல்முதுகு ஆகியவைகளுக்கு பலமும் நரம்பு, தசைகளுக்கு இலகுவான இயக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உடம்பு முழுவதற்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தை அருந்திய சக்தியை அளிக்கும். கழுத்து, மார்பு, தண்டுவடத்திற்கு பலம் தரும். நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையைப் போக்கும். நுறையீரலைப் பலப்படுத்தும். இரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் உள்ளவர்கள் இதைசெய்யக் கூடாது.
1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலையைக் குனிந்து நிலத்தை முன்நெற்றி தொடுமாறு வைக்கவும். கைகளின் பாதங்களைக் கோர்த்து தலைக்குமேல் இருக்கும்படி முன்கைகள் நிலத்தில் இருக்கும்படியும் வைக்கவும். கோர்த்த கைகள் தலையை ஒட்டியவறு இருக்கட்டும்.
2.கால் பாதங்களின் முன்பகுதியில் அழுத்தம் கொடுத்து இடுப்பை உயரே தூக்கவும். தலை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக இருக்கும். முழங்காலை மடக்கி இடுப்பிற்கு மேல் தூக்கவும்.
3.தலையில் முழு அழுத்தம் ஏற்பட்ட நிலையில் அப்படியே கால்களை நேராக உயர்த்தவும். தலை, மார்பு, இடுப்பு, காலகள் எல்லாம் நேராக இருக்கட்டும்.
4.எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கமுடியுமோ அதுவரை இருந்துவிட்டு பின் முதல் நிலைக்குப் படிப்படியாக வரவும்.
25.ஆஞ்சநேய ஆசனம்-அனுமன் நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- முதுகு, கைகள், மார்பு, கால்கள், இடுப்பு ஆகியவற்றின் இயக்கத்திற்கு சிறந்த பலன்களைத் தருகின்றது. இந்த ஆசனம் பல முத்திரகளை கொண்டுள்ளது. வாழ்வில் ஓர் புனித தன்மையடைய உதவும் ஆசனமாகும்.
1.முதலில் வஜ்ர ஆசனத்தில் அமரவும்.
2.முழங்காலில் அழுத்தம்கொடுத்து எழுந்திருக்கவும். இடுப்பு, தொடை, மார்பு, தலை ஆகியன் ஓர் நேர் கோட்டில் இருக்க வேண்டும்.
3.இடதுகாலை முன்னால் மடக்கியவாறு 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி செய்யவும்.
4.கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இதயத்திற்கு முன்னால் அஞ்சலி முத்திரை நிலையில் வைக்கவும்.
5.நன்றாக உடலை சமநிலைப் படுத்திக் கொண்டு கூப்பிய கைகளை மேலே உயர்த்தவும். தலையை மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் பின்னால் சாய்க்கவும்
6.இரு கால்களையும் சமநிலையில் உறுதிப் படுத்திக்கொண்டு முதுகையும் கைகளையும் பின்பக்கமாக சாய்க்கவும். இயற்கையாக சுவாசிக்கவும்.
7.சீராக மூச்சை விட்டுக்கொண்டு சில நொடிகள் அப்படியே இருந்து பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்
இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்
படுத்தவாறு ஆசனங்கள் செய்யுமுன் செய்யும் முன்பயிற்சிகள். (ஆகாயம்) -1.2,3,4,(பூமி)-5,6.

1.1. கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடம்பின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. கணுக்கால்கள் சேர்ந்திருக்கட்டும். இரண்டு பாதத்தையும் முதலில் இடது பக்கம் திருப்பவும். பின் வலது பக்கம் திருப்பவும் 3/5 முறை செய்யவும்.

2.1. கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடம்பின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இரண்டு பாதங்களுக்கிமிடையில் போதிய இடைவெளி இருக்கட்டும். 3. இரண்டு பாதத்தையும் முதலில் இடது பக்கம் திருப்பவும். பின் வலது பக்கம் திருப்பவும். இடது பக்கம் திருப்பும்போது வலது பாதம் தொடாமலும் வலதுபக்கம் திரும்பும்போது இடதுபாதம் தொடாமலிருக்கவேண்டும். 3/5 முறை செய்யவும்.

3.1. கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடம்பின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இரண்டு பாதங்களுக்கிமிடையில் போதிய இடைவெளி இருக்கட்டும். 3. இடது பாதத்தை வலது பக்கமும் வலது பாதத்தை இடது பக்கமும் திருப்பவும். 4. இடது பாதத்தை எதிர் திசையில் இடது பக்கமும், வலது பாதத்தை எதிர்திசையில் வலது பக்கமும் திருப்பவும். 3/5 முறை செய்யவும்.

4.1. கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடம்பின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் 2. கணுக்கால்கள் சேர்ந்திருக்கட்டும். இரண்டு பாதத்தையும் முதலில் உடலை நோக்கி வளைக்கவும். முழங்கால் உயரத் தூக்கக்கூடாது. 3. பின் முன்பக்கமிருந்து அப்படியே எதிர் திசையில் வளைக்கவும். 4. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 3/5 முறை செய்யவும்.

5.1. கால்கள் இரண்டையும் நீட்டி குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. இடது காலத்தூக்கி வலதுகாலின் குதிங்கால் மேல் இடது பெருவிரல் மற்றும் அடுத்தவிரல் இருக்கும்படி வைக்கவும். 3. ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் கால்பாதங்களை அப்படியே முதலில் இடப்பக்கம் திருப்பவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும் 4. பின் எதிர் திசையில் வலப்பக்கம் திருப்பவும். வலது பக்கம் திருப்பும்போது தலையை இடது பக்கம் திருப்பவும். இருபக்கமும் திருப்பும்போது பாதங்களின் சுண்டுவிரல்கள் நிலத்தில் படவேண்டும். 5. படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். 6. இடது, வலது காலைமாற்றிச் செய்யவும். 3/5 முறை செய்யவும்.

6.1. கால்கள் இரண்டையும் நீட்டி குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். 2. முழங்கால்களை மடக்கி 90டிகிரியில் நிலத்தில் படுமாறும் பாதம் மேல் நோக்கி உயர்ந்தும் இருக்கட்டும். கணுக்கால் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும். 3. சேர்ந்த கணுக்காலை அப்படியே முதலில் இடப்பக்கம் மடக்கி நிலத்தில் படும் அளவிற்கு சாய்க்கவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும். 4. பின் எதிர் திசையில் வலப்பக்கம் கொண்டுவந்து நிலத்தில் படுமாறு சாய்க்கவும். தலையை இடது பக்கம் திருப்பவும். முதல் நிலைக்கு வரவும். 3/5 முறை செய்யவும்.
படுத்த வண்ணம் (12 ஆசனங்கள்)
1.பாவனமுக்தி ஆசனம்-முக்தி நிலை- கடின தரம்-3
2.சவாசனம்-சவ நிலை- கடின தரம்-1
3.மத்யாசனம்-மச்ச நிலை- கடின தரம்-4
4.ஹாலாசனம்-ஏர்கலப்பை நிலை- கடின தரம்-5
5.சர்வாங்காசனம்- சர்வ நிலை- கடின தரம்-5
6.மர்கட் ஆசனம்- கடின தரம்-1
7.உத்தான் பாதாசனம் –கடின தரம்-2
8.புஜங்காசனம்-தோள் நிலை- கடின தரம்-1
9.சலபாசனம்-சலப நிலை- கடின தரம்-3
10.நாகாசனம்-நாக நிலை- கடின தரம்-4
11.தனுராசனம்-தராசு நிலை- கடின தரம்-5
12.மாகரா ஆசனம்-முதலை நிலை- கடின தரம்-1
1.பாவனமுக்தி ஆசனம்-முக்தி நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- வயிற்றுப் பகுதியில் உருவாகும் தங்கும் வாயுவை நீக்கும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அடிவயிற்றில் ஏற்படும் சதைக்கோளாறுகளை நீக்கும்.
முதல்நிலை-
1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.
2.இடது முழங்காலைத் 90 டிகிரி தூக்கி மடக்கி நேராக நீட்டவும். கைகள் இரண்டும் உடலின் பக்கவாட்டிலும் கைப்பாதங்கள் நிலம் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இடது முழங்காலை மடக்கி பின் நீட்டும்போது வலது முழங்காலை 90 டிகிரி தூக்கி மடக்கி நேராக நீட்டவும்.
3.ஒருகாலை நீட்டும்போது அடுத்தகாலை மடக்கியும், மடக்கிய காலை நீட்டும்போதும் நீட்டியகாலை மடக்கவும் செய்யவும். தொடர்ந்து சிறிது வேகமாகச் செய்யவும். சைக்கிளை கால்களால் மிதிப்பது போன்ற பாவனையாகும். முடிந்தவரை தொடர்ந்து செய்யவும்.
இரண்டாம் நிலை-
1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது முழங்காலைத் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலை நெஞ்சின் அருகே இருக்குமாறு கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி இடது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி இடது முழங்காலில் படுமாறு செய்யவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து பின் வலது முழங்காலைத் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலைக் கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.
5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி வலது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி வலது முழங்காலில் படுமாறு செய்யவும். இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். இயற்கையாக சுவாசிக்கவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
மூன்றாம்நிலை-
1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது, வலது முழங்கால் இரண்டையும் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலைக் கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.
3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி இடது, வலது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி இடது, வலது முழங்காலுக்கு இடையில் படுமாறு செய்யவும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். இயற்கையாக சுவாசிக்கவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
2.சவாசனம்-சவ நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்- எளிமையான ஆனால் முக்கியமான ஆசனம். உடல், மனது இரண்டையும் முழுமையாக அமைதிப்படுத்தும் ஆசனமாகும். அலையில்லா ஒரு ஏரியைப்போல் மனம் தியானதின் போதும், மற்ற செயலாக்கங்களிலும் உதவும். உடலின் குறிப்பிட்ட இடத்தை நினைத்து கவனத்தைச் செலுத்துவதால் அங்கு அதிக காற்று சென்று அந்த பகுதியின் திசுக்கள் நன்றாகச் செயல்பட உதவுகிறது. உடலில் தளர்ச்சி மனதில் அழுத்தம் உள்ளவர்கள் யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் இந்த ஆசனம் செய்தால் பயனாக இருக்கும்.
1.நிலத்தின்மேல் விரிப்பில் கால்களை நீட்டியவாறு ஒன்றை ஒன்று தொடாதவாறும், கைகளின் பாதங்கள் மேல்நோக்கிய வண்ணம் உடலை ஒட்டியவாறு படுக்கவும்.
2.மூச்சுக்காற்றை ஆழமாக மெதுவாக சுவாசித்துக்கொண்டு கண்களை இதமாக மூடியிருக்கவும்.
3.தலையிலிருந்து ஆரம்பித்து உடலின் ஒவ்வொருபகுதியாக தளர்த்தி பாதம்வரை நினையுங்கள்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். தூக்கம் வரும் நிலைவந்தால் சுவாசிக்கும் வேகத்தை கொஞ்சம் அதிகம் படுத்துங்கள். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
3.மத்யாசனம்-மச்ச நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- மார்புக்கூடு விரிவடைகிறது. அதனால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். சைனஸ் குறைகள் நீங்கும். சர்க்கரை, சுவாசகாசம் மற்றும் நுறையீரல் நோய்களுக்கு நல்லது. தைராய்டு மற்றும் பார தராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.
முதல்நிலை-
1.சவ ஆசனத்தில் படுக்கவும்.
2.புட்டம் நிலத்தில் பதிந்திருக்க மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து தலை, தோள்பட்டை, மேல்முதுகு, கைகள் ஆகியவற்றைத் தூக்கி தலைநிலத்தில் படுமாறும் மார்பை உயர்த்தியும் இருக்கவும். கால்கள் இரண்டும் நீட்டியவாறு இருக்கவும்.
3.முழங்கையை மடக்கி உயர்த்தி நெஞ்சின் மேல் இருகைப் பாதங்களும் இனைந்தவாறு இருக்கவும். (அஞ்சலி நிலை)
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை-
1.சவ ஆசனத்தில் படுக்கவும்.
2.வலதுகாலை மடக்கி இடது தொடையின்மேல் வைக்கவும். இடதுகாலை மடக்கி வலது தொடையின்மேல் பத்மாசனத்தினைப்போல் வைக்கவும்.
3.பின்னால் மெதுவாக சாய்ந்து முதலில் வலது தோள்பட்டையில் உடலின் பாதிப் பளுவையும் பின் மீதியை இடது தோளிலும் வாங்கிக்கொள்ளவும். தலை நிலத்தில் இருக்கட்டும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து மார்பை மேலே தூக்கி தலையின் உச்சி நிலத்தில் இருக்கும்படி நிமிரவும். இடது கையால் வலதுகாலின் பெருவிரலையும் வலது கையால் இடதுகாலின் பெருவிரலையும் பிடித்துக் கொள்ளவும்.
5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
4.ஹாலாசனம்-ஏர்கலப்பை நிலை- கடின தரம்-5
நற்பயன்கள்- உடலில் உள்ள எல்லா தசைகளையும், எழும்புகளை இனைக்கும் தசைநார்கள் மற்றும் உறப்புகளேடு இனைந்திருக்கும் தசைகளையும் இழுத்து ரப்பர் தன்மையை அதிகரிக்கின்றது. கால் எழும்புகளில்களில் லேசான விரிசல் முதலியன சரியாகும். இந்த ஆசனம் அடிவயிற்றை அழுத்துவதால் வெளியேறும் இரத்தம் நிறைய கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது. அழுத்தம் குறையும்போது நிறைந்த ஆக்ஸிசன் கூடிய இரத்தம் அடிவயிற்றுக்குச் செல்கின்றது. வாயு வெளியேற்றப்படுகிறது. சரியாக இயங்காமல் இருக்கும் ஜீரண உருப்புகளை நன்றாக இயங்க வைக்கும். இதே அழுத்தம் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்டு தொண்டை, தைராய்டு, ஹைப்பர் தைராய்டு ஆகியன, சீராக இயங்கவும் கீழ் முதுகு வலி, முது தண்டில் ஏற்படும் சுகமின்மை ஆகியன சரியாகும். கழுத்து எழும்பு குறைகள் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளின் பாதங்கள் நிலம் நோக்கியவாறு இருக்கட்டும். இடுப்பு நிலத்திலிருக்க கால்களை மடக்கி உயரத்தூக்கி மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு வயிற்றினருகில் கொண்டுவரவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் நிலத்திற்கு 90டிகிரி இருக்குமாறுத் தூக்கவும். உங்கள் வசதியைப் பொறுத்து கைகள் இடுப்பைத் தாங்கி இருக்கலாம் அல்லது முன் இருந்த நிலையிலே இருக்கலாம்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் தூக்கி தலைக்குமேல் வந்து கூடுமான அளவில் நிலத்தை தொடுமாறு வைக்கவும். தேவைப்பட்டால் இடுப்பை வளைத்து தூக்கவும். கால்கள் சேர்ந்தவாறு இருக்கட்டும். முழங்கால்கள் நேராக இருக்கட்டும்.
5.இந்த நிலையில் அப்படியே சுவாசித்து சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
5.சர்வாங்காசனம்- சர்வ நிலை- கடின தரம்-5
நற்பயன்கள்- உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தைராய்டு சுரப்பிக்கு உதவி செய்கிறது. ஆண், பெண் பால் உறுப்புகள், சுரப்பிகளுக்கு உதவுகிறது. மூலம், இரண்யா, பருத்த சிரைகளுள்ள இரத்தக்குழாய், மாதவிடாய் கோளாறுகள் ஆகியவற்றைச் சீராக்கி இயங்கவைக்கும். தூக்கம் குறந்ததாலோ, இல்லாமற் போனதனாலே ஏற்படும் தளர்ச்சியை காலைசெய்யும்போது நீக்கியும், மாலை செய்யும்போது நல்ல அமைதியான இரவு தூக்கத்தையும் அளிக்கும். முதுகைப் பலப்படுத்தி முதுகு வலியைப் போக்கும். தலைக்கும், மேல் உடம்பிற்கும் இரத்த ஓட்டம் அதிகமாகச் சென்று தலைவலி, மூக்கு அடைபடுதல், தொண்டை கரகரப்பு ஆகியன சரியாகும். உடம்பின் எல்லா நரம்பு மண்டலங்களும் சரியாக இயங்கும். கழுத்து எழும்பு குறைகள் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளின் பாதங்கள் நிலம் நோக்கியவாறு இருக்கட்டும். இடுப்பு நிலத்திலிருக்க கால்களை மடக்கி உயரத்தூக்கி மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு வயிற்றினருகில் கொண்டுவரவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் நிலத்திற்கு 90டிகிரி இருக்குமாறு நேராகத் தூக்கவும். உங்கள் வசதியைப் பொறுத்து கைகள் இடுப்பைத் தாங்கி இருக்கலாம் அல்லது முன் இருந்த நிலையிலே இருக்கலாம்.
4.முழங்கால்கள் இரண்டும் நேராக இருக்க வேண்டும். பாதங்கள் நேராக வான் பார்த்திருக்க வேண்டும். தலை நேராக மார்பை பார்த்தவாரும் தாவாய்கட்டை மார்பை தொட்டவாறும் இருக்கவேண்டும்.
5.இந்த நிலையில் அப்படியே சுவாசித்து சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
6.மர்கட் ஆசனம்- கடின தரம்-1
நற்பயன்கள்- முழங்கால், கனுக்கால், இடுப்பு ஆகியன பலம் பெறும். இந்த பகுதி நரம்புகள் நல்ல இயக்கம் தரும்.
முதல் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.இடது காலத்தூக்கி இடது காலின் குதிங்கால் வலது பெருவிரலுக்கு அடுத்து இருக்கும்படி வைக்கவும்.
3.ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் கால்பாதங்களை அப்படியே முதலில் இடப்பக்கம் திருப்பவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும்
4.பின் எதிர் திசையில் வலப்பக்கம் திருப்பவும். வலது பக்கம் திருப்பும்போது தலையை இடது பக்கம் திருப்பவும். இருபக்கமும் திருப்பும்போது பாதங்களின் சுண்டுவிரல்கள் நிலத்தில் படவேண்டும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இடது, வலது காலைமாற்றிச் செய்யவும். 3/5 முறை செய்யவும்.
இரண்டாம் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.முழங்கால்களை மடக்கி பாதம் புட்டத்தை ஒட்டியவாறு இருக்கட்டும். முழங்கால் கணுக்கால் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.
3.சேர்ந்த முழங்காலை அப்படியே முதலில் இடப்பக்கம் மடக்கி நிலத்தில் படும் அளவிற்கு சாய்க்கவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும்.
4.பின் எதிர் திசையில் வலப்பக்கம் கொண்டுவந்து நிலத்தில் படுமாறு சாய்க்கவும். தலையை இடது பக்கம் திருப்பவும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
மூன்றாம் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.முழங்கால்களை மடக்கி பாதம் இரண்டும் போதிய இடைவெளியுடன் இருக்கட்டும். கைகள் குதிங்கால்களை தொட்டிருக்கவும்.
3.இரு முழங்கால்களை அப்படியே இடது பக்கம் சாய்க்கவும். இடதுகாலின் பெருவிரல்மீது வலது முழங்கால் இருக்கும்படி வைக்கவும். இடது கை இடது முழங்காலிலும் தலை, தோள்பட்டை இடது பக்கமும் திரும்பியிருக்க வேண்டும்.
4.பின் அப்படியே எதிர் திசையில் வலது பக்கம் சாய்க்கவும். வலது காலின் பெருவிரல்மீது இடது முழங்கால் இருக்கும்படி வைக்கவும். வலது கை வலது முழங்காலிலும் தலை, தோள்பட்டை வலது பக்கமும் திரும்பியிருக்க வேண்டும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
நான்காம் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.இடது காலைத் தூக்கி முடிந்த அளவிற்கு 90 டிகிரி கொண்டுவந்து அப்படியே வலது பக்கமாக நிலத்தில் படும்படி வைக்கவும். தலையை இடது பக்கமாக திருப்பவும்.
3.வலது காலைத் தூக்கி முடிந்த அளவிற்கு 90 டிகிரி கொண்டுவந்து அப்படியே இடது பக்கமாக நிலத்தில் படும்படி வைக்கவும். தலையை வலது பக்கமாக திருப்பவும்.
4.படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
7.உத்தான் பாதாசனம் –கடின தரம்-2
நற்பயன்கள்- கனுக்கால், ஆடுசதை, முழங்கால், இடுப்பு வலிமை பெறும். இடுப்பு மூட்டில் உள்ள நரம்புகள் நன்றாக செயல்பட்டு இலகு தன்மையடையும்
முதல் நிலை-
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.இடது காலைத்தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் முதலிலும், பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். முழங்காலை மடக்க கூடாது. வலது கால் நீட்டிய வாறு இருக்க வேண்டும்.
3.வலது காலைத்தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் முதலிலும், பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். முழங்காலை மடக்க கூடாது. வலது கால் நீட்டிய வாறு இருக்க வேண்டும். முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.இடது காலை ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி பின் பழைய நிலையில் வைக்கவும்.
3.வலது காலை ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி பின் பழைய நிலையில் வைக்கவும்.
4.இருகால்களின் கணுக்கால்களை ஒன்றுசேர்த்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி சிறிது நேரம் நிறுத்தவும். பின் பழைய நிலையில் வைக்கவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
மூன்றாம் நிலை
1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
2.இடது, வலது கணுக்கால்களை சேர்த்து வைக்கவும். இருகாலையும் சேர்த்து ஒன்றரை அடி உயரத்திற்குத் தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் சுற்றவும். எவ்வளவு பெரிய வட்டம் போடமுடியுமோ அவ்வளவு பெரிய வட்டம் போடவும். முழங்கால்களை மடக்க கூடாது.
3.பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். எவ்வளவு பெரிய வட்டம் போடமுடியுமோ அவ்வளவு பெரிய வட்டம் போடவும். முழங்கால்களை மடக்க கூடாது.
4.பின் முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
8.புஜங்காசனம்-தோள் நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்-தோள்பட்டை, கைகள், முழங்கை பலம்பெறும். மார்பு விரிந்து சுவாசம் சீராகும். இடுப்புவலி, மூட்டுவலி வருவதை தடுக்கும். முதுகெழும்பு, இடுப்பு பலம் பெறும். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். அடிவயிற்றில் கொழுப்பு ஏற்படுவதை குறைக்கும்.
முதல்நிலை
1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை உயரத் தூக்கவும். கைப்பாதங்களில் அழுத்தம்கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். முழங்கை 90டிகிரியில் இருக்க வேண்டும். பாதம் நிலத்தில் இருக்கட்டும்
3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை
1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை உயரத் தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். கைகளை மடக்கி பாதங்கள் மார்பை ஒட்டியவாறு தூக்கி இருக்க வேண்டும்.
3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
மூன்றாம்நிலை
1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைபாதங்கள், வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். தலையை இடது பக்கம் திருப்பி உயரத் தூக்கி தோள்பட்டை வழியாக வலது காலைப் பார்க்கவும்.
3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைபாதங்கள், வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். தலையை வலது பக்கம் திருப்பி உயரத் தூக்கி தோள்பட்டை வழியாக இடது காலைப் பார்க்கவும்.
5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
9.சலபாசனம்-சலப நிலை- கடின தரம்-3
நற்பயன்கள்- ஆடுகால், கீழ் இடுப்பு சதைகளையும் வலிமையுடையதாக்கும். வயிற்றை சீர்படுத்தி வாயு உற்பத்தியினால் ஏற்படும் வாயுகோளாறுகளை சீர்படுத்தும். மூத்திரப்பையை வலிமையுடையதாக்கும். மூத்திரகோசத்தை, முதுகுத்தண்டை சீராக்கும். பெருவயிற்றைக் குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும்.
முதல்நிலை
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது கையை நீட்டி பாதம் தரையில் இருக்குமாறும் வலது கையை மடக்கி முதுகின் பின்னால் இருக்குமாறு வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை நீட்டிய இடது கை ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். வலது காலை ஒருஅடி உயரத்திற்கு தூக்கவும். இடது கால் பாதம், முழங்கால், தொடை ஆகியவை நிலத்தை அழுத்தியவாறு இருக்கட்டும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
பின்னர் வலதுகை, இடது கால் மாற்றி செய்யவும்
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
இரண்டாம்நிலை
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது, வலது கைகளை நீட்டி பாதம் தரையில் இருக்குமாறும் வைக்கவும். கணுக்கால்கள் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை நீட்டிய இடது, வலது கைகள் ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். இடது, வலது கால்களை ஒருஅடி உயரத்திற்கு தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து சமநிலைப்படுத்தவும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
மூன்றாம்நிலை
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது கையால், வலது மணிகட்டை முதுகின் பின்னால் பிடிக்கவும். கணுக்கால்கள் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். இடது, வலது கால்களை ஒருஅடி உயரத்திற்கு தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து சமநிலைப்படுத்தவும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
நான்காம்நிலை
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் கைகள் இரண்டும் தொடைக்கு அடியிலும் பாதங்களை தொடை அழுத்தியவாறு வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை இரண்டுடன் உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். கால் பாதங்கள், முழங்கால், தொடை ஆகியவை நிலத்தை அழுத்தியவாறு இருக்கட்டும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
10.நாகாசனம்-நாக நிலை- கடின தரம்-4
நற்பயன்கள்- தொடர்ச்சியான பயிற்சி எல்லா நோய்களையும் குணப்படுத்தும். குண்டலினியை விழிப்பு நிலை ஏற்படுத்தும். முதுகுத்தண்டு, கீழ் முதுகு ஆகியவற்றை பலப்படுத்தும். மணிகட்டு, மார்பு தசைகளையும் வலிமையுடையதாக்கும். வயிறு மற்றும் ஆண், பெண் உறுப்புகளின் தசைகள் நரம்புகள் வலிமையடையும். தொடர்ந்து இந்த ஆசனம் பயின்றால் இடம் நகர்ந்த தண்டுவத்தின் தட்டுகள் பழைய நிலைக்கு வரும்.
1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு தலையை நேராகத் திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு மார்புக்கு நேர்கீழ் வைக்கவும்.
3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைகளை அழுத்தியவாறு உடம்பை இடுப்புவரை மேலே உயர்த்தவும். கைகளை முழங்கை மடங்காமல் நேராக இருக்கும்படி கொண்டுவந்து முதுகை வளைக்கவும். தலைமேல் நோக்கி நிமிர்ந்து இருக்கட்டும். இதற்குமேல் வளையமுடியும் என்றால் கைகளை அப்படியே இடுப்பு பக்கம் நகர்த்தி முதுகை வளைந்து கொடுக்க வசதி செய்யவும்..
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
11.தனுராசனம்-தராசு நிலை- கடின தரம்-5
நற்பயன்கள்- மலச்சிக்கல், வாயு கோளாருகளைக் வராமல் தடுக்கும். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். சுருங்கி விரியும் அடிவயிற்றினால் தசைகள் சீராகி ஜீரண சக்தி மேம்படும். அடி வயிறு, உடம்பு இளைக்க உதவும். கைகள், கால்கள், முதுகுத்தண்டு வளைவு தன்மை ஆகியவைகளுக்கு சிறந்தது. முதுகுவலி நீங்கும். வயிற்றின் மேல்பகுதி உடம்பு வலிவுறும்.
1.விரிப்பின்மேல் வயிறு நிலத்தின்மேல் இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் ஆகாயம் பார்த்தவாறு இருக்கட்டும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு தலையை நேராகத் திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும், இடது முழங்காலை மடக்கி கணுக்காலை இடது கையாலும், வலது முழங்காலை மடக்கி கணுக்காலை வலது கையாலும் பிடிக்கவும்.
3.மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து, மெதுவாக கனுக்கால்களை இழுத்தவண்ணம் முழங்காலை நிலத்திலிருந்து தூக்கவும். அதேசமயம் நெஞ்சையும் உயர்த்துங்கள். தலையை கூடுமான வரை நிமிர்த்தி இருங்கள். உடம்பின் பளு முழுவதும் அடிவயிற்றில் இருக்கட்டும்.
4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்
12.மாகரா ஆசனம்-முதலை நிலை- கடின தரம்-1
நற்பயன்கள்- இரத்த அழுத்தம், மன இறுக்கம் ஆகியவைகளினால் ஏற்படும் உபாதகளை நீக்கும்.
1.விரிப்பின்மேல் வயிறு நிலத்தின்மேல் இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் தலைக்குமேல் நீட்டியவாறு பூமியைப் பார்த்தவாறு இருக்கட்டும். கணுக்கால்கள் நிலத்தை தொட்டவாறு வைக்கவும்.
2.வலது கையை மடித்து இடது தோள்பட்டையிலும், இடது கையை மடித்து வலது தோள்பட்டையிலும் வைக்கவும். கழுத்து, கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று குறுக்கிட்ட இடத்திலும், தாடை அதற்கு முன்னும் இருக்கட்டும். கணுக்கால்கள் இடையே சிறிது அளவு இடைவெளியில் இருக்கட்டும்.
3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இயற்கையாக சுவாசித்து இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

 ***ஆசனங்கள் முடிவு பெற்றது***

 

தினமும் அரைமணிநேரம் பயிற்சிசெய்ய-கால அட்டவணை.

பெயர்

கடினதரம்

விநாடிகள்

பொதுவான முன்பயிற்சிகள்(இடுப்பைவளைத்து)

 

120

சூர்யநமஸ்காரம்

9

180

நின்றவண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை

2

120

அர்த்த சக்ராசனம்- அரை சக்கர நிலை

2

30

பாத ஹஸ்தாசனம்-முன்குனிந்த நிலை

3

120

உட்கார்ந்த வண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

சாசன்காசனம்-யோகமுத்ரா-நிலவு நிலை

1

120

சுப்த வஜ்ராசனம்-வைர நிலை

2

30

அர்த்தமத்யேந்த்ராசனம்-பாதி திரும்பிய நிலை

4

120

படுத்த வண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

புஜங்காசனம்-தோள் நிலை

1

60

சர்வாங்காசனம்- சர்வ நிலை

5

180

மத்யாசனம்-மச்ச நிலை

4

60

சவாசனம்-சவ நிலை

1

240

கபாலபாட்டி

 

60

நாடிசுத்தி

 

120

அமைதி (ஓய்வு)

 

120

வழிபாடு

 

120

மொத்தம்- விநாடிகள்                                   

 

1800

மொத்தம் = 30 நிமிடங்கள்

   

 

  தினமும் ஒருமணிநேரம் பயிற்சிசெய்ய-கால அட்டவணை

பெயர்

கடினதரம்

விநாடிகள்

பொதுவான முன்பயிற்சிகள் (முடிந்தன எல்லாம்)

 

300

சவாசனம்-சவ நிலை

1

120

அக்னிஸாரா + மௌலி

 

180

சூர்யநமஸ்காரம்

9

360

நின்றவண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

அர்த்தகதி சக்ராசனம்-வளைவு நிலை

2

60

அர்த்த சக்ராசனம்- அரை சக்கர நிலை

2

30

பாத ஹஸ்தாசனம்-முன்குனிந்த நிலை

3

120

பரிவ்ரட்ட திரிகோணாசனம்-முக்கோண நிலை

5

120

உட்கார்ந்த வண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

சாசன்காசனம்-யோகமுத்ரா-நிலவு நிலை

1

120

சுப்த வஜ்ராசனம்-வைர நிலை

2

30

அர்த்தமத்யேந்த்ராசனம்-பாதி திரும்பிய நிலை

4

120

பஸ்திமோச்சாணம்/உக்ர- சிறப்பான நிலை

3

120

மயூராசனம்-மயில் நிலை

9

30

படுத்த வண்ணம் செய்யும் ஆசனங்கள்

   

புஜங்காசனம்-தோள் நிலை

1

60

சர்வாங்காசனம்- சர்வ நிலை

5

180

மத்யாசனம்-மச்ச நிலை

4

60

சவாசனம்-சவ நிலை

1

240

சலபாசனம்-சலப நிலை

3

30

மத்யாசனம்-மச்ச நிலை

4

60

ஹாலாசனம்-ஏர்கலப்பை நிலை

5

120

சவாசனம்-சவ நிலை-

1

120

அரசு ஆசனம் எனப்படும் சிரசானம்-அரசு நிலை

7

120

சவாசனம்-சவ நிலை

1

480

பிராணாயாமம்.

   

கபாலபாட்டி

 

60

நாடிசுத்தி

 

120

அமைதி (ஓய்வு)

 

120

வழிபாடு

 

120

மொத்தம்- விநாடிகள்

 

3600

மொத்தம் = 3600 விநாடிகள் = 60 நிமிடங்கள்

   

தினமும் ஒருமணி நேரத்திற்குமேல் பயிற்சிசெய்ய முடிந்த வாய்ப்புள்ளவர்கள் எல்லா பயிற்சிகளையும் 3/5 முறை வேண்டும் போது இடைவெளி விட்டு செய்யலாம். நல்ல ஆரோக்கியமுள்ளவர்கள் சுமார் 75 நிமிடங்களிருந்து 90 நிமிடங்களுக்குள் எல்லா ஆசனங்களையும் 3 முறை செய்துவிடலாம். ----குருஸ்ரீ பகோரா

 ******

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

 

                                                   ******

நியமம்

Written by

நியமம்
தவநெறியில் நிற்றல், கற்றல், உள்ளதைக்கொண்டு மனநிறைவு கொள்ளுதல், தூய்மை, கடவுளிடம் சரன் ஆகியவற்றைக் கொண்டது, பட்டினி மேற்கொண்டு விரதம் கடைபிடித்தலும், உடலின் செயல்களை அடக்கி ஆளுதலும் உடல் சம்பந்தமான தவம். வேதங்களையும், சாஸ்திரங்களையும், மந்திரங்களையும் கற்பது சுவாத்யாயம். இது உடலில் உள்ள சத்துவப் பகுதியை சுத்தமாக்குகிறது. மற்றவர் கேட்கும்படி உரத்த ஒலியுடன் ஏற்றத்தாழ்வாக மந்திரங்களை உச்சரிக்கும் முறை அதமம் ஆகும். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது மத்திமம் ஆகும். உதடு அசையாமல் மனத்திலே நினைத்தல் சிறந்தது. உத்தமம் ஆகும். இது திருப்தி தரும். சௌசம் அல்லது தூய்மை அகத் தூய்மை, புறத் தூய்மை எனப்படும். உடலை நீரால் சுத்தம் செய்வது புறத்தூய்மை, வாய்மையாலும் நற்குணங்களாலும் மனதை தூய்மையாக்குவது அகத்தூய்மை ஆகும்.உடலைப் பேனுதல், நல்லொழுக்கம் கைகொள்ளல், அதிகமாகவும் இன்றி, குறைவாகவும் இன்றி எளிய உணவு உண்ணுதல், வாத, பித்த சிலேட்டுமம் ஆகிய தோஷங்களை அதிகப் படுத்தும் உணவுகளையும், தன் உடம்பிற்கு ஒவ்வாத உணவையும் கைவிடல் வேண்டும்.
இளம் வயதில் புலால் உண்ணுபவராக இருந்தாலும் யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தவுடன் உண்ணாமலிருக்க வேண்டும். வாழ்வுப் பாதயில் இதை இப்படி செய்வது இன்ன காலத்தில் செய்வது எனத் திட்டமிட்டும் எளிமையாகவும் வாழ்தல் வேண்டும். பராசக்தி வடிவமான குண்டலினி சக்தி தலையின் மேலே உள்ள ஜோதி வடிவமான பரம் பொருளை அடையும் என்ற நீதியை உணர்ந்திருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
உடல் மனத்தூய்மை, அருள் கொள்வது, மிதமான உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, ஐம்பெரும் பாவங்களை நீக்கல் முதலியன நியமம் எனப்படும். தவநியமங்கள், ஜபங்கள், எப்போதும் மகிழ்வுடன் இருத்தல், இறைபற்று, தானம் தருதல், சிவவிரதம் மேற்கொள்வது, சித்தாந்த தத்துவம் கேட்பது, வேள்வி, சிவபூசை, அறிவு சிறத்தல் முதலியனவும் நியமத்துள் அடங்கும்.
பொதுவாக இமயம், நியமம் இரண்டும் இரண்டறக் கலந்தைவையாகும். இமயம், நியமம் இரண்டையும் மேற்கொள்வது என்பது மிகச்சிறந்த ஒழுக்கப் பயிற்சியாகும். இவை இரண்டும் யோகத்திற்கு அடிப்படை. இவையில்லையேல் யோகப்பயிற்சிகள் கைகூடாது என்பதை அறிக.
எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ ஒரு யோகி எவரையும் துன்புறுத்தக்கூடாது.

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

இமயம்

Written by

1.இமயம்
என்பது கொல்லாமை, வாய்மை, களவு புரியாமை, நெறிதவறாமை, எந்தவொரு நன்கொடையும் பெற்றுக்கொள்ளாமை ஆகியவற்றை உள்ளடக்கியது. இவைகள் சித்த சுத்தியை உண்டாக்கும். மனம் வாக்கு காயங்களால் உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருத்தல் அஹிம்சை. அஹிம்சை மேலான தர்மம். மனிதனுக்கு அதிக ஆனந்தம் உண்டாக்கும். உள்ளதை உள்ளபடிக் கூறுதல் சத்யம். இதனால் அனைத்தையும் அடையலாம். பிறர் பொருளைக் கவராது இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு, காயங்களினால் தூயவனாய் இருப்பது பிரம்மச்சரியம். கொடிய வறுமை பெற்றுத் துன்புற்றாலும், பிறர் பொருளைத் தானமாகப் பெறாது இருத்தல் அபரிக் கிரகம். பிறர் பொருளைத் தானமாகப் பெருகின்ற ஒருவன் இதயம் அசுத்தமாகி, தன் சுதந்திரம் இழந்து, தானம் கொடுத்தவனுக்கு கட்டுப்பட்டவன் ஆகிவிடுவான்.
இதை பதஞ்சலி தன் நூலில் அஹிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சாரியம், இரக்கம், ஜபம், பொறுமை, உறுதி, மித உணவு, சுத்தம் என்ற பத்தும் மீறுவது பஞ்சமாபாதகம் என்றார்.
கொல்லாமை, இன்னாசெய்யாமை, அருளுடைமை, அன்புடைமை, வாய்மை, இனியவைக்கூறல், வெஃகாமை, பிறன்மனை விழையாமை, துறவு, மெய்யுணர்தல், நிலையாமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, அடக்கம் உடமை, ஈகை ஆகியவைகள் இமயத்தின் சிறப்புகளாக திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.
அகிம்சை, வாய்மை, சினமின்மை, தியாகம், சாந்தி, குயுக்தியாகப் பேசாமை, உயிர் இரக்கம், கடும் பற்றுள்ளம் இல்லாமை (லோபம் இல்லாமை), வள்ளல் குணம், பணிவு, திடமான மனம் ஆகியவை இமயத்தின் தன்மைகளாக கீதையில் கூறப்பட்டுள்ளது.
தத்துவங்களை அறிந்து இறை எனும் பொதுவான சக்தியை வழிபடுவதும், சாதி, மதம், ஏற்றம், தாழ்வு முதலான பேதங்களின்றி எல்லோரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதையும் இமயம் எனக் கூறலாம்,

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

 

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27108749
All
27108749
Your IP: 18.224.39.32
2024-04-28 23:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg